பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், செப்டம்பர் 29

அயோத்தி பூசல் முடிவுக்கு வந்தது !!

விட்டு வைக்க வில்லை யாரும் !

யார் சொன்னார்களோ ஆரோக்கிய வாழ்விற்கு சிரிப்பே சிறந்த மருந்து என்று. 
துன்பம் வரும் வேளையிலும் சிரிக்க சொன்னவர் தமிழ் சான்றோர் அன்றி வேறு எந்த நாட்டிலும் இதுபோல சொன்னதில்லை. 
துன்பம்  வந்து தொலைத்துவிட்ட பிறகு என்ன செய்வது?
 அதேதான். சிரியுங்கள். கிறுக்கர் களைப்போல கோபப்படவும், அழவும், ஏங்கவும்,ஆசைபடவும்,வியப்படையவும், ஆத்திரப்படவும், இறுதியில் சிரித்து தொலைக்கவும் மட்டுமே நாமும், நமது பெருமை மிக்க ஜன நாயகமும்.
சென்ற மாதங்களாக கோபமும் ஆத்திரமும் கொப்பளிக்க எல்லோர் வாயிலும் புகுந்து புறப்பட்ட காமன் வெல்த் போட்டிகளின் கதாநாயகன் சுரேஷ் கல் மாடி இப்போது SMS , ட்விட்டர், மூஞ்சி புத்தகம் (face book)  மூலமாக காமெடி ஜோக்குகளாக மாறி நாடு முழுதும் சிரிப்பாய் சிரிக்கிறார்.

ஊழல், லஞ்சம், முறைகேடுகள் எதுவாய் இருந்தாலும் அவைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விடும் மனப்போக்கே நம் அரசியல் மற்றும் அதிகார பீடத்தில் இருப்பவர்களுக்கு சாதகமாய் போகிறது.இந்த முறை நம் காமன் வெல்த் கதாநாயகன் சுரேஷ் கல் மாடியின் குற்ற உணர்வு மிளிரும், தாடியுடன், தன் பாதத்தை தானே தன்  வாயில் வைத்துக்கொள்ளும் வாய் ஜாலத்தினாலும் அவரைப்போலவே அனைவரும் மிமிக்க்ரி , நையாண்டி செய்து நக்கலடித்து நார அடித்துள்ளனர்.
பி. ஜே . பி . யின் கல் மாடி எதிர்ப்பு போராட்டம் - டெல்லி


 1. ஏ.ஆர். ரஹ்மானின் இசைநிகழ்ச்சியில் கல் மாடி தன் குழுவினருடன் டான்ஸ் ஆடுகிறார்.
 2. இங்கிலாந்து ராணியை எப்படியாவது பேசி சமாளித்து டிங்கு ஜுரம் பரவும் டெல்லி க்கு தொடக்க விழாவிற்கு அழைதுசெல்லுமாறு கல் மாடியை இளவரசர் சார்லஸ் வேண்டிக்கொண்டிருக்கிறார். காரணம் : அவர் அடுத்து அரச பதவிக்கு முடி சூட்டிக்கொள்ள அதுவே கடைசி சான்ஸ்.
 3. தீவிர வாத , பயங்கர வாத குழுக்களும் போட்டிகள் நடக்கும் டெல்லி வர அச்சம்.தங்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று. தாக்ஸ் டு kal மாடி.
 4. தீவிர வாதிகள் அனைவரும் மிக்க மகிழ்ச்சி. பணம் வேறு அனுப்புகிறார்களாம் கல் மாடிக்கு. அவர்களின் வேலை மிச்சமாம்.கட்டிடங்களை இடிக்கவும்,மக்களை கொள்ளவும்,இந்தியாவின் மானத்தை கப்பலேற்றவும்.
 5. அவசர செய்தி: எல்லோரும் திட்டியதால் அவமானம் தாங்காமல் கல் மாடி தூக்கு மாட்டிக்கொள்ள ...ஆனால் பாவம் , மேல் தளம் சரிந்து விழுந்துவிட்டது . கால் எலும்பு முறிவு ,தூக்கு கை விடப்பட்டது.
 6. தளத்தில் உள்ள மின் பல்புகளை மாற்ற CWG கமிட்டியில் எத்தனை பேர் உள்ளனர்.யாரும் தயாராய் இல்லை - பல்பை கழட்டுகிறேன் என்று புடுங்க, தளம் முழுவதும் தலையில் விழவா?
 7. போட்டிகளில் இருந்து அநேகம் பேர் வெளியேறுகின்றனர். இதை தவிர்த்திருக்கலாம், கல் மாடியின் அப்பா தக்க சமயத்தில் வெளியே எடுத்திருந்தால்.
 8. இந்த முறை கல் மாடியின் மீது ஷூ எறியும்  போட்டியும் புதிதாய் சேர்த்துள்ளனர்.
 9. கல் மாடி நடிக்கும் RK FILMS மேரா நாம் புரோக்கர் .
 10. ஆபிரிக்க வீரர்கள் தங்கும் அறையில் பாம்பு: நாங்கள் தான் அவைகளை அங்கு விட்டு வைத்தோம். அவர்களுக்கு தங்கள் நாட்டில் இருப்பதைப்போன்ற உணர்வு வேண்டுமென்று!
 11. கல் மாடி - ஷீலா தீட்சி இடம்: "நீங்கள் தான் இந்த பொறுப்புகளை என்னிடம்தந்தீர்கள். இன்று கேவலமாய் அவமானப்பட்டு நிக்கிறேன். நான் மட்டும் உங்கள் புருஷனாக இருந்திருந்தால் உங்கள் டீ யில் விஷத்தை போட்டிருப்பேன்."
 12. பதிலுக்கு ஷீலா தீட்சித் - "நான் மட்டும் உன் பெண்டாட்டியாக இருந்திருந்தால் அந்த டீ யை குடித்து தொலைத்திருப்பேன்."
 13. மண் மோகன் சிபாரிசு : கல் மாடிக்கு பத்ம பூஷன் மற்றும் கேல் ரத்னா விருதுகளுக்கு.
 14. அயோத்தி பூசல் முடிவுக்கு வந்தது. இந்துக்கள் மசூதி கட்டவும், முஸ்லிம்கள் அங்கு ராமர் கோயில் கட்டவும் ஆதரவு.மதிய அரசு அயோத்தி நிலத்தை கல் மாடியிடம் கொடுத்து கட்டிடங்கள் கட்ட ஏற்பாடு. 
 15. பாகிஸ்தானிய  ஜனாதிபதி ஆசிப்  அலி சர்தாரி கொண்டாட்டம். பாகிஸ்தான் பிரிவினையின் பொது காணாமல் போன தன உடன் பிறந்த சகோதரனை இந்தியாவில் இருப்பதாக கண்டுபிடித்து விட்டாராம். அந்த சகோதரன் சுரேஷ் கல் மாடி. 
 16.  CWG என்பது இனி KWG - கல் மாடி வெல்த் கேம்.
 17. டெல்லி அரசு அறிவிப்பு: ஐந்து கிலோ தக்காளி அல்லது பத்து கிலோ வெங்காயம்(இரேண்டில் ஏதாவது ஒன்றுதான்) காமன் வெல்த் டீ ஷர்ட் / தொப்பி . இரண்டு குடைகள், மேலும் A/C பஸ்ஸில் அரங்கை சுற்றி வர இலவச பாஸ் இவைகளுடன் குடும்பம் முழுக்க ஆயுள் இன்சுரன்ஸ் செய்து தரப்படும். காமன் வெல்த் கேம்ஸ் டிக்கெட் வாங்குபவர்களுக்கு.
 18. This one is not for Kalmadi, rather for delhi Cm, The Delhi CM should change her name to "Sheila Deep Shit"
ஆள விடுங்க சாமிகளா!!
10 comments:

பட்டாபட்டி.. சொன்னது…

ரொம்ப வெறுப்பாயிட்டீங்க போல தல....

பட்டாபட்டி.. சொன்னது…

போட்டிகளில் இருந்து அநேகம் பேர் வெளியேறுகின்றனர். இதை தவிர்த்திருக்கலாம், கல் மாடியின் அப்பா தக்க சமயத்தில் வெளியே எடுத்திருந்தால்
//

நல்ல கருத்து... 100% ஆமோதிக்கிறேன்.. ஹா.ஹா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

எல்லோரும் திட்டியதால் அவமானம் தாங்காமல் கல் மாடி தூக்கு மாட்டிக்கொள்ள ...ஆனால் பாவம் , மேல் தளம் சரிந்து விழுந்துவிட்டது//
சூப்பருங்கண்ணா அருமையான தொகுப்பு

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இந்த முறை கல் மாடியின் மீது ஷூ எறியும் போட்டியும் புதிதாய் சேர்த்துள்ளனர்//
ஆஹா

Engineering சொன்னது…

நாம்பளும் கலந்துக்கலாமா புது புது போட்டிகல்லுல ....

என்னது நானு யாரா? சொன்னது…

நிறைய ஜோக்குகளை எடுத்துப் போட்டு கலக்கிட்டீங்க தல! வேற என்ன செய்றது? சிரிச்சிட்டு அடுத்த எலக்ஷன்லேயும் அதே ஆளுங்களுக்கு ஓட்டுப் போடற ஆட்டு மந்தக் கூட்டம் இருக்கிற நாட்டில?

தருமி சொன்னது…

//அயோத்தி பூசல் முடிவுக்கு வந்தது. இந்துக்கள் மசூதி கட்டவும், முஸ்லிம்கள் அங்கு ராமர் கோயில் கட்டவும் ஆதரவு.மதிய அரசு அயோத்தி நிலத்தை கல் மாடியிடம் கொடுத்து கட்டிடங்கள் கட்ட ஏற்பாடு. //

நல்ல ஏற்பாடு ..!

எஸ்.கே சொன்னது…

கோபத்தையும் நகைச்சுவையையும் கலந்து எழுதியிருக்கீங்க! நம்மால அவ்வளவுதான் முடியும்.

உமாபதி சொன்னது…

Mudiyala

புலிகுட்டி சொன்னது…

இதில் இருந்து தபிக்க கல்மாடி பிஜேபியில் சேர்ந்து அப்ருவரா!? மாறிட்டார்.இது நல்லா இருக்கா?.(நடந்தாலும் நடக்கலாம்.அரசியல்ல இதெல்லாம் சாதாரனம்பா!)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக