பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, செப்டம்பர் 14

பாரத பெருமைகள்


புது டெல்லியில் இரண்டு லட்சம் சதுர அடியில் அமைந்து மொத்தம் 360 அறைகள் கொண்டதாம் ராஷ்ட்ரபதி பவன். பாரத நாட்டின் பெருமையாக பதவிவகித்த இந்த முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இங்குதான் தன் "காலத்தை தள்ளினார்" இந்த பிருமாண்டாமே பழகிவிட்டதால் தான் பதவி ஓய்வு பெற்ற பின்னரும் இத்தனை பெரிய விசாலமான வீட்டில் இருக்கவே ஆசைபட்டார் போலும்.


மகாராஷ்டிரா - புனே நகரில் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண்டோன்மென்ட் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கியது மத்திய அரசு.அதில் இருந்த ஆங்கிலேயர்கள் காலத்து கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு இவருக்கு புது வீடு கட்டும் வேலை ஆரம்பமானது. நம் நாட்டில் ஜனாதி பதியாக இருந்து ஓய்வு பெறுபவர்கள் ஆயுள் காலம் வரை கணிசமான ஓய்வு ஊதியம்  மற்றும் பல சலுகைகளுடன் வாழலாம். பெரும்பாலும் அணைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் அவரவர்களின் சொந்த ஊரிலேயே தங்கள் வீட்டில் வாழ்ந்தனர்.அவர்களின் வீட்டை மேம்படுத்தி பராமரிக்கும் செலவு அரசனுடயது ( மக்களின் வரிப்பணம் ) பிரதிபாவுக்கு, வழக்கமே இல்லாமல் புது வீடு கட்ட  புனேயில் ஒதுக்கபட்ட மனையின் அளவு  ரெண்டு லட்சத்து அறுபதாயிரம் சதுர அடி.

இதுவரை பதவியில் இருந்து  ஓய்வு பெற்ற எந்த ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கும் கிடைக்காத விமர்சனங்களை நிறைய பெற்றவர் இந்த பிரதீபா பாட்டீல். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் (சுரேஷ் பாட்டீல் ) இந்த மத்திய அரசின் போக்கிற்கு அடித்தார் ஆப்பு. ஏற்கனவே ஜவான்களுக்கும்  பிற ராணுவ அதிகாரிகளுக்கும் போதிய வீடு வசதி இல்லாமல் இருக்க, முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வாறு ஐந்து  ஏக்கர் நிலம் ஒதுக்கி வீடும் கட்டி தருகிறீர்கள் ? என்று தகவல் அறியும் சட்டத்தை நாடினார். விஷயம் முழுக்க வெளியில் வரவே விமர்சனக்ளும் வெடித்து கிளம்ப,பிரதிபா பட்டீலும் அந்த இடத்தினை மீண்டும் அரசிடம் தருவதற்கு தயாராகிவிட்டார் என்ற செய்திகள் பழசு.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இந்த அம்மாள் பதவியில் இருந்த போது தன் குடும்ப உறவினர்கள் கூட்டத்துடன்  ஊர் உலகம் சுற்றிய செலவு விபரங்கள் ருபாய் 205 கோடி. இதுவரை இந்திய ஜனாதிபதிகள் எவரும் பண்ணாத அட்டூழியம் இது.  பொது சொத்துக்களை வளைத்து போடும் அரசியல் வாதிகள்,அதிகாரிகள், செல்வாக்கு மிகுந்தவர்கள் இந்த வரிசையில்  இது போன்ற முன்னாள் " உதாரிகளும் " இருபது நமக்கு சாதாரணம்தான்.

வேறு எந்த நாட்டிலும் இது போன்ற வழக்கம் இல்லை.ஓய்வு பெற்ற அமெரிக்க அதிபருக்கோ அல்லது பிரிட்டிஷ் பிரதமருக்கோ பென்ஷனும் , பாதுகாப்பும் மட்டும்தானாம். அரசின் சார்பில் வீடுகள் கிடைக்காது. அதுசரி........ இந்த பிரதிபா பாட்டீல்  யார் என்று இவர் பதவிக்கு வருவதற்கு முன்னாள் எவருக்கும்  தெரிந்திருக்காது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம், அவர்கள் வீட்டில் சமையல் கார அம்மாவாக சிறப்பாக பணியாற்றிவர்தானாம் இந்த பிரதிபா பாட்டீல்.  மருமகளுக்கு மாமியார் மேல் இருந்த பிரியத்தால் அவரின் உதவியாளரையே இந்திய நாட்டின் ஜானதி பதியாக - முதல் குடிமகளாக பட்டம் சூட்டி தன் கடமையை சரியாக செய்தார் சோனியோ ஆண்டோனியோ. 

இப்போது புதிதாக பதவி ஏற்று இருப்பவர் என்ன பண்ணுவார் ? 3 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஜன நாயகம் வாழ்க.

S.Menaga சொன்னது…

ம்ம்ம் குடுத்த வச்ச சமையல்காரம்மா....

எல் கே சொன்னது…

வாழ்க காங்கிரஸ்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக