பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், செப்டம்பர் 11

அட்சய பாத்திரம்






பிரித்தெடுக்கப்பட்ட தோரியம் உலோகம் 


அள்ள அள்ள குறையாத ஊழலின் அட்சயபாத்திரமாக தினம் தோறும் வெளிவரும் நிலக்கரி சுரங்க ஊழல்கள், அவைகளின் ஈடுபட்டு பலன் அடைந்த மதிய அரசின் எம்.பிக்கள், அமைச்சர்கள், அவர்களின் உறவினர்கள் என்று பட்டியல் தினமும் நீண்டு கொண்டேதான் செல்கிறது.இவ்வளவும் நடந்தபோதும் அத்துறைக்கு பொறுப்பான அமைச்சராக "கடமை ஆற்றியவர்" நமது பாரத பிரதமர் திரு மன் மோகன் சிங்க் அவர்களே. அவரோ, "நான் மௌனமாய் இருப்பதே எனக்குப்பெருமை. என் மௌனம் உண்மைகளை பேசுகிறது " என்று வசன மழை பொழிகிறார்.


தற்போது பூதமாக கிளம்பியுள்ள இந்த நிலகரி சுரங்க ஊழல்களை விட அசகாய சூரனாக மற்றுமொரு பயங்கரம் விரைவில் வெளிவரலாம். யு.பி.எ. மத்திய அரசு மன்மோகன் தலைமையில் 2004 இல் பதவி ஏற்றபின்னர் நடந்த நிகழ்வுகள் இது. சுமார் 2.1 மில்லியன் டன்ஸ் மோனோசைட் இதிலிருந்து சுமார்  195,300 டன்கள் தோரியம் உலோகம் 9.3% என்ற அளவில் பிரித்து எடுக்கலாம்.இந்த அளவு தோரியம் இந்திய கடற்கரை மணல் வெளியில் இருந்து மாயமாகியுள்ளது. 

இந்தியாவின் நீண்ட கடற்கரைகளில் தோரியம் உலோகத்தின் தாதுவான மானோசைட் மிக அதிக அளவில் இருப்பதை சுரங்கம் மற்றும் இயற்கை தாது வள சட்டம் மூலம் 1957 மூலம் அப்போதய இந்திய அரசு உறுதி படுத்தியது. தோரியம் உலோகம் அணு வேதியியலில் மிக மிக கொண்டாடப்படும் ஒரு மூலப்பொருளாகும்.அணு சக்தி மூலம் ஆற்றல் உற்பத்தி  பயன்பாடுகளுக்கு மட்டும் அல்லாமல், அணு ஆயுத தொழில் நுட்பங்களில் இந்த உலோகத்தின் ஆதிக்கம் மிக அதிகம்.


 இந்திய அரசின் கனிம வளத்துறை (Public sector Indian Rare Earths Limited ) ஒரிசா மாநிலத்தின் நீண்ட கடல்கரை மணல் பரப்பு, தமிழில் நாட்டில் கன்னியா குமரி அடுத்துள்ள மணவாள குறிச்சி மற்றும் கேரளா கடற்கரை பகுதியான ஆளுவா- சவாரா ஆகிய கடற்கரை மணல் பரப்புகளில் தோரியம் அடங்கிய மானோசைட் அபரிமிதமாக இருப்பது  மதிய அரசு துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.இத்துறைக்கு சொந்தமான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (Research & Development Centre) கேரளா மாநிலம் கொல்லத்தில் அமைந்துள்ளது.இந்த ஒரு அரசு நிறுவனம் மட்டுமே நம் நாட்டில் மானோசைட் தாதுவில் இருந்து தோரியம் உலோகத்தை பிரித்து எடுக்கும் அதிகாரத்தை கொண்டது. அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் அணைத்து நிறுவனங்களும் கூட, தற்போது அல்லோல கல்லோலம் ஆகும் நம்ம ஊர் கூடங்குளம் வரையில்  Department of Atomic Energy கட்டுப்பாட்டில்  தான் உள்ளன. 

 இந்திய அணுசக்தி கழகம் ( Department of Atomic Energy ) பிரித்து எடுக்கப்பட்ட தோரியம் உலோகம் இவர்களிடம்தான் பாதுகாப்பாக வைகப்டவேண்டும்.மதிய அரசின் கணக்கு தணிக்கை குழு தலைமை ( CAG - Controller of Auditing General ) இந்த துறைகளின் கணக்கு வழக்குகளை தோண்டி  எடுத்தால் தற்போது ஆட்டம் போடும் இந்த நிலகரி சுரங்க ஊழல்கள் எல்லாம் நமது பாஷையில் "ஜுஜுபி " ஆகிவிடும் போல உள்ளது. இந்த தோரியத்தின் விலை உலக சந்தையில் சுமார் நூறு டாலர்கள் / டன் ஒன்றுக்கு என்றால் 195,300 டன்கள் தோரியம் என்ன விலை ஆகிறது?  யாராவது கணக்கிட்டு சொல்லுங்க சாமிகளா! இதில் எந்த அளவு நம் நாட்டிற்க்கு வரவாக கிடைத்திருக்கும்? மேலும் நம் நாட்டில் அணு சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வது அளவில் மிக குறைவே. மொத்த மின் உற்பத்தியில் அணு சக்தியின் வழியாக மின் உற்பத்தி என்பது நமது நாட்டில் அதிக பட்சம் வெறும் 3.7% மட்டுமே. இதில் எவ்வளவு நம் நாட்டில் மட்டும் பயன்படுத்தப்பட்டது,எவ்வளவு வெளிநாடுகளில் விலைக்கு விற்கப்பட்டது அதன் மூலம் நம் நாட்டிற்கு கிடைத்த வருமானம் என்ன போன்ற விபரங்களை மத்திய தணிக்கை குழுதான் கூற வேண்டும்.

ஆனால் நம் பெருமைக்குரிய பாரத பிரதமர் அவர்களே " மத்திய தணிக்கை குழுவின் அறிக்கைகள் தவறானவை " என்று நிலக்கரி  ஊழல் விவகாரத்தில் சொல்லிவிட்டாரே!

நம்ம ஊர்.....இல்லை..... இல்லை.... புதுசேரி மண்ணின் மைந்தர் ஒருவர் மத்திய அமைச்சர், இவருக்கு நாக்கில் எப்போது சனி பகவான் நர்த்தனம் ஆடிக்கொண்டே இருப்பார். இங்கு வரும் போதும் போகும் போதும் பத்திரிக்கை காரர்களிடம் சண்டமாருதம் தான். அவர்கூட இந்த அணு சக்தி கழகத்தில் ஒரு உறுப்பினராம்.

ஆங்கிலம் கற்றுக்கொள்ள லண்டன் சென்று, ஒரு ஹோட்டல் பாரில் வேலை செய்துகொண்டு பின்னர் ராஜீவ் வின் காதல் மனைவியாக ஆகி, இந்தியாவின் மருமகளாக வர்ணிக்கபட்ட  சோனியா ஆண்டோனியோ இன்று நான்காவது உலக பணக்காரர் வரிசையில் இருந்து சிரிக்கிறார்.



மேற்கண்ட  இணைப்புகளில் சென்று படித்து மன ஆறுதலும் அமைதியும் அடையுங்கள்.



4 comments:

எல் கே சொன்னது…

கூடங்குளம் எதிர்ப்பின் பின்னணியில் இந்த தோரியமும் இருக்குனு ஒரு பட்சி சொல்லியது

யூர்கன் க்ருகியர் சொன்னது…

இந்தியாவையே பிரிச்சி மேஞ்சிட்டாங்க !!

அப்பாதுரை சொன்னது…

shocking!

ஸ்ரீராம். சொன்னது…

ஐயோ...

வாழ்க இந்தியா!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக