பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், மார்ச் 17

வயிற்றில் நெருப்பு !


மூன்று முகங்கள் - பகுதி 3


கதிரியக்க பண்புகள் உள்ள தனிமங்கள் நிறைய, பெரிய அட்டவணையே உள்ளன. 
Hydrogen (H)
Beryllium (Be)
Carbon (C)
Iron (Fe)
Cobalt (Co)
Nickel(Ni)
Lead (Pb)
Bismuth (Bi)
Radium (Ra)
Thorium (Th)
Uranium (U)
Plutonium (Pu)
Curium (Cm)

சிலவற்றை மட்டுமே உதாரங்களாக இங்கே காட்டியுள்ளேன். 


அணு உலைகளில் இந்த தனிமங்களின் யுரேனியம் அல்லது ப்ளுட்டோனியம் பயன்படுகிறது. அணு உலை என்பது இந்த வேதியியல் வினைகள் நடக்கும் இடமாகும். தனிமம் வேதிவினைக்கு தூண்டப்பட்டவுடன் அணுச்சிதைவும் அதன்காரணமாக அளவற்ற வெப்ப ஆற்றலும் உண்டாகிறது. இந்த வெப்ப ஆற்றல் கொண்டு தண்ணீரை நீராவியாக மாற்றி, அதன் ஆற்றலால் டர்பைன்கள் சுழல அதனுடன் இணைந்துள்ள ஆர்மெசூர் அமைப்புக்கள் மின்சக்தியை வெளியே விடுகின்றன. இந்த நவீன வகை அணுஉலைகளில் இயற்கை எரிவாயுக்கள் பயன்படாததால் இம்முறையில் கார்பன் -டை -ஆக்சைடு போன்ற சுற்று சூழலை தாக்கி கேடு விளைவிக்கும் காரணிகள் இல்லை.


1. எரிபொருள்:
பெரும்பாலும் யுரேனியம் ஆக்சைட் UO2 பயன்படுகிறது.  இந்த வேதிப்பொருள் சீரான நீள்வடிவ உருளைகளாக தயார் செய்யப்பட்டு உலையினுள் பொருத்தப்படுகிறது.

2 .மாடரேட்டர் :
இதற்க்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.
மாடரேட்டர் என்பது அணு உலையில் நியுற்றாங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் ஒரு செயல்பாடு. பெரும்பாலும் தண்ணீர், மேலும் கன நீர் (Heavy water)  அல்லது கிராபைட் எனப்படும் கரி போன்றவைகள் சில நேரங்களில் பயன் படுகின்றன.இது குளிர்விக்கும் சாதனமாகவும் செயல் படுகிறது.

கட்டுபடுத்தும் பகுதி:
இங்கு கண்ட்ரோல் ராட்ஸ் (control rods) இவைகள் பெரும்பாலும் நியுட்ரான்களை உறிஞ்சிக்கொள்ளும் பொருட்களால் ஆனவை. காட்மியம்,ஹாப்நிமம், அல்லது போறான் போன்ற தனிமங்களால் ஆனா உருளைகள் ஒவ்வொரு எரிபொருள் யுரேனியம் ஆக்சைட் உருளைகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளன.இந்த கண்ட்ரோல் ராட்ஸ் அமைப்பை மேலும் அல்லது கீழேயும் செல்லுமாறு கீழும் இயங்க வைத்து உலையில் வேதி வினைகளை வேகத்தை கட்டுப்படுத்துவார்கள். அதாவது வினையின் வேகத்தை குறைக்கவும் அல்லது அதிகப்படுத்தவும் இவைகள் உதவுகின்றன.

உலையின் உள்ளே வரும் நீர் அங்கு கிடைக்கும் அபரிமிதமான வெப்பத்தால் நீராவியாக மாறி மிக அதிக அழுத்தத்துடன் வெளியேறி ஸ்டீம் ஜெனரேட்டர் பகுதிக்கு செல்லும், அங்கிருந்து பின்னர் தகுந்த அமைப்புக்கள் அமைப்புக்கள் மூலம் டர்பைனுக்கு சென்று அந்த நீராவியின் விசையால் டர்பைன் சுழல மிசக்தி உற்பத்தியாகிறது. டர்பைன் பகுதியில் வெளியேறும் நீராவியும், நீரும் மீண்டும் குளிர்விக்கப்பட்டு பம்புகள் மூலமாக மீண்டும் அணு உலையினை அடைகிறது. நீராவியின் அழுத்தங்களை சமன் செய்யவும் உரிய அமைப்புகளும் உள்ளன.

இதை நாம் படிக்கும் பொது...fffoooo............. இவ்வளவு தானா ? என்று நினைக்கதோன்றும் ஆனால் இங்கு பயன்படும் தொழில் நுட்பம் மிக மிக நுணுக்கமானது. அணு ஆற்றல் வெளிவரும் அணு உலையின் சுற்றுசுவர்கள் 1 மீட்டர் அகலத்துக்கு தடிமனானது.
சாதாரணமாக செராமைக் யுரேனியம் ஆக்சைட் எரிபொருளாக பயன் படுகிறது.
(ceramic uranium oxide (UO2 with a melting point of 2800°C) இந்த எரிபொருள்கள் சுமார் 1 cm விட்டமும் 1.5 cm நீளமும் கொண்ட பென்சில்கள் என்பது வியப்பளிக்கும்.
உற்பத்தியாகும் மின்சக்தியின் அளவிற்கு ஏற்ப இந்த எரிபொருள் அமைப்புக்கள் பல தொகுப்புகளாக கூட இருக்கும்.

சரி, ஒரு அணு உலையில் என்ன ஆற்றல் மாற்றம் நடக்கிறது அதன் விளைவாக மின் சக்தி எவ்வாறு பெறப்படுகிறது என்பதை ஓரளவு புரிந்துகொண்டோம்.இனி ஜப்பானில் புகுஷிமா டாய்ச்சி அணு உலைகளில் என்ன நிகழ்ந்தது ? 
வழக்கமாக நில அதிர்வுகள் தோன்றும் அந்நாட்டில் அணு உலைகள் அதற்க்கு தகுந்த அமைப்புகளிதான் அமைகபட்டுள்ளன.ஆனால் தொடர் பூகம்பம்,அதன் மேல் சுனாமி அலைகளின் சீற்றம் காரணமாக மின்சாரம் தடைபட்டது. மேலே நாம் பார்த்த அணு உலையில் எரிபொருளை சுற்றியுள்ள தண்ணீர் ஆவியானதால் அதன் நீர் மட்டம் குறைந்து எரிபொருள் உருளைகள் நீரால் சூழாமல் போனது. இந்த நீரற்ற பகுதிகள் அங்குள்ள மிக அதிக வெப்ப நிலையில் உருக்கு ஆரம்பித்தன. இங்கு செய்யப்பட்டுள்ள அணைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை அமைப்புகள் அனைத்தும் சுனாமியின் சீற்றத்தால் பாழாய் போய்விட்டன.ஒன்றுக்கு பதில் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புக்கள் இருந்தும் அவை ஒவ்வொன்றும் செயல் இழந்து போனது.
அதன் விளைவுகளையே இன்று உலகம் முழுதும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க ஜப்பானும் கதிர் வீச்சு அழிவுகளில் இருந்த காப்பாற்ற போராட ஆரம்பித்துள்ளது. இந்த கதிர்வீச்சு என்ன விளைவிகளை மனித குலத்துக்கும் தாவரம் ,விலங்குகளுக்கு கொண்டுவரும்? 

12 comments:

THOPPITHOPPI சொன்னது…

தகவல் அருமை நன்றி

FOOD சொன்னது…

நல்ல நல்ல விஷயங்கள். நல்ல பகிர்விற்கு நன்றி, நண்பரே.

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோதரம், ஜப்பானின் கதிர் அணு உலையில் ஏற்பட்ட வெடிப்புடன் கூடிய விடயங்களை வீடியோ பதிவுடன் தந்துள்ளீர்கள். நன்றிகள். கடந்த வெள்ளி முதல் இன்று வரை ஜப்பானில் 160 இற்கும் மேற்பட்ட சிறு சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளனவாம்.

இனி கதிர் வீச்சின் விளைவுகளையும் பகிர்ந்து கொண்டால், எமக்கும் அறிவியல் பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

சென்னை பித்தன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.தொடருங்கள்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அண்ணன் எம் எஸ் சி பிசிக்ஸ் போல.. எஸ்கேப்

jayakumar சொன்னது…

good information...pls tell us the impact of radiation also...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

புரிந்து கொள்ளுமாறு எளிமையாக விளக்கியதற்குப் பாராட்டுக்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

இப்பத்தான் ஜப்பான் கதிரியக்கம் பற்றிய சந்தேகத்துக்குப் பின்னூட்டம் போட்டேன்.அதற்குள் புது இடுகையா?

எப்படியோ சந்தேகம் விளக்கவும்.

ராஜ நடராஜன் சொன்னது…

திகிலோட முடிச்சிட்டீங்களே!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

கலக்கலா இருக்கு தொடருங்கள்

எல் கே சொன்னது…

எளியமுறையில் சொல்றீங்க தொடருங்கள்

எஸ்.கே சொன்னது…

simply superb!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக