பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, ஏப்ரல் 9

வேட்பாளர்கள் அறிமுகம் R.T.I. வேண்டாம் இதுவே போதும்!


வண்டவாளங்கள் வலையில் !

இருப்பதிலேயே  டாப் டென்!
மம்மியோடது!தாத்தாவோடது!!இவைகளை பார்த்தல் ஒருத்தருக்கும் ஒட்டு போடும் எண்ணமே வராது. 
உண்மையில் இதனை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும்தான். நம்மை ஆள்வதற்கும், கொள்ளை அடித்து பத்து தலைமுறை தாங்கும் அளவிற்கு செல்வமும் சேர்த்துவிட்டு ஆள் ,அம்பு குடி,படையுடனும், பூனைப்படை, நாய் படை என்று மக்கள் காசில் வீண் பாதுகாப்பு பந்தா பண்ணி ஊரை ஏய்த்து வாழும் இந்த அரசியல் பிழைபவர்களின் உட்கதைகளியும் சற்று பாருங்கள். 

அனைத்து இந்திய அளவிலும் சகல விபரங்கள் நேர்த்தியாக தொகுக்கப்பட்டிருந்தாலும் தமிழ் நாட்டு பட்டியலை பார்த்தல் நமக்கு பேதியாகிவிடும்.தேர்தலில் நிற்கும் அத்தனை பேர்களின் வண்டவாளங்களும் இங்கே தொகுத்து வைகப்படுள்ளன. PAN card நம்பெர் முதல் வசிக்கும் முகவரி, படிப்பறிவு,அவர்களின் அசையும் சொத்து ,அசையா சொத்து மதிப்பு, கடன்கள். புருஷன் ,பொண்டாட்டி ,பிள்ளைகளின் சொத்து விபரங்கள. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் குற்றப்பின்னணி என சகலமும் இங்கு காட்சிக்கு உள்ளன. சொத்து விபரங்கள் ஒன்றும் உண்மையாய் இருக்காது நிறைய மறைக்கப்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.
இதெல்லாம் நம்ம வேட்பாளர்களின் தகுதிச்சான்றிதழ் 


 இவர்களின் குற்ற பின்னணி பற்றி அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.அவரவர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் மொத்த விபரங்களும் இங்குள்ளன. Criminal Information  என அவர்களின் யோக்கிதையை ஒரு மீட்டார் மூலம் காட்டியுள்ளனர். கொலை,கொள்ளை, வன்முறை, திருட்டு, கலகம் வரும்படி பேசுவதும் எழுதுவதும் ,பொது சொத்துகளை அழித்தல் என இவர்களின் மக்கள் நல பணிகளை பற்றி மறக்காமல் பாருங்கள்.

 குறிப்பாக ஒவ்வொருவரின் கல்வி தகுதி என்ன, குற்றப்பின்னணி என்ன என்பதையும் அறிந்துகொள்ளலாம்.மற்றவர்களுக்கும் அறிய செய்யுங்கள்.மேலும் விபரங்கள் அறிய இந்த இணைப்பில் செல்லுங்கள். கண்டு உள்ளம் மகிழுங்கள்!

24 comments:

விக்கி உலகம் சொன்னது…

முடியல தலைவரே!....... நான் நேத்துதான் ஒரு அல்லக்க்ய்ய அடிச்சதுக்காக மன்னிப்பு கேக்க வேண்டியதா போச்சி மன்னிக்குமா என் தாய் பூமி என்னை தெரியல!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்ன கக்கு ரெண்டு நாளா ஆளு ஃபுல் ஃபாம்'ல இருக்குற மாதிரி இருக்கு...

டக்கால்டி சொன்னது…

vanthen..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ம்ம்ம்ம் மக்கா அடிச்சி பட்டைய கிளப்புங்க...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// முடியல தலைவரே!....... நான் நேத்துதான் ஒரு அல்லக்க்ய்ய அடிச்சதுக்காக மன்னிப்பு கேக்க வேண்டியதா போச்சி மன்னிக்குமா என் தாய் பூமி என்னை தெரியல! //

------------------------விக்கி

நண்பர் விக்கி, நாம் இதுபோன்ற செய்திகளை பிறரிடம் விவாதிக்க வேண்டுவதே இல்லை. அது வீணான வாக்குவாதம் சண்டைகளை உண்டுபண்ணும் என்பதால். நான் மிக அபூர்வமாக இவைகளை பற்றி நெருக்கமான நேன்பரிடம் மட்டுமே பேசுவேன். வலையில் நாம் தருவது நம் நண்பர்கள் அறிந்துகொள்ளவே. இதில் உணர்ச்சி வசபடவேண்டாம்.எந்த எதிர்வினைகள் வந்தாலும் அமைதியாக இருக்கலாம்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

good introductions

கக்கு - மாணிக்கம் சொன்னது…

/// என்ன கக்கு ரெண்டு நாளா ஆளு ஃபுல் ஃபாம்'ல இருக்குற மாதிரி இருக்கு...//

------------------மனோ

தெரிஞ்சா சரி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//vanthen//
டக்கால்ட்டி

அது என்னைய்யா ஒரு வார்த்தையில் "வந்தேன்?"

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

அப்படி இருந்தும் இவங்க ரெண்டுபேர்ல ஒருத்தர் தாங்க முதல்வர்..
என்ன கொடுமை..

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// good introduction///


தாங்க்ஸ் ஓட்ட வட!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//அப்படி இருந்தும் இவங்க ரெண்டுபேர்ல ஒருத்தர் தாங்க முதல்வர்..
என்ன கொடுமை..//

// # கவிதை வீதி # சௌந்தர் சொன்னத.

அது நாம் கொண்டாடும் போலி ஜனநாயகத்தால் வந்து. மக்களுக்கும் விபரம் இல்லை. வேறு என்ன நிகழும்?

எஸ். கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

அரசியல் வியாதியாவதற்கு இதெல்லாம் தான் முக்கியத்தகுதிகள்! இதுகூடத்தெரியாதா?!

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

என்ன சொல்லறதுன்னே தெரியல..

பாரத்... பாரதி... சொன்னது…

சில பேர் ஊழல் அளவை காட்டச்சொன்னால் மீட்டரே சிதைந்து விடுமே?

பாரத்... பாரதி... சொன்னது…

ஆகா... அரசியல் வியாதிகளின் வண்டவாளம் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறதே...

அருள் சொன்னது…

"பயோடேட்டா - பா.ம.க ..." வெளியிட்டவர் கே.ஆர்.பி.செந்தில்

http://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_09.html

// //டிஸ்கி : பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?
// //

அருள் கூறியது...

// //பசுமைத் தாயகத்தை தொடங்கியவர் மருத்துவர் அய்யா அவர்கள்தான்.

அவர் இப்போது தைலாபுரத்தில்தான் இருக்கிறார்.// //

விந்தைமனிதன் கூறியது...

// //பசுமைத்தாயகம் அமைப்பைத் தொடங்கியவர்கள் இரண்டு இளைஞர்கள். பெயர் அருள் & சீனிவாசன் என்று நினைக்கிறேன். அந்த அமைப்பின் துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார். இன்னும் துல்லியமான தகவல்களைத் தேடித்தந்தால் நீங்கள் விவாதத்துக்குத் தயாரா?// //

அருள் கூறியது...

// //தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.

மருத்துவர் அய்யா பல்வேறு அமைப்புகளை தொடங்கியுள்ளார்கள். பொங்குதமிழ் அறக்கட்டளை, தமிழ் ஓசை, மக்கள் தொலைக்காட்சி, சமூகநீதிப் பேரவை, சமூக முன்னேற்ற சங்கம் என்று மிக நீளமானது அந்த பட்டியல்.

அவ்வாறு, அவர் 1995 ஆம் ஆண்டு தொடங்கிய மற்றுமொரு அமைப்புதான் பசுமைத் தாயகம்.

நீங்கள் குறிப்பிடும் இரண்டு பேர் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன். அவர்கள் இரண்டு பேரும் கடந்த இருபது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலக் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் (இன்றைக்கும் அவர்கள் குடும்பத்தோடு ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்). மருத்துவர் அய்யா அவர்கள் பசுமைத் தாயகம் அமைப்பை தொடங்கிய போது அவர்கள் இருவரையும் அந்த அமைப்பின் பொருப்பாளர்களாக மருத்துவர் அய்யா நியமித்தார்.

அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இந்தியாவில் இருக்க இயலாத காரணத்தால் பின்னர் அருள் என்பவர் பொருப்பாளராக ஆனார். பசுமைத் தாயகத்தை ஒரு முன்னிலை அமைப்பாக மாற்ற வேண்டி மருத்துவர் அன்புமணி இராமதாசு அதன் தலைவர் ஆனார். இதுதான் பசுமைத் தாயகத்தின் வரலாறு.

தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.// //

விந்தைமனிதன் சொன்னது…

// //முழுத்தகவல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நிச்சயம் மீண்டும் வருகிறேன். நிச்சயம் இந்த விவாத்தை நாம் தொடர்ந்தாக வேண்டும். விவாதத்தில் வெல்ல அல்ல, இதன்மூலம் தவறான பிம்பங்களை (என் பக்கம் இருப்பினும், உங்கள் பக்கம் இருப்பினும்) தெளிவுபடுத்த...// //

உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவை எனில் என்னிடமும் கேட்கலாம்.

1995 ஆம் ஆண்டு பசுமைத் தாயகம் தொடங்கப்பட்ட புதிதில், கல்பாக்கத்தில் அணு எதிர்ப்பு கருத்தரங்கம், கடலூரில் தொழிற்சாலை மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கம், ஆற்காட்டில் தோல்தொழில் மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.

அதனையொட்டி, 1996 இல் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி தொடங்கி வாலாஜா வரை"பாலாற்றைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும், மேட்டுப்பாளையம் தொடங்கி பவானி வரை "பவானி நதியைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும் நடத்தப்பட்டது. அதேபோன்று கடலூரில் உயிர்காக்கும் பேரணியும் நடத்தப்பட்டது.

நீங்கள் குறிப்பிடும் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன் இரண்டு பேரும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில், பசுமைத் தாயகத்தின் பொருப்பாளர்கள் என்ற முறையில் பங்கேற்றனர். மருத்துவர் அய்யா தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தன.

நடைமுறையில் இந்த நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் செலவுகளை ஏற்றவர்கள் - அந்தந்த மாவட்ட பா.ம.க'வினர்தான்.

இதில் நிங்கள் குறீப்பிடுவது போல "துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார்" எனும் கோயபல்ஸ் பிரச்சாரம் எங்கிருந்து வந்தது?

"பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?" என்று கே.ஆர்.பி. செந்தில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை அவிழ்த்து விடுவது ஏன்?

பா.ம.க'வுக்கு எதிராக கட்டுக்கதைகள் கட்டப்படுவதற்கு பின்னணி 'ஆதிக்க சாதிவெறி' தவிர வேறெதுவும் இல்லை.

மற்றபடி, பா.ம.க குறித்த அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்க நான் தயார்.

சென்னை பித்தன் சொன்னது…

குற்றப் பின்னணி இல்லாத வேட்பாளர்களே இல்லையோ?

RVS சொன்னது…

தல... உங்களுக்கு எப்படி இதுமாதிரி எல்லாம் கிடைக்குது?

! சிவகுமார் ! சொன்னது…

/குறிப்பாக ஒவ்வொருவரின் கல்வி தகுதி என்ன//

கல்வி?????????????

மாணிக்கம்....கெட்ட வார்த்தைகளை தவிர்க்கவும். ஹே..ஹே..

சாமக்கோடங்கி சொன்னது…

கக்கு... உண்மையிலேயே ரொம்பவும் உபயோகமான தகவல்.. நன்றி..

adiraithunder சொன்னது…

adiraithunder.blogspot.com

ஆனந்தி.. சொன்னது…

அண்ணா...செம வெப்சைட் ..அந்த லிங்க் போயி பார்த்தேன்...எங்க ஏரியா வில் முக்கியமான வேட்பாளர்கள் அதில் அப்டேட் பண்ண படலை...:(( இருந்தாலும்...இப்போ குறிவச்சு நகர்த்துறது அடித்தட்டு மக்கள் தானே ....அவங்களுக்கு படிப்பை பற்றியும்,குற்ற பதிவேட்டை பற்றியும் என்ன கவலை...கவர் காசு பற்றியும்...இலவசங்கள் சரியா வந்து சேருமாங்கிறது தானே...இதுல என்ன கொடுமைனால் பல கிராமங்களில் உள்ள படிக்காத மக்கள் தேர்தல் கமிஷன் மேலே கடும்கோவத்தில் இருக்காங்களாம்:))...கட்சி காரங்க கொடுக்கிற காசை இவங்க கொடுக்க விடாமல் கெடுக்கிராங்கனு....அண்ணா ...ஏமாத்துறவனை விட ஏமாறுபவன் தான் குற்றவாளி...நாம் மீண்டும் குற்றவாளியாவோம்...:))))))

ரஹீம் கஸாலி சொன்னது…

present

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்படிப்போடுங்க!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக