பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், டிசம்பர் 13

ஆரம்பித்துவிட்டார்கள்!மத்திய பொருளாதார அமைச்சர் பிரணாப் முகர்ஜி திருவாய் மலர்ந்து ஆரம்பித்துவைத்துள்ளார். இவர் வாயை வைத்தால் அது விளங்காமல்தான் போகும் என்ற நம்பிக்கையில் நாம்  இருக்கலாம். மும்பையில் ஒரு கேள்விக்கு பத்தி அளிக்கும் போது "ராகுல் தான் வருங்காகால இந்தியாவின் பிரதமர் " என்று விசுவாசமாக அறிவித்து விட்டார். 

அறுபது / எழுபது வயதான , அரசியல் அனுபவம் உள்ள ஒருவருக்கு புத்தி இப்படியா போகும்? இந்த நாட்டின் மீது பற்றுள்ள எவராவது இப்படி பேசுவார்களா தெரிய வில்லை. இவர்களின் அடிவருடும் புத்தியினால் இந்த நாடு மேலும் மேலும் அந்நியர்களின் கீழீதான் இருக்கவேண்டுமா? 

1.2 பில்லியன் மக்கள் தொகையுள்ள ஒரு மிகப்பெரிய நாட்டை இன்றய சூழலில் கட்டி ஆள ராகூளுக்கு தகுதியும், திறமையும் ,அனுபவமும் இருக்கிறதா? ஆனானப்பட்ட வாஜ்பாயும்,இப்போதுள்ள மன்மோகன் சிங்கும் கூட "விட்டால் போதும் " நிலையில்தான் இருந்தார்கள்.நேரு குடுப்பதில் வந்த வாரிசு என்ற ஒன்றைதவிர ராகுலிடம் அப்படி என்ன பெரிய தகுதியை கண்டுவிட்டார்கள்?  படிப்பறிவும் ஒன்றும் சொல்லிகொள்ளும் படி இல்லை. லாயகின்றி பாதியில் விட்டுவிட்ட Drop out தகுதிதான். நடத்தையில் கூட அந்த பிள்ளை ஒன்றும் கவுரவமான முறையில் வளரவில்லை.

2001 ஆம் வருடம் செப்டம்பர் 21 ஆம் தேதி அமெரிக்காவின் போஸ்டன் விமான நிலையத்தில் ராகுல் அவருடைய ஸ்பெயின் நாட்டு கேர்ல் friend (Veronique) இருவரும் அந் நாட்டு FBI அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்த பணம் $200,000 . இந்த பெரும் தொகையை வைத்திருந்த அவர்களால் அதற்கு சரியான விளக்கம், காரணம் சொல்ல முடியவில்லை. பின்னர் இந்திய அரசின் அமெரிக்க தூதுவர் தலை இட்டு அவர்களை விடுவிக்க நேர்ந்தது. அப்போது இங்கு B.J.P. ஆட்சில் இருந்தது என்று விளக்க வேண்டியதில்லை. 
சுவிஸ் நாட்டு பத்திரிக்கை (Schweizer Illustrierte ) 1991 ஆம் ஆண்டு,  நவம்பர் 11 அன்று வெளியிட்ட செய்தியில் சோனியா வின் கணக்கில் உள்ள இரண்டு பில்லியன் அமரிக்க டாலர்களுக்கு வாரிசாக அவர் பிள்ளை ராகுல் உள்ளதை வெளியிட்டது. இந்த தொகையானது முன்னாள்  USSR நாட்டில் இருந்து ஒரு தர்ம ஸ்தாபனம் மூலம் வந்ததாக காட்டப்பட்டுள்ளது. என்ன காரணத்துக்காக இந்த பெரும் தொகை தரப்பட்டது என்று வெளிபடையான காரணங்கள் சொல்லப்படவில்லை.ஆனால்  இவ்வாறுதான் தலைப்பு இடப்பட்டது "Something is rotten in 10 Janpath..." 

அவ்வப்போது அரசியல் குட்டையை குழப்பும் நம்ம சுப்ரமணிய சுவாமி தன் வலை தளத்தில் கூட சோனியாவின் தந்தை ஒரு ரஷ்ய K G B உளவாளி என்றுதான் குறிபிடுகிறார். இன்றுவரை சோனியாவும் ராகுலும் தங்களின் இத்தாலி நாட்டு குடியுரிமையை ஏன் இன்னமும் ரத்து செய்யாமல் வைத்துக்கொண்டுள்ளனர்?  கீழே உள்ள இணைப்பில் சென்று வாசிக்கலாம். சோனியா, இந்தியாவின் மாடர்ன் ராபர்ட் கிளைவ் என்றுதான் இவர் விளக்குகிறார். 
சுவாமி எழுதி உள்ள தகவல்களுக்கு இன்றுவரை ஏன் அவர்கள் மறுப்பு ஏதும் சொல்லாமல் இருக்க வேண்டும்? அப்படி ஒரு வலைத்தளம் இருப்பதே தெரியாது போலும்.

A.R அன்டுலேயின் மும்பை தீவிரவாத தாக்குதல் பற்றிய பொய் பிரசாரம் இப்போது திக் விஜய சிங் மூலம் மீண்டும் திரும்ப வந்து ஒரு பூமராங் போல வீசியவரை பதம் பார்த்த கதை தான் நடைபெறுகிறது. 
மும்பை தாக்குதல் திட்டமிட்ட பாகிஸ்தானின் செயல் என்று உலக அளவில் நிருபணம் ஆன பிறகு. இன்று இந்த திக்விஜய சிங் கர்கரே தன்னிடம் போனில் தனக்கு இந்தத்துவா இயக்கங்கள் மூலம் உயிருக்கு ஆபத்து உள்ளதாக சொனதாகவும் அதன் பின்னர் சில மணி நேரங்களில் அவர் சுட்டுகொல்லப்பட்டார் என்று அறிவற்று பிதற்றியது ஆப்பு பிடுங்கிய குரங்கின் கதையானது. 

அன்புள்ள இஸ்லாமிய, கிருஸ்துவ, இந்து மத நண்பர்களே, காங்கிரஸ் காரர்கள் நாம் நமக்குள் ஒற்றுமையாய் இருப்பதை விரும்ப மாட்டார்கள். அவர்களின் சூழ்ச்சியே வெள்ளைக்காரன் போல நம்மவர்களை பிளவு படுத்தி, ஓட்டுக்களை பெற்று ஆட்சிக்கு வருவதேயன்றி , தங்களின் சுவிஸ் வங்கி கணக்கை மேலும் கூட்டவே அன்றி இந்த நாட்டின் மீதும் இந்திய மக்கள் மீதும் இவர்களுக்கு ஒன்றும் பெரிய அபிமானமோ, கரிசனமோ இல்லை என்பதே நடப்பு. காங்கிரஸ் ஒன்றும் மத சார்பற்ற இயக்கம் அல்ல. அவர்களால் அவ்வாறு இருக்க இயலாது.காங்கிரஸ் காரர்கள் எல்லாம் இப்போது அடிவருடிகள். ஜால்ராக்கள் . பதவி, அதிகாரம் என்ற நோக்கில் அவர்களால் அதைத்தான் சரியாக செய்ய முடியும் என்று பார்க்கிறோம்.  சென்ற பதிவில் கூறியது போல இவர்களை விட தங்களை மதம் சார்தவர்களாக சொல்லிகொள்பவர்களிடம் ,அது யாராக இருந்தாலும் நேர்மை நியாயம் கொஞ்சமாவது இருக்கும் என்று நம்பலாம்..


இந்த பிள்ளை உளறி பிதற்றியவைகளில் சில கீழே காணலாம்:

// எங்கள் குடும்பம் ஆட்சியில் இருந்திருந்தால் உத்தர  பிரதேசத்தில் இருந்த அந்த சர்ச்சைக்குரிய மசூதி இடிகபட்டிருக்க மாட்டாது. //

// 1947 ஆம் ஆண்டு இந்திய நாடு வெள்ளையர்களிடமிருந்து எங்கள் 

குடும்பத்தால்தான் விடுதலை பெற்றது.// 

// எங்கள் குடும்பம்தான் பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணம். 1971 இல் பங்களா தேஷ் உருவானதும் எங்களால்தான் //

காங்கிரஸ் அடிவருடிகள் (boot liker) கூட்டம் எப்படி எல்லாம் இந்த பிள்ளையின் புத்தியை விஷமாக்கி வைத்துள்ளனர்? ஒரு நாட்டை ஆள வருபவனின் மனதில் உள்ள,  தான் , தன் குடும்பம் இதைவிட்டால் இந்த நாட்டில் ஒன்றுமில்லை என்ற தலைக்கணமும் ஆணவமும் தான் உள்ளதை புரிந்துகொள்ளலாம். இந்த நாட்டை தன் நாடாக நினைக்கும் எவருக்கும் இது போன்ற எண்ணைகள் உண்டாகுமா? இந்தியா இன்னமும் தங்கள் குடும்பத்தின்  அடிமை நாடுதான் என்றுதான் இவர்கள் எண்ணிக்கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியை அழித்து ஒழிக்க இனி யாரும் புதிதாய் தேவை இல்லை. இந்த பிள்ளையின் காலத்திலேயே அது ஒழிந்துபோய் இந்தியா ஒரு புதிய நாடாக மாறும், மாற வேண்டும்.

 காங்கிரஸ் காரர்களை  பீகார் மக்கள் புரிந்துகொண்ட தக்க பாடம் தந்துள்ளனர். நாம் ?
 நம் நாட்டை பிடித்துள்ள இந்த காங்கிரஸ் பீடை, சாத்தான் ஒழியட்டும். 
15 comments:

nis சொன்னது…

:))

யூர்கன் க்ருகியர் சொன்னது…

இந்த கருணாநிதி காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க என்ன வேணுமினாலும் செய்வாரு. (எதனை பெற வேணுமினாலும் போட்டுத்தள்ள தயார் )

அந்த ஜெயலலிதா காங்கிரஸ் கிட்ட சான்ஸ் கிடைச்சா சந்தடி சாக்குல சட்டுன்னு ஒட்டிக்க பார்க்குது.

இவங்கல்லாம் அழுகின முட்டையென்று தெரிந்தும் ஆப்பாயில் போடற கேசுங்க

அதனால நான் என்ன சொல்றன்னா,

எதிரியை சைடுல போட்டுகிட்டே துரோகிகளை ஸ்ட்ரைட்டா போட்டு தள்ளுங்கன்றேன்.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

இவனுக்கு இப்படி ஒரு பிகரா ?
கருமம் இத்தாலில இருந்து ஒண்ணு வந்ததுக்கே தாங்கமுடியல ..இப்ப ஸ்பெயின்ல இருந்து இன்னொன்னா ?

கடைசில நம்ம பார்லிமெண்டு புல்லா வெள்ளகாரங்கதான் இருப்பாங்க ..நமக்கெல்லாம் டவாலி வேலைதான் போலிருக்கு ..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பிரணாப் மூத்த தலைவர்தானே..இவர் ஏன் சின்னப்பையன் ராகுலுக்கு ஓட்டுக்கு மண் சுமக்கும்ராகுலை ஆதரிக்கிறார் எதற்கு இந்த விசுவாசம்..இதிலிருந்தே அங்குள்ளவர் யாரும் சிறந்த நிர்வாகி இல்லை என தெரிகிறது

velanblogger சொன்னது…

கடைசில நம்ம பார்லிமெண்டு புல்லா வெள்ளகாரங்கதான் இருப்பாங்க ..நமக்கெல்லாம் டவாலி வேலைதான் போலிருக்கு ..
//

நீங்க டவாலி வேலைக்கு போகும்போது சொல்லுங்க. இங்க இரண்டுபேர் இருக்கோம்்...உஙக கூடவே வந்துவிடகின்றோம்.(சும்மாவா சொன்னாங்க..கழுதை மேய்தாலும் கவர்மெண்ட் கழுதையை மேய்க்கனும்னு...அதிலும் சென்ட்ரல் கவர்மெண்ட் கழுதைன்னா டபுள்ஓ.கே்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

RVS சொன்னது…

மாணிக்கம்.. தங்களது உண்மையான தைரியம் பிடித்திருக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் வாசகம்... Journalism By Courage..... உங்களுக்கு நிறைய ஒத்துப்போகிறது. ரசித்துப் படித்தேன். அட்டகாசம்.. ;-)

அதிர்ஷ்டரத்தினங்கள் சொன்னது…

///காங்கிரஸ் கட்சியை அழித்து ஒழிக்க இனி யாரும் புதிதாய் தேவை இல்லை. இந்த பிள்ளையின் காலத்திலேயே அது ஒழிந்துபோய் இந்தியா ஒரு புதிய நாடாக மாறும், மாற வேண்டும்.///

அதே...!

பட்டாபட்டி.... சொன்னது…

எங்கள் தங்கம், இந்தியாவின் குலவிளக்கு, வருங்கால பிரதமர் மக்கா?

வெட்கம்.. வெட்கம்...


கலக்கல் பதிவுன்ணே..!!!1

ஜாக்கி சேகர் சொன்னது…

புட்டு புட்டு வச்சி இருக்க மாப்ஸ் குட்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த தொகையானது முன்னாள் USSR நாட்டில் இருந்து ஒரு தர்ம ஸ்தாபனம் மூலம் வந்ததாக காட்டப்பட்டுள்ளது. //

நமக்கெல்லாம் நயாபைசா ஒரு பய தரமாட்டேன்கிறான் :)

விக்கி உலகம் சொன்னது…

கலக்கல் பதிவு

உங்கள் எழுத்துக்கள் மூலமாக பல உண்மைகளை உடைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் மாணிக்கம் alias தேவையான வைரம்.

இரவு வானம் சொன்னது…

இவனெல்லாம் ஒரு தலிவரு, வெளங்கிரும் இந்தியா

சசிகுமார் சொன்னது…

அட பாவி பயலே உன்ன பத்தி இவ்ளோ மேட்டர் இருக்கா

Siva சொன்னது…

//காங்கிரஸ் கட்சியை அழித்து ஒழிக்க இனி யாரும் புதிதாய் தேவை இல்லை. இந்த பிள்ளையின் காலத்திலேயே அது ஒழிந்துபோய் இந்தியா ஒரு புதிய நாடாக மாறும், மாற வேண்டும்.//
அட நம்மால முடியாதத அந்த புள்ளயாவது செய்யுதுன்னு சந்தோசப்படுங்கண்ணே.

THOPPITHOPPI சொன்னது…

இன்னும் எத்தன நாளைக்கு

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக