பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, செப்டம்பர் 18

விருதுகளும் பரிசுகளும் உன்னால் தலை நிமிர்கின்றன !
புவனேஸ்வர்: 
// இசைஞானி இளையராஜாவுக்கு ஒரிசா மாநிலத்தின் அக்ஷய சம்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


இசைத் துறையில் இணையற்ற சாதனை படைத்ததற்காக, 2010-ம் ஆண்டுக்கான இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பாராட்டுப் பட்டயம் அவருக்கு வழங்கப்படுகிறது. 

ஒரிசா மாநிலத்தில் உள்ள அக்ஷயா மொகந்தி அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. 

கடந்த 2007-ம் ஆண்டு முதல் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த அக்ஷய சம்மான் விருதை, ஏற்கனவே மன்னா டே, குல்சார் மற்றும் பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா என இசைமேதைகள் பெற்றுள்ளனர். அடுத்த மாதம் புவனேஸ்வர் நகரில் நடைபெறும் விழாவில் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

உலக அளவில் பல்வேறு பெருமைக்குரிய விருதுகளை பெற்றுள்ள 67 வயதான 'இசைஞானி' இளையராஜா, சிம்பொனி மற்றும் ஆரட்டோரியோ போன்ற உயர்ந்த இசைக் கோர்வைகளை அமைத்த முதல் இந்திய இசையமைப்பாளராவார். சிறந்த திரைப்பட இசையமைப்பாளருக்கான மத்திய அரசின் விருதை 4 முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2010-ம் ஆண்டுக்கான சிறந்த பின்னணி இசைக்கான விருது இரு தினங்களுக்கு முன்புதான் அவருக்கு அறிவிக்கப்பட்டது. //

இசையே நீ என்றும் இருப்பாய். விண்ணும் , மண்ணும் ,காற்றும் ,
மழையும் ,ஆதவனும் போல.
நீ இருக்கும் போதே அதே நாட்களில் நாங்களும் உன் இசையுடன் வாழ்கிறோம் என்பதில் எங்களுக்கு பெருமை.
உன் இசையும், கானமும் , சந்தமும் இந்த வெளியில் என்றும் விளங்கும். 
உன் இசையால் எங்கள்  உள்ளங்களை நிறைத்து வாழவைக்கும் உன் உழைப்பிற்கு தலைவணங்குவோம்.
விருதுகளும் பரிசுகளும் உன்னால் தலை நிமிர்கின்றன!

7 comments:

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

என்றும் ராஜா.

பனங்காட்டு நரி சொன்னது…

ஹய்யா ...,தலைக்கு ரெண்டாவது விருதா !!!
**************************
ராஜா ராஜாதி ராஜன் எங்கள் இசைஞானி இளையராஜா
நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நீ ராஜா
**************************
அண்ணே நானும் ராஜா சாரை பத்தி ஒரு பதிவு போடா போறேன் ...,தகவல் திரட்டுரேன்

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது…

இசையில் அவருக்கு நிகர் அவர் தான்..

யூர்கன் க்ருகியர் சொன்னது…

suparppu !

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இசைக்கடவுள்...!மாதம் ஒரு பாராட்டு விழா இவருக்குத்தான் நடத்த வேண்டும்

drbalas சொன்னது…

RAJA=KING

RVS சொன்னது…

பின்னணி இசைக்காக விருது கிடைத்த ராஜாவைப் பற்றி... பின்னணி இசையில் அசத்திய படங்கள் (நிறைய இருக்கும்) பற்றி ஒரு தனி பதிவு போடலாமா கக்கு..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக