பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், செப்டம்பர் 14

எத தின்னா பயித்தியம் தெளியும்?

எத தின்னா பயித்தியம் தெளியும்? நடக்கும் கூத்துகளை பார்த்தால் சிரிப்பாய் சிரிக்க வைக்கிறது ஆஹா என்ன ஆட்டம் கும்மாளம் இவர்களுக்கு? தங்களை மீட்கவந்த தேவ தூதனாக எண்ணி இந்த காங்கிரஸ் காரர்கள் இந்த நான்கு நாட்களில் போட்ட ஆட்டம் தான் என்ன? ரகூல் காந்தியின் தமிழக வருகையால் எல்லாம் திடீரென்று மாறி //அடுத்து நாங்கள் தான் தமிழகத்தை ஆளப்போகிறோம் // என்ற மிதப்பில் இவர்கள் விட்ட அறிக்கைகள் என்ன ? பேசிய பேச்சுக்கள் பேட்டிகள் என்ன? பாதுகாப்பு கெடுபிடிகள் பந்தாக்கள் என்ன?? அந்தபிள்ளைக்கு ஒழுங்காக பேச, பெட்டி கொடுக்க கற்று கொடுத்து அழைத்து வந்திருக்கலாம்.தமிழக விபரங்களை தெளிவாக வாவது சொல்லிகொடுத்து பின்னர் இங்கு அழைத்து வந்து மோடி மஸ்தான் வேலைகளை செய்திருக்கலாம்.அது வந்து சென்ற பின்னர் தான் கேளிக்கை இங்கு ஆரம்பம்.
அடுத்தடுத்து வர ஆரம்பித்தன குளறு படிகள். சென்னை அண்ணா பல்கலை மாணவர் அரங்கில் அவர்களை அரசியலுக்கு கூப்பிட்டதும். தேசிய நதி நீர் இணைப்பு இயற்கைக்கு முரணானது அது கூடாது என்று வாய் மொழிந்ததும் இன்று வரிசையாக சார்சைகளாகிவிட்டன. போதாகுறைக்கு ரஜினியையும் காங்கிரஸில் சேருமாறு அந்த பிள்ளை அழைத்த விதம்.


வெள்ளையாக யாரையாவது பார்த்து விட்டால் தமிழர்கள் ஓட்டை குத்தி பதவியில் உட்கார வைத்துவிடுவார்கள் என்ற மதமதப்பு. கைக்கூலி பத்திரிக்கை நிருபர்கள் மூலம் இவர்கள் |(தமிழக காங்கிரஸ் மேதாவிகள் தான் ) அந்த பிள்ளையிடம் ரஜினியை அரசியலுக்கு, தங்கள் கட்சிக்கு வருமாறு கோரும் கேள்விகளை கேட்க வைக்க, அந்த அறியா பிள்ளையும்
// ரஜினி கிரிமினல் இல்லை. அவரும் காங்கிரஸில் சேரலாம் // என்று ரொம்பவும் பெருந்தன்மையாக சொல்லிவிட, ஆஹா எங்கள் தலைவரின் தமிழக விசிட் //வெற்றியோ வெற்றி // என்று தலைகால் புரியாமல் குதிக்க, அது சரி காங்கிரசில் உள்ளவர்கள் எல்லாம் பத்தரை மாற்று தங்கங்கள்??? உத்தம புத்திர சிகாமணிகள்??
ரஜினி நல்ல மனிதம் உள்ள ஒரு சினிமா காரர். நடிகர் என்பதையும் மீறி அவர் மீது மரியாதை உள்ளவர்கள் இங்குண்டு. ரஜினி ரசிகர்கள் மிளக்காயை தேய்த்த கடுப்பில், விஜயோ தங்கள் ஷோபா திருமண மண்டபம் பிழைத்தால் போதும் என்ற ஜூட் விட.

ரஜினியும்,விஜயும் // தங்களை விட்டால் போதும் // என்று ஓரம் கட்டிக்கொள்ள.

கிழவர் உட்கார்ந்த இடத்திலிருந்து எல்லாவற்றையும் // ஊதித்தள்ளிகொடிருக்கும் // வித்தையை நினைத்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ஆப்பு பிடிங்கிய குரங்குகளாக நம் தமிழக காங்கிரஸ் மேதாவிகள்

அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அப்புறம் தான் // சித்தப்பா //

இங்கு அத்தையே வழி இல்லை ஏன் சித்தப்பவுக்கு ஆசை இந்த வேட்டி கிழிப்பு கூட்டங்களுக்கு?

பயித்தியம் தெளிய ஊமத்தன்காயை தின்னும் கூட்டமிது. எல்லாரும் அவரவர்கள் ஊரில் கிடைக்கும் காய்களை பார்சல் செய்து காங்கிரஸ் காரர்களுக்கு அனுப்பி வையுங்கள். புண்ணியமாய் போவும் சாமிகளா!!6 comments:

velan சொன்னது…

ஆரம்பிச்சிட்டாரய்யா ஆரம்பிச்சிட்டாரு..உங்கள் குரல் நியாயமானதுதான். ஆனால் நாங்கள் ஊமைகள் வெறும் கனவுதான் காண முடியும்.இவர்கள் நல்ல மனிதரை மீண்டும் ஜனாதிபதியாக வரவழைத்திருக்க முடியும். ஆனால் முடியவில்லை.தேசிய நதி இணைப்பை வலியுறுத்தலாம். எல்லோருக்கும் பயன் படும். விவசாயம் செழிக்கும். ஆனால் ஓட்டு கிடைக்காதே...ஒரே தேசம். ஓரே மனிதர்கள். ஆனால் ஏன் பிரிவினை... நமது பிரிவினையில் இவர்கள் குளிர்காய்கின்றார்கள். சந்திரனுக்கு சந்திராயன் அனுப்பி 400 கோடி காணோம். இங்கு சர்க்கரை 40 ரூபாய் கொடுத்து வாங்குகின்றோம். சவரன் கிராம் 1500 -க்கு மேல் போகுமாம்.ஒரே ஒரு எலுமிச்சம் பழம் இன்றைய விலை 5 ருபாய்.இந்த விலை தமிழ்நாட்டில் அய்யா...வெளிநாட்டில் இல்லை.. அரசியல் வாதிகள் மொத்தமாக வாங்கி மக்கள் தலையில் தேய்துவிட்டார்களாம். அதனால் விலை ஏற்றமாம்.இதையெல்லாம் பற்றி ஒரு பதிவே போடலாம். அட போங்க சார்....நமக்கு பைத்தியம் அதிகமாகதான் ஆகும்....
velan

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நன்றி வேலன், உங்க பதில வச்சே ஒரு பதிவே போடலாமே.

// ஆனால் நாங்கள் ஊமைகள் வெறும் கனவுதான் காண முடியும் //

இந்த நம் மனப்பான்மையே நமக்கு எதிராகவும், அரசியல் கூத்தடிபோருக்கு சாதகமாகவும் இருப்பதை நாம் அனைவரும் உணரவேண்டும் ,செயல்படவேண்டும்.
வருகைக்கு நன்றி.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

I sincerely appreciated your writing in your blog.
Thanks and keep going.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

Thanks for your kind visit Dear Maappillai. I request you to start to write yours part too. Is that right?

டவுசர் பாண்டி சொன்னது…

//வெள்ளையாக யாரையாவது பார்த்து விட்டால் தமிழர்கள் ஓட்டை குத்தி பதவியில் உட்கார வைத்துவிடுவார்கள் என்ற மதமதப்பு.//

தலீவா !! தய்வு செஞ்சீ மன்னாப்பு குடு , இந்த கசுமாலம், இத்தினி நாளு கானோமின்னு ஒரு கம்பிளைண்டு கூடவா குடுக்க முடியல ? இன்னா தான் மன்சம்பா நீ !!

( அக்காங் !! நீ நம்பல திட்டறதுக்கு மின்ன நம்ப அவாஜ் குடுக்கத் தாவலியா ? ஐயே !! )

அப்பால , இது மேரி கோவம் கோவமா , கீறியே !! இன்னா தான் விசியம் ஐயே !! ஆனா ஒன்னு தலீவா !! சோக்கா கீது பா
மேட்டரு !!

சொம்மா லெப்டுல பூந்து ரைட்டுல வந்தா மேரி இன்னா இன்னா மேரி
கீது , ஆனா ஒன்னு இன்னாவோ இந்த காங்கிரசு காரங்க மட்டும் தான் இந்த மேரி சேக் மாலு வேல அல்லாம் காமிக்கிராங்கோ இன்னு மட்டும் நெனைக்காதே !! தலீவா !!

இந்த தாமர பூ கட்சி கீதே !!
அதுல கீரதே ஒன்னு ரெண்டு ஆளுங்கோ தான் !! அதுக்கே பெரி பெரி கோராமே அல்லாம் நடக்குது அத்தையும் ரவ பெண்டு நிமித்து தலீவா !! அக்காங் !! அப்பால
வரேன் ,

கக்கு - மாணிக்கம் சொன்னது…

ரொம்ப ரொம்ப ரொம்ப .....சந்தோசம் ,நன்றி தங்களின் வருகைக்கு. இப்பவாவது வந்து பின்னூட்டம் எழுத முடிந்ததே.
அதுவே மிகப்பெரிய விஷயம் தானே. இந்த 'கோபம்' தமிழர்களிடம் இல்லாத காரணம் தான் தமிழர் நிலையும,தமிநாட்டின் கதியும் சிரிப்பாய் சிரிக்க ஆகிவிட்டது. தொட்டதெற்கெல்லாம் சினிமாவும் அரசியலும் தானா? அவைகளை மீறி வேறு நடப்புக்களே இல்லையா நம்மிடம்? இங்கு பிளாக் எழுத்தும் மேதாவிகள் கூட சினிமா விமர்சனங்களை எழுதித்தான் தங்கள் மேதா விலாசத்தை காட்டிக்கொள்கின்றன பன்னாடைகள். வெட்கமே இருக்காதா இந்த தறுதலைகளுக்கு?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக