பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஜனவரி 19


ஒட்டிய அட்டை பூச்சிகள்


வெறுமனே எழுதி எழுதி எழுதுபவர்களும் வாசகர்களும் எரிச்சலடைந்து விரக்தியாவது தான் இங்கு நடந்துகொண்டுள்ளது. இருந்தாலும் வேறு வழி இல்லை நமக்கு. எந்த தேவாதி தேவர்களும் விண்ணில் இருந்து கீழே இறங்கி வந்து நம்மை காக்கபோவது இல்லை. இந்த நேரத்திலாவது நமக்குள் இருக்கும் ஜாதி மத மொழி வேற்றுமைகளை தள்ளிவைத்துவிட்டு ஏதாவது செய்தாக வேண்டும்.இனியும் புலம்பி பயனில்லை. இந்தியர்கள் என்றால் புலம்பி பின்னர் மறந்துவிடுவார்கள் என்று தீர்கமாக நம்பிகொண்டுள்ளனர் நம்மை ஆளுவதாக நினைக்கும் அரசியல் வாதிகள். யார் புண்ணியமோ இன்னமும் இந்தியாவின் உச்ச நீதி மன்றம் என்ற அமைப்பு மட்டுமே கொஞ்சம் நம்பிக்கை உள்ள நிலையில் நாம் செய்யவேண்டுவது விழிப்புணர்வு என்ற ஒன்றை பரவலாக்குவது மட்டுமே. தயவு செய்து இந்த வீடியோவை முடிந்த வரையிலும் பிறருக்கு காணுமாறு செய்யுங்கள். டுனிசியாவில் நிகழ்ந்த ஒரு மாற்றம் போல இந்தியா முழுமைக்கும் ஒரு மாற்றம் வர வேண்டும். இல்லையேல் இந்த கேவலமான அடிமை நிலை இன்னமும் பல தலைமுறைகள் நம்மை தொடரும்.


வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்திய கருப்பு பணத்தின் உரிமையாளர்களின் பட்டியலை ஏன் இன்னமும் வெளியிட வில்லை என உச்ச நீதி மன்றம் மொத்துகிறது. ஆனால் மண் மோகன் சிங்க் அரசசோ தாங்கள் கோர்டிடம் மொத்தே வாங்காதது போல நடிகின்றனர். அவைகளை வெளியிட்டால் இரு நாடுகளுக்குள் வீண் பகை வந்துவிடுமாம்.எல்லாம் உலக மகா டுபாகூர் கூட்டமடா சாமீ ........................!!! 20 comments:

எஸ்.கே சொன்னது…

கருப்பு பணமா அப்டின்னா! பாவம் ஒன்னுமே செய்யாத அரசை கண்டிப்பது நியாயமா?


எல்லாம் உள்குத்து! அவங்களுக்குள்ள ஒரு காம்ப்ரமைஸ் வச்சுகிட்டு நடிக்கிறாங்க! நீங்க சொன்ன மாதிரி உலக மகா டுபாகூர் கூட்டமடா சாமீ ........................!!!

NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

கடைசி வரை வெளியிடவே மாட்டாங்க....

புலிகுட்டி சொன்னது…

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்திய கருப்பு பணத்தின் உரிமையாளர்களின் பட்டியலை...//// அவர்கள் பணத்தின் உரிமையாளர்கள் இல்லை.இந்தியாவின் எதிர்காலத்தையும்,இந்தியாவின் பணத்தையும் பதுக்கிய ஊழல் பெருச்சாளிகள் என்று வேண்டுமானால் சொல்லலாம். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்திய கருப்பு பணத்திற்க்கு நிஜமான உரிமையாளர்கள் இந்திய(ஏழை)மக்கள் மட்டும் தான்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி எஸ்.கே. & NKS.ஹாஜா மைதீன்

ஸ்ரீராம். சொன்னது…

ரொம்ப எதிர்பார்க்காதீங்க...ஏமாற்றம்தான் மிஞ்சும்!

புலிகுட்டி சொன்னது…

பட்டியலை அவர்கள் வெளியிட்டாலும் அது நேர்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.அவர்களுக்கு சாதகமானவர்களை விட்டு விடுவார்கள்.

எல் கே சொன்னது…

ஏமாற்றம்தான் நமக்கு

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி ஸ்ரீ ராம்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்திய கருப்பு பணத்தின் உரிமையாளர்களின் பட்டியலை...//// அவர்கள் பணத்தின் உரிமையாளர்கள் இல்லை //

-----------புலிக்குட்டி சொன்னது.

உண்மைதான், எழுதும் போது flow வில் அப்படி வந்து விட்டது. வருகைக்கு நன்றி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி எல்.கே.

சென்னை பித்தன் சொன்னது…

//எல்லாம் உலக மகா டுபாகூர் கூட்டமடா சாமீ ........................!!! //இக்கூட்டத்திடம் சிக்கித்தவிக்கும் இந்நாட்டுக்கு என்று உண்மையான விடுதலை?வெள்ளைக்காரர்களிடமிருந்து மீட்ட நாட்டை கொள்ளைக்காரர்களிடம் கொடுத்து விட்டோம் என்று என் நண்பர் ஒருவர் சொல்வார்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இந்த நாசமா போனவணுக திருந்த மாட்டானுக மானம் ரோஷம் இருந்தாதானே....ங்கொய்யால....

Lakshmi சொன்னது…

இவங்களை எல்லாம் திருத்தவே முடியாது.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//எல்லாம் உலக மகா டுபாகூர் கூட்டமடா சாமீ .....//

சென்னை பித்தன் சொன்னது…

வருகைக்கு நன்றி சென்னை காதலரே ....தங்களை "சென்னை பித்தன் " என்று அழைக்க எனக்கு விருப்பமில்லை. :)

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//இந்த நாசமா போனவணுக திருந்த மாட்டானுக மானம் ரோஷம் இருந்தாதானே....ங்கொய்யால...//

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உங்க கோபம் நம் நாட்டுக்கு நல்லது மனோ. வருகைக்கு நன்றி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//இவங்களை எல்லாம் திருத்தவே முடியாது.//

Lakshmi சொன்னது…

சரிதானம்மா ... ஆனால் எல்லோரும் இப்படியே சொல்லிகொண்டிருந்தால்......
மாதாமாதம் பெட்ரோல், டீசல் விலையேற்றம், கேஸ் விலையேற்றம்.கேவலம், தக்காளியும், வெங்காயமும் கிலோ எழுபது ரூபாய். நடுத்தர , கீழ்தட்டு மக்கள் என்ன பாடுபடுகிறார்கள்? இந்த நிலை மாறிய சூழலே இன்னமும் மக்களை நெறியற்றவர்களாக ஆக்கி, காசுக்கும் பணத்துக்கும் ஆளாய் பறக்க வைக்கும் நிலை.அதிக காசுக்காக நேர்மை, நியாயம் தவறும் மக்கள். இதற்க்கு காரணமாய் உள்ளவர்களை ஆட்சியாளர்கள் என்றா கொள்ளமுடியும்??

இனியவன் சொன்னது…

ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ க்ளிப். ஒட்டு போடும்போது எல்லோரும் இதை ஞாபகத்தில் வைத்தல் நலம்.

RVS சொன்னது…

மாணிக்கம்.. எப்படி பிடிச்சீங்க இதை.. அட்டகாசமான Compilation!!! ;-) ;-)

Jana சொன்னது…

எல்லாம் செப்படி வித்தை!! நாசமாய்ப்போகின்றீர்களடா!!! 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சித்தர் சொன்னது.

விக்கி உலகம் சொன்னது…

வெள்ள சட்ட போட்ட கள்ளப்பசங்க..........சேலைகட்டிய கேடி.........நாளை ?!

>>>>

பாடையில் போகும் இந்தியன்...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக