பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஜனவரி 18

சுவிஸ் திருட்டு கணக்குகள் எல்லாம் இனி சந்திக்குவருமாம் - விக்கிலீக்ஸ்




புலி வருது புலி வருது ...என்று இறுதியில் புலி மட்டும் இல்லை,பேய் , பூதம், பிசாசு, காட்டேரி என அத்தனையும் வெளிவரும்போல உள்ளது. எதிர் வரும் தேர்தலுக்கு முன்பாக இவைகள் வெளிவரவேண்டும். இந்திய உச்சநீதிமம்ன்றமும் இந்தியர்களின் சுவிஸ் வங்கி திருட்டு கணக்குகளின் பட்டியல் கிடைத்தும் ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என பல முறை இந்திய அரசை கேட்டு கேட்டு சலிப்படந்ததுதான் மிச்சம்.

விக்கிலீக்ஸ் இவர்கள் அனைவரின் பெயர்களையும் வெளியிட்டால் அத்தனை பேரும் ஆப்பு பிடுங்கின குரங்குகளாக மாட்டிக்கொள்ள வேண்டும். ஆனால் நம் நாட்டில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் வந்துவிடாது என்று நம்புவோமாக. ஏனெனில் இந்த பெயர்பட்டியலில் அத்தனை அரசியல் கட்சிகளின் கயவர்களும் மொள்ளமாரிகளும் தான் இடம்பெற உள்ளனர். ஏதோ இங்கொன்று அங்கொன்று என்றால் பரவாயில்லை. இருக்கும் அத்தனையு பேரும் அப்படித்தான் என்றால் இவர்களை அப்புறப்படுத்திவிட்டு வேறு யாரை நாம் மட்டும் கொண்டுவந்து வைத்துவிடுவோம்??

லண்டன், ஜன.17-
சுவிஸ் வங்கியில் ரகசியமாக முதலீடு செய்திருப்பவர்களின் விவரங்களை விரைவில் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடவுள்ளது.ஜூலியஸ் பேயர் என்னும் பிரபலமான சுவிஸ் வங்கியின் முன்னாள் அதிகாரி ருடால்ஃப் எல்மர், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பிரபல நபர்கள் வைத்திருக்கும் ரகசிய முதலீட்டு விவரங்கள் அடங்கிய குறுந்தகட்டை (சி.டி.) விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசான்ஜேயிடம் வழங்கியுள்ளார்.

லண்டனில் உள்ள "ஃபிரன்ட்லைன் கிளப்"பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜுலியன் அசான்ஜேயிடம் சுவிஸ் வங்கியின் முன்னாள் அதிகாரி ருடால்ஃப் எல்மர் அந்த குறுந்தகட்டை ஒப்படைத்தார்.
இதையடுத்து, ருடால்ஃப் எல்மருக்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ஜே தனது பாராட்டை தெரிவித்தார். "இதன் மூலம் நிதி உலகின் நிழல் நடவடிக்கைகளை ஒழித்துக்கட்ட முடியும்" என்று அசான்ஜே குறிப்பிட்டார்.
சி.டி.,யில் உள்ள தகவல்கள் ஆராயப்பட்டு விக்கிலீக்ஸ் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கத் தூதரகங்களின் ரகசிய அறிக்கைகளை வெளியிட்டு வந்த விக்கிலீக்ஸ் இணையதளம், தற்போது சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் அரசியல் வாதிகள் , ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் மந்திரிகள் அன்றி, தொழில் முனைவோர்களும், சினிமா காரர்களும் மற்றும் கிரிகெட் வீரர்களும்தான் அதிக அளவில் சுவிஸ் வங்கிகளில் திருட்டு கணக்குகளை வைத்துள்ளனர் என்ற விபரங்களும் வர தொடங்கிவிட்டன.

தினமணியில் வந்துள்ள ஒரு வாசகர் கடிதம்:

// ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட பொது உடன் இருந்த திண்டிவனம் ராமமூர்த்திக்குகூட சுவிஸ் வங்கியில் அக்கேளண்ட் இருந்தது.இது ஒரு இலங்கைத் தமிழர் மூலமாக கையாளப்பட்டது.தயாநிதி மாறனுக்கும்,கவிஞ்சர் வைரமுத்துவுக்கும் இவ்வாறே இலங்கைத்தமிழர் மூலமாக சுவிஸ் வங்கியில் வைப்புகள் உள்ளன!.கடந்த ஒருவாரமாக இந்தப் பணங்களையும்,ஸ்பெக்ட்ரம் பணங்களையும்? 32 சுவிஸ் இலங்கைத்தமிழர் மூலமாக பைனான்ஸ் செய்துவந்த நிறுவனங்களை சுவிஸ் அரசாங்கம் சீல் வைத்து உரிமையாளர்களை கைது செய்துள்ளது.மக்கள் விழிப்புடன் இருந்து வைரமுத்துவையும்,தயாநிதி மாறனையும் தப்பவிடாமல் கண்காணிக்கவும் //
  
By மோகன் 

அதுசரி இவர்களை எல்லாம் யார் கண்காணிப்பார்கள்? சி.பி. ஐ.? சிரிப்புத்தான் வருகிறது.



கீழ் கண்ட இந்த பதிவின் இணைப்பில் சென்று வாசிக்கவும்.


http://sangkavi.blogspot.com/2011/01/blog-post_17.html

37 comments:

எல் கே சொன்னது…

கண்டிப்பா எதுவும் வெளியில் வராது. அப்படியே வெளியில் வருவதும் எதிர்க்கட்சி மற்றும் தன்னுடன் முறித்துக்கொள்ளும் கூட்டணிக் கட்சி இவர்களின் விவரம் மட்டுமே வரும் . எனவே உபயோகம் இல்லை,. ஏனென்றால் அங்கு அதிகம் பதுக்கி இருப்பது கண்டிப்பாக காங்கிரஸ் கட்சியினர்தான்

பொன் மாலை பொழுது சொன்னது…

//கண்டிப்பா எதுவும் வெளியில் வராது. அப்படியே வெளியில் வருவதும் எதிர்க்கட்சி மற்றும் தன்னுடன் முறித்துக்கொள்ளும் கூட்டணிக் கட்சி இவர்களின் விவரம் மட்டுமே வரும் . எனவே உபயோகம் இல்லை,. ஏனென்றால் அங்கு அதிகம் பதுக்கி இருப்பது கண்டிப்பாக காங்கிரஸ் கட்சியினர்தான் //

எல் கே சொன்னது…

உண்மைதான் . விக்கிலீக்ஸ் சகலவிதமான விபரங்களையும் ஊர் பேருடன் வெளியிட்டால் கூட இங்கு ஒன்னும் ஆகப்போவதில்லை. நாமும் பிளாக்கில் எழுதுவோம். பேப்பரில் படிப்போம், டி. வியில் விவாதம் செய்வோம். கொஞ்சகாலம் நாடே யானை புகுந்த வெண்கல கடையாக இருக்கும். ஊடகங்கள் தங்களை பரபரப்பாக விற்று நல்ல முறையில் அவர்கள் "கல்லா" கட்டுவார்கள். அடுத்த தேர்தல் வந்துவிடும். மக்களுக்கு எல்லாம் ப்ரீயாக கிடக்கும் நாமும் யாருக்காவது ஒட்டு போடுவிட்டுவந்து வீட்டில் டி. வி. பாப்போம். இல்லை என்றால் பிளாக்கில் விவாதம் செய்வோம். இதையும் மீறி என்ன நடந்துவிடும்?


நன்றி எல்.கே.

பாலா சொன்னது…

கணக்குகள் வெளிவந்தாலும், நாம் மக்கள் பரவாயில்லை நம்ம ஆளுங்க சுவிஸ் பாங்க்லேயே அக்கவுண்ட் வச்சிருக்காங்கண்ணு மக்கள் சிலாகித்து பேசுவார்கள்.

என்ன கொடும சார் இது?

bandhu சொன்னது…

இதன் மூலம் நூறு நல்லது நடக்க வேண்டிய விஷயத்தில் ஒரு நல்லதாவது நடக்கும் என்று நம்புகிறேன்!

ஆர்வா சொன்னது…

ஆஹா.. வரட்டும் வரட்டும்.. ஜீலியனுக்கு புண்ணியமா போகும். சீக்கிரமா வெளியிட சொல்லுங்கப்பா..

ஆர்வா சொன்னது…

திண்டிவனம் ராமமூர்த்தியைக்கூட ஒத்துக்கலாம். வைரமுத்துக்கூடவா? அவ்ளோவா அவரு சம்பாதிச்சிட்டாரு??

kobikashok சொன்னது…

எத்தனையோ சம்பவங்களை மறைத்த நம் அரசியல் முதலைகளுக்கு இது சர்வ சாதாரணம்

Jana சொன்னது…

முதலில் அப்படி பணங்கள் சுவிஸ் வங்கியில் இல்லை என்று அறவே மறுத்தார்கள், பின்னர் அவை இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என்றார்கள், இப்போ விக்கிலீக்கின் சில அம்பலங்கள்.
எதுஎப்படியோ.. தப்பித்தவறி அந்தப்பணம் வந்தாலும் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்று எவரும் நம்பவில்லை என்பது ஆச்சரியம் இல்லை.

எஸ்.கே சொன்னது…

//தோ இங்கொன்று அங்கொன்று என்றால் பரவாயில்லை. இருக்கும் அத்தனையு பேரும் அப்படித்தான் என்றால் இவர்களை அப்புறப்படுத்திவிட்டு வேறு யாரை நாம் மட்டும் கொண்டுவந்து வைத்துவிடுவோம்??//

ஆமாம். பத்து கெட்டவனை கையில கொடுத்து ஒன்னை தேர்ந்தெடுன்னா என்ன பண்ணுறது!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹலோ கக்கு, எனக்கு இங்கே அல் ஆலி பேங்க்ல இருவது தினார் போட்டு வச்சிருக்கேன்,
அதையும் கொண்டு வந்து காட்டி என் முகத்திரையை கிழித்து விடுவார்களோன்னு பயமா இருக்கு....!!!

சசிகுமார் சொன்னது…

நீங்க சொல்வது போல அவனுங்களே எப்படி அவனுங்க பண்ண மொல்லாமாரிதனத்தை ஒத்துப்பாங்க சரியா பொ.............பசங்க.

Unknown சொன்னது…

பதிவின் ஆரம்பமே அமர்க்களம்.

//ஆனால் நம் நாட்டில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் வந்துவிடாது என்று நம்புவோமாக.// என்ற வரிகள் நக்கல்.

ஸ்விஸ் வங்கியிலுள்ள இந்திய பணம் மீட்பதற்க்காக இன்னும் ஒரு சுதந்திரப்போராட்டம் தான் நடத்த வேண்டும் போல..

Unknown சொன்னது…

சங்கவி அவர்களின் வலைப்பூவிற்கு இணைப்பு கொடுத்ததற்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

// கணக்குகள் வெளிவந்தாலும், நாம் மக்கள் பரவாயில்லை நம்ம ஆளுங்க சுவிஸ் பாங்க்லேயே அக்கவுண்ட் வச்சிருக்காங்கண்ணு மக்கள் சிலாகித்து பேசுவார்கள்.//

என்ன கொடும சார் இது
பாலா சொன்னது…

சுதந்திரம் வாங்கி இன்னமும் அடிமைத்தனம் அகலவில்லை நம்மிடமிருந்து.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி bandhu

பொன் மாலை பொழுது சொன்னது…

//திண்டிவனம் ராமமூர்த்தியைக்கூட ஒத்துக்கலாம். வைரமுத்துக்கூடவா? அவ்ளோவா அவரு சம்பாதிச்சிட்டாரு??//

கவிதை காதலன் சொன்னது…

இன்னமும் உலகம் தெரியாதவரா நீங்க? எல்லோரும் யாருக்கோ "பினாமிகள்"

பொன் மாலை பொழுது சொன்னது…

//எத்தனையோ சம்பவங்களை மறைத்த நம் அரசியல் முதலைகளுக்கு இது சர்வ சாதாரணம் //
அசோக்.S சொன்னது…

அதற்கு பெயர்தான் ஜனநாயகம் சார்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// தப்பித்தவறி அந்தப்பணம் வந்தாலும் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்று எவரும் நம்பவில்லை என்பது ஆச்சரியம் இல்லை.//
Jana சொன்னது

காரணம் நமக்கு வாய்தவர்களுக்கு நம் சட்டைகளில் ஒள்ள எல்லா ஓட்டைகளும் தெரியும் .

பொன் மாலை பொழுது சொன்னது…

//தோ இங்கொன்று அங்கொன்று என்றால் பரவாயில்லை. இருக்கும் அத்தனையு பேரும் அப்படித்தான் என்றால் இவர்களை அப்புறப்படுத்திவிட்டு வேறு யாரை நாம் மட்டும் கொண்டுவந்து வைத்துவிடுவோம்??//
எஸ்.கே சொன்னது…

எல்லாமே அழுகல் பழங்கள்தான். இனி ஒரு நல்ல பழம் கிடைக்கவேண்டுமென நாம் / யார் சென்றாலும் அவர்களை சாக அடித்துவிடுவார்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// ஹலோ கக்கு, எனக்கு இங்கே அல் ஆலி பேங்க்ல இருவது தினார் போட்டு வச்சிருக்கேன்,
அதையும் கொண்டு வந்து காட்டி என் முகத்திரையை கிழித்து விடுவார்களோன்னு பயமா இருக்கு....!//

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மனோ, நாமெல்லாம் உழைத்து வாழும் கூட்டம். நம்மிடம் எங்கிருந்துவரும் அந்த அளவு பணம்?
ஊரை அடித்து உலையில் இல்லை சுவிஸ் பாங்கில் போட்டுள்ளவர்களின் முகத்தை தான் அடையாளம் காட்ட போகிறர்கள் . நமக்கு என்ன கவலை ராஜா.?

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி சசி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//ஆனால் நம் நாட்டில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் வந்துவிடாது என்று நம்புவோமாக.// என்ற வரிகள் நக்கல்.

ஸ்விஸ் வங்கியிலுள்ள இந்திய பணம் மீட்பதற்க்காக இன்னும் ஒரு சுதந்திரப்போராட்டம் தான் நடத்த வேண்டும் போல..//

பாரத்... பாரதி... சொன்னது…

ஒருவேளை அப்படி நடந்தால்தான் வரும் தலைமுறைக்காவது நாம் வல்லரசாகமுடியும்.
வருகைக்கு நன்றி.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

LET WAIT AND C

டிலீப் சொன்னது…

ஆஹா..ஆஹா....வர போகுதா ??? இனி இந்தியா செல்வந்த நாடுதான்

Jey சொன்னது…

அண்ணே என்னை மாதிரியே நீங்களும் கனுவு காணுறீங்க நல்லது நடந்தா சரித்தேன். ஹஹஹஹஹஹா

அஹோரி சொன்னது…

//கவிதை காதலன் சொன்னது…

திண்டிவனம் ராமமூர்த்தியைக்கூட ஒத்துக்கலாம். வைரமுத்துக்கூடவா? அவ்ளோவா அவரு சம்பாதிச்சிட்டாரு??
//

அவரு வைரமுத்துவா இருந்தவரைக்கும் பெருசா சம்பாதிச்சி இருக்க வாய்ய்ப்பில்லை. எப்ப "வைரசொம்பு" வா மாறினாரோ அப்பவே வாய்ப்பு அதிகம்.

சென்னை பித்தன் சொன்னது…

நிச்சயமாக எதுவும் மாறாது என்று தெரிய்ம்;ஆனாலும் நம்புவோம்.நம்பிக்கையில்தானே வாழ்க்கையே நடக்கிறது!

THOPPITHOPPI சொன்னது…

//சுவிஸ் திருட்டு கணக்குகள் எல்லாம் இனி சந்திக்குவருமாம் - விக்கிலீக்ஸ்//

தலைப்ப பார்த்தவுடன் கொஞ்சம் மகிழ்ச்சியாத்தான் இருந்தது. ஆனால் பதிவில் உள்ள விஷயத்தை படித்தப்பின் வெளிவந்தாலும் வீண் தான்

வேலன். சொன்னது…

அங்கே கணக்கு ஆரம்பிக்க சென்றேன். அங்கே ஏற்கனவே கணக்கு வைத்துள்ளவர்கள் அறிமுக கையெழுதது போடனுமாம்..எனக்காக நீங்க ஜாமீன் கையெழுதது பொடறீங்களா?
வாழ்க வளமுடன்.
வேலன்.

மங்குனி அமைச்சர் சொன்னது…

அட நீங்க வேற ........கண்ணுக்கு முன்னாடி போட்ட கையெழுத்தே என்னது இல்லைன்னு கோர்ட்டுல சொல்ற நாட்டுல இறுக்கம் சார் ......... இதெல்லாம் அவுங்களுக்கு ஜுஜுபி

குறையொன்றுமில்லை. சொன்னது…

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

அன்புடன் மலிக்கா சொன்னது…

அப்பாடா நல்லதாப்போச்சி நான் தப்பிச்சேன்.

அங்கெல்லாம் உங்களைப்போல் பெரியவாதான் வச்சிருப்பாக கணக்கு..

ஸ்ரீராம். சொன்னது…

எல்கேயின் கருத்தும் உங்கள் பதிலும் சரிதான்...அதே போல எதிர் வரும் தேர்தலுக்கு முன் இவை வருவது...ரொம்ப முன்னால...தேர்தலுக்கு பத்துப் பதினைந்து நாள் முன்னால் ஏதாவது ஒரு இலவச அறிவிப்பு அல்லது அனுதாபம் போதும்...இவை ஒன்றும் மக்களுக்கு ஞாபகம் இருக்காது!

சக்தி கல்வி மையம் சொன்னது…

தலைப்ப பார்த்தவுடன் கொஞ்சம் மகிழ்ச்சியாத்தான் இருந்தது. ஆனால் பதிவில் உள்ள விஷயத்தை படித்தப்பின் வெளிவந்தாலும் வீண் தான் என தோன்றுகிறது.
http://sakthistudycentre.blogspot.com/2011/01/2010-2011.html

settaikkaran சொன்னது…

அடடா, இதென்ன சோதனை! சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிற நம்மூர் அரசியல்வாதிகள், அவமானம் தாங்காமல் தற்கொலை செய்யாமலிருக்க வேண்டுமே? வெட்கம், மானம், சூடு, சொரணை மிகவும் உள்ள அவர்கள் மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமான்கள் ஆயிற்றே! ஐயகோ! அந்தோ!!

அன்புடன் நான் சொன்னது…

இதுக்கெல்லாம் அவர்கள் அஞ்சிட மாட்டார்கள்...... நம் மக்களும்... கொதித்தெழுந்து தண்டிக்க மாட்டார்கள்..... அவர்களாக மாறினால்தான் உண்டு.... நாம வெறுமனே ஆதங்கப்பட வேண்டியதுதான்.....

பிறகு ஆக்ககரமா என்னத்த செய்ய?

kamsha சொன்னது…

nadakkatha onra kathikkathanga

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக