பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், டிசம்பர் 4

நல்லது......இனிமேலாவது இளையவர்கள் ?



கடந்த 2010 ஆம் ஆண்டில் // அப்படி போடுன்னானா !! // என்ற தலைப்பில் பதிவொன்றை வெளியிட்டேன். இணைப்பு  உள்ளது 

IOA (Indian Olympic Association ) க்கு தடை 

அனைத்துலக ஒலிம்பிக் சம்மேளனம் IOC ( International Olympic Committee )  கொடுத்துள்ள அடியில்  இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு    IOA(Indian Olympic Association ) முகம் அற்று போய்விட்டது. இந்திய  விளையாட்டு துறையும், வீரர்களும், நம் நாடும்  அவமானப்பட்டு நிற்கிறோம்.






இந்த தடையினால் இனி 
  1. சர்வதேச விளையாட்டுகளில் இந்தியர்கள் தங்கள் நாட்டு தேசியக்கொடியுடன் இனி பங்கேற்க இயலாது.
  2. அனைத்துலக ஒலிம்பிக் சம்மெளனம் இனி இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு வளர்ச்சி நிதியும் தராது.
  3. இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் எவரும் இனி சர்வதேச ஒலிம்பிக் கூட்டங்களில் பங்குகொள்ள முடியாது.
I O C பல முறையும் அறிவுரை கூறியும்,விதிகளை  மதித்து அதன் படி தேர்வுகள் நடத்தி தங்கள் நிர்வாக தலைவர்களை  தேர்ந்தெடுத்து கொள்ளவேண்டும் என்றும், அரசாங்கத்தின் அதன் நிர்வாகத்தின் குறுக்கீடுகள்,நிபந்தனைகள் போன்ற எதற்கும் இடம் தரலாகாது என்று தங்களின் நெறிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு இவைகள் எதையும் மதிக்காமல், அரசின் அதிகாரத்தில் இருபவர்களின் கைகளில் சிக்கி சீரழிந்து போனது. விளையாட்டின் சகல நிலைகளிலும் அரசியலும், ஊழலும் நிறைந்து விளையாட்டு துறை என்பது நிரந்தர வருமானம் தரும் தொழிலாக மாறிப்போனது. திட்டமிட்டு கொள்ளை அடிக்கவும், சொத்து சேர்க்கவும் மட்டுமே இவர்கள் தொடர்ந்து பதவிகளில் உள்ளனர். அங்குள்ளவர்கள் எல்லாம் தொடர்ந்து இருபது, முப்பது வருடங்களாக அதே பொறுப்பில் இருகின்றனர். அனைவருக்கும் எழுபது , என்பது வயதான கிழவர்கள்.இதில் உள்ள தலைகள் எல்லாம் நீதி மன்றங்களில் தண்டிகபட்டவர்கள். விளையாட்டு வீரர்கள் வசதிகள் இன்றி கவனிப்பார் இன்றி  பின்னுக்கு தள்ளப்ட்டனர். மற்ற துறைகள் போல வியாட்டு துறையிலும் அரசியலும், ஊழலும் மிதமிஞ்சியதால் வந்த அவமானம் இது.





அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறதே!!



பிரபல வீரர்கள்  அனைவரும் இந்த முடிவை ஆதரிகின்றனர். இனிமேலாவது மாற்றம் வேண்டும், வரும் என்று கருதுகின்றனர். நல்லதுதான்.....இனிமேலாவது இளையவர்களும், விளையாட்டில் உண்மையிலேயே ஆர்வமுள்ள புதியவர்கள் வரட்டும், இந்தியா தங்கமும்,வெள்ளியும் வாங்குவது இருக்கட்டும், குறைந்த பட்சம் இப்படி சர்வதேச அரங்கில் நம் மானம் போகாமல் இருந்தாலே போதும்.

// This is an absolutely right step taken by the IOC. In this country all the useless, dirty corrupt politician play their dirty politics in sport and every field. So, it's going to be a huge lesson to these dirty politicians that sports is for gritted, witted, and brave hearted sport persons and not for the dirty corrupt politicians.//






4 comments:

பட்டிகாட்டான் Jey சொன்னது…

காங்கிரஸ்க்கு அப்படி என்ன நிர்பந்தம் இந்த ஊழல் வாதிகளுக்கு ஆதரவு தருவதற்கு???.

பெருந்தலைகளுக்கு இவங்க பினாமிகளா அல்லது சரியான கட்டிங்க் குடுக்கிறாங்களா?

என்னமோ நம்ம ஜனநாயக நாட்லதான் இந்தக் கூத்து நடக்குது. காங்கிரஸ் ஒழிஞ்சா ஒருவேளை இதெல்லாம் சரியாகுமோ என்னவோ.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அண்ணே, காங்கிரஸ் நாட்டுக்கு பிடிச்ச சனி அண்ணே...கொய்யால....இந்தமுறை ஊருக்குப் போனப்ப மும்பையில எங்க தொகுதியில வக்காலி இவனுகளுக்கு ஆப்பை சுண்ணாம்பு தடவி தோற்கவச்சிட்டு வந்தேம்ண்னே....!

Avargal Unmaigal சொன்னது…

கொடி இன்றி உலகப் போட்டியில் விளையாட போவது என்பது ஆடை இன்றி விளையாட போவது போலத்தான் அத்தகைய நில்லைக்கு நம்மை தள்ளியவர்கள் தான் இந்தியாவை காக்கும் தலைவர்கள். வெட்ககேடு

settaikkaran சொன்னது…

மத்திய அரசு உருப்படியாக எதாவது செய்யும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் இருக்கா இன்னும்? :-)))

இவ்விஷயத்தில், அரசாங்கம் பண்ணிய சொதப்பலைக் காட்டிலும் இந்திய ஒலிம்பிக் சங்கம் நடத்தியிருக்கிற கூத்துக்கள்தான் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டதுபோல இந்த நிலைக்குத் தள்ளி விட்டது. உள்ளதும் போச்சு நொள்ளச்சாமி என்பதற்கு இந்தியன் ஒலிம்பிக் சங்கம் ஒரு உதாரணமாகி விட்டது. ஷேம் ஷேம் பப்பி ஷேம்!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக