பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஆகஸ்ட் 31

நாடகமே உலகம் !


அடுத்த பாரத பிரதமர்............. !?இந்தியாவில் கல்வி அறிவு இல்லாதவர்கள் அதிகம் என்ற ஒரு நிலை இந்த அரசியல் வாதிகளுக்குத்தான் எத்தனை சாதகமாக இருக்கிறது! உண்மையில் எல்லா அரசியல் கட்சிகளும் நாம் இப்படி இருப்பதையே  விரும்புகின்றனர் என்பதே உண்மையிலும் உண்மை.மெயிலில் வந்த படம் இது. போடச்சொன்னார்கள்.போட்டுவிட்டேன் 
கற்றவர்கள் மட்டும் ரொம்ப ஒழுங்கோ ?  என்று கேட்டுவைகாதீர்கள்.பள்ளிக்கூடம் கூட போகாத அரசியல் தலைவர்களுக்கு ஐடியா மணியாக இருபவர்கள் படித்த, அதே சாதி/ இனத்தை சேர்ந்த மேதாவிகளே!

நம்ம ஊர் டிராமா காரர்களுக்கு முன்னால் இது மிகச்சாதாரணம். 
  • கிராமங்களுக்கு சென்றால் அங்குள்ள கிழவிகளை கட்டிபிடித்துகொள்வது,
  • பிறந்து இரண்டுவருடங்கலான பிள்ளைகளுக்கு  பெயர் சூட்டுவது,
  • பிள்ளைகளுக்கு தங்கச்சங்கிலி போடுவது,
  • ஆரத்தி எடுபவர்களுக்கு பணம் தருவது,
  • தெரு கூட்டி சுத்தம் செய்வதாக போட்டோ போடுவது,
  • ஏ.சி. வைத்துகொண்டு நாலுமணி நேரம் உண்ணா நேன்பு இருப்பது :).
 இன்னமும் இருந்தால் யாராவது தொடருங்கள். 
இவர்கள் அடிக்கும் கூத்துக்கள் சில வேளைகளில் மனத்தை லேசாக ஆக்கி சிரிக்க வைப்பதும் உண்டு.


35 comments:

RVS சொன்னது…

//டிராமா காரர்களுக்கு முன்னாள் இது மிகச்சாதாரணம். //

கக்கு "முன்னால்" திருத்திக்கொள்ளவும்.

தோள் மேல் கைபோட்டு போட்டோ எடுத்துக் கொள்வது.
கடித்த ஆப்பிளை லட்ச ரூபாய்க்கு ஏழாம் விடுவது/எடுப்பது.
"என் உயிரினும் மேலான ரசிகப் பெருமக்களுக்கு.. " என்று வாய் உதார் விடுவது.

போதுமப்பா... விடுங்க...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அதை திருத்தி விட்டேன் RVS .
ஐயோ.. எனக்கு சொல்ல வந்து நீங்களும் ............அந்த 'ஏழாம் ' அதைதான் சொன்னேன்.
நல்ல கூத்து இது. :)

RVS சொன்னது…

ஹி ஹி... ஏலம் (yelam என்று அடித்தால் ஏழாம் என்று வருகிறது)....

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Tamilulagam சொன்னது…

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

RVS சொன்னது…

திங்காம ஒட்டகம் மேய்த்தாலும் இப்படித்தான் இருக்குமாம். ஹி ஹி ... ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// ஹி ஹி... ஏலம் (yelam என்று அடித்தால் ஏழாம் என்று வருகிறது)....

அன்புடன் ஆர்.வி.எஸ்.//

கோகுலாஷ்டமி பலகாரம் திருட்டுத்தனமா தின்னா இப்படித்தான் மயக்கம் வருமாம். :)
--

RVS சொன்னது…

கக்கு ஒரு சந்தேகம். எனக்கு யாரும் ஒட்டு போட மாட்டேங்கிறாங்களே ஏன்? நம்மளால காந்தி நோட்டு கொடுக்க முடியாது. நீங்க ஏதாவது திராம்ஸ் கொடுக்குறீங்களோ... ஹும்.... நமக்கு அவ்வளவுதான்...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அய்யா சாமி நாங்க இங்க ஒட்டகமெல்லாம் மேய்கல. மெஷினையும், கெமிகளையும் கட்டிண்டு அழறோம்.

RVS சொன்னது…

சரி.. மெஷினையும் கெமிகலையும் கட்டிண்டு அழுதாலும் இப்படி தான் இருக்குமாம். நோக்கு தெரியாதோ கண்ணு சீ... கக்கு.. ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

ஆனா முன்னைக்கு இப்போ கொஞ்ச நாளா சற்று பரவாயில்லை. உங்க ப்லாகுலேயும் கொஞ்சம் ஓட்டு விழுது. வாசகர்களும் வாராங்க. நானும் கவனிக்கிறேன். ஆரம்பத்தில் இப்படித்தான் இருந்தது.
விஷயம் ரொம்ப சிம்பிள்:
ரொம்பவும் பார்மலாக இல்லாமல் சற்று வித்தியாசமாக, சுவையுடன் இருந்தால் அணைவரும் படிக்கின்றனர்.ஒரே அலைவீச்சில் உள்ளவர்கள் ஓட்டும் போடுகிறார்கள்.அதாவது மிஸ்டர் RVS எழுதுவதைப்போல:)
சரியாகிவிடும் பாருங்கள்

வெறும்பய சொன்னது…

அடடா மேல இருக்கிற விசயத்திற்கும்.. இங்கே நடக்கிற விவாதத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லையே..

வெறும்பய சொன்னது…

படத்தை பார்த்தாலே தெரிகிறது.. அந்த வெள்ளை சட்டைக்கு அடுத்த பிரதமர ஆவதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது என்று...

Jey சொன்னது…

அந்த ப்ளாஸ்டிக் கூடைல கல்லு, மண்ணு ஏதும் இருக்கா மாதிரி தெரியல..எம்ப்டீயா !!!!!!

பாவம்.... சொகுசா வாழ்ந்த பிள்ளை ...அதயாவது தூக்குதே...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அய்யா வெனா,பானா. முதல பேர மாத்தி வெச்சிகிங்க. எங்கே போயி நீங்க பின்னூட்டம் போட்டாலும் பதில் சொல்றவுங்க பாடு கஷ்டமா இருக்கு. இது என்ன பேரு? பேரா கெடக்கில இங்க? அட, ஒரு குதிர , ஆடு, கோழி ன்னு இருந்தா கூட சரிதான்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நண்பர் Jey, உடன் செல்லும் அந்த கிராமத்து பெண் பிள்ளை மீது உங்களுக்கு பரிதாபம் இல்லை பார்த்தீர்களா?
இது இயல்பு. //பெரிய இடத்து பிள்ளை கல்லும் மண்ணும் சுமக்கிறதே பாவம்//
இந்த எண்ணம் தான் அவர்களுக்கு முதலீடு.
நாம் யாரும் அந்த பிள்ளைய பாத்து பரிதாபம் பட வேண்டியதில்லை. நன்றாக இருந்தா வாழ்த்தலாம்.

அருண் பிரசாத் சொன்னது…

காமெடி மட்டும் இல்லை சமயத்துல கோபமும் வருது. ஆனா இந்தியனா பிறந்துட்டா இதையெல்லாம் சகிச்சிதான் போகனும்

தமிழ் அமுதன் சொன்னது…

அண்ணே...! நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வராங்க..! ஆனா..! அரசியல்வாதி நடிக்க கூடாதா..? ;;))

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நடிகர்கள் அரசியலில் வரட்டும், அரசியலில் உள்ளவர்கள் நடிக்கவும் போகட்டும். ஆனால் பொதுவாழ்வில், மக்களை மந்தைகளாக மதித்து ,ஏத்தி ஏமாற்றி பதவிக்கு வருபவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் தமிழ்?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அருண், இந்தியனா பிறந்துட்டா இதெல்லாம் சகிச்த்தான் போகணும் - அப்படி இல்லை. இவைகளை சகிக்க வேண்டியதில்ல. எல்லோரும் ஒரு குறிப்பிட்ட நோக்கோடு ஒன்று சேர்ந்தால் இந்த அல்ப தனங்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். ஆனால் அதுதான் நம்ம நாட்டில் நடக்க விட மாட்டார்களே !

Jey சொன்னது…

//கக்கு - மாணிக்கம் சொன்னது…
நண்பர் Jey, உடன் செல்லும் அந்த கிராமத்து பெண் பிள்ளை மீது உங்களுக்கு பரிதாபம் இல்லை பார்த்தீர்களா?
இது இயல்பு. //பெரிய இடத்து பிள்ளை கல்லும் மண்ணும் சுமக்கிறதே பாவம்//
இந்த எண்ணம் தான் அவர்களுக்கு முதலீடு.
நாம் யாரும் அந்த பிள்ளைய பாத்து பரிதாபம் பட வேண்டியதில்லை. நன்றாக இருந்தா வாழ்த்தலாம்.//

அண்ணே நான் சொன்னது வஞ்சப் புகழ்ச்சிணே...
நக்கல்...:)

மத்தபடி அந்த அம்மனிக வாழ்க்கை அதுபாட்டுக்கு நடக்குது அதை பத்தி கலைப்படுற அளவுக்கு இன்னிக்கி அரசியல், அதிகாரவர்க்கம் இல்லை..., மாறனும்..பாப்போம்...

பெயரில்லா சொன்னது…

thambi netil ithai pakirnthukolvathai vida, kainattu vaithu oottu poodubavarkalidam aduthu selluingal allathu edhuthu sollungal. " cinimavikku pona sittalu" hero iranthuponalum avarai oottu podum avalam irukkum varai. intha nadagangal thodrum.

வேலன். சொன்னது…

சமீப பதிவுகளில் காட்டாம் அதிகமாக உள்ளது.வெளியில் அதிகம் போகவேண்டாம்...கூல்...கூல்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

மாப்ஸ். இந்த பதிவை 'நகைசுவை' தலைப்பிலதானே வெளியிட்டுள்ளேன்! எவர்மீது நமக்கு ஏன் கோபம் வரவேண்டும்?
உண்மையில் இந்த படத்தை பார்த்துவிட்டு நான் சிரித்தேன்.

ஜெய்லானி சொன்னது…

///நண்பர் Jey, உடன் செல்லும் அந்த கிராமத்து பெண் பிள்ளை மீது உங்களுக்கு பரிதாபம் இல்லை பார்த்தீர்களா?
இது இயல்பு.//

யப்பா இது திருந்துமுன்னு நினைக்கிறீங்க.. ஊஹும்...

Jey சொன்னது…

//ஜெய்லானி சொன்னது…
///நண்பர் Jey, உடன் செல்லும் அந்த கிராமத்து பெண் பிள்ளை மீது உங்களுக்கு பரிதாபம் இல்லை பார்த்தீர்களா?
இது இயல்பு.//

யப்பா இது திருந்துமுன்னு நினைக்கிறீங்க.. ஊஹும்...//

ங்கொய்யாலெ..ஜெய்லானி.. எங்க போனலும் என் வேஷ்டிய உருவுரதுல குறியா இரு....:)

பனங்காட்டு நரி சொன்னது…

//// தெக்கு தெரு மச்சானே...................! ஹெட் போன மாட்டிகிட்டு கேளுங்க மக்கா....!!////அண்ணே ! அண்ணே .!! இந்த ரேடியோவை எப்ப மாட்னீங்க ? ஆபிஸ் ல மாட்டிகிட்டேன் :(

கக்கு - மாணிக்கம் சொன்னது…

ஜெயிலா மற்றும் Jey இருவரும் தங்கள் இஷ்டம் போல என்ன வேணாலும் பண்ணுங்க . நான் அம்பேல்!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// / தெக்கு தெரு மச்சானே...................! ஹெட் போன மாட்டிகிட்டு கேளுங்க மக்கா....!!////அண்ணே ! அண்ணே .!! இந்த ரேடியோவை எப்ப மாட்னீங்க ? ஆபிஸ் ல மாட்டிகிட்டேன் :( //
பனக்காட்டு நரி.
யப்பா புள்ளகளா உங்க பேறுகள பாத்தாலே வயித்தகலகுதே!!
இந்த வம்பு வரும் ன்னு தெரிஞ்சுதானே மேலேயே பேனர் கட்னாபோல அத எழுதி வெச்சிருக்கேன்?
ஓகே sorry பணகாட்டு நரியே!

புதிய மனிதா சொன்னது…

உலகம் ஒரு நாடக மேடை எனபது உண்மை..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இன்னா நைனா, இப்பிடி பெரிய எடத்து வம்புலாம் வலிச்சிக்கினு வாரீரு!

பார்வையாளன் சொன்னது…

இந்த நடிகர்கள் செய்யும் இன்னொரு வேலை , இன்னொரு டிராமா பிறந்த நாளுக்கு போஸ்டர் அடித்து ஒட்டுவது- ஒட்ட சொல்வது.. உலகில் இவர்கள் மட்டும்தான் பிறந்தார்களா... நாமெல்லாம் அனாவசியமாக பிறந்து விட்டோமோ ??

முத்து சொன்னது…

ரொம்ப பொறுப்பா பதிவு போடுறது பார்த்தால் 2011ல் முதல்வர் பதவி மேல் கண்ணு வைச்சு இருக்குற மாதிரி தெரியுது

முத்து சொன்னது…

ஏம்ப்பா எல்லோரும் இப்பவே வருங்கால முதல்வருக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பிங்க.jey நம்ம கக்கு ஜெயிக்குறதக்கு நீ பூ குழி இறங்கிடு

முத்து சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இன்னா நைனா, இப்பிடி பெரிய எடத்து வம்புலாம் வலிச்சிக்கினு வாரீரு! /////////////


என்ன பா.ரா.இதுக்கு போயி இப்படி பயப்படுற உனக்கு சுகாதார துறை குடுக்கலாமுன்னு நினைச்சேன்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அய்யா சாமிகளா , ஆள வுட்டா போதும்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக