இது ஒரு மறு பதிவீடுதான். சென்ற 2010 ஆம் ஆண்டு முதலில் பதிவிட்டேன். இப்போது இருக்கும் நிலையில் எவ்வித மாற்றமும் தமிழக அரசாலோ அல்லது மத்திய அரசாலோ ஏன்? இந்திய உச்ச நீதி மன்றதாலோ கூட எதுவும் செய்ய இயல வில்லை. நாம் எத்தகைய ஒரு மகா பொய்யான அரசியல் அமைப்பில் இருக்கிறோம் ?
படங்களை பார்த்தாலே அணைவருக்கும் தெரியும் இவைகள் கர்நாடகா மாநில அரசின் தலைமை செயலகம் என்று.இந்திய நாட்டின் தேசியக்கொடி என்ன கம்பீரமாக பறந்து கொண்டுள்ளது.
இன்னொரு படத்தில், இந்த நாட்டின் வரைபடம் செடிகளாலும் மலர்களாலும் அந்த கட்டிடத்தின் முன்னே அமைகப்பட்டுள்ளது அலங்காரமாக.
ஆனால் ஒவ்வொரு வருடமும், எந்த ஒரு பிரச்சனையானாலும் இவர்கள் தமிழ் நாட்டின் மீது ஏதோ ஒரு பகைவர் நாடாக கருதி வன்மத்தையும், பகை உணர்வையும் அல்லவா வளர்த்துக்கொண்டுள்ளனர்?
காவிரி தண்ணீர் விஷயத்தில் இவர்கள் இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டை ஒரு பகைவர் நாடாகவே கருதி செயல்படுகின்றனர். உச்ச நீதி மன்ற தீர்ப்புக்களும் குப்பைதொட்டியில் போடப்பட்டன. மனிதாபிமான உணர்வில் கூட இவர்கள் நமக்கு நதிநீரைத்தர தயாரில்லை. அதையும் பெருமையுடன் அங்குள்ள அணைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் செயல் படுத்துகின்றனர்.
இந்தியாவை ஆளும் இத்தாலி ராணிக்கும்,பாவை கூத்தில் பொம்மையாக ஊர் சுற்றும் மன்மோகன் சிங்கிற்கும், சிவ கங்கை பானா. சினா.விற்கும் , பட்டத்து இளவரசர் ராகூலுக்கும், அத்வானிக்கும்,சுஷ்மா சுவராஜிக்கும் இது பற்றி ஒன்றுமே தெரியாது. பாவம்.
அதே தேசிய கட்சிகளும் தமிழ் நாட்டில் கூடத்தான் இருக்கின்றன? "தமிழர்கள் இந்தியர்கள் இல்லை " என்று சொல்லிவிட்டுபோங்களேன். ஏன் இந்த மாய் மாலம்? ஏற்கனவே இந்த உணர்வை மத்தியில் ஆட்சி செய்த அணைத்து கட்சிகளும் இங்கு வளர்துவிட்டுள்ளனர் . கூடவே இந்திய ஒருமை பாடு பற்றி பேசி பேசியே இவர்களின் வாய் நிறை கிழிந்து போயுள்ளது. ஆனாலும் இன்னமும் பேசுவார்கள்.கேட்பதற்குத்தான் நாம் இருக்கிறோமே! தமிழர் பிரச்னை என்றால் " இந்திய ஒருமை பாடு, தேசிய நீரோட்டம், இந்திய இறையாண்மை " என்று குய்யோ முறையோ என்று கூக்குரல் போடும் காகிராஸ் காரர்களும், பாரதீய ஜனதா காரர்களும் இப்போது தண்ணி அடித்து விட்டு, வயிறு புடைக்க தின்று விட்டு ஏ. சி. ரூமில் தூங்க போய்விடுவார்கள் பாவம். மற்ற நாட்களில் தேசீய ஒருமைப்பாடு பேசி பேசியே வாய் கிழிந்து போய் இப்போது அதில் தையல் போட்டு , ரணம் இன்னம் ஆறவில்லை. பாவம் விட்டுவிடுவோம் .
கர்நாடகாவில் ஆரம்பித்து இன்று கேரளா, ஆந்திரா என்று இவர்கள் நம்மை சுற்றி யுள்ள அனைவரும் நமக்கு, தமிழ் நாட்டுக்கு தண்ணீர் பங்கீட்டில் எதிராக செயல் பட ஆரம்பித்துவிட்டனர். இங்கு நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரம் மட்டும் N.T.P.C. மூலமாக பகிர்ந்து பிற மாநிலங்களுக்கும் தருவார்களாம். ஆனால் உயிர் ஆதாரமான ஆற்று நீரை மட்டும் அந்த அந்த மாநில அரசுகள் மட்டுமே கட்டுப்படுத்துமாம். எந்த தில்லாலங்கிடி லம்பாடிக்கூட்டம் இது போன்ற சட்ட வரை முறைகளை உருவாகியதோ தெரியவில்லை. நாமும் இதனை நம்பிக்கொண்டு இன்னமும் கேணையர்களாகவே இருகின்றோம்.
காவிரியில் தண்ணீர் இல்லை என்றால் வயிறு எரிவது என்போன்ற காவிரி டெல்டா காரனும் மட்டுமல்ல, தென் தமிழக கடைக்கோடி கன்னியா குமரி, நாகர் கோயில் முதல், வட தமிழ் நாட்டு செங்கல் பட்டு, ஆரணி காரன் வரை வயிறு எறிந்துதான் போவான்.
" தேசிய கட்சிகளாக " காட்டிகொள்ளும் அணைவரும் தமிழகத்தில் குப்பைகளாகி போனதற்கு காரணம் இந்த காவிரி நீர் அன்றி வேறு ஒன்றுமில்லை. இது அவர்களுக்கும் தெரியும்தானே!
உபரியாக மழை பொழிந்து, மீதம் உள்ள நீர் அணையிலிருந்து வழிந்தால் மட்டுமே காவிரியில் தண்ணீர் விடுவார்களாம்.
"ஆட்டோ வரும் " என்று பின்னூட்டம் எழுதாதீர்கள். எந்த கோஷ்டி தண்டசெலவு செய்வது என்று சண்டைவந்து, செருப்படி பட்டு. கட்டிய வேஷ்டிகள் கிழியும், ஊர் சிரிக்கும்!!
13 comments:
பதிவு கலக்கல்.. நான் நினைத்துகொண்டு இருந்ததை, ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க..
மக்களுக்கு விழிப்புணர்வு வரனும் பாஸ்..
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட இந்த மனிதரை நினைத்துவிட்டால்..... ;-(
கக்கு... அட்டகாசம்.
சரியான கருத்து ! ( இண்ட்லில ஓட்டு போட்டாச்சு )
உண்மை.
ம்ழை பேஞ்சதால தண்ணிய விட்டுட்டான் கர்னாடகா காரன் என்னாலதான் வந்ததுன்னு மார்தட்டுவான் தமிழ்நாட்டு அரசியல் வியாதி
இது தமிழ்நாட்டின் சாபக்கேடு பாஸ்,,இதில்வேறு தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசுவான்கள் பாரு..
"மழை பேஞ்சதால தண்ணிய விட்டுட்டான் கர்னாடகா காரன் என்னாலதான் வந்ததுன்னு மார்தட்டுவான் தமிழ்நாட்டு அரசியல் வியாதி "
இந்த காமிடிவேறு அடிக்கடி நடக்கும்
சரி பாஸ் எந்திரன் 300 கோடியை தாண்டி விட்டதாமே ,,நாமெ திருந்தவே மாட்டோம் சாமி
இந்தியாவில் தேசியகட்சிகள் என்று ஏதும் இல்லை,எல்லாகட்சிகளும் அவர் அவர் ஆளும் மாநிலங்களில் நலனை மற்றுமே நினைக்கின்றது.இதில் தேசிய ஒருமைப்பாடாவது !#$%^&*(?.(உங்கள் மின் அஞ்சல் முகவரி தேவை.என் மின் அஞ்சல் முகவரி mlakshankumar@gmail.com.}நன்றி.
டைம் வேஸ்ட் தல..மாறபோறது இல்ல யாரும் ...
ஒய்யார கொண்டையில் ஈறும் பேனுமாம்...நதி நீர் இணைப்புக்கு வழி காணவில்லை..70 ஆயிரம் கோடியில் காமன்வெல்த் விளையாட்டு.(இதில் அவரவர் கொள்ளை அடித்தது வேறு).விளையாட்டுக்கு செலவிட்ட தொகையை நதிநீர் இணைப்புக்கு செலவிட்டிருக்கலாம்.(அதற்காக விளையாட்டுவேண்டாம் என்று சொல்லவில்லை.வளமான இந்தியாவை உருவாக்கியபின் ஒலிம்பிக் விளையாட்டையே இங்கு நடத்தட்டும்.)ம்..புலம்பி என்ன பிரயோஜனம்...அந்த சைதாப்பேட்டை சாமியார்தான் நம்பளை காப்பற்றவேண்டும்...
வாழ்கவளமுடன்.
வேலன்.
நம்முடன் ஒட்றுமை இல்லாததை இதற்க்கு காரணம்
தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கோர் குணமுண்டு!
சவுக்கடி கேள்விகள்! சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்!
இன்றைய அரசியல் கட்சிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் சவுக்கடி கொடுப்பதைப் போன்ற கேள்விகள். திருந்துவார்களா மக்கள். ம்ஹும்.. அடுத்த தேர்தலிலும் இரண்டுபேரில் எவராவது ஒருவர்தான் ஜெயிப்பார்கள்.
கருத்துரையிடுக