பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, மே 31

வீட்டுக்கு சொத்து சேர்க்காத உன்னை அதற்காகவே அரசியலுக்கு வந்த முட்டாள்கள் ஏசுவதும் ..

 
*மன்னாதி மன்னன் முடி சூட்டு நாள்*
தேநீர் கடையிலிருந்து
தேய்ந்த உன் கைகள்
செங்கோலை ஏந்திய 
சரித்திரம் எல்லாம்
அப்பன் சொத்தை
ஆப்படித்து தின்பவனுக்கு
தெரியாது நமோ
மன்னித்து விடு
ராணுவ வீரர்களைப் பார்த்து
நாட்டுக்கு சேவை செய்யும்
நெடுங்கால எண்ணம்
ஆன்மீகமாய் சென்ற உன்னை
ஆலிங்கனம் செய்ததெல்லாம்
நாடாளுமன்றத்தில்
பெண்ணின் சேலையை இழுத்து
ரவிக்கையை கிழித்த கும்பலின்
சொம்புகளுக்கு
தெரியாது நமோ
மன்னித்துவிடு
வீட்டுக்கு சொத்து சேர்க்காத உன்னை
அதற்காகவே
அரசியலுக்கு வந்த முட்டாள்கள்
ஏசுவதும் ...
சொந்த அண்ணனையே
அப்புறப்படுத்தி
தன்னை மகா யோக்கியன் என
காட்டும் தற்குறிகளை
மன்னித்துவிடு நமோ
தேவாலயங்களிலும் மசூதிகளிலும்
ஒருவனுக்கு எதிராய்
வழிபாடுகள் செய்தார்களென்றால்
உலக வரலாற்றிலேயே
அது
உனக்காக மட்டும் தான்
அந்த நல்ல செயலால் தான்
நீ மீண்டும்
நாட்டை ஆளப் போகிறாய்...
தேவாலயமும் மசூதியும்
ஏன்
சிவ விஷ்ணு ஆலயம் கூட
பிரிந்திருக்கலாம்
ஆனால்
கிருஷ்ணரும் கிறிஸ்துவும்
இணைந்தே இருக்கிறார்கள்
என்பது
எப்படி மூடர் உணர்வர்
மன்னித்துவிடு நமோ
மூளை வளராத குழந்தை
முகத்தில் மூத்திரம் அடித்தால்
அன்னை ஆத்திரப்படுவாளா
தமிழகத்தை
மன்னித்துவிடு நமோ
இவர்களுக்கு
ஜாதி வேண்டாம்
சலுகை வேண்டும்
இந்துமதம் வேண்டாம்
அறநலத்துறை வேண்டும்
தமிழ் கல்வி வேண்டாம்
ஆங்கிலப் பள்ளி வேண்டும்
மதத்தை போதிப்பவன் முட்டாள்
மத மாற்றத்தை போதிப்பவன் அறிவாளி
ஆண்டாள் இவர்களுக்கு எதிரி
மேரி இவர்களின் தாய்
இவர்களுக்கு
சிகிச்சை நடத்த
சிம்மாசனம் ஏறும்
சிகரமே
நீ நடந்த வீதிகளில்
லாவண்யம் இருந்தது
லஞ்சம் இல்லை
கொள்கை இருந்தது
கொள்ளை இல்லை
கட்சி இருந்தது
குடும்பம் இல்லை
சேவை இருந்தது
சுயநலம் இல்லை
தன்னாடு இருந்தது
தனி நாடு இல்லை
பாதுகாப்பு இருந்தது
பயம் இல்லை
இறுதிவரை
இந்தியாவாகவே இருக்க
நீ தான்
இருக்க வேண்டும்
இது
இத்தாலியாகவும் வேண்டாம்
இஸ்லாமாபாத் ஆகவும் வேண்டாம்
நல்ல எண்ணத்தையும்
நல்லிணக்கத்தையும் புகட்டு
மற்றபடி
மதி இழந்தோர் செயலை
மன்னித்துவிடு நமோ
*கவிஞா் வைரபாரதி*


1 comments:

துரை எஸ்.ஜெயச்சந்திரன். சொன்னது…

இவர்கள் மாற மாட்டார்கள். ஏனென்றால் இவர்கள் தெரியாமல் செய்யவில்லை. நன்கு தெரிந்து திட்டமிட்டு தான் செய்கிறார்கள். தாங்கள் செய்வது தவறு என்று தெளிவாகத் தெரிந்து தான் செய்கிறார்கள். இப்போது கொள்ளையடிப்பதற்கும். தொடர்ந்து கொள்ளையடிப்பதற்கும் இது தான் சரியான வழி என்று தெரிந்து தான் செய்கிறார்கள்.
எனக்கு என்ன பயம் என்றால் இவர்கள் தொடர்ந்து அவரை எதிர்த்து ஊளையிடுவதால், ஒரு நாள் அவரும் இவர்கள் வழிக்கு மாறி விடுவாரோ என்பது தான். ஏனென்றால் காமராஜ் அவர்களின் காங்கிரெஸ் 67ல் தோற்ற ஒன்றிரண்டு வருடங்களில் காமராஜ் அவர்களே சொன்னார் “நாம் திரும்பவும் ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஆட்சியை கொடுக்க முடியாது ஏனென்றால் இவர்கள் அதிகார வர்க்கத்தை முழுவதுமாக மாற்றி விட்டார்கள் என்று. இப்பொழுது ஐம்பது வருடங்களுக்கு மேலான இவர்களின் ஆட்சியில் பொதுமக்களையும் மாற்றி விட்டார்கள். இப்பொழுது லஞ்சம் வாங்குவது தவறு என்று நினைக்கும் பொதுமக்கள் மிக மிக குறைவாகத் தான் இருக்கிறார்கள்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக