பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஏப்ரல் 1

ஊரான் வூட்டு நெய்யே என் பெண்ட்டாடி கையே!






கிரிகெட் உலககோப்பை நடத்தும் I.C.C.நிறுவனத்துக்கு நமது இந்திய அரசு 30%  வரி தள்ளுபடி செய்துள்ளது. 44 கோடி ரூபாய் அளவிற்கு I.C.C  க்கு சலுகை கிடைத்துள்ளது. உபயம் இந்திய நாட்டு வேளாண்மை துறை அமைச்சர் ஷரத் பவார் அவர்களின் நல்லாசியுடன். ஆனால் இதே I.C.C.  நாளை நடக்க விருக்கும் உலககோப்பை இறுதி கிரிகெட் ஆட்டத்தை ஒளிபரப்ப அணைத்து இந்திய தொலைகாட்சிகளுக்கும் தடை விதித்தது. 

வழக்கமாக ஊடகங்கள் அனைத்தும் ஒரே குரலில் கத்தி களேபாரம் செய்தபின் தடையை நீக்கி விட்டதாக I.C.C.  இப்போது அறிவித்துள்ளது. நம் நாட்டில் அணைத்து உள்நாட்டு, பன்னாட்டு தொழில் முனையங்களும் இங்கு லாபம் ஈட்டுவதால் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். ஏன், ஒரு தனியார் மருத்துவ மனை கூட வரிகட்டியாகவேண்டும். I.C.C  ஒன்றும் சாரிட்டி அமைப்பு அல்லவே. லாபம் தானே அவர்களின் நோக்கம்.

நாட்டில் போதிய அளவு உணவுதானியங்கள் விளைந்தும் அதனை கொள்முதல் செய்து பாதுகாக்கும் F C I  க்கு இன்னமும் போதுமான கிடங்கு, சேமிப்பு வசதிகள் இல்லாதால் டன் கணக்கில் தானியங்கள் வருடம் தோறும் மழையிலும் வெய்யிலிலும் கிடந்தது  பாழாகின்றன. உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவைகளை சரியான வழியில் பாதுக்காக ஆவன செய்யவும், அதிகம் உள்ள தானியங்களை ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்யவும் அறிவுறுத்தியும்  அதன் மீது எந்த வகை ஆக்க பூர்வமான நடவடிக்கையும் இந்திய விவசாய அமைச்சகம் செய்ய வில்லை. ஆனால் அந்த அமைச்சகத்தின் பொறுப்பான விவசாய அமைச்சரோ பன்னாட்டு I.C.C  க்கு சலுகைகளை வாரி விடுவதில்தான் மிக்க கவனமாக இருக்கிறார்.

 பன்னாட்டு கைக்கூலி, வெட்கம் அற்ற இந்த மாபியா தலைவன் ஷரத் பவாருக்கு ஏன் இந்த வீண் வேலை? ஆசியாவில் அதிலும் இந்திய துணைக்கண்டதில் இந்த எழெவெடுத்த கிரிகெட்டுக்காக எவ்வளவு லட்சம் கோடிகள் இந்த I.C.C  மட்டும் வாரிகொட்டிகொள்கிறது? ஆனால் இந்தியர்களின் வரிபணத்தில் இவர்களுக்கு இலவசமா?

 மத்திய அரசில் உள்ள எவருக்கும் கொஞ்சமாவது மன சாட்சி என்று உள்ளதா தெரியவில்லை.









35 comments:

settaikkaran சொன்னது…

//I.C.C ஒன்றும் சாரிட்டி அமைப்பு அல்லவே.//

ICC சாரிட்டி அமைப்பு அல்ல; ஆனால், BCCI இன்னும் சாரிட்டி அமைப்புதான். இதில் வருகிற வருமானத்துக்கு வரிகட்டு என்று நோட்டீஸ் அனுப்பினார்கள். இப்போது விஷயம் கிடப்பில்....!

பத்து விநாடி விளம்பரத்துக்கு ESPN-ல் பதினைந்திலிருந்து இருபது லட்சம் வரையிலும் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்றால், ICC மற்றும் BCCI இவற்றின் பங்கு எவ்வளவாக இருக்கும்?

ஓரிரு ஆண்டுவரையிலும் sales promotion என்ற தலைப்பில் ஆகிற செலவீனங்களை FBT யின் கீழ் கொண்டுவந்த அரசாங்கம், வெளிப்படையாக வியாபாரத்தில் ஈடுபடுகிற கிரிக்கெட் வாரியத்துக்கு சலுகை வழங்குவது அக்கிரமம்.

நல்ல பகிர்வு!

சிவகுமாரன் சொன்னது…

அக்கிரமம் அநியாயம் . கேக்க நாதியில்லை.
பாகிஸ்தானை ஜெயிச்ச மகிழச்சியில ஸ்பெக்ட்ரமெல்லாம் மறந்து போச்சு.
அவுங்க அப்பன் வீட்டு பணம் அள்ளிக் கொடுப்பாக . நீங்க என் சார் கத்துரீக. பேசாம ஓட்டு போட்டுட்டு விரல்ல மை வச்சுட்டு போவீகளா ....

Chitra சொன்னது…

நாட்டில் போதிய அளவு உணவுதானியங்கள் விளைந்தும் அதனை கொள்முதல் செய்து பாதுகாக்கும் F C I க்கு இன்னமும் போதுமான கிடங்கு, சேமிப்பு வசதிகள் இல்லாதால் டன் கணக்கில் தானியங்கள் வருடம் தோறும் மழையிலும் வெய்யிலிலும் கிடந்தது பாழாகின்றன. உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவைகளை சரியான வழியில் பாதுக்காக ஆவன செய்யவும், அதிகம் உள்ள தானியங்களை ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்யவும் அறிவுறுத்தியும் அதன் மீது எந்த வகை ஆக்க பூர்வமான நடவடிக்கையும் இந்திய விவசாய அமைச்சகம் செய்ய வில்லை.


...... இது மனதை உறுத்திக் கொண்டு இருக்கும் விஷயம். :-(

செங்கோவி சொன்னது…

சரியான பதிவு..இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ..

மதுரை சரவணன் சொன்னது…

citra sonnathai valiyuruththukiren..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

மத்திய அரசில் உள்ள எவருக்கும் கொஞ்சமாவது மன சாட்சி என்று உள்ளதா?//

ஹி..ஹி.. யாருக்கிட்ட என்ன கேள்வி கேக்குறீங்க?..
மனசாட்சீசீசீயா?..அப்படீண்ணா?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இந்த அரசியல்வாதிகள் மனசாட்சியை விற்று எத்தனையோ காலம் ஆகிறது நண்பரே! நல்ல பகிர்வு!!

Unknown சொன்னது…

இந்தால ஒன்னும் பண்ண முடியாம பல பேரு துண்டக்கானோம்னு ஓடிட்டாங்க................
இவன நோட்டுக்கு ....போட்டு இருப்பாங்களோ!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

டைட்டில், உள்ளடக்கம் அசத்தல்

பொன் மாலை பொழுது சொன்னது…

// ஓரிரு ஆண்டுவரையிலும் sales promotion என்ற தலைப்பில் ஆகிற செலவீனங்களை FBT யின் கீழ் கொண்டுவந்த அரசாங்கம், வெளிப்படையாக வியாபாரத்தில் ஈடுபடுகிற கிரிக்கெட் வாரியத்துக்கு சலுகை வழங்குவது அக்கிரமம்.//

--------சேட்டை

இதை பற்றி யாராவது எழுதுங்களேன். எழுதி எழுதி வயிறு எறிவதுதான் மிச்சம் சேட்டை.

பொன் மாலை பொழுது சொன்னது…

// . நீங்க என் சார் கத்துரீக. பேசாம ஓட்டு போட்டுட்டு விரல்ல மை வச்சுட்டு போவீகளா ....//

------சிவகுமாரன்

கிரிகெட் பெயரை சொல்லி இந்த I C C அடிக்கும் கொள்ளையில் இந்திய நாட்டு மக்களின் வரிப்பணம் நஷ்டமாக வேண்டுமா? உண்மையில் ICC தான் அதிக பணம் பண்ணுகிறது இந்தியாவில். அந்த அமைப்பு அன்றோ முறையாக வரி கட்ட வேண்டும்?அதை விட்டு அரசே இவர்களுக்கு வரி தள்ளுபடி செய்ய வைப்பது என்ன கொடுமை? வேறு எந்த நாட்டிலாவது இந்த அநியாயம் நடக்குமா??

பொன் மாலை பொழுது சொன்னது…

// ..... இது மனதை உறுத்திக் கொண்டு இருக்கும் விஷயம். :-(//


--------Chitra


வருகைக்கு நன்றி Chitra

பொன் மாலை பொழுது சொன்னது…

செங்கோவி
மதுரை சரவணன்
பட்டா பட்டி
உங்கள்
வருகைக்கும் கருதுக்கம் நன்றி தோழர்களே!

பொன் மாலை பொழுது சொன்னது…

வெங்கட் நாக ராஜன்
விக்கி
சி.பி .செந்தில் குமார்.

உங்கள்
வருகைக்கும் கருதுக்கம் நன்றி தோழர்களே!

சக்தி கல்வி மையம் சொன்னது…

உருப்படியான பதிவு... தலைப்பு அருமை..

கோமதி அரசு சொன்னது…

//நாட்டில் போதிய அளவு உணவுதானியங்கள் விளைந்தும் அதனை கொள்முதல் செய்து பாதுகாக்கும் F C I க்கு இன்னமும் போதுமான கிடங்கு, சேமிப்பு வசதிகள் இல்லாதால் டன் கணக்கில் தானியங்கள் வருடம் தோறும் மழையிலும் வெய்யிலிலும் கிடந்தது பாழாகின்றன. உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவைகளை சரியான வழியில் பாதுக்காக ஆவன செய்யவும், அதிகம் உள்ள தானியங்களை ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்யவும் அறிவுறுத்தியும் அதன் மீது எந்த வகை ஆக்க பூர்வமான நடவடிக்கையும் இந்திய விவசாய அமைச்சகம் செய்ய வில்லை.//

ஆக்க பூர்வமான 10 தலைமுறைக்கு பணம் சேர்ப்பது எப்படி என்பது நல்லா தெரியும்.

பெயரில்லா சொன்னது…

என்ன ஒரு சூப்பரான தலைப்பு..உன்னை அடிச்சிக்க ஆள் இல்ல தலைவா...

சசிகுமார் சொன்னது…

super thalaiva

YESRAMESH சொன்னது…

உலக மாபியாக்களின் இந்திய ஏஜென்ட் இந்த கோணவாயி கொரங்கு

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நல்ல பகிர்வு!

Jey சொன்னது…

இது கோர்ட்ல நிக்காது அண்ணாச்சி, சுப்ரீம் கோர்ட்கிட்ட இருந்து மறுக்கா வசமா வாங்கி கட்டிக்கிறதுக்குதான் இதெல்லாம்...

ஏற்கனவே மத்திய அரசு போட்ட கேஸ்ல, நாங்க தனியார் கம்பனிதான் அதனால அரசு எங்கள கட்டுப் படுத்தாதுன்னு அவங்களே அஃபிடாவிட் ஃபைல் பண்ணிருக்காங்க....

எல்லாம் கார்ப்பொரேட் திட்டு கம்னாட்டிகளும், பவார் மாதிரி அரசியல் கம்னாட்டிகளும் சேர்ந்துகிட்டு நம்ம வரிப்பணத்தை கொள்ளையடிக்கப் பாக்குறானுக...

Geetha6 சொன்னது…

good and intresting!

bandhu சொன்னது…

இவனெல்லாம் மனுஷனே இல்லை. இவனை மந்திரியா வெச்சுருக்கானே, அவன சொல்லணும்! பரதேசிங்க!

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் சொன்னது…

ம்.ம்.ம்.. சரியாத்தான் தோணுது!! ... என்ன சொல்ல?

கொஞ்சம் இங்கும் வாங்களேன்!

http://sagamanithan.blogspot.com/

பெயரில்லா சொன்னது…

//ஆசியாவில் அதிலும் இந்திய துணைக்கண்டதில் இந்த எழெவெடுத்த கிரிகெட்டுக்காக எவ்வளவு லட்சம் கோடிகள் இந்த I.C.C மட்டும் வாரிகொட்டிகொள்கிறது? //

இதுக்கே இப்படின்னா அடுத்த வாரம் ஐ.பி.எல். இதை விட பல படி மேல இருக்கும்...!! ஓவர்!!

பெயரில்லா சொன்னது…

//இதை பற்றி யாராவது எழுதுங்களேன்.//

என்னால முடிஞ்சது...

http://nanbendaa.blogspot.com/2011/04/030411.html

உணவு உலகம் சொன்னது…

நல்ல தலைப்பு தல.
உணவு உலகத்தில் இன்று: தேர்தல்-2011 -ஓட்டு போடலாமா ? நெசமாவே தேர்தல் செய்திதாங்க!

Unknown சொன்னது…

// I.C.C ஒன்றும் சாரிட்டி அமைப்பு அல்லவே. லாபம் தானே அவர்களின் நோக்கம்.//
உண்மை தான்... கிடைக்கும் வழியிலெல்லாம் பணம் பார்க்கிறார்கள்..
அப்புறம் வரி விலக்கு வேற..

Unknown சொன்னது…

மத்திய அமைச்சரா இருந்தா நிறைய சம்பாதிக்கலாம்-னு சொல்றாங்க. சரத்பவார் அது வேண்டாம். ஐ.சி.சி. தலைவர் பதவி போதும்னு சொல்லுறாரு. அப்படினா என்ன அர்த்தம். கொஞ்சம் அதிக ருசி அங்க இருக்கு தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சரியா சொல்லி இருக்கீங்கண்ணே..........

ஜெய்லானி சொன்னது…

//மத்திய அரசில் உள்ள எவருக்கும் கொஞ்சமாவது மன சாட்சி என்று உள்ளதா?//

ஐயா...அவங்களுக்கு கிடைப்பது உங்களுக்கும் கிடைச்சா இப்படி சொல்ல மாட்டீங்களே....!!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

//உலக மாபியாக்களின் இந்திய ஏஜென்ட் இந்த கோணவாயி கொரங்கு//

"ஏய் அவனுக்கு வாயில கான்சர்-பா !"

இவ்வளவு கொள்ளை அடிக்கிறானே ..ஆச தீர ஒரு பிகரையாவது முத்தம் கொடுக்க முடியுமா?

எல்லாம் ஆண்டவன் போட்ட பார்முலா :)

ஜீவன்சிவம் சொன்னது…

மாற்றம் ஓன்று தான் இதற்கெல்லாம் தீர்வு. மாற்றம் கொண்டுவர கைகோர்ப்போம்

Unknown சொன்னது…

//எல்லாம் கார்ப்பொரேட் திட்டு கம்னாட்டிகளும், பவார் மாதிரி அரசியல் கம்னாட்டிகளும் சேர்ந்துகிட்டு நம்ம வரிப்பணத்தை கொள்ளையடிக்கப் பாக்குறானுக.//

ஆதி மனிதன் சொன்னது…

சரியான நேரத்தில் அருமையான பதிவு. கிரிகெட் பைத்தியங்கள் இருக்கும் வரை ஐசிசிக்கு கொண்டாட்டம் தான்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக