பாடல்கள் பிரமாதமாக இருந்தும் படமாகிய விதம் மகா சப்பையாக இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.மிக அழகாக இசையமைத்தார் இளைய ராஜா. பிரமாதமான கிராமிய மெட்டு. ஜெயச்சந்திரனும் ஜானகியும் இனிமையாக பாடியுள்ளனர்.ஆனால் கன்றாவியாக படமாக்கி வைத்துள்ளனர் நடித்தவர்களும்,இயக்குனரும்.நாயகி இந்தி இறக்குமதி,ராமேஷ்வரியின் சகோதரியாம் கிருஷ்ண குமாரி என்று பெயர் ஞாபகம். எப்படித்தான் இந்த புள்ளைய கதா நாயகியாக தேர்ந்தெடுத்தார்களோ! அந்த இனிமையான காதல் பாட்டுக்கு இப்படி ஒரு ஜடத்தைய்யா நடிக்க விட்டார்கள். படம் ஊத்திக்கிச்சி என்பது வேறு விஷயம். ''கொத்தமல்லி பூவாசம், அத்த மகன் ஒன் நேசம்" என்ற அருமையான பாடல் வரிகளுக்கு அந்த புள்ள தரும் ஆக்டிங் பாத்தா ஓங்கி செவிட்டில் நாலு அறை விடத்தோன்றும்.சரியான வெளக்கெண்ணை !
நாயகன், நந்தகுமார் ......என்று ஞாபகம். கன்னட நடிகர் , சற்று பரவாயில்லை.பாலச்சந்தர் படங்களில் நடித்த அனுபவமுண்டு.
இளையராஜாவின் பாடல்கள் இன்றும் நிற்கிறது என்றால் அது அந்த
உழைப்பின் ,திறமையினால் தனிப்பட்ட உயர்வினால் அன்றி, நடிகர், நடிகைகள், டைரக்டர்கள் இங்கே பூஜ்யமாகி விடுவார்கள் என்பதே உண்மை.
காலமெல்லாம் காதல் வாழ்க
இதயம்
பால் வடியும் பிரபு தேவா,ராஜு சுந்தரம்.
45 comments:
இருங்க படிச்சிட்டு வரேன் :-)
ஊருல ஊத காத்து ஓவரா வீசுதுப்போல ஹி..ஹி...!! :-)
அட... இன்னமும் எடிடிங் முடியல அதுக்குள்ள வந்தாச்சா?
//இந்த புள்ளைய கதா நாயகியாக தேர்ந்தெடுத்தார்களோ! அந்த இனிமையான காதல் பாட்டுக்கு இப்படி ஒரு ஜடத்தைய்யா நடிக்க விட்டார்கள் //
ஆஹா... என்ன ஒரு குடும்ப குத்து விளக்கு
//கொத்தமல்லி பூவாசம், அத்த மகன் ஒன் நேசம்" என்ற அருமையான பாடல் வரிகளுக்கு அந்த புள்ள தரும் ஆக்டிங் பாத்தா ஓங்கி செவிட்டில் நாலு அறை விடத்தோன்றும்.சரியான வெளக்கெண்ணை !//
அண்ணாத்தே நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் தயாரிக்கலாமா ..? நீங்க டைரக்டர் நா கேமரா மேன் ...ஹி..ஹி... !! :-)))
அண்ணாத்தே நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் தயாரிக்கலாமா ..? நீங்க டைரக்டர் நா கேமரா மேன் ...ஹி..ஹி... !! :-)))
------ஜெய்லானி சொன்னது
சரி, ஹீரோயின்? .....யாராம்? அதசொல்லுங்கய்யா மொதல்ல.!
அந்த நாள் ஞாபகங்களை மீட்டும் வகையில் பாடல்களைச் செய்திருக்கிறீர்கள். கிராமப் புறக் கதைகளுக்கு அழகான, பொண்ணும், ஓவர் நடிப்பும் தேவையில்லை என்னும் நோக்கில் இயக்குநர் ஒப்பனையற்ற பொண்ணைத் தன் படத்திற்காக தேர்ந்தெடுத்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.(முதலாவது பாடல்)
கிராமத்து அத்தியாயத்தில் இன்னும் நல்ல பாட்டு இரண்டு உண்டு. ஒன்று ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது அதுல நீங்க சொன்ன ஜடம் தாவணி போட்டுகிட்டு இன்னும் பார்க்க ரொம்ப கண்றாவியா இருக்கும் இன்னொரு பாட்டு வாடாத ரோஜாப்பூ நான் ஒன்னு பார்த்தேன் அதுவும் ஒரு ஜடம்தான் ஆக பாட்டு பூரா நல்லா இருந்தும் கோட்டை விட்ட இயக்குனருக்குதான் வைக்க வேணும் கொட்டு
Appalika varen boss
//அந்த இனிமையான காதல் பாட்டுக்கு இப்படி ஒரு ஜடத்தைய்யா நடிக்க விட்டார்கள் // அண்ணாத்தயை கடுப்பேத்திடுச்சே ஜடம்!
என்ன ஒரு ஆராய்ச்சி! வாழ்த்துக்கள்!!
தலைவரே இளைய ராஜா தனி காட்டு ராஜா இசையில் என்றுமே!
"கிராமத்து அத்தியாயம் " பாட்டு இப்போதான் பார்க்கிறேன். உங்கள் முன்னுரை வாசித்து விட்டு, அந்த பாடலை பார்க்கும் போது, சிரிச்சுக்கிட்டே பார்த்தேன். அந்த அம்மா, சாம் அன்டேர்சன் கூட டான்ஸ் ஆடிய நடிகைக்கு போட்டியாக தெரிஞ்சுது....
//உங்கள் முன்னுரை வாசித்து விட்டு, அந்த பாடலை பார்க்கும் போது, சிரிச்சுக்கிட்டே பார்த்தேன். //நானும் தான்...
கிராமத்து அத்தியாயம்- அண்மையில் உலக்கைப் படங்கள், அதாவது உலகப்படங்கள் மீது மிகுந்த பக்திகொண்ட என் நண்பர் பரிந்துரைத்து பார்க்கச் சொன்ன படம். இசைஞானியின் முயற்சியெல்லாம் விழலுக்கிறைத்த நீராகிப் போயிருந்ததை வேதனையோடு பார்த்தேன்.
// கிராமப் புறக் கதைகளுக்கு அழகான, பொண்ணும், ஓவர் நடிப்பும் தேவையில்லை என்னும் நோக்கில் இயக்குநர் ஒப்பனையற்ற பொண்ணைத் தன் படத்திற்காக தேர்ந்தெடுத்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.(முதலாவது பாடல்)//
------ரூபன்.
அப்படியென்றால் இதுபோல ஒரு பாடல் காட்சி மட்டும் எதற்கு ரூபன்? எந்த கிராமத்தில் காதலர்கள் இப்படி ஆடிப்பாடி காதலிகின்றனர்?
அழகும், ஒப்பனையும் வேண்டாமே. குறைந்த பட்சம் நடிபவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்ற உணர்வு வேண்டாமா? நண்பர் சேட்டை அழகாக சொல்லிவிட்டார் பாருங்கள்.
பாடல் காட்சிகளில் பரிமளிக்கவும் ஒரு சில ஜாம்பவான் டைரகடர்கலால்தான்முடிகிறது.பாலச்சந்தர்,பாரதி ராஜா போல.
வருகைக்கு நன்றி.
// கிராமத்து அத்தியாயத்தில் இன்னும் நல்ல பாட்டு இரண்டு உண்டு.//
----தங்கராசு நாகேந்திரன்.
உண்மைதான். அந்த படத்தில் உள்ள அணைத்து பாடல்களுமே மிக நன்றாகவே இருந்தன. எனக்கும்
அவைகள் அனைத்தும் பிடிக்கும்.ஒரு உதாரணமாக இந்த பாடலை எடுத்துக்கொண்டேன்.
வருகைக்கு நன்றி நாகேந்திரன்.
//அப்பாலிக்கா வர்றேன் பாஸ். //
---டகால்ட்டி
இப்படியே டகால்ட்டி வேலை காமிச்சிகிட்டே இருங்க !
வருகைக்கு நன்றி செங்கோவி
// என்ன ஒரு ஆராய்ச்சி? //
ஓட்ட வட நாராயணன்.
நமக்குத்தான் "நொட்டை" சொல்ல ரொம்ப நல்லா வருமே ஓட்டை :))
//தலைவரே இளைய ராஜா தனி காட்டு ராஜா இசையில் என்றுமே!//
-----விக்கி .
அதனால்தான் இருபது ஆண்டுகள் கழித்தும் ராஜாவின் பாடல்கள் கேட்கப்படுகின்றன,ரசிக்கப்படுகின்றன.
வருகைக்கு நன்றி விக்கி.
வருகைக்கு நன்றி சித்ரா.
வருகைக்கு நன்றி GEETHA ACHAL
// இசைஞானியின் முயற்சியெல்லாம் விழலுக்கிறைத்த நீராகிப் போயிருந்ததை வேதனையோடு பார்த்தேன்.//
--------சேட்டைக்காரன்.
கரெக்ட். இதைத்தான் நானும் சொல்ல வந்தேன்
வருகைக்கு மிக்க நன்றி சேட்டை.
ஒவ்வொரு பாடலையும் தேடி தேடி பிடித்து இருக்கீங்க கேட்பதற்கு மிக நன்றாக இருக்கு அண்ணா
திரு.ருத்ரையா அவர்கள்தான் முதலில் திரைப்படக் கல்லூரியிலிருந்து வெளி வந்த இயக்குநர். நிறையக் கற்பனைகளுடன் வந்தவர்.அவள் அப்படித்தானின் இயக்குனர்.பாவம்.
கிருஷ்ணகுமாரி,சௌகாரின் தங்கையா?இவர் வேறா?
இதுக்குத்தான் நான் பாடல்களை பெரும்பாலும் ஆடீயோவுலேயே கேட்டுக்கறது.....
அசத்தல்..
ம்.. கலக்குங்க...
சிறப்பாக எழுதியுள்ளீர்கள், வாழ்த்துக்கள் நண்பரே!
// அந்த புள்ள தரும் ஆக்டிங் பாத்தா ஓங்கி செவிட்டில் நாலு அறை விடத்தோன்றும்.சரியான வெளக்கெண்ணை//
இம்புட்டு கோவம் உடம்புக்கு ஆகாது மக்கா...
// அந்த புள்ள தரும் ஆக்டிங் பாத்தா ஓங்கி செவிட்டில் நாலு அறை விடத்தோன்றும்.சரியான வெளக்கெண்ணை//
haa haa ஹா ஹா விட்டா பளார்னு அடிச்சிருப்பீங்க போல
கோவப்படாதீங்க.. அவங்க பட்ஜெட்டு இடிச்சுருக்கும். அதான்..
ராஜா என்னிக்குமே ராஜாதான்... ;-)))
கக்கு மாணிக்கம்,
//நாயகன், நந்தகுமார் ......என்று ஞாபகம். கன்னட நடிகர் //
கி.அத்தியாயம் பாட்டுல வரவரு பேரு சுந்தர் ராஜ்.உதிரிபூக்கள்,தப்புத்தாளங்கள் படத்துலேயும் வருவாரு.
பக்கா தமிழன்.அவரு கட்டுன பொண்ணு பிரமிளா(ஜோஷாய்).கன்னடத்துப் பைங்கிளி.இவங்க “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு”வை.காத்திருந்தாள்
படத்துல ஊஞ்சல்ல ஆடிட்டே பாடுவாங்க.
இவங்கப் பொண்ணும் (மேக்னா ராஜ்) கன்னடப் படத்தில நடிக்கிறாங்க.
தம்பதி சமதேராய் இவங்க போட்டோவப் பாருங்க:
http://gallery.oneindia.in/main.php?g2_itemId=776756
// MANO நாஞ்சில் மனோ சொன்னது…
// அந்த புள்ள தரும் ஆக்டிங் பாத்தா ஓங்கி செவிட்டில் நாலு அறை விடத்தோன்றும்.சரியான வெளக்கெண்ணை//
இம்புட்டு கோவம் உடம்புக்கு ஆகாது மக்கா... //
ரிப்பீட்டோய்.
//இதுக்குத்தான் நான் பாடல்களை பெரும்பாலும் ஆடீயோவுலேயே கேட்டுக்கறது..... //
பாட்ட போட்டுட்டு பின்னூட்ட்டப் பக்கம் வந்தாலே ஊதக்காத்தும்,கொத்து மல்லி வாசமும் வீசுது.
//கிருஷ்ணகுமாரி,சௌகாரின் தங்கையா?இவர் வேறா?//
--------------------சென்னை பித்தன்.
இல்லை. இந்த கிருஷ்ண குமாரி வேறு. எண்பதுகளில் இந்திப்படங்களில் நடித்த ராமேஸ்வரி என்ற நடிகையின் தங்கை என அப்போது அறிந்ததுண்டு.
வருகைக்கு அன்றி.
// இதுக்குத்தான் நான் பாடல்களை பெரும்பாலும் ஆடீயோவுலேயே கேட்டுக்கறது.....//
-----------பன்னிகுட்டி .
நானும் அப்படித்தான் பன்னி. இங்கு பதிவுக்காக மட்டுமே வீடியோ .
* வேடந்தாங்கல் - கருன் *!
# கவிதை வீதி # சௌந்தர்
Ravi.R
உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே.
// அந்த புள்ள தரும் ஆக்டிங் பாத்தா ஓங்கி செவிட்டில் நாலு அறை விடத்தோன்றும்.சரியான வெளக்கெண்ணை//
இம்புட்டு கோவம் உடம்புக்கு ஆகாது மக்கா...
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
எனக்கு கோபம் எல்லாம் இல்லை. ராஜாவின் இசையை தவிர வேறு ஒன்றும் இதில் இல்லை என்று சொல்லவே வந்தேன்.
நன்றி மனோ & சி.பி. செந்தில்.
//ராஜா என்னிக்குமே ராஜாதான்... ;-)))//
----R V S
அதை சொல்லத்தானே இந்த பதிவே!
வருகைக்கு நன்றி RVS
//கி.அத்தியாயம் பாட்டுல வரவரு பேரு சுந்தர் ராஜ்.உதிரிபூக்கள்,தப்புத்தாளங்கள் படத்துலேயும் வருவாரு.//
நண்பர் கே.ரவிஷங்கர்
தங்களின் மேலதிக தகவல்களுக்கு நன்றி. தப்புத்தாளங்கள் படத்தில் ரஜினியின் தம்பியாக வருவார் இல்லையா?
இவரைப்பற்றிய எந்த தகவலும் பத்திரிக்கைகளில் அதிகம் நான் கண்டதில்லை. அதனால்தான் "ஞாபகம் " என்று குறிப்பிட்டேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
//ரிப்பீட்டோய்.//
VJR
:)))))) வருகைக்கு நன்றி.
//பாட்ட போட்டுட்டு பின்னூட்ட்டப் பக்கம் வந்தாலே ஊதக்காத்தும்,கொத்து மல்லி வாசமும் வீசுது.//
-------------ராஜ நடராஜன்.
அது ராஜாவின் இசையின் மகத்துவம்.
வருகைக்கு நன்றி.
கிராமத்து அத்தியாயம் பாட்டைப் பார்த்துட்டு எனக்கும் ஆடியோவே போதும்னு தான் தோணுது மாணிக்கம் சார்.
//கிராமத்து அத்தியாயம் பாட்டைப் பார்த்துட்டு எனக்கும் ஆடியோவே போதும்னு தான் தோணுது //
மோகன்ஜி சொன்னது…
:)))))))
பெரும்பாலும் இசைபிரியர்கள் எல்லாம் ஆடியோ மட்டுமே வைத்திருப்பார்கள்.
வருகைக்கு நன்றி மோகன்ஜி.
கருத்துரையிடுக