ஆப்ரிக்க மொழியில் உபுண்டு - மனிதாபி மானம் என்று பொருள் கொள்ளலாம். உண்மையில் நானும் இந்த வினோதமான பெயரைக்கண்டு ஒதுங்கிச் சென்றவந்தான்ஆனால் என்னை படுத்தி எடுக்கும் விண்டோஸ் விஸ்டாவின் பிடுங்கலில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன்,நண்பர்கள் பலரின் பதிவுகளை கண்டபோதுதான்
" உபுண்டுவின் மகத்துவம் என்ன வாயிருக்கும் " என்று காத்திருக்க, நேற்று உபுண்டு வெளியாகியது. நண்பர் தமிழ் நெஞ்சம் அவர்களின் பதிவுகள் அனைத்தும் மிக தரமானதாகவும் பிறருக்கு பயன்படும் வகையிலும்தான் இருக்கும் என்பதை என்னை விடவும் இங்கு நீண்ட நாட்களாக பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு தெரியும் அவரின் அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள் உபுண்டு மீது நல்ல நம்பிக்கையை தந்தது. அவரின் வழிகாட்டுதல் படியே என மடிக்கனணியிலும் (Laptop) உபுண்டு வை எளிதாக தரவிறக்கம் செய்து விட்டேன்.
பயன் படுத்துவதும் மிக எளிதாகவே உள்ளது. என்னை மிகவும் கவர்ந்த அம்சம் அதன் வேகம் தான். மேலும் இதை நிறுவி பராமரிக்க Hard Disc இல் உள்ள முக்கால் பாகமும் தேவை இல்லை என்பது உண்மை.போட்டோக்களும் , இசையும் மிக துல்லியம். back ground மாற்றும் செய்ய தோன்றியது. மாற்ற முற்பட்டபோது உபுண்டுவின் அழகு
என்னை பிரம்மிக்க வைத்தது. ஏனெனில் போடோக்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு துல்லியம்.
MS ஆபீஸ் மற்றும் பிற வகை அணைத்து மென்பொருள்களையும் இங்கும் கையாளலாம் அல்லது ஒன்றிலிருந்து மற்றவற்றிக்கும் மாற்றிக்கொள்ளும் இயல்புடன் இருப்பது சிறப்பு. முற்றிலும் இலவசமாக வே கிடைப்பதால் ஐயம் கொள்ள வேண்டாம்.
IT துறை வல்லுனர்கள் பலர் MS Windows சை சாடுவதும், கிண்டலடிப்பதும் இயல்புதான். அதேபோல உபுண்டுவையும் சிலர் கிண்டலட்டிக்க தவற வில்ல.எது எப்படி இருப்பினும் இது நாள் வரை நாம் MS Windows மூலம் தான் கம்ப்யூட்டர் பழகினோம் என்பதையும் மறக்க வேண்டாம்.' மார்கெட் ஷேர் இல் மூன்று சதவீதம் கூட இல்லாத லினக்ஸ் இக்கு யார்
வைரஸ் ப்ரோக்ராம் எழுதுவார்கள் ?" என்ற நையாண்டிகளும் உண்டுதான். எனக்கு என்னவோ உபுண்டு தன் அற்புதமான
தாக்கத்தை ஆரம்பித்து விட்டது என்றே தோன்றுகிறது.
உபுண்டுவை தரவிறக்கம் செய்யுங்கள்
பயன்படுத்தி மகிழுங்கள்.
10 comments:
மிக நல்ல பதிவு , வாழ்த்துக்கள் இது போன்ற நல்ல விஷியங்களை உங்களிடம் எதிர் பார்க்கிறோம் , அடிக்கடி எழுதுங்கள்.
( யப்பா !! இன்னாடா இது பேஜாரா கீது !! எப்பிடி தான் இது மேரி அல்லாம் பேசறாங்களோ !! சாமி மண்ட வேத்து பூடுதுபா !! )
கொஞ்சம் கொஞ்சமா தமிழ் கத்துக்கறேன் பா !!
ஐயோ ஐயோ ஒட்டு போடலான்னு போனாக்கா !! தகராறு பண்ணுது மாரியாத்தா !! நீ தான் காப்பாத்தனும் !! உனுக்கு கடா வெட்டி கூழு ஊத்துறேன் தாயே !!
( தமலீசு உனுக்காச்சி எனுக்காச்சி பாத்துக்கறேன் உன்னை )
நல்ல பதிவு...நான் உபுண்டுக்கு மாறிட்டேன்....அப்ப நீங்க....?
மாறிடுவோம்....
அப்புறம்....
உங்கள் வருகையாளர்பதிவேடு வேலை செய்யவில்லை...சென்றமாதமும் 565-ல் இருந்தது. இந்த மாதமும் அதே எண்ணில் இருக்கு....அதையும் கவனிக்கவும்....
வாழ்க வளமுடன்,
வேலன்.
நல்லதொரு முயற்சி.
உபுண்டு வை நல்லா பல வகையிலும் டெஸ்ட் வச்சி ரிசல்ட் எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நாங்களும் தெரிஞ்சிக்குறோம்... அப்புறம் மாறிக்கிறோம்.
நன்றிகள் பல !
//சென்றமாதமும் 565-ல் இருந்தது. இந்த மாதமும் அதே எண்ணில் இருக்கு//
அது போன மாசம் ...
இது இந்த மாசம் :)
பயனுள்ள பதிப்பு சார்!!!! அலுவலகம் மற்றும் வீட்டு உபயோகத்திற்க்கு உன்னதமான OS தான் உபுண்டு. பயன்படுத்தி பாருங்கள் நன்றாக இருக்கும்!!!!
Please change the font colour as well as template colour, as its irritating to read the post. Thanks if you consider my request.
very gud posting.. congrats
எனக்கு அதில் நெட் வேலை செய்யவில்லை.(சாஃப்வேர் டிரைவர்).அதனால் எனக்கு அது பிடிக்கவில்லை.மற்ற படி ஓக்கே....தான்.(etisalat alcatel lucent modem)
திரு .ஜெய்லானி,
அமீரகத்தில் இன்டர்நெட் வேகம் மிக மிக குறைவாகவே இருப்பதால் இந்த சிரமம் எனக்கும் இருந்தது.
Etsalat இந்த விஷயத்தில் மிக மெத்தனம் காட்டுவதும் அங்குள்ளவர்களுக்கு தெரியும்.ஏனெனில் இன்டர்நெட் பயன் பாளர்கள் 95% வெளிநாட்டவர்கள்தானே!
Check" Dubai forum " to know the bad about etisalat net speed.
எல்லோரும் பலதடவை கம்ப்ளைன்ட் செய்துவிட்டார்கள். ஒன்றும் பலன் இல்லை.
நான் தற்போது சென்னையில் இருப்பதால் இங்கு நெட்வொர்க் வேகம் பிரமாதம். (Airtel)
கருத்துரையிடுக