பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, ஏப்ரல் 9

தமிழ் தொலைக்காட்சி ஊடக துறையினரே?


உங்களுக்கு சிறிதேனும் வெட்கம், மானம் உண்டா தமிழ் தொலைக்காட்சி ஊடகத்துறையினரே?
Sun Network


Kalaignar network


Jaya network


Raj Network


Mega Network


Other general entertainment channels


தமிழ் நாட்டில் இயங்கும் அல்லது காட்டப்படும் தமிழ் தொலைகாட்சி சேனல்களின் பட்டியல்கள் இவை. (இன்னமும் இருக்கின்றன )நேற்றுவரை இந்த சேனல்கள் எதுவும் தலைநகர் புது டெல்லியில் நிகழ்ந்த அன்ன ஹசாரே அவர்களின் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிருதம் குறித்து எவ்வித தகவல்களையும்,செய்திகளையும் ஒளிபரப்பவில்லை. ஆனால் வெள்ளியன்று மாலையில் ஹசாரேயின் கோரிக்கைகள் அரசினால் ஏற்றுகொள்ளபட்டு அனைவரும், இந்த நாடே வெற்றிகளிப்பில் இருக்க அப்போது கூட இவர்கள் கண்கள் அவிந்து போய்விட்டிருந்தன போலும். ஆனால் இன்று சனிகிழமை காலையில் இருந்து ஏதோ இத்தனை நாள் தொடர்ந்து இந்த நிகழ்வுகளை காட்டியது போல பாவனை பண்ணிக்கொண்டு மிக இயல்பாக அன்னா ஹசாரே யின் உண்ணா விருத வெற்றியினை செய்தியாக சொல்ல ஆரம்பித்துவிட்டன.

ஆனால் இவர்கள் இருட்டடிப்பு செய்த அந்த செய்திகள் எப்படியோ தமிழர்களிடம் போய் சேர்ந்து அவர்களும் இந்த போராட்டத்தில் பங்குகொண்டு தங்களில் ஆதரவை தந்துள்ளனர் என்றால் அதற்கு காரணம் வடக்கத்திய ஆங்கில தொலைகாட்சிகளும் ,தமிழ் வலைபூகளும், ட்விட்டர்.முகநூல் போன்ற இனைய சாதனங்களே.வடக்கத்திய சேனல்கள், அவர்களும் உங்களைப்போலவே ஊழல்காசில்தான் வளர்ந்தவர்கள் அவர்களுக்கு இருந்த நியாய உணர்வு கூட உங்களுக்கு இல்லையே?

நீங்கள் எல்லாம் ஊழல் காசில்தான் தொலைகாட்சிகளை நடத்தி அதன் மூலம் தமிழர்களின் காசில் தான் சோருதின்னுகிரீர்கள். கொஞ்சமாவது சூடு சொரணை ,மானம் ,வெட்கம் இருந்தால் இனிமேலாவது நியாயமாக நிகழ்சிகளை தாருங்கள். உங்கள் அனைவரையும் ஓரம் கட்டி ஒதுக்கித்தள்ளவும்,குப்பையில் தூக்கிப்போடவும் கூட எங்களால் இயலும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.நிச்சயம் இதனை ஒரு இயக்கமாக செய்து உங்களை உங்களின் ஆணவபோக்கை அடக்கி ஒடுக்குவோம்.
19 comments:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

இவர்களுக்கு தமிழக அரசியல் செய்திகளை காட்டவே நேரம் போத வில்லை..

நாட்டின் முன்னேற்றம்.. ஜனநாயகம் பற்றி இவர்களுக்கு என்ன அக்கறை..

ஓரம் கட்ட வேண்டும் இவர்களை..

! சிவகுமார் ! சொன்னது…

மாறாதய்யா மாறாது.... மனமும் குணமும் மாறாது... விஜயகாந்த் வடிவேலு இருவரில் யார் எத்தனை ரவுண்ட் அடித்தார்கள் என்பதுதான் தற்போது நம்ம ஊரு தொலைக்காட்சிகளுக்கு இருக்கும் சமூக சிந்தனை.

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

தமிழக மக்களை விழித்தெழச்செய்ய இது போன்று நடுநிலைச் பதிவுகள் அவசியம்...

வாழ்த்துக்கள்...

விக்கி உலகம் சொன்னது…

என்ன தலைவரே அவங்களுக்கு எவ்ளோ வேல இருக்கு....... நம்மீதா எங்க போயி யாரு மேல உக்காந்தாங்க என்கிற மேட்டர விடவா இது பெரிசு!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//உங்கள் அனைவரையும் ஓரம் கட்டி ஒதுக்கித்தள்ளவும்,குப்பையில் தூக்கிப்போடவும் கூட எங்களால் இயலும் // அருமையா சொன்னீர்கள் .

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விழிப்புணர்வூட்டும் பதிவுக்குப் பாராட்டுக்கள்.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

உங்கள் அனைவரையும் ஓரம் கட்டி ஒதுக்கித்தள்ளவும்,குப்பையில் தூக்கிப்போடவும் கூட எங்களால் இயலும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்//

நம்பிக்கை இருக்கு சுக்கு மாணிக்கம்..

மக்கள் சக்தி இனி அதிகரிக்கும்..

விடாமல் போராடுவோம்..

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

தமிழக ஊடகங்களுக்கு எதிரான சாட்டையடி பதிவு..

பெயரில்லா சொன்னது…

This is the plight of Tamil media. They very well know what kind of influence it would have on their election result (especially ruling party). Tamil media is keen on focusing half naked cine stars and third rated talks of election speeches. Portion of people are interested in collecting their freebies and alms. Nevertheless tamil media will realise the people power soon.

Anyway thanks for posting this in your blog. good work!

GEETHA ACHAL சொன்னது…

என்னத சொல்ல...

//தமிழக ஊடகங்களுக்கு எதிரான சாட்டையடி பதிவு..//correctஆக சொன்னீங்க...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//உங்களுக்கு சிறிதேனும் வெட்கம், மானம் உண்டா தமிழ் தொலைக்காட்சி ஊடகத்துறையினரே?//

இந்த இளவைதான் நான் அப்போ இருந்தே கேட்டுட்டு இருக்கேன்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நீங்கள் எல்லாம் ஊழல் காசில்தான் தொலைகாட்சிகளை நடத்தி அதன் மூலம் தமிழர்களின் காசில் தான் சோருதின்னுகிரீர்கள். கொஞ்சமாவது சூடு சொரணை ,மானம் ,வெட்கம் இருந்தால் இனிமேலாவது நியாயமாக நிகழ்சிகளை தாருங்கள். //

இதை படிச்சிட்டு நாக்கை புடிங்கிட்டு சாவுங்கடா ஊழல் நா...ளா........

ராஜ நடராஜன் சொன்னது…

//நீங்கள் எல்லாம் ஊழல் காசில்தான் தொலைகாட்சிகளை நடத்தி அதன் மூலம் தமிழர்களின் காசில் தான் சோருதின்னுகிரீர்கள். //

தமிழக தொலைக்காட்சி குறித்து பதிவில் பொதுவில் வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.வியாபாரக் கண்ணோட்டம் தவிர பொதுமக்களுக்கு தேவையான பொது அறிவை எந்த ஊடகமும் வளர்ப்பதில்லை.

இதில் முக்கியமாக இவர்களுக்குள்ள நலன் என்றால் வரி ஏய்ப்புக்கு தொலைக்காட்சி ஊடகங்கள் பயன்படுத்தப் பட்டு வருவது மத்திய அரசின் பார்வைக்கே செல்வதில்லையென்பதும்.தோண்டி எடுத்தால் ஸ்பெக்ட்ரம்க்கு நிகரான ஊழல்,வரி ஏய்ப்பு பொது வெளிக்கு வரும்.

ஒசை. சொன்னது…

இம்மாதிரியான தொலைக்காட்சியில் பணிபுரியும் ரமேஷ்பிரபா தான், ஸ்பெக்ட்ரம் ஊழலில் வட இந்திய ஊடகங்கள் இரட்டிப்பு செய்வதாக புலம்பி, ஆங்கில ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும் என்றவர். நம் தமிழக ஊடகங்களை மட்டும் பார்த்து வளர்ந்தோமேயானால், கிணற்று தவளையை விட மோசமாக இருப்போம்.

Madhavan Srinivasagopalan சொன்னது…

நீங்கள் சொல்லிய அத்தனை தமிழ் தொலைக் காட்சிகளக்கும் ஒருநாள் முடிவு வரத்தான் போகிறது.. முடிவு என்பது எதற்கும் உண்டு.. காலம் பதில் சொல்லும்

S.Menaga சொன்னது…

//என்ன தலைவரே அவங்களுக்கு எவ்ளோ வேல இருக்கு....... நம்மீதா எங்க போயி யாரு மேல உக்காந்தாங்க என்கிற மேட்டர விடவா இது பெரிசு!
// repeattuuuuu

Rajesh சொன்னது…

Tamil Nadu Politicians are shameless (except very very few) in nature. They will go to any extent to secure power / position. Few examples:

1. Karthik Chidambaram (Seruppadi vaanginaalum thirunthavan magan than) - He will talk and show as if he is the founder of the Congress Party and in Tamil Nadu he only leads the party. Ivane oru vetti officer - appan sambaadiyatha saapiduranvan.

2. Dr (ada chi) Ramadoss: At least P*ros*itu*tes will have some policy in life. He is not worth even that level. Everybody knows that. But he will give effect as if nobody knows his secret.

3. Thol (Engal Dhol Iyya....) Thirumavalavan: He used to call Universal Leader Prabhakaran as Manbumighu.....(does he know what is meant by that word...saapidurathu soora....illanaa sotha vettitu ladh*aa?....Ippa Dhola Dhola Thiruma Valavan aagittaru....

Kadvul Irukkar....that is why he was sent back without having chance to participate in Paarvathi ammaal iruthi sadangil....

Jayadev Das சொன்னது…

\\கொஞ்சமாவது சூடு சொரணை ,மானம் ,வெட்கம் இருந்தால் இனிமேலாவது நியாயமாக நிகழ்சிகளை தாருங்கள். \\தொலைக் காட்சி சேனல்கள் யாருடையது என்று நீங்கள் முதலில் பார்க்கவேண்டும். கருணாநிதி, தயாநிதி, ஜெயலலிதா, ராமதாசு... இவங்க ஊழலை எதிர்ப்பார்கள் என்றா எதிர் பார்க்கிறீர்கள்!! எந்த திருடனாவது திருட்டை ஒழிக்கப் போராடுவானா!! ஹா...ஹா..ஹா...

jojo சொன்னது…

நம்பமுடியவில்லை....33 .சேனல் தமிழில் இருக்கா

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக