பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், மார்ச் 16

மூன்று முகங்கள்.

மூன்று முகங்கள் - பகுதி 1


கொஞ்சம் ரேடியோ ஆக்டிவிட்டி- கதிரியக்கம் இவைகளை பார்ப்போம்.இதுவும் வழக்கம் போல சற்று தலை சுற்ற வைக்கும் பகுதிதான் 
முடிந்த வரை எளிமையாக தருகின்றேன்.இது பற்றி ஏன் இப்போது ? என்ற கேள்வியே தேவை இல்லை.  அனைவரும் அறிந்த ஜப்பானில் நடந்த, நடக்கும் பூமி அதிர்வுகள், சுனாமிக்குப்பிறகு அணு உலைகளில் தொடர் கேடுகளினால் உண்டாகும் கொடூரமான பின் விளைவுகளின் தாக்கமே இதனை எழுத தூண்டியது.

 அணுசக்தியின் உதவியால் மின்சாரம் உற்பத்தியாகும் அணுமின் நிலையங்களில் பூகம்பம் போன்ற இடர்பாடுகளால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை இன்று அனைவரும் ஊடகங்கள் மூலம் கண்டு திகைத்துப்போய் உள்ளோம்.கட்டுப்பாடு இழந்த அந்த வேதியியல் விளைவுகள் எப்படி உயிர்களை,தாவர, சுற்றுபுறங்களை , காற்று மண்டலத்தை அழித்து மாற்றிப்போடும் என்பதனை இங்கு தொடர  எண்ணியுள்ளேன்.


அடிபடையில், வேதியியல் கதிரியக்கம் என்ற ஒரு நிகழ்வில் என்னென்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்.கதிவீச்சு பண்புகளை உடைய தனிமங்களில் இருந்து மூன்று வெவ்வேறு வகையான கதிர்வீச்சுகள்  புறம் வருகின்றன.
1.ஆல்பா - Alpha
2.பீட்டா - Beta 
3. காமா - Gamma
இவைகள் கிரேக்க மொழியின் எழுத்துகள். ஆங்கிலத்தில் A,B,C,D  என்ற குறியீடைபோல கிரேக்க குறியீடுகளை பயன்படுத்துகிறோம். பண்புகளில் இந்த மூன்றும் வியக்கத்தக்க அளவில் வேறுபாடுகளையும் கொண்டுள்ளன.

ஆல்பா கதிர்கள் நேர் மின்னேற்றம் உடையன. Positively charged.காந்த புலத்தில் பாதிக்கப்படும் தன்மையது.
சாதாரணமாக ஒரு பேப்பர் போன்ற தடுப்புகளால் தடுக்கப்படுவன.

பீட்ட கதிர்கள் எதிர் மின்னேற்றம் உடையன.Negatively charged.
காந்த புலத்தினால் எதிர் திசையில் வளையும் பண்பினைக்கொண்டது.
சாதாரண பேப்பர் போன்ற வற்றில் ஊடுருவிச்செல்லும் ஆனால் அலுமினிய தகடுகளால் தடுத்து நிறுத்தப்படும்.

காமா கதிர்கள் நடுநிலையானவை.நேர் எதிர் மின்னேற்றம் இல்லை. காந்த புலத்தில் பாதிக்கப்படுவதில்லை. பேப்பர், அலுமினியம் தகடுகளில் ஊடுருவிச்சென்றாலும் கனமான தடித்த கான்க்ரீட் மற்றும் காரீய (Lead) தடுப்புகளில் தடுக்கப்படுகின்றன. அவைகளை ஊடுருவி செல்வதில்லை.

ஆல்பா கதிர்கள் ஆல்பா பார்டிகல்ஸ் என்று அழைக்கபடுகின்றன.இவைகள் மிதமான வேகம் கொண்ட ஹீலியம் அணுக்கலாகும்.
பீட்டா கதிர்கள் பீட்டா பார்டிகில்ஸ் என்று அழைக்கபடுகின்றன.இவைகள் எலெக்ட்ரான் களாகும் .
காமா கதிர்கள்  photons அல்லது X கதிர்கள் (X Rays) பெயரிலேயே குறிப்பிடபடுகின்றன.

மேற்கொண்டு இவைகளை பற்றி தனித்தனியாக எழுதிக்கொண்டே போகலாம் . ஆனால் நான் தமிழ் பிலாகர்களிடம் "கிறுக்கன் "பட்டம் வாங்க தயாரில்லை.:)))))

இந்த வீடியோ விளக்கங்கள் அருமையாக உள்ளன. 




சரி, மற்றவைகளை, இந்த கதிர் வீச்சு ஆற்றல் எப்படி மின்சாரம் உற்பத்தி செய்ய பயன் படுகிறது, தவறினால், விபத்துக்களினால் வெளியில் வந்தால் என்னென்ன விளைவுகளை உண்டாக்கும் ?அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.



43 comments:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

நல்ல முயற்சி மாணிக்கம்!

எரிசக்திக்கான தேவை அதிகரித்துக் கொண்டே போவதில் அணு மின்சாரம் தவிர்க்கவே முடியாதது என்ற மாதிரியான வாதங்களை ஒரு தரப்பு முன்வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை மூடி மறைத்துக் கொண்டே இருக்கும் தருணங்களில் ஜப்பானுக்கு நிகழ்ந்த சோகம், ஒரு படிப்பினையாகவும் இருக்கிறது.

முக்கியமான கேள்வி, கற்றுக் கொள்ளத்தயாராக இந்தியர்களாகிய நாம், (நம்முடைய அரசு, அரசியல்வியாதிகள், தொழில்துறை எல்லாம் சேர்த்துத் தான்) தயாராக இருக்கிறோமா?

எஸ்.கே சொன்னது…

சார் எனக்கு ரொம்ப பிடிச்ச டாபிக்! மிக்க நன்றி!

(ஒரு சின்ன கோரிக்கை: கதிரியக்கம் சம்பந்தமாக ஏதேனும் தகவல்கள் எந்த மொழியானாலும் கிடைத்தால் என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க முடியுமா?)

settaikkaran சொன்னது…

ஏராளமான தகவல்கள். இன்னும் ஒரு முறை வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன் நண்பரே...! நன்றி...!

Unknown சொன்னது…

மிகவும் எளிமையான விளக்கம்.மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளது.தொடர்ந்து எழுதுங்கள்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

மாணவர்களுக்கும் பயன்படும் செய்தி... பகிர்வுக்கு நண்பரே...! நன்றி...!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

useful info..

Madhavan Srinivasagopalan சொன்னது…

ஆனால் நான் தமிழ் பிலாகர்களிடம் "கிறுக்கன் "பட்டம் வாங்க தயாரில்லை.:)))))

நல்ல விஷயம்தான.. கிறுக்கினா எவன் திட்டப் போறான்..?
எழுதுங்க நண்பரே..

பொன் மாலை பொழுது சொன்னது…

//ஜப்பானுக்கு நிகழ்ந்த சோகம், ஒரு படிப்பினையாகவும் இருக்கிறது.//
------------எஸ். கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

இந்த நிகழ்வுகளுக்கு பிறகும் நாம் கற்றுக்கொள்ள வில்லையென்றால் எல்லோரும் எவ்வித வேறுபாடும் உயர்வுதாழ்வும் இல்லாமல் "மிக அழகான சோஷலிச " முறையில் விண்ணுலகம் போகலாம். அதனைவிட கொடுமையும் உண்டு. உடனே சாகாமல் கதிரியக்க பாதிப்பினால் வெந்து நொந்து சாகவும் முடியும்.இதில் ஆண்டான் அடிமை ஆண் பெண் பணம் உள்ளவன் ,பரதேசி என எவ்வித வேறுபாடும் கிடையாது.

கற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

தங்களின் அபூர்வமான வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.:))

பொன் மாலை பொழுது சொன்னது…

// ஏராளமான தகவல்கள். இன்னும் ஒரு முறை வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன் நண்பரே..//

.....................சேட்டை.

முன்னரே பள்ளி, கல்லூரிகளில் படித்திருப்பீர்களே சேட்டை?
வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// சார் எனக்கு ரொம்ப பிடிச்ச டாபிக்!//

------------------எஸ்.கே.

எனக்கும்தான். கல்லூரி நாட்களில் இது பற்றி வித விதமாக படித்து வியப்படைவேன். இதுகுறித்து கேள்வி இல்லாத வேதியியல் தேர்வே இல்லை.
உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்கிறேன் விரைவில் எஸ்.கே.
வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி malgudi.
அதுசரி, இந்த ஊர் எங்குள்ளது? R.K. நாராயண் விசிறியோ?!

பொன் மாலை பொழுது சொன்னது…

வேடந்தாங்கல் - கருன்- தங்களின் வருகைக்கு நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

/// seful info..//
பட்டாபட்டி.... சொன்னது…

இதெல்லாம் ரொம்ப ஓவரு அண்ணாத்தே!
என்ன சிங்கபூர்காரற ஆளையே காணோம்? ஜப்பான் போயி வந்தீங்களா என்ன?

பொன் மாலை பொழுது சொன்னது…

//நல்ல விஷயம்தான.. கிறுக்கினா எவன் திட்டப் போறான்..?
எழுதுங்க நண்பரே..///

Madhavan Srinivasagopalan சொன்னது…
அது சும்மனாச்சுக்கும் கிண்டலுக்கு சொன்னது. ஆனா யாராவது திட்டினா ஒரு நல்லது நடக்கும் தெரியுமா? உடனே நம்ம பதிவி ஹிட்ஸ் ஆயி முன்னுக்கு வந்துடும். ஆனா பேருதான் நாரிப்போயிடும். :)

வருகைக்கு நன்றி

தமிழ் உதயம் சொன்னது…

அணுசக்தியால் கிடைக்கும் நன்மை கால் சதவிதம் என்றால் அதனால் ஏற்படும் முக்கால பங்காக உள்ளது. இனி மறு பரிசீலனைக்குரியதாக மாறலாம் அணு மின் நிலையங்கள். பகிர்வுக்கு நன்றி.

செங்கோவி சொன்னது…

இந்த மாதிரி சிக்கலான விஷயங்களை எளிய தமிழில் சொல்வது கஷ்டம்..ஆனால் நீங்கள் நன்றாகச் சொல்லி இருக்கீங்க கக்கு சார்!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

இணையத்தில் ஓர் அணு விஞ்ஜானி தயார்.

பொன் மாலை பொழுது சொன்னது…

//அணுசக்தியால் கிடைக்கும் நன்மை கால் சதவிதம் என்றால் அதனால் ஏற்படும் முக்கால பங்காக உள்ளது. இனி மறு பரிசீலனைக்குரியதாக மாறலாம் அணு மின் நிலையங்கள். //
--------------------தமிழ் உதயம் சொன்னது…

உண்மைதான். நம்ம ஊர் அரசியல் வாதிகள் ஆளும் வர்க்கம் எல்லாம் அமெரிக்கா காரன் எதை நம் தலயில் கட்டினாலும் ஆஹா... என அனந்த கூத்தாடும் கோமாளிகள்.என்ன செய்வது?
வருகைக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

நல்ல அலசல்

பொன் மாலை பொழுது சொன்னது…

//இந்த மாதிரி சிக்கலான விஷயங்களை எளிய தமிழில் சொல்வது கஷ்டம்..ஆனால் நீங்கள் நன்றாகச் சொல்லி இருக்கீங்க கக்கு சார்!//


-------------------------செங்கோவி சொன்னது…

தங்களின் குறிப்புக்கு நன்றி. என்னைவிட பிரமாதமாக இதுபோன்ற கட்டுரைகள் எழுதுபவர்கள் இணையத்தில் நிறைய உண்டு.நான் ஒன்றுமில்லை.

நன்றி செங்கோவி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// இணையத்தில் ஓர் அணு விஞ்ஜானி தயார்.//

யூர்கன் க்ருகியர் சொன்னது…


மாப்ள...........வேண்டாம் நீ ஒருத்தனே போதும் என்னை வாரிவிட...

இதை எழுத அணு விஞ்ஞானியாக இருக்கவேண்டுவதில்லை மாப்பு.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

யோவ் விஞ்ஞானி, எனக்கு ஒன்னுமே புரியலை ஹே ஹே ஹே ஹே ஹே....
எதுக்கும் ஒரு வணக்கத்தை போட்டு வைப்போம்....

சென்னை பித்தன் சொன்னது…

நல்ல விளக்கம்.இது போன்ற பதிவுகளுக்காக நீங்கள் ’கிறுக்கனா’வது,வரவேற்கத்தகுந்ததே!
நன்றி மணிக்கம்!

இருவர் சொன்னது…

thanks for ur useful information sir.continue..........!!!

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

எல்லோருமே கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய
விஷயத்தைப் பற்றித்தான் சொல்லி இருக்கிறீர்கள்.
பகிர்ந்தமைக்கு நன்றி மாணிக்கம் ஸார்.

சசிகுமார் சொன்னது…

நல்ல முயரிசி சார் தொடர்ந்து எழுதுங்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி சதீஷ்

RVS சொன்னது…

ப்ரொஃபசர் மாணிக்கனாருக்கு ஒரு ஜே! அற்புதமான விளக்கங்கள்.. எளிய முறையில்.. தமிழில்... தொடருங்கள்.. ;-))

பொன் மாலை பொழுது சொன்னது…

//யோவ் விஞ்ஞானி, எனக்கு ஒன்னுமே புரியலை ஹே ஹே ஹே ஹே ஹே..//

-------------------------------நாஞ்சில் மனோ.

மனோ, நான் விஞ்ஞானி அல்ல மெய்ஞானியும் அல்ல . உங்களைப்போலவே நானும் கற்றுக்கொள்கிறேன் இன்றும்.
தெரிந்து கொள்ளவேண்டும் என்ற உத்வேகமே நமக்கு கடினமானவைகளையும் கற்றுத்தரும்.
அடுத்த பதிவுகளில் இன்னமும் எளிமையாக தர முயர்ச்சிகின்றேன்
வருகைக்கு நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

// நல்ல விளக்கம்.இது போன்ற பதிவுகளுக்காக நீங்கள் ’கிறுக்கனா’வது,வரவேற்கத்தகுந்ததே!//

------------------------சென்னை பித்தன்.

காதலால் பித்தனாகி ......வேதியியலால் கிருக்கனாகி....................:)))
வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

thanks for ur useful information sir.continue..........!!!

----------இருவர் சொன்னத.


தங்களின் வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// எல்லோருமே கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய
விஷயத்தைப் பற்றித்தான் சொல்லி இருக்கிறீர்கள். //

-----------புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

நீங்கள் வந்து நீண்டநாள் ஆகிறதே!
தங்கள் வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி சசி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//தக்க சமயத்தில் வெளியிடப்படும் தேவையான பதிவு, //
FOOD சொன்னது…

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

பொன் மாலை பொழுது சொன்னது…

// ப்ரொஃபசர் மாணிக்கனாருக்கு ஒரு ஜே! //

RVS சொன்னது…

என்னை வலைப்பதிவில் "கோத்து வாங்குவது" ரெண்டுபேர். ஒன்று மாப்ள யூர்கன்,அடுத்தது நம்ம மன்னார்குடி மைனர் RVS.


வருகைக்கு நன்றி மைனரே! :))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கண்ணே..... விழிப்புணர்வு ஏற்படுத்த இதுதான் தக்க சமயம்!

பாலா சொன்னது…

எல்லோருக்கும் புரியும்படி அருமையான விளக்கங்கள். வாழ்த்துக்கள் நண்பரே

பொன் மாலை பொழுது சொன்னது…

// தொடர்ந்து எழுதுங்கண்ணே..... //

----------பன்னிக்குட்டி ராம்சாமி

தாங்க்ஸ் பன்னி! :))))

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா.

எல் கே சொன்னது…

elimaiyaa irukku thalai

எம் அப்துல் காதர் சொன்னது…

அருமையான பாடத்தை, எளிமையாய் விளக்கிய விதம் பிடிச்சிருக்கு அண்ணே!!

டக்கால்டி சொன்னது…

எளிமையான அதே சமயம் அருமையான விளக்கம் பாஸ்...

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல எளிமையான விளக்கங்கள். எங்கயாச்சும் பிசிக்ஸ் வாத்தியா இருந்தீங்களா?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக