நான் கடைசியாக பதிவிட்டது சென்ற மே மாதம் என்று நினைவு. அதன் பின்னர் அலுவல் நிமித்தமாக மீண்டும் துபாய் வந்து சேர்ந்தேன். பணிச்சுமை , நேரமின்மை காரணமாக எதுவும் பதிவாக எழுத்தும் எண்ணமில்லாமல் இருந்தேன். ஆனால் நெட் இனைப்பு கிடைத்து வழக்கம் போல அனைத்திலும் புகுந்து புறப்பட்டேன். தமிழ் பதிவர்கள் எத்தனை கீழ் நிலையில் இன்னமும் இருக்கின்றனை என்ற உண்மை புரிந்த போது மனம் வேதனைப்பட்டது உண்மை. நாம் இன்னமும் இப்படியேதான் இருக்கவேண்டுமா? இதற்கு மேல அடுத்த நிலைக்கு செல்ல இயலாதா ? என்ற கேள்வி என்னுள் குடைந்து கொண்டிருந்தது.
நம் " ஆட்கள் " ஏன் இன்னமும் அதே நிலையில் இருக்கின்றார்கள் என்ற கேள்விக்கு காரணமும் புரிந்தது. நமக்கெல்லாம் ஆர்பாட்ட அரசியலும் அதிரடி சினிமாவும் விட்டால் வேறு ஒன்றுமில்லை என்ற நிலையிலேயே இன்றும் இருகின்றோம். இவைகளையும் தாண்டி நாம் அறிந்துகொள்ள தெரிந்துகொள்ள நமக்கு நிறைய இருக்கிறது என்ற எண்ணமே நம்மிடம் இல்லாத போது நாம் வெறும் சப்தம் வரும் வேற்று தகர டப்பாகள்தானோ!
நானும் அரசியல் விமர்சன பதிவுகள், சினிமா பற்றின பதிவுகளையும் இட்டுள்ளேன் ஆனால் அவைகளில் நான் ஒரு விமர்சகனாக , ஒரு ரசிகனாக என்னை நிலை நிறுத்திக்கொண்டேன் அன்றி "அவைகளை" விட்டால் வேறு ஒன்றும் இங்கே ஒட்டு வாங்கவும் வாசகர்களை ஈர்க்கவும் எதுவும் இல்லை என்று நினைத்தவன் இல்லை.
தமிழ் வலைப்பதிவுகளில் மிக அபூர்வமாக வெளிவரும் அறிவியல் கட்டுரைகளை கூட சீண்டுவாரன்றி ஒரு சில பின்னூட்டங்களும் இரண்டு ஒட்டுக்களுடனும் அவைகள் பிரசுரமாவதைகண்டபோது நாமெல்லாம் வெறும் ஆட்டு மந்தை கூட்டங்கள்தானோ என்ற சந்தேகம் வருகிறது.
அரசியல் விமர்சன பதிவுகள், சினிமா கிச்சு கிச்சு , நடிகைகளின் படங்கள், அவர்களை பற்றிய "நையாண்டிகள்" ஜாதகம் , ஜோதிட சிகாமணிகளின் கட்டுக்கதைகள், ஜாதி வெறியர்களின் சண்ட பிரசங்கம், மத வெறியர்களின் மாச்சர்யங்கள், இவைகள் போதாது என்று "நக்கல் " "நையாண்டி " எழுதுவதாக நினைத்துகொண்டு தமக்கு தெரிந்த அணைத்து பதிவர்களையும் "குளிப்பாட்டி விடும் " கும்மி அடி பதிவுகள் .
இவைகள்தான் இங்கே கணக்கற்று நிறைந்து காணப்படுகின்றன. அன்றி ஒரு பயலுக்கும் "கொஞ்சம் அறிவியலையும் தெரிந்து கொள்வோம் " என்ற
எண்ணமே இல்லை. அட மூடர்களே ! வெறும் வாய்சவடாலும், குழாயடி சண்டையும் தான் உங்களுக்கு வாய்துள்ளதா??
நீங்கள் தான் அப்படி என்றால் புதிதாக எழுத வரும் நபர்களையும் உங்கள் லிஸ்டில் சேர்த்துக்கொண்டு கும்மி அடிக்கிண்டீர்களே பாவிகளா. நீங்கள் எல்லாம் விளங்காமல் போனால் தமிழ் நாட்டுக்கு நல்லதே!
தமிழில் அறிவியல் -
///குவாண்டம் கொள்கையும் இருக்கும் துகள்களும் ///
என்ற தளத்திற்கு சென்றபோது அந்த கட்டுரைக்கு நான் இரண்டாவது வாசகன், அதுவரை விழுதுள்ள ஓட்டுக்கள் இரண்டு. அந்த கொடுமையினை கண்ட பின்னர்தான் கொதித்துப்போய் இந்த இடுகையினை எழுதினேன். இதை எழுதி விட்டு ஒரு பயலிடமும் நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை.
பிடித்தவர்கள் தொடருங்கள். பிடிக்காதவர்கள் விலகுங்கள். எனகொன்றும் நஷ்டமில்லை மூடர்களே!!
33 comments:
???????????????/
புரிந்து கொண்டேன்...
உண்மை தான் கக்கு- மாணிக்கம். நானும் அந்த ஆட்டு மந்தையை சேர்ந்தவன் தான். சமுத்ராவின் பதிவுகளை படித்து கொஞ்சம் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கிறேன். நீங்கள் சுட்டியது ஒரு நல்ல பதிவு தொகுப்பு. அதையும் தொடர்ந்து படிப்பேன்.
சமுத்ராவின் பதிவு தொடர்பு.. http://www.samudrasukhi.com/
உங்களுடைய ஆதங்கத்தைப் புரிந்து கொண்டேன். நீங்கள் குறிப்பிட்ட பதிவைப் பார்த்தேன். முதுநிலைப் பட்டதாரிகளுக்கான, இல்லை, இல்லை, டாக்டர் பட்டம் வாங்குபவர்கள் படிக்கவேண்டிய பாடம். என்னதான் அறிவியல் என்றாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலை இருக்கிறது. அதற்கு மேல் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
குருவி தலையில் பனங்காயை வைக்க முடியாதல்லவா?
இப்படியெல்லாம் சாபம் போட்டா, என்னை மாதிரி ஆளுங்க என்ன பண்ணறது? அட் லீஸ்ட் எனக்கு மட்டுமாவது ஒரு பரிகாரம் சொல்லுங்க! :-)
பிறர் என்ன பதிவு போடுகிறார்கள் என்பதை விட நாம் எனன மாதிரியான பதிவிடுகிறோம் என்பதே முக்கியம்.
அறிவியல் பதிவுகளை தமிழில் மிகவும் வரவேற்பவன் நான்.
இவ்வாறு அறிவியல் பதிவுகள் பதிவிடுபவர்களை நாம் தான் அடுத்தவர்களுக்கு இனம் காட்டவேண்டும்.
அறிமுகத்திற்கு நன்றி.
வாழ்த்துக்கள் .
நல்லதோர் அறிமுகம் நண்பரே... நிறைய விஷயங்கள் புதியதாய்த் தெரிந்து கொள்ள முடிகிறது அவர் பதிவில்.... தொடர்ந்து படிக்கிறேன்...
அண்ணே வணக்கம், கடந்த சில நாட்களாக நானும் பதிவுலகிற்கு வராமல் இருந்தேன், ரயில்வே வேலை சம்பந்தமாக பணிகள் இருந்ததால் வரமுடியவில்லை, நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதினாலும் நச்சென்று எழுதியிருக்கிறீர்கள், நன்றி , மீண்டும் வழக்கம் போல் எழுதவும், மீண்டும் தங்களை சந்தித்த சந்தோஷத்தில்
அண்ணே உங்க அளவுக்கு ஞானம் அற்ற என்னை சம்மட்டி கொண்டு அடிச்சிருக்கீங்க!...இருந்தாலும் சில கருத்துக்களை இட்டால் கோச்சிக்க மாட்டீங்கன்னு...
மன இறுக்கத்தை தளர்த்தவே இங்கே பலர் விரும்பறோம்...அதிலும் முடிந்தவரை நகைச்சுவை இருந்தால் இறுக்கம் அகலுவதாக நம்புகிறோம்..இது தான் பெரும்பாலும் உண்மை...நீங்க சொல்றபடி அறிவியல் எவ்வளவு முக்கியம் என்பதை கணக்கில் எடுக்க மறக்கிறோம்..முயற்சிக்கிறேன்..நன்றிண்ணே..!
உண்மைதான் ...........
பயனுள்ள தகவலுக்கு நன்றி.
Good and correct post
உங்களது கோபம், ஆதங்கம் நியாயம்தான்...
ஆனால் பலர் தங்களது அலுவலக பளு அழுத்தத்தை, மன நிம்மதிக்காக இந்த பக்கமாய் வருகின்றார்கள். மேலும் அரசியலினால் பலர் தங்களது வாழ்க்கையில் பின்னப் பட்டிருக்கின்றார்கள். திரைத்துறை என்பது நம் வாழ்வின் பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருக்கின்றது. நாம் பேசும் பல வசனங்கள் திரைப்படங்களில் இருந்து வருகின்றது.
ஒவ்வொருவருக்கும் எது பிடிக்கின்றதோ அதை தேர்ந்தெடுக்கின்றார்கள். உங்களுக்கு அறிவியலின் தாக்கம் விருப்பம் இருக்கலாம். சிலருக்கு அது திரைத்துறை, சிலருக்கு அறிவியல், கவிதை, காமம், காதல், விளையாட்டு, சமையல், ஜோதிடம், அரசியல் என்று இந்த பதிவுலக சந்தை விரிவடைகின்றது.
வெளிப்படையாக சொல்வதென்றால் எனது பிளாக்கரை எப்படி அழகுபடுத்துவது என்று நான் இந்த பதிவுலக நண்பர்களின் பதிவுகள் மூலமாக கற்று கொண்டேன்..நான் மிகுந்த மன அழுத்தம் கொண்டவன். அதனால் எனக்கு கவிதைகள் பிடிக்கும். அப்போது போய் நான் அறிவியலை கற்று கொள்ள, தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்காது. உங்களது ஆதங்கம் எனக்கு புரிகின்றது. ஆனால் நீங்கள் பொத்தாம் பொதுவாய் "அனைவரையும் கிறுக்கு தமிழர்களா" என்று தலையங்கம் இட்டது வேதனை அளிக்கின்றது.
அரசியல், சமுதாயம் என்று எத்தனையோ மேன்மைகள், தவறுகள் இருக்கின்றது. நாம் அதை எல்லாம் கண்டுகொள்வதில்லையே. அதுபோலத்தான் இதுவும். உழவர் சந்தையில் பலவிதமான காய்கறிகள் கிடைக்கும், நமக்கு தேவையான காய்கறிகளைத்தான் நாம் வாங்கி செல்வோம். அதுபோலத்தான் இந்த பதிவுலக சந்தையும். நமக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய பதிவுகளைத்தான் நாம் தேடி செல்வோம். இருந்தாலும் உங்கள் மூலமாக எனக்கு ராஜசங்கரின் பதிவு கிடைத்திருக்கின்றது. நன்றி.,
ஏ யப்பா இம்புட்டு கோவம் உடலுக்கு ஆகாதே....
நீங்கள் சொல்வதை பின்பற்றுகிறோம் அண்ணே...
கொஞ்சம் காட்டமாதான் சொல்லி இருக்கீங்க. நானெல்லாம் ஸ்கூலிலேயே குவாண்டம் பிசிக்ஸை கண்டு காத தூரம் ஓடியவன்.
கச்சடா பதிவுகளை விட்டு கலக்கல் பதிவுகளை தேடி படிப்பது நம் கையில்தான் உள்ளது..
அப்புறம் .... ரொம்ப நாளைக்கு (மாதத்திற்கு) பின்னால் பதிவை போட்டதை கொண்டாடும் வகையில் பின்வருமாறு கூவி கொள்கிறேன் ..'
"சிங்கம் கிளம்பிருச்சிடா டோய் !!"
அடுத்த போஸ்ட் எப்ப மச்சி ????
அண்ணே அமைதி அமைதி....... அறிவியல் படிக்கும் ஆர்வம் சின்ன வயசுல இருந்தே வரனும்ணே... வேற என்ன சொல்றது........
உங்கள் கோபம் நியாயமானது. ஆனாலும் வெறும் அறிவியல்தான் எல்லாவற்றுக்கும் மாற்று என்பதில்லை. அறிவியலைப்போன்றே இன்னமும் பல்வேறு துறைகள் உள்ளன. அரசியலையும் சினிமாவையும் தாண்டி பதிவர்கள் தங்களுக்குள்ளேயே சொறிந்துகொள்வதையே ஒரு தொடர் விளையாட்டாகவே பாவிக்கும் நிலைமையும் இங்கு இருக்கிறது. இதற்கு கும்மி என்று பெயராம். இதுபற்றியெல்லாம் நானும் எழுதலாம் என்று இருக்கிறேன்-ஆனால் உங்கள் அளவுக்கு கோபத்துடன் அல்ல.
பல நாட்கள் என் மனதில் இருந்ததை நீங்கள் சொல்லி விட்டதில் மிக்க மகிழ்ச்சி .
நான் பதிவிட்டதில் "கழுகு அடைகாப்பது எப்படி" என்கின்ற விலங்கியல் சார்ந்த வீடியோ தான் நான் பதிவிட்டதிலே அதிக ஓட்டும் நண்பர்களின் பாராட்டும் கிடைத்தது ஆனாலும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
பதிவை அனைவருக்கும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. தொடர்ந்து எழுதவேண்டும் என ஆசை. அது நிறைவேறுவதாக.
இது ஊர் கூடி தேர் இழுக்கும் வேலை. அறிவியல் படித்த அனைவரும் அவர்கள் துறையில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழில் எழுத ஆரம்பித்தாலே நாம் முன்னேறிவிடலாம்.
நன்றி.
ராஜசங்கர்.
அண்ணே..!! யாருக்கு என்ன புரியுமோ , தெரியுமோ அதைதானே செய்யமுடியும் , கோடிக்கணக்கான பிளாகில எங்கே போய் முட்டிக்கிரது . உங்களை மாதிரி பெரியவங்க சொன்னாதானே போய் பார்க்க முடியும் ஹி...ஹி...
சின்ன வயசுலபடி படின்னு சொன்னாங்களே கேட்டிருந்தா இப்போ ஐஸ்டீனா கணக்கா ஆகீருப்பேனே அவ்வ்வ்வ்வ் :-))))
ரொம்ப நாளைக்கு அப்புறம் அதிரடியாய் வந்திருக்கீங்க கக்கு...! இதெல்லாம் பதிவுலகில் சகஜம் என்று நினைக்கத்தான் வேண்டும். அறிமுகத்துக்கு நன்றி கக்கு.
உங்களை நாடுகடத்தி விட்டதை இப்படி சொல்லி சமாளிக்கறீங்களா...நடக்கட்டும் நடக்கட்டும்.
// உங்களை மாதிரி பெரியவங்க சொன்னாதானே போய் பார்க்க முடியும் ஹி...ஹி...//
சந்திரிப்படாம ஜெய்லானி உங்களை பெரியவராக்கிவிட்டார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
வணக்கம் அண்ணாச்சி,
மிக நீண்ட நாட்களின் பின்னர் வந்திருக்கிறீங்க.
நலமா?
நல்ல பதிவுகள் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது வேதனை தான்.
இக் குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் என் ஒவ்வோர் பதிவுகளிலும் அதிகம் வெளித் தெரியாத பதிவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறேன்.
பார்ப்போம்...
எப்படி இருக்கப் போகிறது எம் தமிழ்ப் பதிவுலகம்.
ஆமா, உங்க பழய பதிவுகள் லிஸ்ட்ட பதிவிலிருந்து தூக்கீட்டீங்களா? அதயெல்லாம் கொஞ்சம் பாக்கலாமுன்னு நெனச்சேன்.
ரொம்ப நாள் கழிச்சு வந்ததால, பதிவுலகின் குறைபாடுகள் மிகத்தெளிவாக உங்களுக்கு புலப்படுகிறது. உங்கள் கருத்துகளில் இருக்கும் உண்மைகள் சுடுகின்றன.
//யூர்கன் க்ருகியர் சொன்னது…
அடுத்த போஸ்ட் எப்ப மச்சி ????///
எதற்காக இந்த கேள்வி என்று புரிகிறதா உங்களுக்கு ?
நீண்ட நாட்களானாலும் மீண்டும்
வருகை தந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் என்
நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்பு போல தனித்தனியாக ஒவ்வொருவரையும் தனித்தனியாக குறிப்பிட்டு எழுத எண்ணமிருந்தாலும் நேரம் அறிதாக கிடைப்தால் அனைவருக்கும் பொதுவாக என் நன்றிகளை இங்கு சொல்லிகொள்கிறேன்.
அன்புடன்
கக்கு-மாணிக்கம்
தமிழ் உதயத்தை வழி மொழிகிறேன். ஜெயலானியை ஆதரிக்கிறேன்!
கருத்துரையிடுக