இதை வைத்து 'இந்தியா ஒரு வல்லரசு ' என வெறுமெனே பீற்றிக்கொள்ள இருந்தார்கள். ஆனால் வழக்கமான ஊழல் நாற்றம் மிக அதிகமாக அடிக்க ஆரபித்து ஊரும், நாடும், ஏன் உலகம் முழுவதும் நாறிப்போனதால் இப்போது புண்ணுக்கு புனுகு பூசும் வேலைகள் நடந்துகொண்டுள்ளன.
இன்னமும் பத்தே நாட்கள் மட்டுமே இருக்கிறது. முடிக்கப்படாத ஏராளமான வேலைகள் குவிந்துள்ளன. அவர்களே வைத்துக்கொண்ட, பணி முடிக்கும் இறுதி நாட்களும் காலாவதியாகி விட்டன. அரசியல் வாதிகளின் அடங்காத, கொள்ளை அடிக்கும் பேராசை, காலதாமதம். முதலில் இருந்து கடை நிலை வரை எவ்வளவு காசு பார்க்கலாம் என்ற நிலையில் நடந்த வேலைகள் எல்லாம் இன்று சரிந்து விழுந்து மானத்தை கப்பல் ஏற்றி கொண்டுள்ளனர் காகிராஸ் எம் .பி. கள்.
Horrific: Dirt is plastered over the sink and toilet in this bathroom
Horrors: A mattress on a bed is covered in paw prints
Filthy: Another sink is left covered in muck at the athletes' village
Shocking: A shower is left caked in filth in Delhi
Horrors: A mattress on a bed is covered in paw prints
இந்த கதியில் உள்ள இவர்களின் சுய தம்பட்டம் மட்டும் குறைய வில்லை. 2008 ஆண்டு சைனாவில், பீஜிங் இல் நடந்த ஒலிம்பிக் ஏற்பாடுகளை விட மிக பிரமாதமாக எல்லாம் நடக்கிறது என்று விட்ட "பீலாக்கள் " எல்லாம் இன்று சந்தி சிரிகிறது.நம நாட்டை போல சைனா மூன்று மடங்கு அதிகமாக பொருளாதார வலிமை கொண்டது. மேலும் இங்கு உள்ளதுபோல "தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் " என்ற பீத்தல் ஜனநாயகம் அங்கு இல்லை. அடக்கு முறை இருப்பதாலோ எனவோ அந்த நாட்டின் மானம் கப்பல் ஏறாமல் உள்ளது. மாறாக, நம் "பீத்தல் ஜனநாயக காவலர்கள்" காசு வரும் என்றால் இடுப்பில் இருக்கும் கோவணத்தையும் உருவி கொடுத்து விட்டு காசை வாங்கிகொள்ளும் கயவாளிகள்.
சென்ற மாதம் இந்த ஊழல் செய்திகள் வெளியில் வர ஆரம்பித்தபோது காமன் வெல்த் விளையாட்டு நாயகன் சுரேஷ் கல்மாடி விட்ட சரடுகளை சற்று நினைவு படுத்தினால் தெரியும்.
“It is going to be the best infrastructure in the world. It is going to have the best games; better than the Beijing Olympics,” the under-fire Indian chief organiser Suresh Kalmadi boasted at the end of last month."
ஆனால் நடப்பவைகள்?? டெல்லி வாசிகள் அனைவரும் காறி துப்பிகொண்டுள்ளனர் என்றுதான் செய்திகள் வருகிறது. திட்டமிட்டதை விட ஐந்து மடங்கு அதிகமாக செலவை நீட்டித்தார்கள். சுமார் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்கள் - இந்திய மக்களின் பணம் செலவாகியுள்ளது.
சமீபத்தில் புதிதாய் கட்டிய ஒரு நடை பாலம் சரிந்து விழுந்து அங்கு வேலைசெய்த பணியாளர்கள் வேறு பாதிக்கப்பட்டனர். இதுவரை கட்டப்பட்டுள்ள அரங்கங்கள், மற்றும் விளையாட்டு வீரர்களின் தாங்கும் விடுதிகள் அனைத்தும் வேலைகள் இன்னமும் முடிக்கப்படாமல், வசிக்க லாயகற்றதாய், கட்டுமான பொருள்கள் போட்டுவைதுள்ளனர் என்ற நிலை.
ஆனால் இவைகளை சொல்லப்போனால் டெல்லியை ஆளும் அந்த காங்கிரஸ் கார பெண் முதலவருக்கு மகா கோபம் தான் வருகிறது. இந்த டெல்லி காமன் வெல்த் விளையாட்டு ஏற்பாடுகளை குறை சொல்பவர்களை "தேச விரோதிகள் " என்று சொல்லுகிறார்.
“I have never seen a country where they talk against their own like this,”
Delhi chief minister Sheila Dikshit complained on Wednesday as she spoke to the hostile local media.
ஆனால் இந்தியாவை பற்றி மிக கேவலமான வகையில் " அருந்த பழசான, திறமை சிறிதும் அற்ற அரசு நிர்வாகம்,மோசமான கட்டமைப்பு முறைகள். தலைமை முதல் இறுதி வரை பரவி நிற்கும் ஊழல், மலிவான அரசியல் லாபங்கள் " என்று அடிக்கிக்கொண்டே போகின்றன பிற நாட்டு மீடியாக்கள்.
உண்மையில், நம்நாட்டில் தனியார் துறைகளில் மிளிரும் திறமையும், வளர்ச்சியும் மட்டுமே நம்நாட்டை பிறர் மதிக்கும் படி உள்ளது அன்றி அரசு சார்ந்த அணைத்து துறைகளிலும் நிர்வாகம் சீர்கெட்டு, சுயநலமும், லஞ்சமும்,மக்களை மதிக்காத மனப்போக்கும் வளர்ந்து விட்டதால் இன்று நாட்டின் மானம் சிரிப்பாய் சிரிகிறது அன்றி ஆள்பவர்கள் சொல்வது போல அல்லது நடிப்பது போல "இந்தியா வல்லரசு " என்பது வெறும் மாய்மாலம், வாய் ஜாலம் தான்.
தனியார் துறை மூலம் சாத்தியமான,குஜராத்தில் அமைந்துள்ள உலகத்திலேலே மிகப்பெரிய எண்ணெய் சுத்தகரிப்பு ஆலை மற்றும் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட டெல்லி சர்வதேச விமான நிலையம் போன்ற பிருமாண்டகளை செய்தது தனியார் துறை திறமைகளே அன்றி இந்த வெட்கம் கெட்ட, சோம்பேறிகள் நிறைத்த அரசு துறைகள் இல்லை.
“It’s not India’s inability to build infrastructure. It’s the Indian government’s inability,”
இவ்வாறுதான் பிறர் நம்மை பார்கின்றனர்.பங்கெடுக்கும் நாடுகள் எல்லாம் பின்வாங்க ஆரன்பிதுவிட்டன என்ற செய்தி அவமானமாக உள்ளது.
ஆஸ்திரேலியா ஒருபடி மேலேயே போய்விட்டது. விளையாட்டு வீரர்கள் அன்றி சுற்றுலா சென்றவர்களும் மிக ஜாக்கிரதையாக இருக்கும் படியும் , தீவிர வாதிகளின் தாக்குதல் வாய்ப்புக்கள் அதிகம் என்று வேறு புளியை கரைதுவிட்டுள்ளது.
ஆனாலும் இந்த குழு அமைப்புக்களையும், அரசியல் ,ஆட்சி நடத்துவோரையும் ஒன்றும் செய்ய இயலாத.அவர்களுக்கு சகல் வித மான பாதுகாப்புக்களும் உண்டுதானே !
ஆனால் டெல்லி வாசிகள் சொல்லுவது போல
ஆனால் டெல்லி வாசிகள் சொல்லுவது போல
" ஒரு காமன் வெல்த் ஜெயில் ஒன்று அவசியம் வேண்டும்.அதில் இத விளையாட்டு விழாவிற்கு என செயல் பட்ட அணைத்து மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை உள்ள அதனை பேரையும் முண்டமாக அதில் அடைத்து விட்டு அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் "
இந்த அளவு ஆத்திரமும் அவமானமும் அடைத்துள்ளனர் அவர்கள்.
சென்ற இரண்டு ஆண்டுகளாக மிகசிறந்த அகில உலக நிகழ்வாக இருக்கப்போவதாக வர்ணிக்கபட்ட ஒரு திருவிழா இந்திய அரசின் அல்லது டெல்லி மாநில அரசின் மிக சுரண்டல் போக்காலும், திட்டமிடுதல், அவைகளை செயல் படுத்துதல் போன்ற திறமைகள் இல்லாத, கல்லா கட்டுவதே குறிகோளாக உள்ள ஒரு கும்பலால் இந்திய நாட்டின் மானம் போனதுதான் மிச்சம்.
இன்று இரவு (24/09/10) இது தொடர்பாக படித்தது :
proudindian (dallas) 24/09/2010 at 10:43 pm
kalamdi, sheela dixit, all the stake holders in CWG suck. These shameless people should be terminated from their positions and never be allowed to hold them again. Heights of corruption, mismanagement, failure, disgust and shame. They have brought such disgrace to the country. I feel sorry for Indian people. These greedy people have blown up the taxpayer's money. I think the bank accounts and assets of these people and their associates should be checked. They have looted the country. God I wish I had the power, i would have taught them a lesson of their lives. i really want to slap these idiots and give them extreme punishment.
kalamdi, sheela dixit, all the stake holders in CWG suck. These shameless people should be terminated from their positions and never be allowed to hold them again. Heights of corruption, mismanagement, failure, disgust and shame. They have brought such disgrace to the country. I feel sorry for Indian people. These greedy people have blown up the taxpayer's money. I think the bank accounts and assets of these people and their associates should be checked. They have looted the country. God I wish I had the power, i would have taught them a lesson of their lives. i really want to slap these idiots and give them extreme punishment.
Banke Bihari (Malabo) 24/09/2010 at 11:10 pm
The responsibility lies with Mrs. Gandhi, Mr. Rahul Gandhi, Mr. Manmohan Singh, Cabinet Secretary, Mrs. Shila Dixit, Mr. M.S.Gill, Mr. Kalmadi, all the babus who are supervising. They all are making us fool since last 6 years that all is well with the preparations. We will again vote these shameless politicians in next elections. They are good for nothing. Mr. Manmohan Singh is a puppet everybody knows.
The responsibility lies with Mrs. Gandhi, Mr. Rahul Gandhi, Mr. Manmohan Singh, Cabinet Secretary, Mrs. Shila Dixit, Mr. M.S.Gill, Mr. Kalmadi, all the babus who are supervising. They all are making us fool since last 6 years that all is well with the preparations. We will again vote these shameless politicians in next elections. They are good for nothing. Mr. Manmohan Singh is a puppet everybody knows.
நமக்குத்தான் சன் டி.வி .யை யும் ஜெயா டி.வி.யையும் விட்டால் வேறு கதி கிடையாதே !
TIMES OF INDIA வில் இன்று மாலை வாசகர்களின் கருத்து கருத்து இது.
எப்படி 'போட்டு வாங்கி' இருக்கிறார் பாருங்கள்.
இப்படி எழுதினால் அது தேச விரோதமாம். கண்றாவி.
15 comments:
இந்தியாவின் மானம் கொஞ்சம் கொஞ்சமாக செல்கிறது. :-(
மானம் கப்பல்ல இல்லை, ஏரோபிளேன்லயே ஏத்திட்டாங்க
சொந்தக்காசுலே சூனியம் வச்சுக்கிறதுங்கிறது இதான் போலிருக்கு! இப்படியா அசிங்கம் பண்ணுவாங்க? :-(
சாட்டையை கையில் எடுத்துட்டீங்க. விளாசுங்க !
காமன் வெல்த் என்று கேட்டால் கூட ரொம்ப கோபம் வருகிறது .வெட்கம்கெட்ட அரசு .வாழ்க இந்தியா பணநாயகம்
ஓ.. இதுலேயும் லஞ்சம் புரையோடியிருக்கா?
விளங்கும் பாஸ்..
இந்த கழிப்பறையில்..லஞ்ச பிசாசுகளை , மூணூ நாள் அடைத்து வைத்து சாப்பிடச்சொல்லனும்...
நல்லா வருது.. வாயில..............!
காமன்வெல்த் என்று பெயர் பார்த்தாலே நான் அதை படிப்பதில்லை. வீண் மன உளைச்சல்
காமன்வெல்த் நடத்தாமல் இருந்திருந்தால் ஓரளவு இந்தியாவின் பெயர் காப்பாற்றப்பட்டிருக்கும். பேராசைக்காரர்களால் பெயர் தொலைந்ததுதான் மிச்சம். சிறப்பான இடுகை.
ஸ்ரீ....
நம் "பீத்தல் ஜனநாயக காவலர்கள்" காசு வரும் என்றால் இடுப்பில் இருக்கும் கோவணத்தையும் உருவி கொடுத்து விட்டு காசை வாங்கிகொள்ளும் கயவாளிகள்//
நல்லா சொன்னீங்க..இவனுக எல்லாம் பொணம் தின்னி கழுகுங்க..சி.பி.ஐ கூட இப்போ மொண்ணை ஆயிடுச்சு...
பதிவு ரொம்பக் காட்டம். ஆயினும் நிஜமே.!
பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றான் பாரதி! காங்கிரசித் தூக்கி எறியா விட்டால், இந்த தேசம் இன்னும் என்னென்ன சீர்கேடுகளைச் சந்திக்க வேண்டியிருக்குமோ?
அப்புறம் அந்த டெல்லிக்கார முதலமைச்சருக்கு பிரதமரிடமிருந்து டோஸ் கிடைத்ததாக இன்றைய மாலை செய்திகள் சொல்கின்றன.
http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.html
தப்பு பண்ணா, அரசியல் அதிகாரம், பணம் பலம் வச்சி தப்பிச்சிக்கலாம், தவிர மக்கள் இத வச்சி ஓட்டு போடாம இருக்க மாட்டாங்கனு நினைக்கிறாங்க. மக்கள் கிட்ட பயமில்லாம போயிடுச்சேண்ணே???!!!.
பாஜாக, மதவெறி கட்சி அதுக்கு ஓட்டு போடமாட்டாங்க, அதனால மக்களுக்கு நம்ம கட்சிக்கு ஓட்டு போடுறத தவிர வேற வழியில்லைனு நினைச்சுட்டாங்க போல.
என்னத்தச் சொல்ல மானம் போகுது...
அரசியல்வாதிகள் வோட்டு கேட்கும் வரைதான் மக்களிடம் வருகிறார்கள். அப்புறம் அவர்கள் சொல்லும் எந்த விஷயத்தையும் அவர்கள் ஒத்துக் கொள்வது இல்லை. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் என்னென்ன பேசினார்கள், என்னென்ன பேசாமல் இருந்தார்கள் என்று பார்த்துக் கொண்டுதானே இருந்தோம்?
கருத்துரையிடுக