பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், நவம்பர் 3

அப்படி போடுன்னானா !!

இந்திய நாட்டின் பிரதமர் பதவில் உள்ளவர்கள் எல்லாம் எழுபது வயதைக்கடந்த
 "சாவுகிராக்கிகள் " அப்படி இருக்க எங்களுக்கு மட்டும் ஏன் வயது வரம்பு ? இப்படி "டகால்டி " யாக டெல்லி உயர்நீதி மன்றத்தை கேள்வி கேட்டு அசத்திருகிறார் இன்னொரு கிழவர். 

தேசிய விளையாட்டு க்கழக்கம் - National Sports Federation இக்கழகத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதி மன்றம் மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்திற்கு சில வரை முறைகளை பின்பற்றும் படி அறிக்கை விட, வந்தது வினை!

தேசிய விளையாட்டு கழகத்தின் கீழ் பல விளையாட்டு பிரிவுகள் உள்ளன . ஒவ்வொரு விளயாடுதுறைக்கும் ஒரு  தலைவர் உண்டு.

// தலைமை பொறுப்பில் உள்ளவர்க்கு 12 ஆண்டுகள் மட்டுமே பதவி,
செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு அதிகபட்சம் தொடர்ந்து 4 வருடங்கள். மேலும் 70 வயதைக்கடந்த எவரும் இது போன்ற விளையாட்டு துறைகளில் பதவி வகிக்க இயலாது. //

இவைகள்தான் அந்த நீதி மன்றத்தின் வழிகாட்டுதல் நெறிமுறை.

இந்த நெறிமுறைகள், தங்கள் வருமானம், வீடு,வசதி,  போக்குவரத்து ,பிற அரசின் சலுகைகள், வெளிநாட்டு பயணம் ,அந்தஸ்து என அனைத்துக்கும் சேர்த்து ஆப்பு அடிக்கும் விதமாக இருப்பதால் மேற்கண்டவாறு நீதிமன்றத்தை கேள்விகேட்டு அசத்தியுள்ளவர் இந்திய வில் வித்தை அசோஷியேஷன் (Archery Association of India President) தலைவராக உள்ள விஜய் குமார் மல்ஹோத்ரா.

// எழுபது வயதுக்கு குறைவானவர்களால் மட்டுமே நல்ல,சிறப்பான நிர்வாகம் செய்யமுடியும் என்றால், 76 வயது நிரம்பிய மன்மோகன் சிங்க் இந்த நாட்டின் பிரதமராக பதவியில் இருக்கிறார்.

இந்த நாட்டின் பெரும்பாலான மாநில முதல்வர்கள்; டெல்லி முதல் அமைச்சர் ஷீலா தீக்ஷித் உட்பட அணைவரும் 70 வயதுக்கு மேலானவர்களே. 

இந்த நாட்டின் மத்திய விளையாட்டு துறை அமைச்சராக உள்ள திருவாளர் மகாகணம். M.S. கில் அவர்களும் 70 வயதைகடந்தவரே!

இவர்கள் எல்லாம் நல்ல ,சிறப்பான நிர்வாகம் தருகிறார்கள் என்றால் ; நாங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ?
எங்களாலும் அவர்கள் போல சிறப்பாக பணியாற்ற முடியும்.//

அந்த தாத்தா தான் இப்படி போட்டு தாக்கியுள்ளார் !! ஞாயம் தானே!

கட்டையில் போகவேண்டிய வயதானர்வர்கள் எல்லோரும் இப்படி சாகும் வரை பதவியில் ஒட்டிகொண்டிருந்தால் எங்கிருந்து இளைஞர்கள் முன்னுக்கு வருவார்கள்? அவர்களுக்கு எப்போது அந்த வாய்ப்பு வரும்? 

தேசிய விளையாட்டு கழகத்தின் கீழே வரும் 62 பிரிவுகளில்; 24 பிரிவுகள், அதாவது குத்துசண்டை, டென்னிஸ், அத்லேட்ஸ் போன்ற துறைகளில் வயது வரம்பை மீறி இன்னமும் பதவியில் உள்ளனர் என்று விளையாட்டு துறை அமைச்சகமே அறிக்கை விட்டுள்ளது. 

V.K. மல்ஹோத்ரா - வயது - 76 - தொடர்ந்து 31 வருடங்களாக பதவியில் இருக்கிறார்.

கேப்டன் K. சதீஷ் ஷர்மா (ராஜிவின் டேராடூன் பள்ளித்தோழர்) - ஏரோ கிளப் பிரெசிடென்ட் - 24 வருடங்களாக பதவியில் இருக்கிறார்.

இந்திய ஒலிம்பிக் அசோஷியேஷன் பொதுசெயலாளர் - ரந்திர் சிங் - 24 வருடங்களாக பதவியில் உள்ளார்.

அடுத்து வருபவர் நம்ம "விளையாட்டு நாயகன் " சுரேஷ் கல்லு மாடி ! - 15 வருடங்களாக.

இந்திய சைக்கிள் பெடரேஷன் தலைவர் - சுக் தேவ் சிங் தின்ஷா - 14 வருடங்களாக .

ஒன்றை புரிந்து கொள்ளுக்கள், இந்த பஞ்சாபிகள் எல்லாம் பல வருடங்களுக்கு முன்னால் இதே காங்கிரஸ் காரர்களால்தான் நியமிக்கப்பட்டவர்கள். இனிவரும் காலங்களில் இவர்களின் வாரிசுகளே இனி இந்த பதவிகளில் அமருவார்கள். அப்படித்தான் இங்கு எல்லா அரசு / அதிகாரம் உள்ள பதவிகள் எல்லாம் சூறையாடப்பட்டுவிட்டன.

இந்த அளவு ஊழலும் முறைகேடுகளும் எல்லா இடங்களிலும் இங்கு வரக்காரணம் இது போன்ற தொடர்ந்த பதவி வாய்ப்புக்களே!

இதுவே அணைத்து மாநிலங்களின் தலையெழுத்தாக போய்விட்டது 


ஒரு நாடு தழுவிய இளைய வயதினர் இயக்கம் கிளர்ந்து எழுந்தால் அன்றி இந்த பேராசை பிடித்த கிழவர்களை / கிழவிகளை இறுதி ஊர்வலம் அனுப்ப சான்சே வராது மக்களே !! 






அட..................!!. இது, எனது நூறாவது பதிவாம். ஞாபகமே இல்லை. தொடர்ந்து ஆதரவளிக்கும் வாசக  அன்பர்களுக்கும், சக பதிவர்களுக்கும் , நண்பர்களுக்கும் என் அன்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக்க நன்றி!

தொடருவோம். :))))))



28 comments:

Menaga Sathia சொன்னது…

congrats on ur 1st century!!

எஸ்.கே சொன்னது…

நாட்டின் நிலை என்று மாறுமோ!

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் தங்கள் எழுத்துப் பணி சிறக்கட்டும்!

பொன் மாலை பொழுது சொன்னது…

Thnaks Mrs.Menagasathia.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி எஸ்.கே.

நிச்சயம் ஒருநாள் மாறும்.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி புவனேஸ்வரி ராமநாதன் !

மனோ சாமிநாதன் சொன்னது…

நூறாவது பதிவு மிக நன்றாக இருக்கிறது!
விரைவில் 200, 300 என்று பதிவுகள் தொடர என் இனிய வாழ்த்துக்கள்!!

தெய்வசுகந்தி சொன்னது…

வாழ்த்துக்கள்!!

Philosophy Prabhakaran சொன்னது…

நூறுக்கு வாழ்த்துக்கள்... தலைப்பை படித்ததும் எதோ காமெடிப் பதிவு என்று உள்ளே நுழைந்தேன்... ஆனால் கலக்கியிருக்கிறீர்கள்...

ப.கந்தசாமி சொன்னது…

எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களை கிழவர்கள் என்று சொல்வதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இதற்காக உலகளாவிய போராட்டம் நடத்தப்போகிறேன். ஜாக்கிரதை?

வேலன். சொன்னது…

எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களை கிழவர்கள் என்று சொல்வதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இதற்காக உலகளாவிய போராட்டம் நடத்தப்போகிறேன். ஜாக்கிரதை?
உங்கள் அணியில் ஒருவர் சேர்ந்துவிட்டார்..

அட...100 ஆவது பதிவு 1000 ஆவது பதிவாக வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

RVS சொன்னது…

அரசியல் கிழவர்களின் அட்டகாசங்கள் தான் பொறுக்க முடியவில்லையே..

நூறிலிருந்து நூறாயிரத்திற்கு வாழ்த்துக்கள் கக்கு. ;-) ;-)

வலசு - வேலணை சொன்னது…

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

சசிகுமார் சொன்னது…

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

என் கண்மணி என்ன குறை கண்டாய்.
என்னிடம் உனக்கு ஏனிந்த காண்டு. இந்த வயதிலும் என்னைப்போல் நீ தினம் ஒரு உடன்பிறப்பு கடிதம் எழுத முடியுமா.

வாழ்த்துக்கள்

எம் அப்துல் காதர் சொன்னது…

கக்கு-மாணிக்கம் sir, தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எங்களின் மனம் நிறைந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்

அலைகள் பாலா சொன்னது…

//ஒரு நாடு தழுவிய இளைய வயதினர் இயக்கம் கிளர்ந்து எழுந்தால் அன்றி இந்த பேராசை பிடித்த கிழவர்களை / கிழவிகளை இறுதி ஊர்வலம் அனுப்ப சான்சே வராது மக்களே !! //

நிஜம்

Geetha6 சொன்னது…

வாழ்த்துக்கள்

nis சொன்னது…

தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நண்பர் மாணிக்கம்

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை சொன்னது…

100 வாழ்த்துக்கள்!

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

நூறுக்கு வாழ்த்துக்கள்.

மேலும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

மனோ சாமிநாதன்
தெய்வசுகந்தி
philosophy prabhakaran
DrPKandaswamyPhD
வேலன்.
RVS
வலசு
சசிகுமார்
விக்கி உலகம்
எம் அப்துல் காதர்
அலைகள் பாலா
Geetha6
தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை
சைவகொத்துப்பரோட்டா

வருகை தந்த அணைவருக்கும் நன்றிகள்.
தீவாளி வாழ்த்துக்கள்.

Kandumany Veluppillai Rudra சொன்னது…

நூறைத் தாண்டியதற்கு வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி உருத்திரா அவர்களே !

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

எப்பூடி.. சொன்னது…

செஞ்சரிக்கு வாழ்த்துக்கள்; தொடர்ந்து டபிள், ரிபிலென்று சதமடித்து கலக்குங்கள்.

test சொன்னது…

வாழ்த்துக்கள்! மென்மேலும் தங்கள் எழுத்துப் பணி சிறக்கட்டும்! :)

santhosh சொன்னது…

congrates for 100th article..
A very nice one...
They are all keep on saying that india's future is in the hands of youngsters.... But no step has been taken to implement these words... But why should we vote them????

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக