வெண்ணிற ஆடை திரைப்படம் வெளிவந்த போது (1965) நான் ஒன்பது வயது அரைகால் டவுசர் சிறுவன்.வீட்டில் இருக்கும் ரேடியோவில் மாலை நேரங்களில் புதிதாய் வெளிவந்த தமிழ் படங்களின் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கம். சத்தியமாக திருச்சியோ,சென்னை வானொலியோ அல்ல. இலங்கை வானொலியில் தான். "இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபன வர்த்தக சேவை " என ஒரு முழ நீளத்திற்கு அறிவிப்பாளர் மயில் வாகணன் அறிவிப்பார். படங்கள் அப்போது அதிகம் பார்க்காவிடினும் என்ன படத்தில் என்ன என்ன பாடல்கள் என்று அத்துப்படியாகிவிடும் அனைவருக்கும். சகல திரைபடங்களும், அவைகளின் பாடல்களும், நடிகர்களும்,இசை அமைப்பாளர் மற்றும் இயக்குனர்கள் என்று .அப்போதெல்லாம் நிறைய தமிழ் திரை நட்சத்திரங்கள் இலங்கையில் நிகழ்சிகளுக்காக செல்வார்கள்.அவர்கள் போகும் விபரங்கள் ஒன்றும் நமக்குத்தெரியாது.ஆனால் இலங்கை வானொலியில் அவர்களின் பேட்டி நிச்சயம் இடம் பெரும் அப்போதுதான் நமக்கே தெரியவரும். பின்னாளில் எண்பதுகளில் வேலைக்காக சென்னை வந்து விட்ட பின்புதான் வெண்ணிற ஆடை படத்தை தி.நகர் கிருஷ்ண வேணியில் இதே ஏப்ரல் மாதத்தில்தான் வேர்க்க விருவிருக்க மேட்னி ஷோ பார்த்தோம் நானும் கும்பகோணதிலிருந்து என்னை பார்க்க வந்த என் நண்பனும். அவன் அந்நாளில், ஏன் இப்போதும் கூட ஒரு அ.இ.அ. தி.மு.க. காரன். என்னிடம் நிறைய அவ்வப்போது வாங்கிக்கட்டிக்கொள்வான். ஆனால் சினிமா பார்ப்பது என்றால் எங்களிடம் மிகுந்த ஒற்றுமை வந்துவிடும்.இந்த படத்தை பின்னாளில் பல முறை கண்டு ரசித்ததாக கூறியுள்ளான். இந்த படத்தினை அநேகம் தடவை, நூறு முறைக்கு மேல் பார்த்து பார்த்து ஜெயலிதாவின் அழகில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஒரு இளைஞர் பின்னானில் மனநிலையே பாதிக்கப்பட்டார் என்ற செய்தியும் அப்போது நிலவியது. ஏன், ஜெயலலிதாவே இதனை ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.
ஜெயலிதா, நிர்மலா,ஸ்ரீ காந்த், மூர்த்தி என அனைவரும் அறிமுகம் ஆகியபடம். நான் என்றும் கேட்க ஆசைபடும் பாடல்கள். இரட்டை ஜடை, பாவாடை தாவணியில் நிர்மலாவின் பாடல் அபிநயங்களும் அதற்கு மாற்றாக ஸ்ரீ காந்தின் நடிப்பும் பின்னாளில் பார்த்து பார்த்து நக்கலடித்து ரசிதுள்ளோம்.படம் ஓடும்போது தியேட்டரிலும் இதே கதிதான். நாம் சும்மா இருந்தாலும் மற்றவர்கள் அப்படி இருப்பார்களா என்ன? வெண்ணிற ஆடை ஒரு Block Buster. சென்சாரில் இந்தப்படத்துக்கு கிடைத்ததோ "A" சர்டிபிகேட் ! அந்த நாளில் தமிழ் படங்களுக்கு தணிகை துறையினர் "A" சர்டிபிகேட் கொடுத்துவிட்டால் தயாரிப்பாளர்கள் அதிர்ந்துவிடுவார்கள். படம் ஊற்றிகொள்ளுமோ என்ற பயம் அவர்களுக்கு. இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர் எவ்வளவோ முயன்றும் அதனை மாற்றி " U "சர்டிபிகேட் பெற முடியவில்லை. அது அந்த காலத்தின் நிலைமை. இப்போது கதையே வேறு.
பரத நாட்டியம் முறைப்படி கற்றுக்கொண்டதாலோ என்னவோ நடன அசைவுகளும் கொஞ்சம் நடிப்பும் ஜெயலலிதா, நிர்மலா இவர்களிடம் நன்றாகவே இருக்கும்.
இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராம மூர்த்தி உச்சத்தில் இருந்த காலம் அது.பாடல்களாக தனித்து கேட்டு மகிழ்வது ஒருபுறம் என்றாலும் இவைகளின்திரைக்காட்சிகளையும் என்றும் கண்டு ரசிக்கவைக்கும். ரசியுங்கள்!
என்ன என்ன வார்த்தைகளோ .........
ஒருவன் காதலன்..... repeat mode இல் நான் கேட்டுகொண்டே இருக்கும் பாடல் இது.
சித்திரமே சொல்லடி......
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல.....
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப்பாடும் ..............
நீராடும் கண்கள் இங்கே ............ இந்த பாடல்களின் வீடியோ கிடைக்கவில்லை.
36 comments:
இப்படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியின் நகைச்சுவை பெரிதாக என்னை ஈர்க்கவில்லை. அந்த காலத்தில் அது எடுபட்டதா???
அந்த நாளில் தமிழ் படங்களுக்கு தணிகை துறையினர் "A" சர்டிபிகேட் கொடுத்துவிட்டால் தயாரிப்பாளர்கள் அதிர்ந்துவிடுவார்கள். படம் ஊற்றிகொள்ளுமோ என்ற பயம் அவர்களுக்கு. இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர் எவ்வளவோ முயன்றும் அதனை மாற்றி " U "சர்டிபிகேட் பெற முடியவில்லை. அது அந்த காலத்தின் நிலைமை
.......ஆச்சர்யமாக இருக்குது..... எப்படி இருந்த சினிமா உலகம்....இப்படி மாறிடுச்சு!
ஃபிளாஸ்பேக் பதிவு ஓக்கே.. ஆனா உங்கலைப்பாத்தா அந்த அளவு வயசான மாதிரி தெரில.. ஹி ஹி
எவரையுமே கவர்ந்து இழுக்கும் உடை... பாவாடை... தாவணி....
பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமோ... இது... மேலாடை...... ;-))))
பாட்டுக்கள் அருமை கோர்த்தவண்ணம் இளமை ஹிஹி!
நல்ல இனிமையான பாடல்கள்.
இனிமையான பாடல்கள். சித்திரமே சொல்லடி மிகவும் பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி கக்குஜி!
அருமையான பாடல்களை நினைவுப் படுத்தியதற்கு நன்றிகள்,...
பாடல்கள் அருமை
அருமையான மலரும் நினைவுகள்.
//இப்படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியின் நகைச்சுவை பெரிதாக என்னை ஈர்க்கவில்லை. அந்த காலத்தில் அது எடுபட்டதா???///
சிவகுமார் ! சொன்னது…
இல்லை சிவகுமார். இந்தபடத்திற்கு முன்னரே காதலிக்க நேரமில்லை வெளிவந்து சக்கை போடு போட்டது. ஆனால் வெண்ணிற ஆடையில் நகைச்சுவை காட்சிகள் பிரபலம் ஆகவில்லை. மகா திராவயாக இருக்கும். நிறைய புதுமுகங்கள், இனிமையான பாடல்கள், வேறுபட்ட திரைக்கதை, கலரில் வந்த படம், இவைகளுக்காக கொண்டாடப்பட்டது.
Sorry! No comments!!! I don't like Cinema and particularly JAYAA & MGR.
..///.....ஆச்சர்யமாக இருக்குது..... எப்படி இருந்த சினிமா உலகம்....இப்படி மாறிடுச்சு! ///
Chitra.
சினிமா மட்டுமா மாறியது? சகலமும்தானே !
வருகைக்கு நன்றி சித்ரா
A beginner of FREEBIE's- MGR- PALAKKAADU Maruthoor Gopalakrishna Pillai.
(Tooth powder, chappels,Rice Rs 2/ kg and Improvised the KAMARAAJAR's Mid day meal scheme(Sathunavu)., thats all.)
//ஃபிளாஸ்பேக் பதிவு ஓக்கே.. ஆனா உங்கலைப்பாத்தா அந்த அளவு வயசான மாதிரி தெரில.. ஹி ஹி//
சி.பி.செந்தில்குமார் சொன்னது
வயசாவது உடம்புக்குத்தானே அன்றி மனதுக்கு இல்லை என நினைப்பவன் நான் சி.பி.
மனதில் எதற்கும் பொறாமை கொள்வதில்லை, எந்த விஷயத்திலும் எனக்கு இயல்பாக அமைந்துவிட்ட ஒரு கட்டுப்பாடு. அதிக உணவும், அதிக தூக்கமும்,சோம்பலும், உழைபின்மையும் ,பேராசையும்,மனதில் தீய எண்ணங்களும் நிச்சயம் நம்மை பாதிக்கும்.பகைவர் என்று யாரையும் எண்ணியதில்லை. இதுதான் எனக்கு தெரிந்தவரை காரணங்கள்.
// எவரையுமே கவர்ந்து இழுக்கும் உடை... பாவாடை... தாவணி...//
R V S சொன்னது
மைனர் மட்டும் என்ன சும்மாவா? விட்டால் ஒரு கவிதையே எழுதி விடுவீர்களைய்யா!
//பாட்டுக்கள் அருமை கோர்த்தவண்ணம் இளமை ஹிஹி!//
விக்கி உலகம் சொன்னது…
வருகைக்கு நன்றி விக்கி. எல்லாம் உங்களுக்காகத்தானே !
//நல்ல இனிமையான பாடல்கள்.//
அமைதிச்சாரல் சொன்னது…
வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்
//இனிமையான பாடல்கள். சித்திரமே சொல்லடி மிகவும் பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி கக்குஜி!//
வெங்கட் நாகராஜ் சொன்னது…
எனக்கு இந்த படத்தில் நிறைய பாடல்கள் பிடிக்கும் ஆனால் அதன் வீடியோ கிடைக்கவில்லை
நன்றி வெங்கட் நாகராஜ்
//அருமையான பாடல்களை நினைவுப் படுத்தியதற்கு நன்றிகள்,...//
!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
வருகைக்கு நன்றி அன்பரே
//பாடல்கள் அருமை//
சசிகுமார் சொன்னது…
நன்றி சசி.
// அருமையான மலரும் நினைவுகள்.//
இராஜராஜேஸ்வரி சொன்னது…
என்னை மாதிரியே இணையான ரசனையுள்ளவர்கள் இங்கு நிற பேர் இருக்கிறார்கள்
தங்களின் வருகைக்கு நன்றி
//Sorry! No comments!!! I don't like Cinema and particularly JAYAA & MGR.///
Sai Gokul - வேலைவாய்ப்பு தகவல்கள் சொன்னது…
சினிமாவை பொழுதுபோக்காக பார்த்து ரசிக்கலாம் Sai Gokul. அதுவும் மனம் மகிழ்விக்க வந்த கலையின் ஒரு அமைப்பே.
ஆனால் அதற்கு மேல் என்னாலும் சினிமாவை கொண்டாட இயலாது.
கருணாநிதி, என்.ஜி.ஆர். ஜெயலலிதா , விஜகாந்த், குஷ்பூ,சரத்குமார், கார்த்திக்,விஜய் என இவர்களின் இந்த வரவு இன்னமும் ஒரு சாபமாகவே உள்ளது தமிழ் நாட்டில்.சினிமா கார்கள் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பவன் நான்.
இளமையான இனிய ரசனை மக்கா...
எத்தனை தலைமுறை வந்தாலும் தெவிட்டாத பாடல்கள்...
ஏன் இந்த படத்திற்கு A சான்று கொடுத்தார்கள்?
//எத்தனை தலைமுறை வந்தாலும் தெவிட்டாத பாடல்கள்...//
-------------நாஞ்சில் மனோ
நன்றி மனோ.
//ஏன் இந்த படத்திற்கு A சான்று கொடுத்தார்கள்?//
-----Rajan சொன்னது…
அவர்களுக்கே தெரியாது. நான் இப்படத்தை முதன் முதலில் பார்த்தது 1980 களில்தான். அப்போதே எனக்கு இந்த ஐயம் இருந்தது. மிகவும் டீசன்ட்டான ஒரு படம்தான். ஒரு வேலை அந்த நாளைய கட்டுப்பெட்டி சென்சார் உறுப்பினர்களுக்கு இந்த கதையை ஏற்றுகொள்ள இயலவில்லையோ என்னவோ? கல்யாணம் ஆகிய அதே நாளில் புது மாப்பிளை விபத்தில் இறந்துவிட, பெண் மன நிலை பேதலித்து பைதியமாகிபோகிறாள். அவளை குணப்படுத்த வரும் டாக்டரிடம் பின்னர் தன் மனம் பறிகொடுத்து, அவனையும் திருமணம் செய்துகொள்ளும் சூழல் இல்லாமல் போகவே வெண்ணிற உடை உடுத்தி மீண்டும் விதவையாகி நிற்பாள்.
என்னத்திற்கு கொடுத்தார்கள் என்று எனக்கும் தெரியவில்லை.
அருமையான தொகுப்பு!!
//அருமையான தொகுப்பு!!//
S.Menaga சொன்னது…
என்ன நீண்ட நாட்களாக காணோம் மேனகா?
வருகைக்கு நன்றிம்மா
அருமையான தொகுப்பு..கலக்கலா இருக்கு பாஸ்
///அருமையான தொகுப்பு..கலக்கலா இருக்கு பாஸ்///
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
மம்மிய பத்தி நல்ல மாதிரி எழுதினா மம்மி புள்ளைக்கு புடிக்காம போகுமா!? :))
நிங்காத நினைவுகள்...
வாழ்த்துக்கள்..
//கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்///
பாட்டு ரசிகன் சொன்னது…
பெயரே சொல்லுதே நீங்கள் மகா ரசிகர் என்று.
சின்னதாக ஒரு கவிதை வேறு.
வருகைக்கு நன்றி ரசிகரே! :)))
பழைய பாடல்களில் இந்த படப் பாடல்கள் மிகவும் பாப்புலர், குறிப்பாக "அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப்பாடும் நீராடும் கண்கள்" பாடல் மிகவும் அருமையாக இருக்கும். தேடி கண்டுபிடித்து போடவும். பகிர்வுக்கு நன்றி அண்ணே!!
அண்ணே...இல்லை அய்யா ரொம்ப பழைய ஆளு போல...
கருத்துரையிடுக