பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், மார்ச் 17

கரணம் தப்பினால் மரணம்!

மூன்று முகங்கள் - பகுதி 2
சென்ற பதிவு மூன்று முகங்களின் தொடர்ச்சியாக:

கதிரியக்கம் / கதிர்வீச்சு என்றால் என்ன?
மிக சுலபமான ஒன்று. 
சூரியனில் என்ன நிகழ்கிறது? 
அதுதான் கதிரியக்கம். வேறு அதிகம் வேண்டாமே!சூரியனிடமிருந்து நாம் பெரும் ஒளி மற்றும் வெப்பம் இவைகள்தான் கதிர் வீச்சு என்ற ஒரு இயற்கை செயல்பாட்டின் மூலம் நமக்கு கிடைப்பன. இதோடு அல்லாமல் அலை நீளம்அதிகமான அகச்சிவப்பு  கதிர்கள் மற்றும் அலைநீளம் குறைந்த புற ஊதா கதிர்கள் என நிறைய சூரிய ஒளியில் உள்ளன. சூரியனில் தொடர்ந்து நிகழும் ஹைட்ரஜன் அணுக்களின் சேர்கையால் அது ஹீலியம் என்ற வாயுவாக மாறுகிறது. இந்த அணுசேர்க்கையின் விளைவால் உண்டாகும் வெப்பமும் ஒளியும் இன்னும் பிற கதிர்வீசுக்களும் பூமியை அடைகின்றன.உண்மையில் நாள் தோறும் இங்கு வாழும் எல்லா உயிர்களும் சூரியனின் ஒளியில் கிடைக்கும் இந்த கதிர்வீச்சில் வாழுகின்றன. இவைகள் மிக மிதமான, உயிர்களை பாதிக்காத அளவில்தான் இயற்கையாக உள்ளன.நாம் வாழும் பூமி, சுவாசிக்கும் காற்றில் கூட இந்த இயற்கையான கதிர்வீச்சின் அளவினை கண்டுள்ளனர். ஆனால் இவைகளால் உயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. 
மருத்துவத்துறையில் இன்று அதிக அளவு செயற்கையாக கதிர்வீச்சினை உண்டாகி அதனை நம் உடலில் பயன்படுத்தும் சோதன முறைகள் எல்லாம் கூட இந்த மிக குறைந்த அளவான கதிவீச்சு முறையில் செயல்படுவது யாவரும் அறிந்ததே.கதிர் வீச்சில், அயனியாதல் கதிர் வீச்சு - ionizing radiation என்ற ஒன்றுதான் நாம் இங்கு காணபோகும் செய்தியாகும்.

இயற்கையில் சில தனிமங்களில்  இந்த கதிரியக்கம் என்ற பண்புகள் உள்ளன. அவைகள் கதிர்வீச்சினை செய்துகொண்டே உள்ளன. இதற்க்கு காரணமாக அமைவது அந்த தனிமத்தின் அணுக்களின் அமைப்பே. பெரும்பாலும் எல்லா தனிமங்களின் அணுக்களின் அமைப்பு நிலையானதாகவே இருக்கிறது.சில தனிமங்களின் அணுக்களில் நியுற்றான்களின் எண்ணிக்கை மாறு படுகின்றது. இந்த மாறு பட்ட நியுற்றான்கள் தங்களிடமுள்ள ஆற்றலை வெளியிட்டு நிலையான அமைப்பை பெரும் முயற்சியில் இருக்கும். ஒரே தனிமத்தின் மாற்பட்ட இந்த நியுற்றான்களின் வேறுபாடே ஐசொடோப்ஸ் எனப்படும்.இவ்வகை தனிமங்கள் கதிரியக்கம் பெற்ற தனிமங்களாகும்.

உதாரணம்: 

ஹைட்ரஜன் அணுவில் ஒரு எலெக்ட்ரான்,அதன் உட்கருவில்  ஒரு புரோட்டான்  இருக்கும். இது நிலையானது. H2

டியுற்றான் எனப்படும் ஹைட்ரஜனின் ஐசொடோப்பில் ஒரு எலெக்ட்ரான்,அதன் உட்கருவில் ஒரு புரோட்டான் மற்றும் ஒரு நியுட்ரான் என இருக்கும். H3

இவைகள் தங்கள் பண்புகளிலும் மாறுபடும்.இதுபோல இயற்கையான கதிரியக்க தனிமங்கள் நம் பூமியில் மிக அதிகம் உள்ளன. இவ்வாறு மாறு பட்ட அமைப்பைக்கொண்ட ஐசோடோப் தனிமங்கள் அயனியாதல் கதிர் வீச்சு முறையில் ஆற்றலை வெளியிட்டு இயல்பான நிலைக்கு வருகின்றன. இந்த கதிர்வீச்சில் வெளியாகும் மினேற்றம் கொண்ட அயனிகள் வெளியேறும்.இந்த அயனிகள் தாங்கள் தாக்கும் எந்த ஒரு பொருளையும் மேலும் அயனிகளாக மாற்றிவிடும். இந்த நிகழு சங்கிலித்தொடராக (Chain reaction) தொடர்ந்து நிகழ்ந்து மேலும் பரவும். 

கதிரியக்க தனிமங்களில் உங்கள் அணைவரும் அறிந்த ஒன்று யுரேனியம். யுரேனியத்தில் மாறுபட்ட நியுற்றான்கள் கொண்டசம எண்ணிக்கை எலெக்ட்ரான்கள், சம எண்ணிக்கை புரோட்டான்கள் அதாவது ஐசொடோபுகள் உள்ளன.

(என்ன ? ரொம்ப தலை வலிக்கிற மேரிக்கி இருக்கா?? சூடா ஒரு கப் பில்டர் காப்பி அடிச்சிட்டு தொடருங்க!
O.K. கொஞ்சம் சப்ஜக்ட் மாத்துவோம்!

யுரேனியம்:மிகவும் நிறையை (எடை) உடைய ஒரு உலோகம். நீரை விட 17.8 மடங்கு அதிக அடர்த்தி உள்ளது.பூமியின் திடமான பகுதிகளில்  காணப்படுவது.இதனிடம் உள்ள ஒரு வினோத குணம் என்னவென்றால் ஒரு யுரேனியம் அணுவை பிளந்தாலோ அல்லது இரண்டு யுரேனியம் அணுக்களை இணைத்தாலோ எக்கச்சக்கமான வெப்ப ஆற்றல் வெளிப்படும். இதுதான் சகல துன்பத்திற்கும் காரணமாய் போய்விட்டது!

அகோர ஆற்றல் வேண்டி திரியும்  பசி ,வேட்கை உள்ள மனிதகுலத்துக்கு இது போதாதா? 
20 டன் எடையுள்ள நிலக்கரியை எரித்தால் எவ்வளவு வெப்ப ஆற்றல் கிடைக்குமோ அதே அளவு வெப்ப ஆற்றலை 1 கிலோ எடையுள்ள யுரேனியத்தின் மூலம் பெறலாம் என விஞ்ஞானிகள் காட்டிக்கொடுத்தார்கள். வந்தது வம்பு!

யுரேனியம் அறியப்பட்டது 1789 ஆம் ஆண்டு ஜெர்மன் வேதியியல் நிபுணர் Martin Klaproth, பிட்ச் பிளன்ட் என்ற தாதுவில் இருந்துஇது பிரிதெடுகப்பட்டது.யுரேனஸ் என்ற அப்போது புதிதாக அறியப்பட்ட கோளின் பெயரே இந்த புது உலோகத்துக்கு சூட்டப்பட்டது.காரீயம் (LEAD) போன்ற நிறமும் தோற்றமும் கொண்டது.

இன்றும் கூட பூமியின் உட்புற மையத்தில் இருக்கும் அளவற்ற வெப்ப நிலைக்கு இந்த யுரேனிய கதிரியக்கமே காரணமாக சொல்லப்படுகிறது. மேற்பரப்பில் கண்டங்கள் நகர்வதற்கும் இந்த பூமியின் மையத்தில் உள்ள அளவற்ற வெப்பமும் காரணம் என்று கருதப்படுகிறது.  

யுரேனியம்238 (U 238) மற்றும் இதன் ஐசொடோப்ஸ் யுரேனியம் 235 (U 235)

யுரேனியம் 235 ஒரு வேகமான நியுற்றானால் தாக்கப்படும்போது அது பிளகப்படுகிறது.அப்போது அளவற்ற வெப்ப ஆற்றல் வெளிப்படுகிறது.மேலும் இரண்டு நியுற்றான்கள் வெளியே வீசப்பட்டு அவையும் பிற யுரேனியம் 235  தாக்க, அதுவும் பிளக்கப்பட்டு மேலும் வெப்ப ஆற்றல் வெளியேற, மேலும் இரண்டு நியுற்றான்கள் வெளிவந்து மேலும் ஒரு யுரேனிய 235  ஐ தாக்க..இந்த தொடர்வினையே சங்கிலி தொடர் வினை Chain reaction மேலும் தொடர்ந்து செல்வதால் அளவற்ற வெப்ப ஆற்றல் தொடர்ந்து வெளியேறும்.உண்மையில் சிறிதளவு யுரேனியமே இந்த வகை சங்கிலி தொடர்வினையினை நிகழ்த்த போதுமானது. உண்மையில் இதே போன்ற ஒரு நிகழ்வு தான் அணு மின் சக்தி நிலையங்களிலும் நிகழ்வது. விஷயத்துக்கு வந்தாச்சா?? 


புனல் மின் நிலையம்


தேக்கி  வைக்கப்பட்ட நீர் குழாய் வழியாக கொண்டுவரப்பட்டு அந்த நீரின் விசையின் மூலம் டர்பைன்களை இயக்கி அதன் மூலம் மின் உற்பத்தி செய்வது அணைவரும் அறிந்ததே. நம் நாட்டில் இவைகளின் எண்ணிக்கை குறைவுதான்.இவைகளின் உற்பத்தித்திறனும் குறைவு.


அனல் மின் நிலையம்:
நிலகரி அல்லது இயற்கை எண்ணெய்கள் எரிபொருளாக பயன்படுத்தி நீரை ஆவியாகி அந்த நீராவியின் ஆற்றலால் டர்பைன்கள் சுழலவைத்து மின் உற்பத்தி நடப்பது அனல் மின் நிலையங்களில்.இங்கு மாசு உண்டாவது மிக அதிகம். மேலும் எரிபொருள் பற்றாக்குறையும் உள்ளது.


தனிமங்கள் எரிபொருளாக:

மின்சாரத்தின் தேவையும் அதன் பயன் பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மேலும் மின் உற்பத்தியில் எல்லா நாடுகளும் முனைப்பாக உள்ளனன. 

இந்த இக்கட்டான நிலையில் மனிதனுக்கு கை கொடுத்ததுதான் இந்த அணுவின் மூலம் சக்தியை பெற்று அதனால் மின் உற்பத்தி செய்வது. இந்த முறையில் சுற்று சூழல் பாதகம் இல்லை. மலிவானது, சிக்கனமானது என்று கூறப்பட்டாலும் இந்த முறை கயிற்றின் மேல் நடக்கும் வித்தைதான். கரணம் தப்பினால் மரணம் தான்.இனி அடுத்து அணுமின் உலைகள் பற்றி பார்க்கலாம். 


16 comments:

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

பயனுள்ள தகவல்களை தொடர்ந்து தந்து கொண்டிருப்பதற்கு நன்றிகள்..

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_17.html

யூர்கன் க்ருகியர் சொன்னது…

தோசை கல்லு மாதிரி இருக்கே அதான் யுரேனியமா?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நிறைய அறிவியல் கணிப்புகள் பகிர்வுக்கு நன்றி

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

சூரியன் பற்றி நிறைய தகவல்கள் சிறப்பாக உள்ளன

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

மின் உலைகள் அடுததா..புரியும் படியான உங்கள் எளிமையான விளக்கத்திற்கு காத்திருக்கோம்

சசிகுமார் சொன்னது…

விரிவான தெளிவான விளக்கங்கள். படிக்கும் பொது பிடிக்காத பாடம் இந்த வேதியியல் ஆனால் அதையே மிகவும் சுலபமாக புரியும் வண்ணம் எழுதி இருக்கீங்க அண்ணா நன்றி. ஒரு சிறிய விண்ணப்பம் தலைப்பிற்கு அருகில் 1, 2,3, போட்டால் கொஞ்ச நாள் களைத்து வந்து படிப்பவர்களுக்கும் தெளிவாக புரியும்.

Madhavan Srinivasagopalan சொன்னது…

நல்ல விளக்கங்கள்..

ஸாதிகா சொன்னது…

பயனுள்ள தகவல்கள் சகோ.பகிர்தலுக்கு நன்றி

விக்கி உலகம் சொன்னது…

அரிய தகவல்களுக்கு நன்றி தலைவரே!
பகிர்வுக்கு நன்றி

எஸ்.கே சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்கு!
அப்படி அணு பிணைப்பு-அணு பிளவையும் அந்த சமயத்தில் கதிர்வீச்சின் விளைவுகள் பற்றியும் சொல்லுங்களேன்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தெளிவான விளக்கங்கள்....
ஆமா இதை எல்லாம் எங்கேயா தேடி கண்டு பிடிக்கிறீங்க.....

RVS சொன்னது…

யப்பாடி!! நான் பிஎஸ்சி பிச்சுகிச்சுல படிச்சலதெல்லாம் நெனப்பு மூட்றீங்க... நன்றி.. ;-)))

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நல்ல வேளை அண்ணன் ஆன் லைன்ல இல்லை.. நைஸா எஸ் கேப் ஆகிக்க வேண்டியதுதான்

FOOD சொன்னது…

சூப்பர் சூப்பர் தகவல்கள்.நன்றி.

ராஜ நடராஜன் சொன்னது…

//(என்ன ? ரொம்ப தலை வலிக்கிற மேரிக்கி இருக்கா??//

நாங்க படிச்சா மேரிக்கி ஏன் தலை வலிக்குது:)

நீங்கள் தொடருங்கள்.ஆக்கபூர்வமான இடுகைகளை வரவேற்கிறேன்.

ராஜ நடராஜன் சொன்னது…

தற்போது கதிர்வீச்சு காரணமாக ஜப்பான் அரசு மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்கிறது.ஒரு வேளை கதிர்வீச்சு நிகழ்ந்தால் அது எவ்வளவு நேரம்,காலம் என்ற வரையறை இருக்கிறதா?

இது பற்றி விளக்கம் சொல்லுங்கள்.மீண்டும் வருகிறேன்.நன்றி.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக