பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, செப்டம்பர் 30

நானா பொறுப்பு??இந்திய அரசின் திட்ட கமிஷன் ( Planning Commission ) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை நம்ம எல்லாம் புல்லரிக்க வைக்கிறது.இந்திய நாட்டில் ஒட்டு மொத்த ஏழைகளும் ஒரே நாளில் 800  மில்லியனில் இருந்து 400 மில்லியன் அளவுக்கு குறைந்து விட்டனராம்! இந்திய உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  தனது அறிக்கையில்தான் நமது திட்ட கமிஷன் இவ்வாறு கூறியுள்ளது. இவர்களின் அறிக்கையின் படி நகர் புறங்களில் வாழுபவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 32 ரூபாய் செலவு செய்பவர்களும், கிராமங்களில் வாழ்பவர்கள் ஒருநாளைக்கு 25 ருபாய் செலவு செய்யும் திறன் இருந்தால் அவர்கள் எல்லாம் வறுமைகோட்டுக்கு மேல வந்து வசதியாக வாழ்பவர்கலாம். இனிமேல் சென்னை, கோவை, மதுரை  போன்ற நகர்களில் வாழும் ஏழைகள் தினமும் அதிக பட்சமாக 32 ரூபாய் ஒரு நாளைக்கு செலவு செய்தால் அவர்கள் எல்லாம் இனிமேல் வறுமையில் வாடுபவர்கள் அல்ல. இந்திய கிராமங்களில் வாழுபவர்கள் ஒரு நாளைக்கு 25 செலவு செய்தால் அவர்கள் எல்லாம் பணக்காரர்கள்.

இதுபோன்ற கேணத்தனமான அறிக்கைகள் தருவதை தவிர்த்து விட்டு வேறு உருப்படியாக ஏதாவது செய்து இந்தியாவில் வாழும் ஏழைகளின் நிலையை உயர்த்தாமல் வெறும் அறிக்கைகளையும், புள்ளி விபரங்களையும் உச்ச நீதி மன்றத்தில் அளிப்பதால் மட்டும் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து விடுமா என்ன? 

ஒரு லிட்டர் பெற்றோலின் விலையே உங்கள் வறுமைகோட்டின் கணக்கின் படி அதைவிட சுமார் இரண்டு மடங்காகி விட்டதே! கடைசியாக எனக்கு தெரிந்தவரை ஒரு லிட்டர் விலை 70 ரூபாய் என்று நம்புகிறேன். மற்றதெல்லாம் விடுவோம், உடல் நலக்குறைவாக இருந்தால் அதற்கான  மருத்துவ செலவே அல்லது ஆண்டி பயாடிக் மாத்திரைகளோ அல்லது அதன் ஊசியோ குறைந்தது 50 ரூபாய்க்கு மேலே தானே விலையாகிறது?

அரசாங்கத்திடம் சம்பளம் வாங்காத, வெளியில் உள்ள "பொருளாதார நிபுணர்கள் " சொல்லுவதைக்கேட்போம். இந்திய நகரில் வாழும் ஐந்து பேர் கொண்ட ஒரு சாதாரண குடும்பத்துக்கு மாதம் சுமார் குறைந்து 7,000 ரூபாயாவது வேண்டும் அவர்கள் உயிர்வாழ. ஒருநாளைக்கு சராசரியாக 233 ரூபாய் வேண்டும் மூன்று வேலை சாப்பிடவும், உடைகளுக்கும் மற்றும் வசிக்கும் இடத்திற்கும். இதில் மருத்துவம் மற்றும் பிள்ளைகளின் கல்வி போன்ற செலவுகள் சேர்க்கப்படவில்லை. அதற்கெல்லாம் எங்கே போவது? 

உலக மயமாதல் போதையில் மிதந்து பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் வாதிகள், சினிமா காரர்கள், கிரிகெட் ஆட்ட காரர்கள் இவர்கள் எல்லாம் மேலும் மேலும் பணம் படைதவர்களானார்கள் அன்றி வயிற்றுக்கு  போராடும் ஏழைகள் இன்னமும் கீழே போய் ஒரு வேலை சோற்றுக்கும் அல்லாடும் நிலையே கண்ட பலன். 

இந்த வருட ஆரம்பத்தில் இந்த சட்டம்  இயற்றும் அதிகாரமும் வாய்ப்பும் கொண்ட இந்திய அரசியலில் உள்ள அனைத்துக்கட்சி அத்துணை எம்.பி. களும் சற்றும் வெட்கம் இன்றி தங்களுக்கு ஒரு நாளைய அலவன்ஸ் 1000 ரூபாயாக உயர்திக்கொண்டார்களே அதையும் சற்று இப்போது நினைதுப்பார்போம். திட்டகமிஷனின் கோமாளிதனனமா அறிக்கைகளின் கதி என்னவென்று என்னைப்போன்ற சாதாரனமானர்களுக்கும் தெரியும் போது "பொருளாதரா நிபுணர் " ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் பொருளாதாரம் படித்து அரசியலுக்கு வந்த நம்ம மண்ணு மோகன் சிங் அவர்களுக்கு தெரியாதா என்ன?இந்த தகிடு தித்தம் வேலையை இன்னமும் எத்தனை நாளைக்கு நடத்துவார்கள்  என்றே யாருக்கும் தெரியவில்லை. இந்த கொள்ளைக்கூட்டம், தேச விரோதிகள் , மக்கள் விரோதிகள்  சுவிஸ் வங்கிகளில் அடித்து வைத்திருக்கும் செல்வ வளம் பற்றி உங்களுக்கு நினைவு வந்தால் அதற்கு நானா பொறுப்பு ?

                                                     Click the image to see bigger size 

15 comments:

விக்கியுலகம் சொன்னது…

அண்ணே இப்படிதான் ஏழைகளே எல்லாம் பணக்காரர்களா ஆக்குராங்களோ என்னமோ!

RVS சொன்னது…

இவங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாது தலைவரே!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நீண்ட இடைவெளிக்குப்பிறகு

சேட்டைக்காரன் சொன்னது…

இப்படியொரு அறிக்கையை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த திட்டக்கமிஷன் தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா-வை மன்மோகன் சிங் முன்பொருமுறை இந்தியாவின் நிதியமைச்சராக்க ஆசைப்பட்டாராம்.

-------வைத்தியன் பொஞ்சாதி புழுத்துச் செத்தாளாம் என்ற எங்க ஊரு சொலவடைதான் ஞாபகத்துக்கு வருது.

வெளங்காதவன் சொன்னது…

//மண்ணு மோகன் சிங்///

ஹி ஹி ஹி...

ஜெய்லானி சொன்னது…

லிஸ்டை பார்த்துட்டு தலையை சுத்துது.... :-((

யூர்கன் க்ருகியர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
யூர்கன் க்ருகியர் சொன்னது…

சுவிஸ் வங்கிகளின் மீது "International Court" ல் யாராவதோ அல்லது ஏதோ ஒரு நாடோ வழக்கு தொடர்ந்துள்ளதாக வரலாறு உள்ளதா?

சுவிஸ் வங்கிகளின் விதிமுறைகள் மனித தர்மத்திற்கு எதிரானது. எங்கெங்கியோ பூகம்பம் வருது.. சுவிஸ் வங்கி இருக்கும் இடத்தில வரமாட்டேங்குதே?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கொய்யால இப்பிடி பணத்தை அங்கே சேமிச்சி வச்சிகிட்டு, இங்கே உட்டாலன்கிடி பேச்சு பேசுராணுக...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கருப்பு பணத்துக்கு என்றே ஒரு மாநிலத்தை ஒதுக்கி, அங்கே பணத்தை இன்வெஸ்ட் பண்ணலாமே...?

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ சொன்னது…

ஸலாம் சகோ.கக்கு மாணிக்கம்,
அருமையான விழிப்புணர்வூட்டும் ஆக்கத்திற்கு மிக்க நன்றி. விக்கி லீக்ஸ் பட்டியலுக்கும் இந்த வறுமைக்கோட்டுக்கும் எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ தூரம்...! ஹூம்...! வேற என்னத்த சொல்ல..! சுயநலவாதம் ஒழிய வேண்டும்..!

ஜெய்லானி சொன்னது…

//MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கருப்பு பணத்துக்கு என்றே ஒரு மாநிலத்தை ஒதுக்கி, அங்கே பணத்தை இன்வெஸ்ட் பண்ணலாமே...? //

மக்கா என்னைய அதுக்கு (அந்த மாநில) முதல்வரா ஆக்கிடுங்க ....!!! கமிஷனை தனியா தந்துடறேன் ஹி...ஹி...

மாலதி சொன்னது…

இந்த கண்கட்டி வித்தை எல்லாம் நம்ம நாட்டில் தான் இருக்கும் கொள்ளையடித்துக் கொண்டு ஒருபக்கம் மக்களை சூறையாடி விட்டுஇப்பை போலியான கணக்குகளை காட்டுகிறது இடுகைக்கு பாராட்டுகள்

Madhavan Srinivasagopalan சொன்னது…

< Rs. 32 per diam.

நா, வறுமைக் கோட்டுக்கு கீழ்தான் இருக்கேனா.. அப்ப ஒகே..

சீனுவாசன்.கு சொன்னது…

நம்ம தளத்துக்கும் வாங்க!
தயங்காம கருத்த சொல்லுங்க!
நல்லாப்பழகுவோம்!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக