பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், செப்டம்பர் 7

இந்தி To தமிழ்


முதலில் உள்ள வீடியோ வின் பாட்டை ரசியுங்கள். லதா மங்கேஷ் கரின் தேன் வழியும் குரலில் மயங்கலாம்.
இதே போன்ற பாடல் இதே போன்ற காட்சி கருத்துடன் தமிழில் ஒரு படம் உள்ளது. அது என்ன படம். என்ன பாட்டு என்று கண்டுபிடியுங்கள்.மிகவும்  சுலபமான ஒன்று.

மேலே உள்ள இந்தி படம் பற்றி  சில குறிப்புகள்:
படம் : மேரா சாயா.
சுனில் தத் மற்றும் சாதனா நடித்தது.
தயாரிப்பு : பிரேம்ஜி .
இசை: மதன் மோகன் 
இந்த பாடலும் மிகவும் பிரபலம். இதற்கும் ஈடான ஒரு படம் தமிழில் உண்டு. இதே கதை, இதே கருத்து, இதே போன்ற அர்த்தம் கொண்ட பாடலும் உண்டு. கண்டுபிடியுங்கள்.

சத்தியமாக 40  வயதுக்கு கீழே உள்ளவர்கள் சற்று சிரமப்படுவார்கள் கண்டுபிடிக்க. 


இந்த படம் பற்றி: 
மிலன்.
முகேஷ் மற்றும் லதாவின் குரலில்.
சுனில் தத் மற்றும் நூடன் நடித்தது.
L. V.   பிரசாத் தயாரித்தது. 1967
 ( கமலின் ராஜ பார்வை படத்தில் வரும் அந்த தாத்தாதான் )
இசை :லஷ்மி காந்த் பியாரி லால்

இதற்க்கு ஈடான தமிழில் உள்ள வீடியோ  படப்பாடல்கள் தேடியும் கிடைக்க வில்லை. ஆனால் T.V.  நிகழ்சிகளில் வரும் பாடல்களாகவே உள்ளன.

11 comments:

ஜெய்லானி சொன்னது…

முதல் :- இது சிவாஜி படம் பாக பிரிவினை ...!!

ஜெய்லானி சொன்னது…

ரெண்டு :- கமல் ஹாசன் ஸ்ரீ தேவி ஏக் துஜே கேலியே தமிழ் டப்பிங்

IRSHAD JEDDY சொன்னது…

முதல் - இதய கமலம் - ரவிசந்திரன் + KR விஜயா
இரண்டு - பிராப்தம் - சிவாஜி + சாவித்திரி
இவை இரண்டுமே மொழிமாற்று படங்கள்.

R.Gopi சொன்னது…

//லதா மங்கேஷ் கரின் தேன் வழியும் குரலில் மயங்கலாம்.
இதே போன்ற பாடல் இதே போன்ற காட்சி கருத்துடன் தமிழில் ஒரு படம் உள்ளது. //

*********

கே.பாலசந்தர் இயக்கிய “மனதில் உறுதி வேண்டும்” படத்தில் வரும் கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் பாடல், சரியா பாஸ்??

கக்கு - மாணிக்கம் சொன்னது…

உங்களின் இரண்டு விடைகளும் தவறு ஜெய்லா!
முதல் படமாக பாகப்பிரிவினை யை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? அதில் இவ்வாறு காதலில் ஏங்கி உருகி பாடும் பாடல்கள் எதுவும் இல்லையே? இரண்டாவதாக L.V. பிரசாத் என்று தயாரிப்பாளரின் பெயரை குறிப்பிட்டதால் குழப்பமாகி 'ஏக் துஜே கேலியே ' என்று எண்ணி விட்டீர்கள். உண்மையில் இந்த படமும் அவரால் தான் எடுக்கப்பட்டது. நண்பர் IRSHAD JEDDY அவர்கள் சரியாக சொல்லிவிட்டார்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வாருங்கள் IRSHAD JEDDY,
முதன் முறையாக பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி. நீங்கள் கூறிய விடைகள் சரியானதே.
முதல் வீடியோ பாடலான 'து ஜகா ஜகா சலேகா' லதாவின் பாடல் மிக பிரபலம். இந்த மேரா சாயா படம் தமிழில் 'இதயக்கமலம் ' ஆக L.V. பிரசாத் அவர்களால் தயாரிக்கப்பட்டது. ரவிச்சந்திரன்,K.R. விஜயா நடித்து ,இனிய பாடல்களுடன் ஓடி வெள்ளி விழ கண்ட படம்.
'உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல ' என்று சுசிலாவின் பாடல்தான் அது.

இரண்டாவது வீடியோவில் உள்ள 'மிலன்' என்ற படம் தயாரிக்கப்பட்டதும் L.V.பிரசாத் அவர்களால்தான்.இதே படத்தை நடிகையர் திலகம் சாவித்திரி தமிழில் 'பிராப்தம்' என்று எடுத்து ,சிவாஜியுடன் ஜோடியாக நடித்து தோல்வியை கண்டது.இந்த படத்தில் வரும் 'சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து' பாடல்தான் அது.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி R .GOPI.
நண்பர் IRSHAD JEDDY சரியாக சொல்லிவிட்டார்.

RVS சொன்னது…

இந்த மாதிரி பொது அறிவுப் போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கு நான் இன்னும் சினிமாவில் வளரவில்லை கக்கு..பாஸ் நீங்க ப்ளாக் உலகத்துல உலவாம ப்ளாக் உலகமே சூன்யமா இருக்கு... வாம்மா மின்னல்..... :))))))))))

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Jaleela Kamal சொன்னது…

இரண்டு ஹிந்தி படமும் எனக்கு ரொமப் பிடித்தது ஆனால் கண்டு பிடிக்கும் அளவுக்கு இல்லை, பாட்டு , படம் பார்க்கும் போது எங்கேயோ பார்த்தொமே என்றூ மட்டும் தோன்றும்/

velanblogger சொன்னது…

ஆஹா...கண்டுபிடித்துவிட்டேன்..ஜெய்லானிக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டது...
வாழ்க வளமுடன்.
வேலன்.

TechShankar சொன்னது…

சூப்பர்ங்க

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக