பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், பிப்ரவரி 3

விக்கி லீக்ஸ் இனைய தளம் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை.

நார்வே நாட்டு பார்லிமென்ட் உறுப்பினர்கள் விக்கிலீக்ஸ் இனைய தளத்தை
 // பேச்சுரிமைக்கும்,ஒளிவு மறைவற்ற நிர்வாக முறைக்கும் 
அதி முக்கியமான பங்களிப்பை தந்துள்ளது //என்று பாராட்டியுள்ளனர்.

//ஊழல் முறைகேடுகளையும்,மனித உரிமை அத்து மீறல் களையும் மற்றும் போர் குற்றவாளிகளையும் வெளி உலகுக்கு காட்டிய தன்மையினால் விக்கிலீக்ஸ் இயல்பாகவே இயற்கையாகவே அமைதிக்கான நோபல் பரிசினை பெரும் தகுதியை அடைந்துள்ளது //

என்று அவர்கள் புகழாரும் சூட்டியுள்ளனர். நம்ம ஊரிலும் இருக்கும் பார்லிமென்ட் உறுபினர்களின் கதியே வேறு.எல்லாரும் வீணாய் போனவர்கள்தான்! சுரண்டல் மன்னர்கள், கொள்ளைகாரிகள், கடத்தல் ராஜாக்கள்,பகல் கொள்ளை காரர்கள், கொலை காரர்கள் மொத்தத்தில் தேச துரோகிகளையே நாம் கொண்டுள்ளோம்.மற்ற நாடுகளை பார்த்தாவது நாம் கற்றுக்கொள்ளவில்லை என்றால் நாசமாய் போய் சிவில் வார் வந்துதான் எல்லாம் சரிபட வேண்டி இருக்கும்.டிவிட்டரில் 
#wlquest என முதலில் டைப் அடித்து இந்திய கருப்பு பணத்தை பதுகியவர்களின் பெயர்களை விரைவில் வெளியிட வேண்டும் என ஆங்கிலத்தில் கேளுங்கள். 
அல்லது மெயில் அனுப்புங்கள் email- twlrt@mail
அதாவது நாம் டிவிட்டரில் இது தொடர்பாக விக்கி லீக்ஸ் க்கு அனுப்பும் செய்திக்கு முன்னால் #wlquest என்று இருக்கவேண்டும்.
தமிழக மீனவர்கள் பற்றி எழுதிவிட்டு இறுதியில் #tnfishermen என்று டைப் பண்ணி பின்னர் டிவீட் செய்வது போல.
#wlquest  என்பதை இங்கு முன்னால் தந்துவிட்டு, அதனை தொடர்ந்து நம் வேண்டுகோளை எழுத வேண்டும்.

உதாரணமாக:

#wlquest Wiki leaks, please, reveal the names of all the Indian block money accounts holders in all the foreign banks. 

 
மின்னஞ்சல் 
முகவரி உள்ளதால் வழக்கம் போல நம் வேண்டுகோளை எழுதி 
மின்னஞ்சல் 
 செய்யலாம்.


23 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தலைவரே, நம் அரசியல் பெருந்தகைகளின் லட்சனத்தை விக்கி லீக்சில் பார்க்க என்ன செய்யனும்னும் சொல்லிடுங்களேன் !

கக்கு - மாணிக்கம் சொன்னது…

WikiLeaks To submit a question please tweet your question prefixed with the “#wlquest” tag To submit a question please email twlrt@mail.be

டிவிட்டரில்
#wlquestஎன டைப் அடித்து இந்திய கருப்பு பணத்தை பதுகியவர்களின் பெயர்களை விரைவில் வெளியிட வேண்டும் ஆங்கிலத்தில் என கேளுங்கள்.
அல்லது மெயில் அனுப்புங்கள் email- twlrt@mail

எஸ்.கே சொன்னது…

விக்கிலீக்ஸ் நோபல் பரிசு தர அந்த நாட்டு அரசியல்வாதிகள் நினைப்பது பாராட்டுக்குரியதுதான். அதையெல்லாம் பார்த்து எங்க நம்மாளுங்க கற்றுக்கப் போறாங்க!

எஸ்.கே சொன்னது…

அட டிவிட்டர் வழி மூலம் நாம் கோரிக்கை செய்யலாமா? செஞ்சிட வேண்டியதுதான்!

Philosophy Prabhakaran சொன்னது…

// #wlquest என முதலில் டைப் அடித்து இந்திய கருப்பு பணத்தை பதுகியவர்களின் பெயர்களை விரைவில் வெளியிட வேண்டும் ஆங்கிலத்தில் என கேளுங்கள். //

மீனவர் பிரச்சனையில் நியாயம் கிடைத்ததும் அடுத்த டுவிட்டர் புரட்சியை தொடங்கிவிடலாம்...

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

நோபல் கமிட்டி பற்றியும் தகவல் இருக்காமா?..

எல் கே சொன்னது…

ரைட்டு ...

தமிழ்க் காதலன். சொன்னது…

அட நம்ம கக்கு மாணிக்கமா...!
உங்க பக்கம் முதன்முறையாய் வருகிறேன். தோழனே... உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். ஆனால்... ஒரு தேசத்தில் ஆள்பவன் சரி இல்லை என்றால் அதற்கு நேரடியாய்.... அந்த தேசத்தில் வாழ்பவன் சரி இல்லை என்கிற பொருள் வரும். நாம் ஒவ்வொருவரும் மற்றவரை குறை கூறி எளிதில் நாம் தப்பித்துக் கொள்ள பார்க்கிறோம். என்றைக்காவது நம்முடைய கடமைகள், பொறுப்புகள் உணர்ந்து செயல் பட்ட நல்ல குடிமகனாய் வாழ்ந்திருக்கிறோமா...? நமக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு நல்லவனுக்கு தேர்தலில் வாக்களித்திருப்போமா..? சமூக பிரதிநிதியாய் நம்மை முன்னிறுத்தி இருக்கிறோமா..?

இதை எதுவும் செய்யாமல் நாம் வெறுமனே ஆதங்கப் படுவதால்... எழுதுவதால்... எந்த பலனும் ஏற்படாது. நம்மை நாம் மாற்றிக் கொள்ளாத வரை நமக்கு மாற்றம் என்பது வராது. நாம் ஒவ்வொருவரும் இதை செய்ய தயாரா...? சுயநலம் தாண்டி யோசித்தால் மட்டும் போதாது. செயல்படவும் வேண்டும். முடியுமா..? நான் தயார். நீங்கள்...????

நாம் அனைவரும் ஒரு முடிவெடுத்தால்.....

ஒரே ஆண்டில் இந்தியாவின் தலை எழுத்தை மாற்றிக் காட்ட முடியும். யார் இதற்கு தயாராக இருக்கிறீர்கள்...?

செயல் வீரர்கள் தேவை.... பேச்சாளர்கள் அல்ல.

வணக்கங்களுடன்....
-தமிழ்க்காதலன்.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இவங்களுக்கு தராம ஒபாமா வுக்கு கொடுக்குறானுக...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

விக்கி லீக்ஸ் ஊடகத்தின் சக்தியை அடையாளம் காட்டியது

வைகை சொன்னது…

wlquest என முதலில் டைப் அடித்து இந்திய கருப்பு பணத்தை பதுகியவர்களின் பெயர்களை விரைவில் வெளியிட வேண்டும் என ஆங்கிலத்தில் கேளுங்கள்.
அல்லது மெயில் அனுப்புங்கள் email- twlrt@mail////


இப்படியும் வழியுண்டா? முயற்சி செய்வோம்....தகவலுக்கு நன்றி!

ரஹீம் கஸாலி சொன்னது…

வாக்களித்து என் வருகையை பதிவு செஞ்சுக்கிறேன்.

சங்கவி சொன்னது…

கலக்குங்க...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இன்றைய ஹீரோ விக்கி லீக்ஸ்தான்............

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//தலைவரே, நம் அரசியல் பெருந்தகைகளின் லட்சனத்தை விக்கி லீக்சில் பார்க்க என்ன செய்யனும்னும் சொல்லிடுங்களேன் !//உம்ம பேரும் அதுல இருக்குறதா கேள்வி பட்டேனே.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//விக்கி லீக்ஸ் ஊடகத்தின் சக்தியை அடையாளம் காட்டியது//

உண்மை.....

சசிகுமார் சொன்னது…

wlquest என முதலில் டைப் அடித்து இந்திய கருப்பு பணத்தை பதுகியவர்களின் பெயர்களை விரைவில் வெளியிட வேண்டும் என ஆங்கிலத்தில் கேளுங்கள்.
அல்லது மெயில் அனுப்புங்கள் email- twlrt@mail////

Thanks for this information

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைதந்த அணைத்து நண்பர்களுக்கும் நன்றி.
கீழே உள்ளதைபோல டைப் செய்து விக்கி லீக்ஸ் க்கு டிவீட் செய்யவேண்டும்.
முதலில் #wlquest என டைப் செய்துவிட்டு தொடர்ந்து அவரவர்கள் விருப்பம் போல //அயல் நாடுகளில் உள்ள இந்திய நாட்டின் கருப்பு பண வங்கி கணக்காளர்கள் விபரங்களை வெளியிட வேண்டி// வாக்கியங்கள் அமைத்து டிவீட் செய்யவும் அவ்வளவுதான்.
மின்னஞ்சலும் கூட அனுப்பலாம்.பதிவிலும் இதனை சேர்த்துள்ளேன் பாருங்கள் நன்றி.

ராஜ நடராஜன் சொன்னது…

விக்கிலீக்ஸ் நோபல் பரிசுக்கான பரிந்துரையின் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி.

விக்கி உலகம் சொன்னது…

அண்ணே உங்க பங்களிப்பு அருமை

வந்து கொஞ்சம் பாக்குறது நம்ம கடைய!! புது கைமா வந்து கீது!!

சென்னை பித்தன் சொன்னது…

//சுரண்டல் மன்னர்கள், கொள்ளைகாரிகள், கடத்தல் ராஜாக்கள்,பகல் கொள்ளை காரர்கள், கொலை காரர்கள் மொத்தத்தில் தேச துரோகிகளையே நாம் கொண்டுள்ளோம்.//
நூறு விழுக்காடு சரியே.
இதுவரை ட்விட்டயதில்லையே!

Jana சொன்னது…

என் பார்வையில் விக்கி ஸீக்ஸ் பல கான்பிரஸி தியரிகளை உண்மையாக்கியது என்பது அதன் சிறப்பே

Sai Gokula Krishna சொன்னது…

#wlquest Wiki leaks, please, reveal the names of all the Indian block money accounts holders in all the foreign banks//
I started to tweet more and retweets you.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக