பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, டிசம்பர் 11

நாங்கள் தான் மத சார்பற்றவர்கள்:26/11-மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பின்னணியில் இந்துத்துவா கட்சிகள் இருக்கலாம் என்ற பொய்யை காங்கிரசின்  ஊழல் பெரிச்சாளியும் மத்தியில் சிறுபான்மை சமூகத்தின் அமைச்சரகத்தில் முன்னால் அமைச்சராக இருந்த A. R. அந்துலே அறிக்கை வெளியிட அந்த விபரம் அந்நாளில் அமெரிக்காவின் தூதுவராக இங்கு பணியில் இருந்த டேவிட் மல்போர்ட் (David Mulford ) அந்த செய்திகளை தன் நாட்டுக்கு அனுப்பிய விபரம் விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது.

மேலும், நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதே முறையில் , அதாவது மும்பை தாக்குதல்கள் இந்துத்துவா அமைப்பினால் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டது என்று பிரசாரம் செய்து முஸ்லிம்களின் ஓட்டுக்களை தக்க அவைதுக்கொள்ள முயன்றது. பின்னர் அந்த முடிவுகளில் இருந்து பின்வாங்கிக்கொனட்து என்ற செய்தியை கேபிளில் அவர் தன் நாட்டுக்கு அனுபியுள்ளார். 

உள்துறை அமைச்சர் சிதம்பரம் இந்த அந்துலே யின் கருத்துக்களை புறம் தள்ளிவிட்டாலும் இந்தியாவில் உள்ள இஸ்லாம் மக்கள் அந்துலே யின் கூற்றுக்களை உண்மை என்றே நம்ப ஆரம்பித்தனர். 

காங்கிரஸ் இந்த ஜாதி/மத அரசியலை தீவிரமாக நடைமுறை படுத்த திட்டமிட்டு இருந்ததை டேவிட் மல்போர்ட் இங்கிருந்து அமரிக்காவிற்கு அனுப்பிய செய்திகளை விக்கி லீக்ஸ் நேற்று வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிடமிருந்து இந்த செய்திகளுக்கு மறுப்போ, எதிர்ப்போ இல்லை. ஆனால் 250,0000 செய்திகளை வீகிலீக்ஸ் -விசில் அடிக்கும் இனைய தளம்  (விக்கி Leaks - the whistle blower website) திருடிவிட்டது பின்னர் திரும்ப கொடுத்துள்ளது என்று மூக்கால் அழுகிறது.

விக்கிலீக்சின் தகவலின் படி டெல்லியில் அமெரிக்க தூதரகத்திலிருந்து அமெரிக்காவிற்கு சுமார் 1,300 கேபிள் செய்திகள் சென்றுள்ளன. ஆனால் அவைகளில் வரும் அரை டஜன் செய்திகளே வெளியிடப்பட்டுள்ளனவாம். தாக்குதலில் பலியான மூன்று உயர்நிலை போலீஸ் அதிகாரிகளின் மரணம்தான்( ATS chief ஹேமந்த் கர்கரே போன்றவர்கள்) அன்டுலேயின் கருத்துக்களுக்கு ஆதாரமாய் இருப்பதை காங்கிரஸ் நம்ப ஆரம்பித்தது. இதற்க்கு நாடு முழுவதும் முஸ்லிம்களின் மத்தியில் பெருத்த ஆதரவும் இருந்ததை காங்கிரஸ் உணர்ந்துகொண்டு அதனை தேர்தலில் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்த எண்ணியிருந்தது.

"What's more, the (Congress) party made the cynical political calculation to lend credence to the conspiracy even after its recent emboldening state elections victories. The party chose to pander to Muslims' fears, providing impetus for those in the Muslim community who will continue to play up the conspiracy theory," Mulford wrote in his cable.
While "cooler heads" eventually prevailed within the Congress leadership, the idea that the party would entertain "such outlandish claims proved once again that many party leaders are still wedded to the old identity politics," he said.
The 79-year-old Antulay "was probably bewildered to find that his remarks, similar in vein to what he would have routinely made in the past to attack the BJP, created such a furor this time," Mulford said.
The cable noted that Antulay "sparked a political controversy on December 17 with comments insinuating that the killing of Maharashtra Anti-Terror Squad (ATS) Chief Hemant Karkare by the Mumbai terrorists was somehow linked to Karkare's investigation of (Malegaon) bombings in which radical Hindus are suspected."

இந்த காங்கிரஸ் கூட்டம் தான், நாங்கள்தான் மத சார்பற்றவர்கள் ,சிறுபான்மை மக்களின் காவலன் என்று கூறிக்கொண்டு இந்த நாட்டு மக்களை ஜாதி/மத நோக்கத்தில் பிளவு பட வைத்து ஓட்டுக்களை பெற என்ன  வேணுமானாலும் செய்வார்கள். என்று தெரிகிறது. இவர்களை விட தங்களை மதம் சார்ந்தவர்களாக காட்டிகொள்ளும் இஸ்லாமியர்களும், இந்தத்துவா கட்சிகளும் சற்று நேர்மையுடன் செயல்படுவார்கள் என்று நம்பலாம். 


Courtesy Indian Express.


15 comments:

RVS சொன்னது…

மாணிக்கம் சார் நம்ம நாட்ல ஒரு பிரச்சினை இருக்கு. காங்கிரஸ்சை தாக்கி எழுதினால் நீ பி.ஜே.பியா ன்னு கேட்பார்கள். யாரையாவது பற்றி எழுதினால் இவர்களே ஆப்போசிட்ல கனெக்ஷன் கொடுத்து எழுதுவாங்க.
ஜூலியன் அசாஞ் - விகிலீக்ஸ் நிறுவனர் மற்றும் எடிட்டரை புடிச்சுட்டாங்க. தெரியுமில்லை. அசாஞ்சை பற்றி ஜூலையில் நான் எழுதிய கட்டுரை கீழே http://mannairvs.blogspot.com/2010/07/blog-post_27.html

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// காங்கிரஸ்சை தாக்கி எழுதினால் நீ பி.ஜே.பியா ன்னு கேட்பார்கள். யாரையாவது பற்றி எழுதினால் இவர்களே ஆப்போசிட்ல கனெக்ஷன் கொடுத்து எழுதுவாங்க.//
-------------R.V.S. சொன்னது.

ஆணைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்பவர்களை பற்றி அறிவேன். இதுபோன்ற மனப்பான்மை உடையவர்களால்தான் நமக்கு இதகதி. காங்கிரசை தாக்கி எழுதினால் அவர்கள் B.J.P. காரர்களாக இருக்க என்ன அவசியம்?
B.J.P. ஆக இருந்தால் என்ன தேச.துரோகமா என்ன?
இதுபோன்ற நபர்களை இங்கு வலை மனையில் நிறைய காணலாம். சொந்த புத்தி உள்ளவர்கள் இவ்வாறு எதிரும் புதிருமாக சிந்தனை செய்யமாட்டார்கள். அவர்கள் உண்மையை மட்டுமே காண்பார்கள்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// ஜூலியன் அசாஞ் - விகிலீக்ஸ் நிறுவனர் மற்றும் எடிட்டரை புடிச்சுட்டாங்க. தெரியுமில்லை.//
---------R V S சொன்னது.

ஆமாம். ஆனால் அவர்களால் ஜூலியனை ஒன்றும் செய்ய இயலாது. இந்த நடவடிகையை அவர் எதிர் பார்த்தே தக்க ஏற்பாட்டுடன் அந்த விக்கிலீக்ஸ் இணையம் மீண்டும் மீண்டும் தழைத்து வளர ஆரம்பித்துவிட்டது. உலகின் பல "பெரிய" நாடுகள் அவரின் கைது நடவடிக்கையினை கண்டித்துள்ளன. சுவீடனும் இங்கிலாந்தும் அமெரிக்காவுடன் ஒத்து போனாலும் பிற நாடுகள் (பிரேசில், ரஷ்யா )அவரின் கைது நடவடிக்கையினை எதிர்க்க ஆரம்பித்துள்ளன.

இரவு வானம் சொன்னது…

எனக்கு எப்பவுமே காங்கிரஸ் மேலயும், கம்யூனிஸ்ட் மேலயும் நம்பிக்கை இருந்ததில்லை,அத உறுதிப்படுத்தர மாதிரி இருக்கு உங்க பதிவு

ஜீ... சொன்னது…

//இவர்களை விட தங்களை மதம் சார்ந்தவர்களாக காட்டிகொள்ளும் இஸ்லாமியர்களும், இந்தத்துவா கட்சிகளும் சற்று நேர்மையுடன் செயல்படுவார்கள் என்று நம்பலாம்//
:-)

தமிழ் அமுதன் சொன்னது…

///இவர்களை விட தங்களை மதம் சார்ந்தவர்களாக காட்டிகொள்ளும் இஸ்லாமியர்களும், இந்தத்துவா கட்சிகளும் சற்று நேர்மையுடன் செயல்படுவார்கள் என்று நம்பலாம். //


சூப்பர் டச் அண்ணே...!

காங்கிரஸ் பத்தி சொல்லனும்னா..! ஆட்சிகாக அவங்க....... விடுங்க கெட்ட வார்தையா வருது..!

வேலன். சொன்னது…

இதைப்போல நீங்க தொடர்ந்து கட்டுரை வெளியிட்டுகொண்டே இருங்கள்...உங்களை....?

வாழ்க வளமுடன்.
வேலன்.

என்.கே.அஷோக்பரன் சொன்னது…

This is what they call pseudo secularism.

கானகம் சொன்னது…

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றாக எழுதுகிறீர்கள், வாழ்த்துக்கள்.

மோகன்ஜி சொன்னது…

நல்ல ஆழமான அலசல் கக்கு சார். நிறைய இந்த வகையில் எழுதுங்கள் நண்பரே!

விக்கி உலகம் சொன்னது…

செத்தவன் பாடைமேல ஏறி ஜெயிக்க நினைக்கிற கழுகுக்கூட்டம்!!

அமெரிக்கா காரனும் நம்மூரு பயபுள்ளைங்க மாதிரி எல்லாம் செஞ்சுபுட்டு இல்லன்னு சொல்லி தப்பிக்க பாக்குறான். அதவிட அவனே பெரிய அளவுல விக்கிலீக்சுக்கு விளம்பரம் பண்ணிட்டு இருக்கானே! அய்யோ அய்யோ!!!!!!!!!!

நாஞ்சில் மனோ சொன்னது…

ஹலோ கக்கு மக்கா, எல்லாத்தையும் சூப்பரா கக்கிட்டீரே....

அருமை...

polurdhayanithi சொன்னது…

பாராட்டுகள் நண்பரே கங்குரசு,பிஜேபி , இரண்டுமே மக்களை ஏமாற்றும் வேலையே செய்யும் . அதற்கெல்லாம் பார்த்தால் கருத்துகளை ஏதும் சொல்லாமல் முடங்கி கிடக்க வேண்டியது தான் .பதிவிற்கு பாராட்டுகள் .
போளூர் தயாநிதி

Karthick Chidambaram சொன்னது…

பாராட்டுகள் நண்பரே

ரிஷபன்Meena சொன்னது…

காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி (குஜராத் கிளை நீங்கலாக) இரண்டும் உருத் தெரியாமல் அழிய வேண்டிய கட்சிகள். இந்த இரண்டு பேரும் நாட்டுப் பற்று என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக