பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஏப்ரல் 8

சற்று மகிழ்ச்சி கொள்ளலாம்.


மீண்டும் ஒரு ஜெய் பிரகாஷ் நாராயண்.




புது டெல்லி இந்தியா கேட்டில் இன்று திரண்ட ஹசாரே ஆதரவாளர்கள்.





ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து, நாட்டில் இந்த நான்கு தினங்களில் சகல தரப்பிடமிருந்தும் அவருக்கு அளவற்ற ஆதரவும் பல்கி பெருகும் நிலையை உணர்ந்த மத்திய அரசும்  அவரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனால் ஹசாரே ஒன்றும் எல்லாவற்றுக்கும் தலையாட்ட வில்லை. அவர் தன் உண்ணாவிரதத்தை இன்னமும் கை விட வில்லை. தன் கோரிக்கைகள் முழுவதும் நிறைவேறும் வரை அது தொடரும் என்று கூறுகிறார்.ஒருவேளை சனிக்கிழமை அன்றுதான் அது முடிவுக்கு வரலாம். தற்போது உள்ள தகவல்களின் படி பிரணாப் முகர்ஜி சேர் மேனாகவும், ஷாந்தி பூஷன் துணை சேர்மேனாகவும் கொண்டு இந்த வரைவு அமைக்கப்பட்டு இந்த லோக் பால் மசோதா அமைக்கப்படுகிறது.

அரசின் முடிவுப்படி சட்ட அமைச்சகத்தின் பொறுப்பில் இந்த மசோதாவை விட்டுவிடும் யோசனையை ஹசாரே முற்றிலும் நிராகரித்துவிட்டார். மேலும் ஊழல் கரை படிந்த எந்த அமைச்சரும் இந்த அமைப்பின் உள்ளே வருவதையும் கடுமையாக நிராகரித்துள்ளார்.

இனிவரும் காலங்களிலாவது ஊழல் கரை படிந்தவர்கள் இந்த மசோதாவால் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புவோம்.அதனை நடத்தியும் காட்டுவோம்.இது இன்னமும் முழுமையான வெற்றியை அடையவில்லை என்பதை உணரவேண்டும். ஒவ்வொரு நாளும் ஹசாறேயின் இந்த மக்கள் இயக்கம் மென் மேலும் வலுவடைவதை இந்த அரசு சகித்துக்கொள்ள இயலாமல் தற்காலிகமாக இதனை சற்று ஆரப்போடுள்ளது என்றே நாம் 
நினைவில் கொள்ளவேண்டும்.


ஜாதி, மத, மொழி வேறுபாடு கொண்டாடாதீர்கள்!

ஒற்றுமையே பலம்!







15 comments:

Madhavan Srinivasagopalan சொன்னது…

ஒற்றுமையே பலம்!

செங்கோவி சொன்னது…

ஜெய் ஹிந்த்!

டக்கால்டி சொன்னது…

Ondru pattaal undu vaazhvu!

Chitra சொன்னது…

ஜாதி, மத, மொழி வேறுபாடு கொண்டாடாதீர்கள்!

ஒற்றுமையே பலம்!



......வந்தே மாதரம்!

Unknown சொன்னது…

நல்ல விஷயத்துக்காக போராடும் நல்லதோர் மனிதர்......மாற்றம் வரும் என்று நம்புவோமாக ..........பகிர்வுக்கு நன்றி தலைவரே...........

சக்தி கல்வி மையம் சொன்னது…

மிகவும் போற்றப் பட வேண்டிய மனிதர்!

மாதேவி சொன்னது…

நன்று.

ஸ்ரீராம். சொன்னது…

முதல் வெற்றி...

RVS சொன்னது…

Excellent Manickam. Please continue these kind of posts.

சென்னை பித்தன் சொன்னது…

ஊழல் ஒழிக்கப்படுவதற்கான முதற்படி!
நன்று மாணிக்கம்!

சசிகுமார் சொன்னது…

தலைவா தமிழ்நாட்டிற்கும் கொஞ்சம் வந்துட்டு போங்க சார்.

nanu சொன்னது…

Jai Ho Anna HAZARE!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஒன்று படுவோம் உரம் பெறுவோம் மக்களே...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//சசிகுமார் சொன்னது…
தலைவா தமிழ்நாட்டிற்கும் கொஞ்சம் வந்துட்டு போங்க சார்.//

ஹசாரேயின் வெளிச்சம் தமிழகத்திலும் படரும் நம்புவோம்....

Geetha6 சொன்னது…

very good!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக