பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, டிசம்பர் 11

வாயால் சிரிக்காதீர்கள்!


// வெறும் 18 இந்தியர்கள் மட்டுமே வெறும் 48.83 கோடி இந்திய ரூபாய்களை Liechtenstein L G T என்ற வெளிநாட்டு வங்கியில் டெபொசிட் செய்து சேர்த்து வைத்துள்ளனர். //

 இந்திய அரசு உச்ச நீதி மன்றதில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளது.  இந்த வம்பு எப்படி ஆரம்பித்தது என்றால் வெளிநாட்டில் வங்கிகளில் திருட்டுத்தனமாக சேர்த்து வைத்துள்ள இந்திய செல்வங்களை பற்றிய வழக்கில் மத்திய அரசு மிகவும் மெத்தனமாக ஏன் நடந்து கொள்கிறது என்ற கொக்கியை போட்டவுடன் தான் நமது மதிப்பற்குரிய மத்திய அரசு இவ்வாறு பதில் கூறி யுள்ளது. 

இரட்டை கோபுர தாக்குதல் 9/11 நடந்தபிறகு சட்ட பூர்வமற்று நடக்கும் பண பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தி தீவிர வாத குழுக்களுக்கு பிற நாடுகளில் இருந்து பணம் செல்வதை தடுக்கவும் உலக வங்கிகள் தீர்மானித்தபோது, கருப்புபணமாக  தங்களிடம் சேமித்து வைத்துள்ள வெளிநாட்டு பண முதலைகளின் விபரங்களை அந்தந்த நாடுகளின் அரசாங்கத்திற்கு தந்து ஆதரவு அளிப்பதாக தீர்மானித்தன. ஆனால் இன்று வரை நமது இந்திய அரசு இந்த வாய்ப்பினை பயன் படுத்தவே இல்லை. அதனால்தான் உச்சநீதிமன்றம் இந்த விஷயத்திலும் வழக்கம் போல மத்திய அரசை கேள்வி கேட்டுள்ளது. அதற்க்கு அரசு அளித்த பதில் தான் மேலே உள்ளது. மிக விரைவில் சுவிஸ் வங்கிகளில் உள்ள பணத்தை கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதுவும் வழக்கம் போல சொல்லப்படும் கதைதான் என்பதி யாருக்கும் சந்தேகம் வேண்டாம். 

பிரபல வழக்கறிஞர் ராம் ஜெட் மாலினி தொடுத்துள்ள போது நல மனுவில் ( P I L ) 70 லட்சம் கோடி கருப்பு பணம் சுவிஸ் வங்கிகளில் மட்டும் உள்ளதை திரும்ப மீண்டும் கொண்டுவர மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என்று "ஆப்பை" சற்று வேகமாக அடிக்க ஆரம்பித்த பின்னரே உச்ச நீதி மன்றமும் கேவிகள் கேட்க ஆரம்பித்துள்ளது. 

ஜெர்மனியின்  LGT Bank of Liechtensteinஎன்ற வங்கி,நமது  The Central Board of Direct Taxes (CBDT) அமைப்பிற்கு அளித்துள்ள தகல்களின் படி இந்த வங்கியில் திருட்டுத்தனமாக பணம் வைத்துள்ள 18 நபர்களின் விபரங்களை அளித்துள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் தகவல்கள் சேகரிக்கும் பணி ஆரம்பமாகி விட்டதாக விளக்கம் அளித்துள்ளது. 

வழக்கம் போல எல்லாம் தாமதப்படுத்தும் செயல்களே அன்றி வேறு என்ன? "வெளி நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணம் வெறும் 48 கோடி ரூபாய்தான் அதுவும் வெறும் 18 நபர்கைல்ன் கணக்கு மட்டுமே " என்று மத்திய அரசின் விளக்கம் இருக்குமானால் வாயால் சிரிக்கவா தோன்றும்?  மலை முழுங்கி மகாதேவர்கள், மகாதேவிகள் .

போபர்ஸ் கமிஷன் 64 கோடி. இந்திய நாட்டு முதலாளிகள் மற்றும் அரசியல் வாதிகளின் பினாமிகள் சென்று சேர்த்துள்ள கருப்பு பணம் சுமார் 1100,000,000,000 ரூபாய்கள். (Rs.1100 பில்லியன்) சுவிஸ் வங்கிகளில் கிடக்கிறது. இந்த மொத்த பணத்தை மீண்டும் இந்தியா கொண்டுவந்தாலே போதும் அதனை பங்கிட்டால் இப்போது பிறந்த குழந்தைக்கு கூட ரூபாய் 11 லட்சம் கிடைக்கும். சோனியாவும், மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் இதனை செய்ய முன்வருவார்களா? 






உண்மையில் எந்த கட்சி அரசியல் பேசுபவர்களும் இதனை செய்யபோவதில்லை. இன்னுமொரு தகவலின் படி சுவிஸ் பாங்கில் உள்ள இந்திய பணத்தின் அளவு நம்மை மயக்கம் போட வைக்கிறது. சுமார் USD $ 1.3 Trillion = $1300 billion= $1300000million= $1300000000000= Rs1300000000000x40=Rs5,20,00,00,00,00,000.

இந்த மொத்த தொகையும் நம் நாட்டுக்கு ஒரு வேலை திரும்ப வந்தால் இன்னும் முப்பது வருடங்களுக்கு நாம் நமது அரசுகளுக்கு வரியே கட்ட தேவை இல்லை. இந்தியா மட்டுமே மிகவும் முன்னேறிய,அணைத்து வசதிகளும் மிக்க நாடாக திகழும். கட்டமைப்பிலும், மின் உற்பத்தியிலும் மிக முன்னேறி முதல் நாடாக திகழும். 

ஆனால் சோனியா, ராகுல், மன்மோகன், சிதம்பரம், கருணாநிதி , ஜெயலலிதா, லல்லு பிரசாத் யாதவ்,மாயாவதிகள், ராஜா சேகர ரெட்டிகள், எட்டியூரப்பாக்கள்,  சரத் பவார்கள், கல்மாடிகள், ஏ . ராஜாக்கள், அவர்களின் வாரிசுகளும் இங்கு வேர் ஊன்றி வளர்ந்து விட்டதால் மேலே கூறிய நல்ல செய்திகள் நடக்கவே போவதில்லை என்று நம்புவோமாக. 


அரசியல் செய்பவர்கள் மட்டுமின்றி அரசுகளின் அனைத்து துறைகளின் உயர்  அதிகாரிகள், செயலர்கள்  என்ற ஒரு பெருங்கூட்டமே இங்குள்ளது. // நெல்லுக்கு இரைத்த நீர் வாய்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்//  - என்ற ஒரு பழந்தமிழ் பாடலின் பொருளுக்கு இணங்க இந்த அரசு உயர் அதிகாரிகளின் பங்கு மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டுவது. 



6 comments:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

என்னது ,,, சுவிஸ் பேங்க் இல் இருந்து இன்னும் நம்ம நாட்டு பணத்தை எடுக்கலையா ?
சிவாஜி படத்தின் போதே நம்ம ரஜினி எல்லா பணத்தையும் கொண்டுவந்திட்டதா கேள்விபட்டேனே ? அச்சச்சோ..

இந்திய வாக்காள முட்டாபயல்களுக்கு ஒரு செய்தி...

இந்தியா சுவிட்டர்லாந்து மேல படைஎடுத்தா இந்திய கருப்பு பணம் மட்டுமல்ல மற்ற அணைத்து நாடுகளின் பணத்தையும் அள்ளிட்டு வந்திடலாம்...


அப்புறம் என்னா ...

மு.க அழகிரி மூஞ்சி மேலேயே எங்களுக்கெல்லாம் போஸ்டர் ஓட்டும் தகிரியம் வந்திடும்..

Unknown சொன்னது…

காவலிங்க கூட்டம் கூண்டோட அழிக்கப்படனும்னா நீங்களும் வாங்க அரசியலுக்கு

- இப்படிக்கி சீக்கிரத்திலேயே அரசியலில் இறங்கப்போகும் ஸ்கூல் பையன்

சிவராம்குமார் சொன்னது…

சாட்டையடி சார்! இது கனவில கூட நடக்காத விஷயம்!

RVS சொன்னது…

கடைசி பாராக்களில் சொன்னது நூறு சதவிகித உண்மை. எந்தத் துறையில் எவ்வளவு தேற்றலாம் என்று புதிய புதிய உத்திகளை ராசாக்களுக்கு அறிமுகப்படுத்துபவர்கள் அதிகாரிகள் என்ற மந்திரிகள்.
நல்ல கட்டுரை மாணிக்கம். ;-)

PalaniWorld சொன்னது…

நண்பா ,அரசியல் என்ற ஆலமரம் தனிமரமல்ல.அது அடையாறு ஆலமரம் மாதிரி மண்ணில் வேருன்றி வாரிசு அரசியல் ஆகி விட்டது.ஆனால் அந்த அடையாறு ஆலமரமே ஒரு சமயம் ஆட்டம் கண்டது எல்லோருக்கும் தெரியும்.அது மாதிரி சமயம் வரும் என கானல் நீர் போல் நாம் எதிர்பார்ப்போமாக

கானகம் சொன்னது…

இயலாமைதான் மனதில் ஏற்படுகிறது. யாருடைய வீட்டுச் சொத்தை இப்படிக்கொண்டுபோய் சுவுஸ் நாட்டில் வைக்கிறார்கள்? உண்டியல் குலுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் கூட இதற்குப் பெரிய சத்தம் கொடுத்ததாய்த் தெரியவில்லை. எல்லோரும் கூட்டுக் களவானிகளோ?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக