பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, அக்டோபர் 10

அளவை மீறினால் ............!!!!


 உலக அளவில் இன்டெர் நெட் பயன் படுத்துவோர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு வருவது இன்று அதன் தேவை அத்வாசியமானதாக உள்ளதை உணர்த்த, ஒவ்வொருவரும் தாம் இன்டெர் நெட் பயன் படுத்தும் நேரமும் நேர் விகிதத்தில் அதிகமாகி கொண்டு வருவதும் அமைதியாக நடந்தாலும் இவைகளினால் உண்டாகும் பல பக்க விளைவுகளும் அதே விகிதத்தில் அதிகரித்து வருவதும் அமைதியாகவே நடந்து வருகிறது.









உளவியல் நிபுணர்கள் இது குறித்து அதிக அக்கறை கொண்டு கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள். பட்டியலிடப்பட்ட மனித குல வியாதிகளின் தொகுப்பில் தற்போது " இன்டெர் நெட் அடிமைத்தனம் "  (Internet Addiction) என்ற வியாதியும் சேர்க்கப்பட்டுள்ளது.  worldstats.com  வலை தளம் கணக்கீட்டின் படி இங்கு அமீரகத்தில் (U.A.E ) மட்டும் இன்டெர் நெட் பயன் படுதுவோர்களின் எண்ணிக்கை கடந்த ஏழு வருடங்களில் 132%  மடங்கு அதிகமாகியுள்ளது. மத்திய கிழுக்கு நாடுகளில் 1176.8%  மடங்கு அதிகமாகியுள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து இங்கு வேலையின் நிமித்தம் குடியேறியுள்ள வர்களின் பங்களிப்பாக 80  சதவிகிதம் உள்ளதாக தெரிவிகின்றனர். 

தங்களின் அன்றாட அலுவல் நேரம் போக மிஞ்சியுள்ள நேரங்களில் சுமார் இரண்டு மணி முதல் அதிகம் ஐந்து மணி நேரம் இன்டர்நெட் இல் இருப்பவர்கள் அதிகம்.எனினும் ஒரு சராசரி அமெரிக்கன் நெட்டில் கழிக்கும் நேரம் மிக அதிகம். வெறும் தகவல்கள் மட்டுமின்றி பொழுது போக்கிற்கும் விளையாட்டிற்கும் இன்டெர் நெட் மிக அதிகமாக பயன் படுத்தப்படுகிறது. இந்த வாழ்கை முறை மாற்றங்கள் அதன் விளைவுகளையும் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளன. 

" நம்முடைய இயல்பான புற வாழ்வை, சக மனிதர்களை, சூழ்நிலைகளை புறக்கணித்து விட்டு ''Virtual"  உலகில் மெல்ல மெல்ல வாழ ஆரம்பிப்பது மோசமான பின் விளைவுகளை கொண்டு வரும் கவலை அளிக்கும் ஒரு விஷயம் " என்கின்றனர். இதற்க்கு இவர்கள் சூட்டியுள்ள பெயர் ''Internet Addictive Disorder '' சுருக்கமாக I A D.

 கோபம், எரிச்சல், மன உளைச்சல், கட்டுபாடற்ற கற்பனை ( Obsessive Thinking )  நேரம் காலம் உணர்வின்றி பயன்படுத்துவது ( Excessive usage )  மற்றும் கம்ப்யூட்டர் அல்லது இன்டெர்நெட் பயன் படுத்த இயலாத நேரங்ங்களில் உண்டாகும் கோபம், எரிச்சல், உடனிருபவருடன் சண்டை, எதிமறை எண்ணங்கள், விதண்டாவாதம்,செய்யல்பாடுகளில் பின்னடைவு மேலும் இயல்பான சமூக வாழ்க்கையிலிருந்து தன்னையும் அறியாமல் விலகிவிடுவதால் உண்டாகும் மனச்சோர்வு, என பயம் காட்ட ஆரம்பித்து விட்டனர். 

இரெண்டு உலகப்போருகளுக்கு பின்னர் உண்டான தொழில் புரட்சி மனித வாழ்க்கையில் உண்டாக்கிய மாற்றங்களும் தாக்கங்களும் தோற்று போகும் படி இன்று இன்டர்நெட் ' Electronic Revolution'  மின்னணு புரட்சியும் அபரிமிதமாக நம் தின சரி வாழ்வில் ஒன்று கலந்து மாற்றங்களை கொண்டுவருவதால் எச்சரிக்கையுடன், கட்டுப்பாட்டுடன் இவைகளை கையாள்வதே அறிவுடைமை.





More Bad News

Apart from dire mental health warnings, research released several years ago shows a strong link between nighttime computing and sleepless nights. In a study conducted at Akita University School of Medicine, it was found that the flickering lights of screen lead to the suppression of sleep triggering Hormone melatonin.

Melatonin is released by the hypothalamus is response to waning light in the Evening and is said to increase tenfold in quantity before bedtime. Sitting in front of the flashing lights of a computer screen delays the release of melatonin and, as a result, you stay wired of hours.

The results of sleep deprivation include memory loss, impaired physical and mental performance, depression and weight gain.

Why weight gain?
In response to a lack of sleep, your body produces more of the appetite-triggering hormone ghelin. That’s why we feel so ravenous after a night of tossing and turning.

So, the long-term effects of too much time logged online – theoretically at least – could be psychosis, insomnia and widening waistline.

Perhaps it’s time to log off Friends!!








8 comments:

வேலன். சொன்னது…

உண்மைதான் நண்பரே...

இணையத்தில் அடிமையாகிவிட்டால் நமது நேரம் காலம் அனைத்தும் விரையமாகிவிடுகின்றது. ஆனால் முகம் காணாத மனிதர்களின் அன்பும் அரவணைப்பும் அதன்மூலம் கிடைக்கின்றதே...இணையம் மூலம் நான் எனது குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரம் குறைவது உண்மைதான். ஆனால் கிடைப்பதற்கு அரிய அமிர்தமாக நண்பர்கள் கிடைத்துள்ளார்களே அதற்கு என்ன சொல்லுகின்றீர்கள்.
நல்லதையே எடுத்துக்கொள்ளுவோம்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

டவுசர் பாண்டி சொன்னது…

ஐயே !! இன்னாப்பா புது வியாதியா கீது ?


இன்னா தான் பண்றது ? ஐயோ !!

இது உன்ணும் முத்தி போச்சின்னா , அவ்ளோ தாம்பா !!

ரோடுல நடந்து போறதுக்கு கூட ஆளே , இருக்காது !! அக்காங் !!

எனுக்கு ஒரு சந்தேகம் , நம்ப கலாம் வாஜார் கீறாரே , அவுரு இன்னாடான்னா உன்ணும் கொஞ்சம் நாள்லே உஸ்கோலு போவற பசண்கோ அல்லாரும் இனிமேட்டு புஸ்தகம் பையி அல்லாம் எட்துக்குனு போவத் தாவலே, இது மேரி ஒரு சின்ன பொட்டி அதாம்பா லேப்பு டாப்பு இர்ந்தா போதும் இன்னு சொல்ட்டாரே !!

ஆனா ஒன்னு நீ சொன்ன மேரி அளவுக்கு மிஞ்சினா ??????
சோக்கு தான் போ !!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

கணினி பயன்பாடு நன் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு அங்கம்.
வாழ்க்கையின் ஒரு அங்கம் மட்டுமே தவிர முழுதும் கிடையாது :)

கணினியை சார்ந்தே நம் வாழ்க்கை முறை இருக்குமானால் நாம் நம் சுயத்தை இழந்து விடும் அபாயமும் உண்டு :)

மேலும் தொழிற்சார்ந்த பயன் பாட்டில் கணினி ஒரு மிக பெரிய வரபிரசாதம்.
உதாரணம் சமீபத்தில் எங்களுக்கு வந்த ஒரு ப்ராஜெக்ட் வொர்க் ஐ குறிப்பிட விரும்புகிறேன் .
அடர்ந்த காட்டுபகுதியில் நடக்கும் பதிவுகளை வீட்டில் பிச்சா மென்று கொண்டே பதீவீடுகளை குறிப்பெடுக்கலாம் ... ஆம் இன்டர்நெட் மூலம் கணினி உங்களுக்காகன்a சேவையினை ஒவ்வொரு மில்லி செகண்ட் உம அப்டெட் செய்கிறது ..

கணினி மூலம் மட்டுமே சாத்தியமான வேலைகள் இன்றைய உலகின் தேவை அதிகம்.அதனால்தான் நாம் எல்லோரும் அதன் பின்னால் ஓடி கொண்டிருக்கிறோம்

வாழ்கையில் அனைவருக்கும் எல்லாமும் (கணினி சார்ந்த சுதந்திரம் )கிடைத்துவிடும் பட்சத்தில் கணினி மோகம் குறைய வாய்புண்டு.

உதாரணம் இன்று isro வில் இருக்கும் விஞ்சானிகள் செய்யும் வேலையை எதிர்காலத்தில் ஒரு கல்லூரி மாணவன் எளிதாக ஹாண்டில் பண்ணும் காலம் வரும் :)
ஏனெனில் எதிர்கால எல்லா தேவைகளுக்கும் இன்று யாரோ ஒரு Professional உழைத்து கொண்டிருக்கிறார் :)

பொன் மாலை பொழுது சொன்னது…

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி வேலன் மாப்ள. உங்கள் கருத்துக்கள் முற்றிலும் எனக்கு சம்மதம். இதே உணர்வில்தான் இன்னமும் இங்கு வளைய வருகின்றேன். கிடப்பதர்கறிய உள்ளங்களை பெற்றுள்ளது இந்த வலையின் தயவால் தான். அதே நேரம் அவர்களை இழுக்கும் அவலமும் இங்கே தான் நேருமோ என்ற அச்சமும் வருவதால் .......

பொன் மாலை பொழுது சொன்னது…

பாண்டி அணாத்த, ஒன்னும் பீதீ ஆவாதீங்கோ, மெர்ஸலாயி பூடாதீங்கோ, நா சொல்லிகினது அளவுக்கு மேல போய்கினா எல்லாம் போஜாராயிபூடும் அவ்ளவ்தான். உங்க ஊரு இன்டெர் நெட்டு ஸ்பீடு இன்னா ? அத சொல்லிகினா அப்பள தெர்ஞ்சி பூடும் உங்க அயகு ஆக்காங். நமக்கு தா பொண்டாடிந்கோ,( ஐயோ ஐயோ ) பொண்டாட்டி , புள்ளங்கோ அப்பால அம்மா அப்பா, தொஸ்துங்கோ அல்லாரும் கீறாங்களே !
இங்கன வந்து கமெண்ட்ஸ் உட்டுகினதுக்கு ரொம்ப டாங்க்சு வாஜாரே !
சரி வர்டா

பொன் மாலை பொழுது சொன்னது…

அய்ய, நம்ம மாப்ள கீதே அவரு ஒரு ....அத்து இன்னா பா ....ஆ..........'அறிவு சீவி' ..அட அத்தான் இன்னமோ பெர்ய மன்சாளுங்கோ ரொம்ப பட்சவுங்கோ சொல்லுவாங்கல... அட அத்தான் பா ....இங்கிலீஷ் ல சொன்னாதா பீரியுமா . அட இன்னா மா நமக்கு அத்தெல்லாந் தெர்ராது கண்ணு. ...ஆ ....Intellectual ஆ ...இதான் இதான் ...நம்ல மேரி பிள்ளகா பசங்க கிட்ட இடது மேரிக்கி எழுதிகினு கமெண்ட்ஸ் உட்டுகினா இன்னா பிர்யும்??
அப்பால நம்ம மாப்ள சாருக்கு ஒரு டாங்க்சு சொல்லிக்கினா அட இன்ன பா இது ரவ கூட ரீஜண்டு இல்லாத அலா நானு ? அக்காங் !!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

அன்பு தோழரே,

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
அளவு என்னவென்று தெரியாமல் போவதுதான் பிரச்சனையே.

ஆழம் தெரியாமல் கால விட்ட கதையாகி விட்டது.

அருமையான செய்தி...

Jaleela Kamal சொன்னது…

//கோபம், எரிச்சல், மன உளைச்சல், கட்டுபாடற்ற கற்பனை ( Obsessive Thinking ) நேரம் காலம் உணர்வின்றி பயன்படுத்துவது ( Excessive usage ) மற்றும் கம்ப்யூட்டர் அல்லது இன்டெர்நெட் பயன் படுத்த இயலாத நேரங்ங்களில் உண்டாகும் கோபம், எரிச்சல், உடனிருபவருடன் சண்டை, எதிமறை எண்ணங்கள், விதண்டாவாதம்,செய்யல்பாடுகளில் பின்னடைவு மேலும் இயல்பான சமூக வாழ்க்கையிலிருந்து தன்னையும் அறியாமல் விலகிவிடுவதால் உண்டாகும் மனச்சோர்வு, என பயம் காட்ட ஆரம்பித்து விட்டனர்//

ஹா சரியான அலசல் சரியான கருத்து .


அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான், ம்ம் நல்ல பகிர்வு.

வலைதளம் பெயர் சூப்பர் "பொன் மாலை பொழுது"

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக