குஷ்டம் வந்த கைகளில் ஹென்னா இட்டு அழகாக காட்டுகிறார்கள்.
இந்த வெப் சைட், ஆட்டங்களின் நேரடி விபரங்களை தானியியங்கி முறையில் வெளியிட வேண்டும். ( Automatic Updates ) நவீன விளையாட்டு துறையில், முழு விபரங்களையும் உடனுக்குடன் தெரிவிக்கும் இந்த நவீன , மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தில் Time, Scoring & Results (T S R) System கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டது.சொல்லிவைத்தார்போல முற்றிலும் செயலற்று லாயகற்றதாய் போனதால், போட்டிகள் ஆரம்பித்து சென்று கொண்டிருக்கும் போது தற்காலிகமாக வேறு ஒரு ஏற்பாட்டினை ஆர்கனைசிங் கமிட்டி ஏற்பாடு செய்தது.
என்ன ?............ஏது....... ?? புரியவில்லையா? தொடர்ந்து படியுங்கள்.
இதற்காக விழா ஒருங்கிணைப்பு குழு வாங்கிய அந்த தொழில் நுட்பத்திற்கு ஆன செலவு 112 கோடி ரூபாய்கள். 2006 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மெல்போர்னில் நடந்த காமன் வெல்த் போட்டிகளில் இந்த தொழில் நுட்பத்திற்கு ஆனா செலவைப்போல ஐந்து மடங்கு அதிகம் செலவு செய்துள்ளது இந்திய காமன் வெல்த் விளையாட்டு துறை ஒருங்கிணைப்பு குழு.
என்னதான் மிக நவீனமானதாக இருந்தாலும் தற்காலிகமாக நடக்கும் ஒரு பன்னாட்டு விளையாட்டு திருவிழாவிற்கு, ஒரு வெப் சைட் திறக்க 112 கோடிகளா தேவைப்படும்?? வெறும் வெப் சைட் க்கு மட்டுமே இது. இன்னமும் நிறைய தலைப்புகளில் பட்டியல் உள்ளது. அனைத்தையும் அறிந்துகொண்டால் எல்லோருக்கும் "வயித்தால " போக ஆரம்பித்துவிடும்.
குஷ்டம் வந்த கைகளில் ஹென்னா இட்டு அழகாக காட்ட ஆரம்பித்தாகி விட்டார்கள் இவர்கள். அடுத்து கால்களிலும் குஷ்டம் உள்ளதை மும்பை கொலாபாவில் கார்கில் வீரர்களுக்கு கட்டப்பட்ட "ஆதர்ஷ் வீட்டு மனை" திட்டத்தில் காட்டிவிட்டனர்.
சுரேஷ் கலமாடி, எம்.எஸ். கில் , ஜெயபால் ரெட்டி மற்றும் ஷீலா தீட்சித் இவர்கள், இவர்களின் கீழே வரும் அத்துனை அரசு துறைகளும் அடித்த கொள்ளைகள் இறுதியில் சோனியா, மன்மோகன் வரை போய் நிற்கும் போலும். மன்மோகன் அரசு பதவியில் இருந்து விலக இந்த காமன் வெல்த் கேம் இமாலய ஊழல் மிகப்பெரிய காரணமாக இருக்க வேண்டும் . ஆனால் அடுத்து?
இங்குதான் ஒரு மூதேவி போனால் அடுதுவருவதும் ஒரு நாதாரியாகவே இருகிறதே!
இந்திய ஜனநாயகம் இவர்களுக்காகவே அன்றி வேறு யாருக்குமில்லை.
11 comments:
ரொம்ப காரமா இருக்கு கக்கு. அடுத்ததா தீபாவளிக்கு ஸ்வீட்டா ஏதாவது எழுதுங்க. ;-)
எப்பா முடியலடா சாமி இவனுங்க பண்ற கலாட்டாவுக்கு ஒரே முற்று புள்ளியே இல்லையா அண்ணாத்த
//இங்குதான் ஒரு மூதேவி போனால் அடுதுவருவதும் ஒரு நாதாரியாகவே இருகிறதே!
இந்திய ஜனநாயகம் இவர்களுக்காகவே அன்றி வேறு யாருக்குமில்லை. // இந்த நிலை என்று மாறப்போகிறதோ!
டாய்லட் பேபர்லேயே ஆட்டைய போட்டவங்க,கம்பியுட்டரு வெப்சைடுனா சும்மா விடுவாய்ங்களா.டாய்லட் பேப்பர் ஒரு ரோல் 4000ரூபாய்யாம்.நமக்கு இங்கே *&^%$# @#$%^ தன்னி இல்லை.
ஒரு அமெரிக்க அடிமையிடம் நீங்கள் இதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும்.
உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன். திரு மன்மோகன் இதற்கு முன் அமெரிக்க அடிமையான உலக வங்கியின் சேர்மன்.
ஒரு அமெரிக்க அடிமையிடம் நீங்கள் இதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும்.
உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன். திரு மன்மோகன் இதற்கு முன் அமெரிக்க அடிமையான உலக வங்கியின் சேர்மன். நேரமிருந்தால் www.vikkiulagam.blogspot.com வரவும்
அண்ணே.. எங்க க்ளையண்ட் கல்மாடி , எங்ககிட்ட, உங்களை பற்றி புகார் சொல்லியிருக்காருண்ணே..
பாவம்ண்ணே அவரு.. நாட்டுக்காக 5 கோடி மிச்சம் பண்ணியிருக்காரு.. அவரப்போயி....
http://pattapatti.blogspot.com/2010/11/blog-post_03.html
//இங்குதான் ஒரு மூதேவி போனால் அடுதுவருவதும் ஒரு நாதாரியாகவே இருகிறதே!//
:)
மூதேவி தான் தொடர்ந்து இருக்கனும்னு சொல்லும் நாதாரிகளை நினைத்துக் கொண்டேன்.
//இங்குதான் ஒரு மூதேவி போனால் அடுதுவருவதும் ஒரு நாதாரியாகவே இருகிறதே!
இந்திய ஜனநாயகம் இவர்களுக்காகவே அன்றி வேறு யாருக்குமில்லை//
சரிதான். இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் எல்லா அரசியல் கட்சிகளும் வீணாய் போனவைதான். அதனால் கெட்டுப் போனவைகளில் எது சிறிது கெட்டதாக இருக்கிறது எனத் தேட வேண்டிய அவலம்.
நாட்டுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்துவரும் மேதகு கல்மாடி அவர்களைப் பற்றி தவறாக எழுதியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
இந்திய ஜனநாயகம் இவர்களுக்காகவே அன்றி வேறு யாருக்குமில்லை.
வாழ்க வளமுடன்.
வேலன்.
கருத்துரையிடுக