பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஜனவரி 13

வாழைப்பழ கொடாப்பு !


மார்கழி மாதம் பிறக்கும் போதே ஒரு இதமான மகிழ்ச்சி படரும் வீட்டிலும் ஊரிலும். விடியலில் கோவில்களில் பாடும் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி தினமும் கேட்டு எழுந்து அரையாண்டு தேர்வுக்கு பாயில் உட்கார்தவாறே போர்வையை போர்த்திக்கொண்டு படிப்பது முதல் தேர்வுகள் முடிந்து விடுமுறை வந்து மாலையில் பள்ளி விளையாட்டு திடலில் வாலிபால் ஆடிவிட்டு வீட்டுக்கு வந்து மாலையில் போட்டு ஆறிப்போன காபி குடித்து விட்டு ,நாட்கள் நகர்ந்து ஆங்கில புத்தாண்டு முடிந்து பொங்கல் அறிகுறிகள் தலைதூக்கும். எல்லோர் வீடு வாசலும் பெரிய அளவில் கூட்டி சுத்தம் செய்து சாணம் தெளித்து அகல அகலமாக வாசல் அடைத்து கோலம் சாணத்தில் உருண்டை வைத்து அதில் பரங்கி, பூசணி பூக்கள். தெருவும் ஊருமே பொங்கலுக்கு தயாராகி விடும்.அடுத்தநாள் விடியலில் மாடத்தில் கை விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குளிருக்கு தலையில் துண்டு ஒன்ற மடித்து க்கட்டிகொண்டு கோலமிடும் அம்மாவை காண வாசல் வந்தால் திண்ணையின் கீழே ஒரு வண்டி ஆற்று களி மண்ணும், ஒரு வண்டி ஆற்று மணலும் கொட்டியிருக்கும்.

மாலையில் பள்ளியிலிருந்த வந்த அப்பா மண் வெட்டியால் வட்ட பாத்தி போல கட்டி அதில் களி மண்ணையும் மணலையும் தண்ணீரும் அளவுடன் கலந்து குழைத்து மிதித்து மீண்டும் அதனை கொத்தி விட்டு பக்குவப்படுத்தி வைப்பார்கள்.இரண்டு நாட்கள் இதே வேலை தொடரும் பின்னர் பழைய மண் தரைகள் சுரண்டி எடுக்கப்பட்டு அதன் மீது அப்பவே அழகாக களி மண் சாந்தை பூசி மேருகிடுவார். நாங்கள் உடன் இருப்போம் உதவிக்கு. வீட்டில் வேறு வேறு அளவுகளை கரணைகள் இருக்கும். மட்டபலகை. தேய்ப்பான் , இரும்பில் மண் சாந்து சட்டி என எல்லாமே இருக்கும். பூசிய தரயில் பாலீஷ் பண்ண கை அடக்கமான கருங்கல் போட்டு தேய்த்து தேய்த்து மண் தரை மெருகு ஏறும்.
போன வருடம் பொங்கல் கழிந்து சாணமிட்டு மெழுகி வைத்த பொங்கல் அடுப்பு கட்டிகள் மேலிருந்து கீழே இறங்கும். ஒரே அளவில் மொத்தம் ஐந்து கட்டிகள். இவற்றுடன் பிள்ளையார் பிடித்து வைக்கவென்று மூன்று படிகள் போல அமைந்த பிள்ளையார் மேடை எல்லாம் புதிய களிமண் சாந்து பூசிக்கொண்டு வெய்யிலில் காயும். 

கும்பகோணத்திலிருந்து அப்பா இரவு சைக்கிளில் பெரிய பைகளுடன் வருவார்கள். சாப்பாடு முடிந்தபின்னர் அடுப்பில் செம்பு தவலையில் அம்மா வெந்நீர் இட,அதற்குள் அறையில் இருக்கும் காது வைத்த பித்தளை அண்டவை முற்றத்தின் ஒரு மூலையில் இரும்பு வட்டத்தின் மீது ஆடாமல் வைத்து அதனுள் வாங்கி வந்த சுண்ணாம்பு கிளிஞ்சைகளை கொட்டுவார்.வேடிக்கை பார்க்கும் எங்களை தள்ளி நிற்க சொல்லிக்கொண்டே அம்மா கொண்டுவரும் கொதித்த நீரை அண்டாவில் உள்ள சுண்ணாம்பு கிளிஞ்சல்களில் மீது சட சட வென விரைந்து ஊற்றிக்கொண்டே எங்களை தள்ளிபோய் நிற்கும்படி ஆணை வரும்.

கொதிக்கும் நீரை உள்வாங்கி மௌனமாய் இருக்கும் கிளிஞ்சல்கள் நீரில் கொப்பளங்களை ஒன்று ஒன்றாக வெளிவிட்டு திடீரென்று சடவென கொதித்தி ஆத்திரத்துடன் ஆவியை வெளியில் பரப்பும். புதிய சுண்ணாம்பின் கார மனம் காற்றில் பரவ அப்பா எங்கள் மேலும் தூரம் விரட்டுவார். இவையெல்லாம் சில நிமிடங்கள்தான். கொதித்து அடங்கும் சுண்ணாம்பு அண்டாமீது ஒரு தாம்பாளம் வைத்து மூடிவிட்டு படுக்கசெல்லுவோம்.
அடுத்தநாள் காலையில் ஒரு சிறிய கை குட்டை அளவு வெள்ளைத்துணியில் குருவி நீலம் பவுடர் பாக்கெட்டை பிரித்து நீல பொடியை தேவையான அளவு கொட்டி அதை முடிச்சிட்டு குளிர்ந்து தெளிந்து இருக்கும் சுண்ணாம்பு நீரில் கரைக்க மங்கிய வெள்ளை நிறம் மாயமாகி அழகிய நீல வெள்ளை மலருவதை பார்க்க வியப்பாக இருக்கும்.கையில் ஆளுக்கு ஒரு பித்தளை அல்லது இரும்பு வாலி, அதனுள் தேவையான அளவு சுண்ணாம்பு, கத்தாழை நாரில் அல்லது தேங்காய் மட்டையில் செய்த பிரஷ். சுவர்கள் மெல்ல மெல்ல பளிச்சென நீல வெண்மை கொள்ளும்.கீழ் பகுதி பார்டருக்கு ஆரஞ்சு மஞ்சள் வண்ணம் அப்பா அடிப்பார்.

வீட்டுக்கொல்லையில் எப்படியும் மூன்ற நான்கு வாழை மரங்கள் குலைதள்ளி தயாராக இருக்கும்.பூவன்,பேயன் என வெரைட்டிகள்.வாழைத்தாரை சீப்புகளாக்கி பால் வடிய விட்டு மாலையில் கொள்ளையில் நாரத்தை மரத்தின் அருகில் தோண்டியுள்ளசுமார் மூன்று அடி ஆழ  குழியில் முதலில் வாழை சருகளை இட்டு அதில் சீப்புகளை அடுக்குவார்.அணைத்து சீப்புக்களும் உள்ளே அடைந்த பின் மேலும் சருகுகளால் சுற்றி மூடி,களிமண் போட்டு மேல் பக்கம் பூசிவிடுவார். மையத்தில் சிறிது இடமிருக்கும் ஓர் மண் கலயத்தில் அடிபகுதியில் சிறிய துளை இருக்கும். கலயத்தின் வாய் வழியாக உலர்ந்த தேங்காய் நார்களை நிறைய திணித்து தர கலயத்தின் அகன்ற வாய் குழியின் சருகளின் மீது இருக்க,கழுத்துப்பகுதிகளில்மண் பூசி " கொடாப்பு " தயாராகும்.


இன்னும் இருக்கே! காய் பழுக்க வேணாமா?
மேலே தெரியும் கலயத்தின் சிறிய துளையில் நெருப்புகட்டியை வைத்து தேங்காய் நாரின் உள்ளே வைத்து பூஸ்... பூஸ்.... பூஸ்....  என்று வாய் வலிக்கும் வரை காற்றை ஊதவேண்டும். இதில் பிள்ளைகள் நாங்கள் மாறி மாறி ஊதித்தள்ளிவிடுவோம்.மூன்று நாட்கள் காலையும் மாலையும்நெருப்பு வைத்து ஊதுவது தினமும் நடக்கும்.அதாவது போகி அன்று காலையில் கொடாப்பு பிரிக்கப்படும். கலயத்தை சருகுகளை அகற்ற மஞ்சள் நிற வாழை பழ சீப்புகள் புகை மனதுடன் வெளியில் வரும்.அவைகள் அடுத்த நாள் தான் முற்றிலும் கனிந்திருக்கும் என்பதால் வாசல் முற்றத்தில் உள்ள கொடி கம்பிகளில் தொங்கவிடப்படும்.சாம்பல் பூத்த பசுமையான பேயன் பழம் தான் கனிந்த பின் தேனாய் இனிக்கும். ஆயிற்று, கடைத்தெருவிலிருந்து கரும்பு கட்டு யாராவது திணையில் கொண்டுவந்து போடும் சப்தம் வரும்.பின்னால் அப்பாவும் யாரவது நண்பர்கள் வர அவர்களுக்கு கரும்பும் வாழை சீப்பும் கிடைக்கும். பொங்கல் இட புது மண் பானைகள் சட்டிகள்,வெண்பொங்கல் இட பெரிய அளவில் இருக்கும் பானை. சர்க்கரை பொங்கலுக்கு என சற்று சிறிய பானை என்றுதான் எல்லார் வீடுகளிலும் வாங்குவார்கள். மடக்குகள் மற்றும் கொட்டாங்கச்சியில் செய்த நீண்ட கைப்பிடி கொண்ட அகப்பைகள் எல்லாம் தெருவில் வரும். 


போகி அன்று வீட்டை சுத்தம் செய்யும் வேலை பெண்டு கழட்டும்.வீடு முழக்க பளிச்சென்று ஒருவித மண் மனதுடன், புதிய சுண்ணாம்ம்பு மனத்துடம் டியுப் லைட் ஒளியில் ஜொலிக்கும். பொங்கலன்று காலையில் அடுப்பு கட்டிகள் மீண்டும் சான மெழுகு பெற்று வெய்யிலில் காயும். காய்த்தும் அதன் மீது அம்மா இடும் மாக்கோலம்.முற்றத்தில் நீள் சதுர அளவில் மணலை கொட்டி அதன் மீது நெல் உமி அல்லது தவிடு பரப்புவார்கள். பொங்கல் அடுப்பு கட்டிகள் அதன் மீது திட்டமாக் இரண்டு அடுப்புகள் வருமாறு வைக்கப்படும்.பிள்ளையார் மேடையில் மாக்கோலம் இட்டு மஞ்சள் சிறிய அல்லது வெற்றிலை மீது புதிய பசும் சாணத்தில் இரண்டு "பிள்ளையார் " உருட்டி வைத்து தலையில் அருகம் புல் சொருகி,பொட்டும் சாமந்தியும் பூவும் வைத்து பக்கத்தில் ஒன்றாக இரண்டுகுத்து விளக்கும் ஏற்றி வைத்தால் பொங்கல் இட ரெடி. இதற்குள் வீடு முழுதும் மாக்கோலம் வரைந்து,தேங்காய்கள் பறிக்கும் போதே ஞாபகமாய் வெட்டி எடுக்கசொன்ன குருத்தோலைகளை செயபட்ட கூந்தல் அடுக்குகளை முற்றத்தின் விளிம்பு சுற்றி கட்டிய கயற்றில் வரிசையாக புனைந்து, இடையில் மாவிலை கொத்துக்கள் இணைத்து கட்டி,கரும்பு கழிகள்,மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து என நீரில் அலசி விளக்குகளின் பின்னே வைக்கப்படும். வீட்டில் டிசம்பர் பூ, நந்தியாவட்டை, செம்பருத்தி என கிடைத்தாலும் அம்மா வாங்குவது சாமந்திபூ மற்றும் கூடவே மருகொழுந்தும்,கதிர்பச்சையும் தான்.ஆஹா...... இந்த கதிர் பச்சை இருக்கே அதற்கென்று அந்த ஆளை மயக்கும் மனம் எப்படித்தான் வந்ததோ!.முற்றத்தில் தட்டில் வைத்தால் போதும் வீடே மனக்கும்.கூடவே புது மஞ்சள் இஞ்சி மனம் கலந்து பொங்கல் என்றாலே அதற்கென்று அடையாளமாக இந்த மனம் தான்நினைவுக்கு வரும் இன்றும்.ரேடியோவில் சொல்லிவைத்தார்போல பொங்கல் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்.இடையில் போஸ்ட் மென் கொண்டுவந்த பொங்கல் வாழ்த்துகளை விரித்து வரிசையாக நூலில் மாட்டப்படும்.

பொங்கல் அடுப்புக்கு பெரும்பாலும் தென்னை மட்டைகள்தான்,ஓலைகள்,வரட்டிகள். மரக்கட்டைகள் பயன்படுத்தினால் புது மண் பானைகள் டேமேஜ் ஆகக்கூடாது அல்லவா? மண் பானைகள் சட்டிகள் நீரில் அலசப்பட்டு தயாராகும். கையில் திரு நீரை குழைத்து பானைகளின் மேல விரல்களால் மூன்று பட்டைகளை இட, அது 'சொய்ங்' என்ற நேரத்தில் காய்த்து வெள்ளை கோடுகள் ஒளி விடும்.மஞ்சள் இஞ்சி கொத்துக்களை இரண்டாக பிரித்து பனைகளில் கழுத்தில் கட்டி, திரு நீற்று கோடுகளின் மீது போட்டும் வைத்தால் போதும் இந்த பொங்கல் பானைகள் ஏதோ புது மண பெண்கள் போல அழகாகவே இருக்கும்.

ஆயிற்று, பானைகளை அடுப்பில் ஏற்றி வைத்து,பாலை ஊற்றி, அதனுடன் பச்சை அரிசி கலைந்த நீரையும் ஊற்றிவிட அடுப்பில் எரிபொருட்களை வைத்து விட்டு பிள்ளையார் விளக்கில் சூடம் கொளுத்தி சுற்றிவிட்டு மேலே வரும் சூரியனுக்கும் காட்டி விட்டு இரண்டு அடுப்புகளும் பற்றவைகப்படும்.ஆளுக்கு ஒரு அடுப்பு என கவனித்துக்கொள்ளவேண்டும்.வெண்பொங்கல் பானைதான் முதலில் பொங்க வேண்டுமாம்.அதுவும் வடக்கு திசையில் பொங்கி வழிகிறதா என்ற எதிபார்ப்பு. இதற்க்கு தோதாக அடுப்பின் வடக்கு பக்கம் தான் தீ அதிகம் இருக்குமாறு கவனிதுக்கொள்வர். பால் பொங்கி வரும்போது பூஜை மணியோ இல்லை பித்தளை தாம்பாளத்தில் சுத்தியலை வைத்து தட்டிக்கொண்டே பொங்கலோ பொங்கல் என்று எல்லோரும் முழங்க வேடிக்கைதான். வடக்கு பக்கம் வழிந்து விட்டால் அம்மாவின் முகத்தில் மலர்ச்சி தெரியும்.களைத்து வைத்துள்ள அரிசி மணிகளை பானைகளில் இட்டு வெண் பொங்கலுக்கு பயத்தம் பருப்பு மட்டும் அரிசியுடன் உடன் சேரும். சர்க்கரை பொங்கல் அரிசியுடன் கடலை பருப்பும் பயத்தம் பருப்பும் சேரும்.அச்சு வெல்லம் நிறைய வாங்கி இருக்கும். பேப்பரில் வெல்லத்தை கொட்டி அவைகளை உடைத்து தயாராகும். முத்திரி, திராட்சை சுத்தம் செய்யப்பட்டு இருக்கும்,ஏலக்காய் பொடித்து தயாராகும்.

பொங்கல் காய்கறிகள் பற்றி எழுத தனியே ஒரு பதிவே போடலாம்.கொல்லை தரையில் படர்ந்து பனியில் நனைந்தஇலைகளுக்கு அடியில் ஒளிந்துகொண்டு கிடக்கும் பரங்கி காய்கள் மற்றும்பிஞ்சுகளை தேடி தேடி கண்டுபிடித்து கொண்டு வருவேன். பூசணி, வாழைக்காய்,சிவப்பு அவரை, பச்சை அவரை,மொச்சை கொட்டை,தக்காளி காய், பீன்ஸ்,உருளை,வெள்ளை முள்ளங்கி,சிவப்பு முள்ளம்கி,அகத்திக்கீரை,நெல்லிக்காய்,
கத்தரிக்காய்,சிறுகிழங்கு,கருனைகிழங்கு,சேப்பங்கிழங்கு,சேனைகிழங்கு,சர்க்கரை வள்ளிகிழங்கு என பெரிய பட்டியலே வரும்.

பொங்கி முடிந்ததும் பொங்கல் பானைகள் பிள்ளையார் அருகில் இட வலமாக வைத்துள்ள ஈரக்களிமண் வட்டத்தில் தூக்கி வைக்கப்படும். பெரிய மண் சட்டியில் மீதம் இருக்கும் கழனீரை வைத்து கொதிக்க வைக்க , வாசல் கறி வேலைகள் ஆரம்பம்.கதிர்பச்சை வாசம் போல எனக்கு பொங்கலை நினைவூட்டுவது இந்த நாளில் மட்டுமே செய்யப்படும் வாசல் கறி. வீற்று முற்றத்தின் வாசலில் செய்யப்படுவதால் அது வாசல் கறியாம். மேலே சொன்ன அத்தனை காய்கறிகளும் இதனுள் அடைக்கலம் ஆகிவிடும்.

சிறிது அரிசி, கொத்துமல்லி விதை,துவரம் பருப்பு, கடலை பருப்பு ,மிளகாய் வற்றல் மிளகு,சீரகம்,மஞ்சள் என்று போட்டு வாணலியில் வறுத்து அம்மியில் கரகரப்பாக பொடித்து தயாராகிவிடும்.எல்லா காய்கறிகளும் ஒன்றாக வேக வைத்து, அதனுடன் இந்த 'பொருமா' பொடியை தாராளாமாக தூவி கொதிக்கவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்துகொட்டி,கொத்துமல்லி தழைகளை நறுக்கி இட்டால் போதும் வாசல் கறி தயார்.இந்நேரம் போகும் போதும் வரும் போதும் தொங்கும் வாழை பழங்களை பிய்த்து தின்றாலும் வாசல்கறியின் மனம் மூக்கில் பட வயிற்றில் பசி ஆரம்பித்துவிடும். இதற்கு மேலே எழுத இன்னமும் உள்ளது. இப்போது இது போதும். 


சரி, பொறுமையுடன் படித்த மக்காள்ஸ் அனைவருக்கும் 

இனிய பொங்கல் வாழ்த்துக்கள். 

வாழ்க வளமுடன்! 


48 comments:

ஆர்வா சொன்னது…

இந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு மிகவும் புதிது. அருமை..
பொங்கள் வாழ்த்துக்கள் நண்பரே..

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றி. பொங்கல் வாழ்த்துக்கள்.

RVS சொன்னது…

என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மாணிக்கம். ஒரு கிராமப்புற பொங்கல் கொண்டாட்டத்தை வார்த்தை படுத்தியமைக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள். ;-) ;-)

தமிழ்போராளி சொன்னது…

வாழ்த்துக்கள் தோழரே..தொடரட்டும்..

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

எல் கே சொன்னது…

உ.த அண்ணாச்சியோட போட்டி போடறீங்களோ ?? இவ்வளவு பெரியப் பதிவு. படிக்கறதுக்குள்ள... பல புதிய விஷயங்கள். இந்த வார்த்தை நான் கேள்விப் படாத ஒன்று

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பெரிய பதிவு இருந்தாலும் படிக்க நல்லாத்தான் இருக்கு...

அதிர்ஷ்டரத்தினங்கள் சொன்னது…

///பூசிய தரயில் பாலீஷ் பண்ண கை அடக்கமான கருங்கல் போட்டு தேய்த்து தேய்த்து மண் தரை மெருகு ஏறும்.///

நாங்கூட அந்த தீத்து கல்லால மண்ணு தரைய தேய்ச்சு இருகேண்ணா..?

அருமை பதிவு..!

சசிகுமார் சொன்னது…

தங்களுக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணா

ஸ்ரீராம். சொன்னது…

நினைவுகள் பொங்கி விட்டதா?

பொங்கலோ பொங்கல்...பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொன் மாலை பொழுது சொன்னது…

என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மாணிக்கம். ஒரு கிராமப்புற பொங்கல் கொண்டாட்டத்தை வார்த்தை படுத்தியமைக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள். ;-) ;-)

RVS சொன்னது…

வருகைக்கு நன்றி R V S. ஏன் சென்ற பதிவுகளில் காணோம்?

தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொன் மாலை பொழுது சொன்னது…

வாழ்த்துக்கள் தோழரே..தொடரட்டும்.
விடுத‌லைவீரா சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி . இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

நன்றி, ஏன் சென்ற பதிவுகளில் வரவில்லை. பதிவர்கள் எல்லோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதே.
உங்களுக்கும் உண்டு.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

பெரிய பதிவு இருந்தாலும் படிக்க நல்லாத்தான் இருக்கு..
MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நன்றி மனோ, இனிய பொங்கல் வாழ்த்துக்கள். :))

பொன் மாலை பொழுது சொன்னது…

///பூசிய தரயில் பாலீஷ் பண்ண கை அடக்கமான கருங்கல் போட்டு தேய்த்து தேய்த்து மண் தரை மெருகு ஏறும்.///

நாங்கூட அந்த தீத்து கல்லால மண்ணு தரைய தேய்ச்சு இருகேண்ணா..?

அருமை பதிவு..!

அதிர்ஷ்டரத்தினங்கள் சொன்னது…


எனக்கு மறந்து விட்டது. அமாம் அதன் பெயர் தீத்துக்கல்லுதான்.
நன்றி, தமிழ். இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

தங்களுக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணா .
சசிகுமார் சொன்னது

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சசி.

பொன் மாலை பொழுது சொன்னது…

நினைவுகள் பொங்கி விட்டதா?

பொங்கலோ பொங்கல்...பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். சொன்னது…


ஆமாம். பொங்கலோ பொங்கல். வாழ்த்துக்கள் ஸ்ரீராம்

பொன் மாலை பொழுது சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நன்றி சதீஷ். தங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

எல் கே சொன்னது…

கண்டிப்பா. ஒரு வட்டார வழக்கத்தை தெரிந்து கொண்ட திருப்தி

Menaga Sathia சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோ!!

Murugavel சொன்னது…

அன்பு நண்பருக்கு, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், என்னடா எல்லாமே நம்ம வாழ்க்கையில் நடந்த பொங்கல் நிகழ்வுகள் மாதிரியே இருக்கேனு பார்த்தா, அட நீங்க நம்ம ஊருகாரரா, 15 வருடம் பின்னோக்ககிய நினைவுகளை மீட்டெடுத்தமைக்கு நன்றி நண்பரே, எனக்கும் கும்பகோணம் பக்கத்தில் விஷ்ணுபுரம் கிராமம்தான்,

கி. முருகவேல்,
அபுதாபி

பொன் மாலை பொழுது சொன்னது…

உ.த அண்ணாச்சியோட போட்டி போடறீங்களோ ?? இவ்வளவு பெரியப் பதிவு. படிக்கறதுக்குள்ள... பல புதிய விஷயங்கள். இந்த வார்த்தை நான் கேள்விப் படாத ஒன்று

எல் கே சொன்னது…

எஸ். கே. எனக்கே அப்படித்தான் பெரிசா இருந்தது. நிறைய குறைத்துவிட்டேன். அதனால் தான் பசி வரும் வரை எழுதினேன் இன்னமும் நிறைய இருக்கு.
தஞ்சை, குடந்தை பகுதியில் உள்ள கிராமங்களில் பெரும்பாலும் பொங்கல் விழா எல்லோர் வீட்டிலும் இப்படித்தான் நடக்கும். வட்டார வழக்குகள் , பலருக்கு புதிதாக இருக்கலாம்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
13 ஜனவரி, 2011 4:14 pm

பொன் மாலை பொழுது சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோ!!

S.Menaga சொன்னது…

வாருங்க மேனகா.....என்ன ரொம்ப நாலா காண வில்லையே?
அங்கு ஊரில் இல்லையா?

நீங்க இல்லாம ஒரு குறைதான்.

தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொன் மாலை பொழுது சொன்னது…

வாருங்கள் முருக வேல்.
முதல் முதலாக வந்துள்ளீர்கள். நல்வரவாகட்டும்.
விஷ்ணுபுரம் கேள்விப்பட்டதுண்டு. நான் பட்டீஸ்வரம் .
வருகைக்கு நன்றி.
தங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

பொங்கலோ பொங்கல் என்றே பொங்குக பால்பானை!
பொங்கிவரும் ஆனந்தம் சேர்க்கட்டும் மங்கலத்தை!

பொன் மாலை பொழுது சொன்னது…

பொங்கலோ பொங்கல் என்றே பொங்குக பால்பானை!
பொங்கிவரும் ஆனந்தம் சேர்க்கட்டும் மங்கலத்தை!

எஸ். கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

வாருங்கள் திரு. எஸ். கே. தங்களின் வாழ்த்து என்னை மகிழ்ச்சி அடை செய்கிறது.

தங்களுக்கும்என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணா

பொன் மாலை பொழுது சொன்னது…

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணா


வெறும்பய கூறியது...

வாருங்கள். தங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
இந்த பேர மாத்தி வெச்சிக்கக் கூடாதா ?

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

டாக்டர் பட்டத்திற்கு நன்றி :)

எஸ்.கே சொன்னது…

வாழைப்பழ விசயம் எனக்கு புதிது!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

(கரும்பு, வெல்லம் எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள்!)

GEETHA ACHAL சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....

பொன் மாலை பொழுது சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....
GEETHA ACHAL சொன்னது…

தங்களின் வருகைக்கு நன்றி,

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் சொன்னது…

அந்த அழகிய நாட்களை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்! இப்போது அமீரகத்தில் இதையெல்லாம் நினைத்துப் பார்த்துத் திருப்தி அடைய வேண்டியதுதான்!
இனிய பொங்கல் வாழ்த்துகள்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வந்துட்டோமுல்ல....

பொன் மாலை பொழுது சொன்னது…

அந்த அழகிய நாட்களை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்! இப்போது அமீரகத்தில் இதையெல்லாம் நினைத்துப் பார்த்துத் திருப்தி அடைய வேண்டியதுதான்!

சென்னை பித்தன் சொன்னது…

சரியாகசொன்னீர்கள். வேறு என்ன செய்வது?

தங்களிக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சென்னை காதலன் அவர்களே!

பொன் மாலை பொழுது சொன்னது…

// வந்துட்டோமுல்ல....//

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வராம இருந்தா விற்றோவுமுள்ள ?? வாருங்க மனோ, உங்க தளம் எனக்கு பிடிதவைகளுள் ஒன்று.
என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மனோ.

Jaleela Kamal சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துகக்ள்

ஆஹா கரும்ப பார்த்த எவ்வள்வு ஆனந்தமா இருக்கு.
பழைய நினைவலைகள் மனதில் ஓடுகிறது,

Unknown சொன்னது…

இதுதாங்க உண்மையான பொங்கல்..
பொங்கல் பற்றிய நினைவலைகள் அருமை.நன்றி..

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அப்படியே எங்க ஆச்சி வீட்டுக்கு ஒரு நடை போயிட்டு வ்ந்தமாதிரி இருக்கு :-)

பொங்கல் வாழ்த்துகள் சகோ..

வேலன். சொன்னது…

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

கடைசி படத்தில வணக்கம் கூறி வாழ்தது சொல்லறது யாருங்கோ....?

வாழ்க வளமுடன்.
வேலன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

//இனிய பொங்கல் வாழ்த்துகக்ள்

ஆஹா கரும்ப பார்த்த எவ்வள்வு ஆனந்தமா இருக்கு.
பழைய நினைவலைகள் மனதில் ஓடுகிறது,//
Jaleela Kamal சொன்னது…

எல்லோருக்கும் அப்படித்தான் ஆகிவிட்டது.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

//இதுதாங்க உண்மையான பொங்கல்..
பொங்கல் பற்றிய நினைவலைகள் அருமை.நன்றி..//

பாரத்... பாரதி... சொன்னது…


குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு நினைவு மட்டுமே நமக்கு எஞ்சி நிற்கும். இந்த விதி அனைவருக்கும் பொதுதான் பாரதி.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

//அப்படியே எங்க ஆச்சி வீட்டுக்கு ஒரு நடை போயிட்டு வ்ந்தமாதிரி இருக்கு :-)

பொங்கல் வாழ்த்துகள் சகோ..//
அமைதிச்சாரல் சொன்னது…

வாருங்கள் அமைதிசாரல்.
ஆச்சி வீடு எங்குள்ளது என்று சொல்லவே இல்லையே?!:))
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

//இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

கடைசி படத்தில வணக்கம் கூறி வாழ்தது சொல்லறது யாருங்கோ....?//

வேலன். சொன்னது

இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவருதான் மாப்பு. பதிவிட்டு ரெண்டுநாள் ஆயாச்சி. எங்கே ஆளையே காணோம்?
கடைசி பக்கத்தில் வணக்கம் சொல்லி வாழ்த்து கூறுவது யார் என்றா தெரியாது??

Asiya Omar சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.அருமையான பகிர்வு.

Tamil Book Mark (Beta) சொன்னது…

வணக்கம் நண்பரே!
புதிய தமிழ் திரட்டியான http://www.tamilookmark.co.cc தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக‌ இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
- தமிழ்புக்மார்க் குழு
http://www.tamilookmark.co.cc

(தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக