பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, செப்டம்பர் 25

அவனுக்கு மட்டும் தூக்கு தண்டனையா??ஆரம்பமாகி விட்டன  பூசி மெழுகும் வேலைகள்:.
டெல்லி. 25/09/2010
முன்னாள் காமன் வெல்த் விளையாட்டு தங்க பதக்க வீரர் அக்கிள் குமார் இன்று ஒலிம்பிக் பவன் என்ற இடத்தில் ,தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் சென்று அந்த கட்டிலில் அமரும் பொது அந்த கட்டில் சரிந்து விழுந்தது. இது தான்  கடைசி செய்தி. ஆனால் இன்னும் வரும்.


ஆனால் இந்த கல்ல மாடி நாய் தன பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மறுப்பு. 

அந்த ஒற்றை பாகிஸ்தானியான அஜ்மல் கசாப் கூட தன்மீது உள்ள கொலை பழிகளை, தார்மீக குற்றங்களை ஒப்புக்கொண்டாலும் தான் சார்ந்த இயக்கம் பற்றிய உண்மைகளை மறுத்துள்ளான். இந்த சுரேஷ் கல்ல  மாடியும் பல நேரங்களில் முன் வைக்கப்பட்ட ஊழல் , நாட்டு மான பங்கம் ,தேச துரோகம் மற்றும் பல பெரிய தவறான நடவடிக்கைகளை வழக்கம் போல மறுத்தாலும் இறுதியில் திடீரென்று தவறுகளுக்கு தான் பொறுப்பு ஏற்பதாக பெரிய மனதுடன் கூறியுள்ளார். 
காசாப் தன் தூக்கு கயிறுக்காக காத்திருக்கிறான். ஆனால் இந்த கல்ல மாடியோ காமன் வெல்த் தலைமை பொறுப்பில் இன்னமும் இருந்து கொண்டு தன மற்றைய சகாக்களுடன் அமர்ந்து கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி தருகிறார். 

இங்கு காசாபையும், இந்த கல்ல மாடியையும் ஒன்றாக ஒப்பிட்டு சொல்வதின் காரணம் இருவரும் ஒரே மாதிரியான துரோகங்களை செய்தவர்களே. இவர்களின் நசவடிக்கைகள் எந்த அளவிற்கு ஒவ்வொரு இந்தியனையும் மனதளவில் , உணர்வு பூர்வமாக பாதித்தது என்பதை உணரவேண்டும். பிறநாடுகள் இப்படி எள்ளி நகையாடி கேவலமாக நம்மை பார்க்க வைத்தவர் இவர். இந்திய நாட்டின் மானமும், கவ்ரவமும் காற்றில் பறந்தபோது நம்மவர்கள் என்ன மன நிலையில் இருந்தோம்? 

கசாப் கைதாகி விசாரணையில் இருந்த போதும் நாம் இருந்த மன நிலையை எண்ணிப்பாருங்கள். இந்த இரண்டு வேதனைகளும் அவமானமும் ஒன்றானதே. கசாப் ஒரு அயல் நாட்டு தீவிர வாதி. அவனது குறிக்கோளே இந்தியாவை நாசம் செய்வது. தான் சார்ந்த குழுவிற்கு விசுவாசமாய் , நம்பிக்கையை இருப்பது. 

கல்ல மாடி . கில்லு மற்றும் ஷீலா தீட்தித் இவர்கள் காங்கிரசின்  , இல்லை சோனியாவின் விசுவாசிகள். நம் நாட்டின் மானம் மரியாதை பற்றி கவலை யற்றவர்கள். 
இந்த கில்லு மீடியாக்களிடம் தங்கள் பஞ்சாபி கல்யாண லட்டு கதைகளை சொல்லி சமாளிக்கிறார். பார்த்திருப்பீர்கள் சி. என் . என்னில் 
இந்த கல்ல மாடியும், எம் .எஸ். கில்லும் மற்றும் ஷீலா தீட்சித்தும் இன்னும் இதில் தொடர்புடைய அனைவரும் இந்தியர்கள், எம். பி . மற்றும் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள். அந்த அம்மையார் ஷீலா தீட்சித் ஒரு தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதி நிதி. உண்மையில்  இவர்கள் அனைவரும் அயல் நாட்டு கசாபை விட மிக மோசமான இந்திய எதிரிகள். தேச விரோதிகள் தான். இவர்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அல்லாமல் இவர்கள் இன்னமும் தங்கள் பதவிகளில் பொறுப்புகளில் தொடர்ந்து இருந்தால் அது மிக மோசமான முன் உதாரணமாகிவிடும். இவர்கள் குற்றமற்றவர்கள் அல்ல எனில்  கசாபையும் கூட வெளியில் விட்டு விடலாம் தானே? அவனி மட்டும் ஏன் தூக்கில் இடவேண்டும்? 

கசாபிர்க்கும் ஏதாவது ஒரு அரசு துறையில் பதிவியை கொடுத்து சலுகைகள் எல்லாம் கொடுத்து வைத்துக்கொள்ளலாமே ?  தேச துரோக நடவடிக்கைகள் செய்த ஒரு அயல் நாட்டு காரனுக்கு தூக்கு தண்டனை. அதே போன்ற அதற்கும் சற்றும் குறையாத தேச துரோகங்கள் செய்த கல்லு மாடி, கில்லு மற்றும் ஷீலா தீட்தித் என்ற காகிராஸ் கார பெண் மணிக்கு அரசு அந்தஸ்து. இது வெட்ககரமானதாய் இல்லையா? சொல்லுங்கள்? 


சுமார் 70000 கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் எதனை ஆயிரம் கட்டுமான தொழிலாளர்கள், எந்திர,தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டி இருக்கும்? அவர்களுக்கு இயற்கை உபாதைகள் வராதா? அவர்களும் மல ஜாலம் கழிக்க மாட்டார்களா ? அவர்களுக்கு என்ன ஏற்பாடுகள் இவர்கள் செய்து கொடுத்து விட்டனர்? கல்லு மாடியும். கில்லும் ஷீலா தீட்தித்து மட்டும் ஏ.சி . வைத்த பாத் ரூமில் மல ஜாலம் கழிப்பார்கள் . ஆனால் இந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் டெல்லி யமுனை ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டும்.  அவர்கள் என்ன செய்வார்கள ? கிடைத்த இடத்தை பயன் படுத்திக்கொண்டார்கள். மிக மோசமான , கேவலமான நிர்வாகமே இதற்க்கு காரணம். 

கல் மாடியும் மற்றவர்களும் தம் பதவி விட்டு கீழே இறங்க வேண்டும் 

செல் போன் பயன் படுத்துபவர்களின் இந்தியாவில் மிக அதிகம் என்று பீற்றிகொள்ளுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. ஆனால் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் எத்தனை பேருக்கு தங்கள் உடல் கழிவுகளை கக்கூசில் மட்டுமே சென்று வெளியேற்ற வேண்டும் என்ற சாதாரண அறிவு , புத்தி உள்ளது ? 
கொள்ளை அடித்ததுதான் என்றாலும் மீடியாக்கள் உள்ளே வந்து நாற அடித்து , நாட்டின் மானம் போகும் வரையில் கூட இவர்கள் என்னதான் செய்து கொண்டிருந்தனர்?? 
மெத்தனம் - நம்மை யார் கேட்பது? என்ற மெத்தனம். 

" பள்ளிக்கு பிள்ளைகள் செல்லும் காலை நேரங்களில் "திராவிடர்கள் " அந்த சாலையின் இரு மருங்கிலும் அமர்ந்து மல ஜாலம் கழிக்கும் ஜன்மங்கள் " என்று ஒரு வட நாட்டு கபோதியோ ஒரு மலையாள நாயோ பேசும் போதும் எழுத்தும் போதும் எனக்கு பற்றித்தான் எரிகிறது. இனிமேலாவது பொது இடங்களில் , பிறர் முன்னிலையில் தங்கள் உடல் கழிவுகளை வெளியேறும் எவரையும் கண்டியுங்கள். இந்தியா வல்லரசாக வேறு ஒன்றும் தேவை இல்லை. இந்த புத்தி மட்டும் நம் ஜனங்களுக்கு வந்தால் போதும்.

பின்னர் கல் மாடியும் வேண்டாம், கில்லும் வேண்டாம், மன் மோகன் சிங்கும் வேண்டாம் ஏன் ? சோனியா வும் கூட வேண்டாம். நாமே போதும். 


14 comments:

Gayathri சொன்னது…

ivargalin yaar ketkka pogiraar endra alatchiyamtham than ippothu indhiyavin maanathai vangi ullathu..iniyavathu makkalukku bhudhi vandha thevalai..jananaayagam endru perthaan

DrPKandaswamyPhD சொன்னது…

// பள்ளிக்கு பிள்ளைகள் செல்லும் காலை நேரங்களில் "திராவிடர்கள் " அந்த சாலையின் இரு மருங்கிலும் அமர்ந்து மல ஜலம் கழிக்கும் ஜன்மங்கள் " //

சமுதாயத்தைக் கட்டிக் காப்பதாக பீற்றிக் கொள்ளும் நாதாரிகள் இதைத்தடுத்தால் போதும்.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

கல்மாடியை கசாப்புடன் ஒப்பிட்டதை வன்மையாக ஆதரிக்கிறேன்..
ஏன்னா காமன் வெல்த் கேம்ஸ் - ஐ சீர்குலைக்க புதிதாக ஒரு கசாப் பாகிஸ்தானில் இருந்து கிளம்பி வர வேண்டியதில்லை ..வக்காளி .....கல்மாடியே போதும் .. !!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//பின்னர் கல் மாடியும் வேண்டாம், கில்லும் வேண்டாம், மன் மோகன் சிங்கும் வேண்டாம் ஏன் ? சோனியா வும் கூட வேண்டாம். நாமே போதும். //

அதேதான் நானுன் சொல்றேன் ..
ஆனா மக்கள்..... யார் ஆண்டா / பேண்டா என்ன?? .. ஓட்டுக்கு பணம்தான் வேணும் என்கிறார்களே ?? ....

யூர்கன் க்ருகியர் சொன்னது…

"சோனியாவின் எதிரொலி" மண்ணு மொக்க சிங்கு எதாவது வாய தொறந்தாரா ?
(வாய தொறந்தாலும்,,, பைவ் ஸ்டார் சொக்லேட்டை வாயில கொதப்பிக்கிட்டு ஆழ்கிணற்றில் இருந்து பேசற மாதிரி , கூட நிக்கும் செக்யூரிட்டிகே கூட கேட்காத வகையில் ஒரு கதையை சொல்லிட்டு நேரா சோனியாவில் கால்ல விளுந்திடுவாறு.. )

வேலன். சொன்னது…

ம்...ஊம்...சான்ஸே இல்லை...நிச்சயம் ஆட்டோதான்...

ஆட்டோ வராதவரை
வாழ்க வளமுடன்.
வேலன்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அவனுகளுக்கு வேண்டியத சுருட்டிக்கிட்டானுங்க, இனி பதவியில இருந்தா என்ன இல்லாட்டி என்ன? ஜெயிலுக்குப் போனா என்ன, போகாட்டி என்ன?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இது தான் கடைசி செய்தி. ஆனால் இன்னும் வரும்.//
சூப்பர் ..இன்னும் நிறைய வருங்க சர்வதேச மீடியாக்கள் உத்து கவனிக்கிறாங்க..பொம்மை பிரதமரை காய்ச்சி எடுக்க போறாங்க பாருங்க..ஏற்கனவே பிபிசி நாறடிக்குது

ஸ்ரீராம். சொன்னது…

லேட்டஸ்ட்டா ஆஸ்திரேலியா வீரர்கள் வந்து வில்லேஜ் சூப்பரா இருக்குன்னு பாராட்டிட்டாங்க..!

என்னது நானு யாரா? சொன்னது…

மக்கள் எல்லோரும் அணி திரள வேண்டும். நீங்கள் சொன்ன மாதிரி இதற்குப் பொறுப்பானவர்கள் எல்லோரும் பதவி விலக வேண்டும். செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு! நன்றி நண்பா!

kavisiva சொன்னது…

//லேட்டஸ்ட்டா ஆஸ்திரேலியா வீரர்கள் வந்து வில்லேஜ் சூப்பரா இருக்குன்னு பாராட்டிட்டாங்க//

எம்புட்டு பணம் கொடுத்தானுங்களோ! போட்டியை இந்தியாவில் நடத்தறதுக்கே கோடிக்கணக்குல லஞ்சம் கொடுத்தானுங்களாமே! என்ன வேணும்னாலும் நடக்கும்.

Indian சொன்னது…

I wish some "friend" from Pakistan shall bomb and kill the entire MPs in the Parliment in ND.

winstea சொன்னது…

poonaiku yar mani katrathu?

ஜெகதீஸ்வரன். சொன்னது…

காலை நேரங்களில் சென்னை மின்சார ரயிலில்பயணம் செய்யும் போது பற்றி்க்கொண்டு வருகிறது. கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் திறந்தவெளியில் மலம் கழிக்கின்றார்கள்.

சாராயத்திற்கு செலவு செய்யும் காசில் கழிப்படம் செல்ல மக்களை அறிவுருத்துவதா. அந்த சாராயம் விற்ற காசை மக்களுக்காக கழிப்பிடமாவது கட்டித்தரச் சொல்லி வலியுருத்துவதா என தெரியவில்லை,.

சென்னை மெரினாவில் உலகமே பொழுதுபோக்க வந்து நிற்க சிலர் மலம் கழிக்கவே வருகின்றார்கள்.

தேசம் நாசம்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக