பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, அக்டோபர் 31

இதெல்லாம் கூட கின்னஸ் சாதனையாம்!!

இதெல்லாம் கூடவா உலக சாதனை ?!

இந்த செய்தியை படிக்கும் போதே என்னுள் ஆயிரத்தெட்டு கேள்விகள். இன்னம் "உலக சாதனை" பட்டியலில் என்ன என்ன பாக்கி இருக்கு? 

பெயர்: Francisco Domingo Joaquim, - பிரான்சிஸ்கோ டோமிங்கோ ஜாக்விம் 
வயது:  இருபது
நாடு:  சாம்பிஜாணா - அங்கோலா 

இந்த இளைஞர் செய்த சாதனை?

இவரின் வாய் தான் தற்போது அகில உலகத்திலேயே மிகவும் நீண்ட/பெரிய வாயாம்
சுமார் பதினேழு செண்டி மீட்டர் நீளத்திற்கு ஒரு ரப்பர்/ பிளாஸ்டிக் பை போல இவரது வாய் நீண்டு சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னால் இந்த "பெரிய வாய் " போட்டியில் பங்கு கொண்டவர்களால் அதிகபட்சம் ஒரு காப்பி கோப்பை அல்லது ஒரு பீர் பாட்டில் (சிறியது) மட்டுமே உள்ளே வைக்க இயலுமாம்.

இந்த நபர் ஒரு கொக்க கோல டப்பாவையே அடக்கி வைத்துள்ளார். முதன் முதலில் இவர் தன் வாய் "திறமையை" தம் சொந்த ஊரில் நிகழ்த்திக்காட்ட, இரண்டுவருடங்களுக்கு பிறகு you tube இல் இவரது வீடியோவை கண்ட கின்னஸ் உலக சாதனை பதிவர்கள் குழு தங்கள் சாதனை பட்டியலில் இவரையும் சேர்த்து "உலகின் பெரிய வாயாலராக " பெருமை படுத்தியதில் குஷியில் இருக்கிறார்

கின்னஸ் சாதனை பதிவர்கள் இன்னம் என்ன என்ன உலக சாதனை எல்லாம் பதியப்போகிறார்களோ !!

நம்ம ஊரில் அரசியல் / ஜாதி சொல்லி பிழைக்கும் அணைவருக்கும் இவரைவிடவும் அதி நீண்ட வாயும் கையும்  இருப்பதை இந்த கின்னஸ் சாதனை பதிவர்களுக்கு தெரியவந்தால் இங்கு மொத்த இந்தியாவில் ஒரு ரகளையே நடக்கும் "நான்"   "நீ " என்று.


கல்ப் நியூஸ்- GULF NEWS பத்திரிக்கையில் படித்தது.

10 comments:

philosophy prabhakaran சொன்னது…

வாயாடிப் பயலா இருப்பான் போல இருக்கே...

DrPKandaswamyPhD சொன்னது…

உலகம் போகிற போக்கைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

velanblogger சொன்னது…

அவரை இங்கு வரசொல்லுங்கள்.முழு பலாப்பழத்தையே முழுங்கும் அரசியல்வாதிகளை காண்பிக்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

புதிய மனிதா. சொன்னது…

என்ன கொடுமை சார்,.

சசிகுமார் சொன்னது…

//கல்ப் நியூஸ்- GULF NEWS பத்திரிக்கையில் படித்தது//

நம்ம தினகரன் பேப்பரிலும் வந்தது.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வெளங்கும், அவன் வாயி...!

RVS சொன்னது…

யாருப்பா இந்த கொக்ககோலா வாயன். ;-)

நம்ம சுஜாதா குரல் மாதிரி இருக்கு. அன்னிலேர்ந்து இன்னிக்கி வரை அதே குரல் வளம். வயலின் பார்த்தா நம்ம ராஜாதான் மியூசிக். அது நிச்சயம். ரைட்டா.. ;-)

பெயரில்லா சொன்னது…

//சசிகுமார் சொன்னது…
//கல்ப் நியூஸ்- GULF NEWS பத்திரிக்கையில் படித்தது//

நம்ம தினகரன் பேப்பரிலும் வந்தது.

1 நவம்பர், 2010 11:21 am
சசிகுமார் சொன்னது…//

neenka enkiyao parthathiyo paditahiyo than ungal blogil idukrigal nabagam irukkattum

பெயரில்லா சொன்னது…

this for சசிகுமார்

வசந்தவாசல் அ.சலீம்பாஷா சொன்னது…

ஓ ஊத்தவாய் ஊத்தவாயின்னு கேள்வி பட்டிருக்கேன். இதுதான் ஊத்தவாயோ?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக