பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், மார்ச் 17

இன்னமும் வேண்டுமா??


மூன்று முகங்கள் - பகுதி 4


ஜப்பானின் அணு உலை ஆபத்தால் அங்கிருந்து கதிர்வீச்சுக்கள் ஆரம்பாகிவிட்டன. தற்போது தலை நகர் டோக்கியோ வரை அதன் பாதிப்புகள் உள்ளது . ஆனால் நிச்சயம் இதன் வேகம் இன்னமும் அதிகமாக இருக்கப்போகிறது என்பதே உண்மை. ஒன்று அல்ல இரண்டு அல்ல, ஜப்பானில் புகுஷிமா டாய்ச்சி அணு மின் நிலையத்தில் இருந்த நான்கு அணு உலைகளும் சேதமாகி அவைகளை கட்டுபடுத்தும் முயற்சிகளை அந்நாட்டு அரசும் அகில உலக அணுசக்தி கமிஷனும் முனைப்புடன் உள்ளனர். 

கிட்டத்தட்ட ஒரு அணுகுண்டு வெடிப்புக்கு சமமான விளைவுகள் நிச்சயம் இருக்கும். அணு உலைகளில் அளவற்ற வெப்பத்தின் இடையே இருக்கும் அந்த கதிரியக்க தனிமங்களில் மொத்த ஆற்றலும் வெளியேறும். கணக்கற்ற அளவில் (பல ஆயிரம் டிகிரி சென்டிகிரேட்) வெப்பம் வெளிப்படும். சென்னையில் 38 - 41 டிகிரி சென்டிகிரேட் கோடையிலே நாமெல்லாம் என்ன பாடு படுகிறோம்?  50  டிகிரிக்கு போனாலே ஆங்காங்கே மரணம் நிகழும். ஆனால் பல ஆயிரம் டிகிரி வெப்பம் அந்த பகுதியில் என்றால் என்ன ஆகும் என்று பாருங்கள்.

அதிக ஆற்றலுடன் வெளியேறும் கதிரியக்கம் தாங்கள் சம நிலையை அடையும் வரை அங்கு சுற்றி சூழ்ந்துள்ள காற்று, நீர், மரம். செடி கொடிகள், மனிதர்கள், விலங்குகள் ...ஏன் மலையில் உள்ள பாறைகளைக்கூட விட்டு வைக்காமல் தாக்கும்.நீர் நிலைகள் ஆவியாகிவிடும்,மற்றதெல்லாம் கருகி சாம்பலாகும்.

கதிர்வீச்சின் மூலம் பரவும் அலைகள் கொடுமையான விளைவுகளை மனிதர்களுக்கு உண்டாக்கும்.முன்பு பார்த்த "அயனியாதல்" என்ற விளைவுகளை அந்த அலைகள் ஏற்படுத்து. காற்று மண்டலத்தில் சுவாசிக்க ஆக்ஸிஜனே இருக்காது எல்லாம் அதன் அயநிகலாகிவிடும்.O2  என்று குறிப்பிடுவதே ஆக்சிஜனின் மூலக்கூறு. இந்த அமைப்பில் உள்ள ஆக்சிஜனையே நாம் மற்றும் பிற உயிரினங்கள் சுவாசிக்க முடியும். ஆனால் அப்படி இல்லாமல் O++  என்ற அயனிகளாக இருக்கும் காற்றை சுவாசித்தால் என்ன நடக்கும்?

கதிர்வீச்சினால் அயனியாதல் நடைபெற ஆரம்பிக்கும்.உயிர்களின் தோல் ,திசுக்களை தாக்கி அடிப்படையான செல்களின் தன்மையை மாற்றி அங்கு சுதந்திரமான எலெக்ட்ரான்களை (Free Electrons ) உண்டாகிவிடுகிறது.இவைகள் மேலும் பல்கி பெருகி வளரும்.

உயிரினகளின் உடல்கள் திசுக்களால் ஆனவை அல்லவா?இந்த திசுக்கள் செல்களால் ஆனவை என்றும் உங்களுக்குத்தெரியும்.செல்களில் முக்கியமாக இரண்டு வகை படும். ஒன்று உடல் செல்கள். மற்றது இன விருத்திக்கான செல்கள். இவைகள் அடிபடையில் வெவ்வேறானவை.


1. Somatic cells - உடல் செல்கள்
2. Germ cells - இனபெருக்க செல்கள்.
மனிதர்களின் உடல் செல்களில் உள்ள D N A  குரோமசோம்கள் 46  இருக்கும் ஆனால் மனித இனப்பெருக்க செல்களில் உள்ள D N A குரோமசோம்கள் 23  மட்டுமே இருக்கும் அல்லவா? தாய் மற்றும் தந்தை வழியாக 23+23 = 46  குரோமசோம்கள் பிள்ளைகளுக்கு வந்துவிடும்தானே?
 இந்த D N A  deoxyribonucleic acid,  நம்முடைய தலைமுறை பண்புகளை கொண்டுசெல்லும் கேந்திரங்கள். ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மனித உடல் பண்புகளை எடுசெல்லும் இவைகள் கதிர்வீச்சின் விளைவால் இந்த D N A  அமைப்புகளில் அயனியாதல் மாற்றம் ஏற்பட்டு அவைகளின் பண்புகள் முற்றிலும் சிதைந்து போய்விடும். அங்கு வைக்கப்பட்ட அணைத்து தகவல்களும் சிதைத்து அதுவே மேலும் பல தலை முறைகளுக்கு கொண்டு செல்லப்படும் அவலம் நிகழும்.கதிர்வீச்சிக்கு தெரிந்தோ தெரியாமலோ ஆளான பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சகிக்க இயலாத உடல் உறுப்பு மாற்றங்களுடன் பிறக்கும். இந்த கொடூரும் இந்த மாற்றம் தலைமுறைகளுக்கும் தொடரும்.

DNA  வை தாக்குவதை விடுங்கள், மனித உடலில் சுமார் 60% நீர்மம் தானே? இந்த நீர்மம் கதிர்வீச்சுக்கு ஆளாகி பின்னர் பல வித ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழ்ந்து இறுதியில் இது ஹைட்ரஜன்-பர்- ஆக்சைட் என்ற திரவமாக மாறிவிடும்.  Hydrogen - per- Oxide பற்றி நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் அதுதான் சரி.

தோல்பகுதிகளில் வித விதமான புற்று நோய்கள், உடல் உரோமங்கள் உதிர்ந்துவிடும்,கண்கள் குருடாதல், நுரையீரல் ,குடல்கள் வீணாகி போதல்,எலும்பு மஜ்ஜைகள் புற்று நோய் , இரத்த புற்றுநோய் என சகல பாவங்களும் நம்மை நம்மோடு அல்லாமல் நமக்கு பிறகு நம் சந்ததிகளையும் சேரும்.

ஈராக்கில் அமெரிக்க படைகளும் அவர்களின் கூட்டாளிகளும் சண்டை இட்டு பிறகு பல வருடங்கள் கழித்து திரும்பி போனார்கள் அல்லவா? அந்த கால கட்டத்தில் ஆயுதங்களால் உண்டான கதிர் வீச்சால் பாதித்து பிறந்த குழந்தைகளின் படங்கள் கீழே உள்ளன!Radiation level rising at Fukushima nuclear plant in quake-hit Japan

இனியும் வேண்டுமா அணுஆயுதமும் அணு உலைகளும்?


                 
34 comments:

FOOD சொன்னது…

வேண்டவே வேண்டாம் அணு உலையும் அதன் தொல்லைகளும்!

THOPPITHOPPI சொன்னது…

புகைப்படங்களை பார்க்கவே வேதனையா இருக்கு

மைதீன் சொன்னது…

பாதுகாப்பு அதிகம் உள்ள ஜப்பானிலே இப்படியென்றால் இந்தியாவை நினைத்தால்............

சென்னை பித்தன் சொன்னது…

வேண்டாம் மாணிக்கம் இத்தகைய புகைப்ப்படங்கள்;பார்க்க முடியவில்லை! இறைவா,கருணை செய்!

M.S.E.R.K. சொன்னது…

வார்த்தைகளோ, எழுத்துக்களோ வேண்டாம்..... அந்தப் படங்கள் புரியவைக்கும் கதிர்வீச்சின் வீரியத்தை! இதைத்தான் 'சாத்தான் ' என்று விளித்தேன் ! அருமையானப் பதிவுகள் கக்கு! வாழ்த்துக்கள்!

பாரத்... பாரதி... சொன்னது…

அணுஉலைகளின் பாதிப்புக்களை பார்க்கவே மனசு நடுங்குகிறது.

பாரத்... பாரதி... சொன்னது…

ஆனால் நிலக்கரி, பெட்ரோல் போன்ற மற்ற சக்தி மூலங்கள் அழிந்து வரும் சூழ்நிலையில் அணுசக்தியை தவிர்த்து விட்டு ஆற்றல் உருவாக்கம் சாத்தியமா?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அதிர்ந்துவிட்டேன்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இவ்வளவு கொடூரமானதா

ஜெய்லானி சொன்னது…

//இனியும் வேண்டுமா அணுஆயுதமும் அணு உலைகளும்? //

கத்தியை எடுத்தவன் காத்தியாலேயே ..... இதான் நினைவுக்கு வருது :-(

THOPPITHOPPI சொன்னது…

//வேண்டாம் மாணிக்கம் இத்தகைய புகைப்ப்படங்கள்;பார்க்க முடியவில்லை! //

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஹிரோஷிமா,நாகசாகி குண்டு வீச்சு பாதிப்பே இந்தியா வரை .எரிமலைப் பாதிப்பில் இருக்கும் ஜப்பான் அணு உலை தாக்குதலை எதிர்கொள்ளும் அபாயம் கவலைக்குரியது.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

ச்சே! இப்படியுமா ? படங்களைப் பார்க்கவே பயமா இருக்கு!

RVS சொன்னது…

எல்லாத்தையும் படிச்சாச்சு... ரொம்ப நன்றி. ;-)

செங்கோவி சொன்னது…

மிகவும் அருமையாக ஆணித்தரமாகச் சொல்லியுள்ளீர்கள் கக்கு சார்..வேண்டவே வேண்டாம் அணு உலையும் ஆயுதங்களும்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஜெய்லானி சொன்னதுதான் சரி...
வினை விதைத்தால்.......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அந்த மக்களை நினைச்சா பாவமா இருக்கு கக்கு....

சிவகுமாரன் சொன்னது…

பயம் வேதனை கவலை தவிப்பு ... ஒரு சேரத் தாக்குகின்றன.
என்ன செய்யப் போகிறோம் ?

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோதரம், இப்போதைய நிலைவரப் படி அணு உலைகளினால் வெளியேறும் கதிரியக்கம் 258 கிலோ மீற்றர்கள் வரை பரவக் கூடிய அபாயம் உள்ளதாக அறிவித்துள்ளார்கள். இத்தோடு டோக்கியோ நகரையும் இக் கதிர் வீச்சுக்களைக் கொண்ட காற்று நெருங்கவுள்ளதோடு, உலகின் மேற்குத் திசையில் உள்ள நாடுகளை நோக்கி இந்த கதிரியக்கங்களை கொண்ட காற்றுக்கள் பயணம் செய்ய உள்ளது.

அமெரிக்காவின் ஒரு ஆளில்லா விமானம் இந்த அணு மின் நிலையத்தின் செயலிழந்து வெடித்துப் போயுள்ள பகுதிகளை கண்காணித்து வருகிறது. நேற்றைய தினம் ஹெலி கொப்டரில் இருந்து ஊற்றி இந்த அணுமின் நிலைய வெப்பமான பகுதிகளை குளிர்விக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அது பலனற்றுப் போனது, இன்று முதல் ஐம்பதிற்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள் இணைந்து செயலிழந்து போன கூலிங் இயந்திரத்தை இயக்க முயற்சி செய்யவுள்ளார்கள்.

உங்கள் விளக்கங்கள் அருமை. ஆனால் படங்கள் பயத்தை வரவழைக்குது.

எஸ்.கே சொன்னது…

அந்த படங்கள் மனதை ஏதோ செய்கிறது சார்! சே அறிவியலின் நன்மை ஒரு பக்கம் என்றால் அதன் தீமை அப்பப்பா!

வைகை சொன்னது…

நாடுகளின் வல்லரசு போட்டியில் பாதிக்கப்படுவதென்னவோ நாட்டில் உள்ள மக்கள்தான்! தலைவர்கள் எப்போதும்போல் மிகவும் பாதுகாப்பாக!

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

எளிமையான விளக்கங்கள் சார்..

டக்கால்டி சொன்னது…

அண்ணே தொடர்ந்து பயமுறுத்தாதீங்க...ப்ளீஸ்...
விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் செய்தி தான்...
ஆனால் இது கூட சிகரெட் பாகேட்டின் மேல் உள்ள கருகிய நுரையீரல் படம் போல தான்...
எவனும் கண்டுக்க மாட்டான்...
அது தான் என் வருத்தமே

விக்கி உலகம் சொன்னது…

தலைவரே பகிர்வுக்கு நன்றி மனிதனை அழிக்க மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயுதம் என்ன செய்வது........குரங்குகள் கையில் பூமாலை கிடைத்தால்................!

சண்முககுமார் சொன்னது…

வேண்டாம் அண்ணே தொடர்ந்து பயமுறுத்தாதீங்க...ப்ளீஸ்... நான் அழுதுருவேன்


இதையும் படிச்சி பாருங்க
எதிர்த்து போராடுபவனே நிஜமான வீரன்

சேலம் தேவா சொன்னது…

மிக கொடுமையாக உள்ளது படங்கள்.அறிவியலோ அல்லது கடவுளோ காப்பாற்றட்டும். :(

GEETHA ACHAL சொன்னது…

பாவம்..மிகவும் கொடுமையாக இருக்கின்றது...

ஸ்ரீராம். சொன்னது…

இன்றைய செய்தித் தாளில் இனி பயமில்லை என்பது போல செய்தி வந்துள்ளது எவ்வளவு தூரம் உண்மையோ...
டிக் செய்வதற்கு வேடிக்கை, ஜாலி, சுவாரஸ்யம், என்று வைக்காமல் இதற்கு மட்டும் வேதனை, பயங்கரம், வலி என்று வைத்திருக்கலாம்.

செந்தில் குமார் சொன்னது…

வார்த்தைகளோ, எழுத்துக்களோ வேண்டாம்..... அந்தப் படங்கள் புரியவைக்கும் கதிர்வீச்சின் வீரியத்தை! அருமையானப் பதிவுகள் கக்கு! வாழ்த்துக்கள், - திருமணத்திற்கு முன் தானே நாம் கவலையில்லாமல் திரிந்தோம் நன்றாகபாருங்கள். என்முகத்தில் பால் வடிகிறதா இல்லை பீர் வழிகிறதா என்று

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நீங்கள் தந்த ஆதரவே என்னை இப்பதிவுகளை எழுதவைத்தது.
வருகைதந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

டக்கால்டி சொன்னது…

அன்பு நண்பர்களே...
எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,
டக்கால்டி.

சுல்தான் சொன்னது…

படிக்கவே பயங்கரமாக இருக்கிறது. உலக நாடுகள் இணைந்து ஏற்படப் போகும் பேரபாயத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

Lakshmi சொன்னது…

சே, என்ன ஒரு கொடுமை. அணுவாவது உலையாவது. சாதாரண மக்கள்படும் அவஸ்தைகள்தான் நிஜம்.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

shocking pics!!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக