பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, டிசம்பர் 18

பெரு வியாதி !இந்தியாவில் காங்கிரஸ் பல காலமாக தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் பயங்கர வாதம் பற்றி விக்கிலீக்ஸ் தளத்தில் ஒன்றும் தகவல்கள் இல்லயா?
இந்திரா கான்டி கொலை செய்யப்பட்டபோது அதன் பின்விளைவாக எத்தனை ஆயிரம் சீக்கியர்கள் டெல்லி மாநகரில் கொலையுண்டார்கள் காங்கிரஸ்காரர்களால்? அது பயங்கர வாதம் இல்லயா? அறுபது வருடங்கள் ஆகியும் இந்த நாட்டில் கல்வி அறிவு இல்லாமை,, வறுமையும், வேலை இல்லா திண்டாட்டமும் குறையாமல் அப்டியே உள்ளதே அதன் காரணம் இந்த காங்கிரஸ் இல்லயா? இதே நேரு,கான்டி குடும்பம் காரணம் இல்லயா?
சுமார் 2000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டும் இன்று வரை அதற்க்கு காரணமான ஒருவரைக்கூட தண்டிக்கவில்லை காங்கிரஸ்.

1.பிரிவினை மூலம் ஒரு மில்லியன் இந்துக்கள் கொலை செய்யப்பட்டார்களே அதன் காரணம் நேரு இல்லயா?
2. காஷ்மீர் பிரச்சனையை முற்றாக தீர்க்காமல், பாக்கிஸ்தானின் பிடியில் இருந்து அதனை முழுவதும் விடுவிக்காமல் மேலும் வளர விட்டது தான் நேருவின் தொலைதூர பார்வயா?
3.தலாய் லாமா போன்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து சீனாவின் வெறுப்பை இந்தியா பெற்றுக்கொண்டு சீனாவால் உதையும் வாங்கிக்கொண்டது நேருவால்தானே? அப்போது இந்தியா மீது சீனா கொண்ட வெறுப்புதானே இன்றும் தொடர்கிறது?
4.சீனாவுடன் பஞ்சசீல கொள்கை ஒப்பந்தம் போட்டுவிட்டு படை பலம் பெருக்க வேண்டாம் என்று அமைதிகாக்க,சீனா அடித்து நொறுக்க, அதில் வந்த ஹார்ட் அட்டாக்கில் தானே நேரு இறந்தார்?
5. இந்திராவின் காலத்திலும் காஷ்மீர் பகுதியை பாக்கிஸ்தானில் பிடியில் இருந்து விடுவிக்காமல் வெறும் சிம்லா ஒப்பந்தம் ஒன்றை போட்டு முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பூட்டோவுடன் கை குலுக்க, போரில் பிடிபட்ட தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை மட்டும் விடுதலை செய்யவைத்து மீட்டு கொண்டு போனாரே அதைத்தவிர வேறு என்ன நடந்தது?
 6. நெருவோ, இந்திராவோ எப்போதும் தங்களுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளதை விரும்பியது இல்லை. இந்திரா ஒரு படி மேலே போயி எமெர்ஜென்சி யை பயன் படுத்தி தன்னை எதிர்த அணைத்து இந்திய தலைவர்களையும் சிறையில் அடைத்தது  பயங்கர வாதம் இல்லயா?
7. எலிகாப்டர் விபத்தில் சஞ்சை கான்டி இறந்தபிறகு அனுபவம் அற்ற ராஜீவ் காங்கிரஸின் பிரசிடெண்ட் ஆக அக்கப்பட்டார். பின்னாளில் இந்திரா கொலைசெய்யப்பட்ட பின்னர் நாட்டின் பிரதமராகவும் ஆக்கப்பட்டார்.
டெல்லி சீக்கியர்கள் கொலை செய்யபட்டதற்கு பின்னனியில் ராஜீவ் கான்டி இருந்தார் இல்லயா? இலங்கயில் தமிழர்களுக்கு உதவுவதாக சொல்லிக்கொண்டு இந்தியா படைகளை அங்கு அனுப்பி சிங்கள படையுனருடன் சேர்ந்துகொண்டு அங்கு தமிழர்களை அழித்தும்,
ஒரு பொம்மை அரசை நிறுவி, அதுவும் நிலைக்காமல் நாட்டை விட்டு ஓடியதும் உண்டா இல்லயா? பின்னாளில் அதன் பலனாக எல்.டி.டி.ஈ.
ராஜீவை பழிவாங்கியதும் நடக்க வில்லயா?
8.ராஜீவ் கான்டி இறந்தபிறகு தன் தன் வீட்டை மட்டும் கவனிதுக்கொண்ட இருந்த சாதாரண ஒரு பெண்மணி, சோனியா, காங்கிரஸின் தலைவராக ஆக்கப்பட்டார். பொம்மை பிரதமர் நரசிம்ம ராவ் வந்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
9.சோனியா முழு அதிகாரமும் தன்னிடம் வைதுக்கொண்டு தான் எண்ணப்படி செயல் பட மேலும் ஒரு பொம்மை பிரதமரை கொண்டுவந்து சீக்கிய சமுதாய மக்களின் கோபத்தை தனித்தார்களா இல்லயா?
10.இப்போதும் ஒன்றுக்கும் லாயகற்ற தான் பிள்ளையை பிரதமராகும் முயற்சியில் சோனியா மற்றும் காங்கிரஸ் காரர்கள் ஏன் இத்தனை
முனைப்புடன் செயல்பட வேண்டும்?
11. இந்த பிள்ளைக்கு தங்கள் முன்னோர்கள் போட்டி இட்ட இடங்களைதவிர வேறு எங்காவது நின்று தேர்தலில் வெற்றிக்காண
  முடியுமா? மீண்டும் மீண்டும் ஏன் அதே தொகுதியில் நிற்க வேண்டும். இந்தியாவில் வேறு இடமா இல்லை?
12.அணைத்து தரப்பிலும் ஊழல் பல்கி பெறுகிவிட்ட இந்தியாவில் எத்தனை பில்லியன் / ட்ரில்லியன் கோடி ரூபாய்கள் வெளிநாடுகளில் சென்று பதுக்கி வைக்கபட்டுள்ளது?
13. பட்ஜத் தொகையான 1,83,000 கோடி ரூபாய்களை விட தனியார் கற்போரேட் நிறுவனகளுக்கு பெயில் அவுட் தொகையாக 5,02,9962 கோடிகள் கொடுத்தார்களே இதன் பொருள்  என்ன?
14. ஆசிய விளையாட்டு போட்டிகளில், ஆதர்ஷ் வீட்டுமனை, ஸ்பெக்ட்ரம் என்று வாரிசாயாக ஊழல்களில் திளைத்து சுரண்டி கொள்ளை அடிக்கும் இவர்கள் பயங்கரவாதிகள் இல்லை. இங்குள்ள மக்களே பயங்கர வாதிகள்.?
15. இன்று இங்குள்ள 80% மக்கள் பயங்கரவாதிகளாக சொல்லப்படுவது தான் மதசார்பின்மயா?
16. இவர்கள் பாக்கிஸ்தானின் கூலிகள் என்பதை விட வேறு என்ன சொல்லலாம்?
இந்தியாவை பீடித்துள்ள இந்த காங்கிரஸ் நேரு,கான்டி குடும்ப பெரு வியாதி இனிமேலாவது சரியாக வேண்டாமா? இந்தியாவை சூழ்ந்துள்ள இந்த காங்கிரஸ் குடும்பம் என்ற பயங்கர வாதம் ஒழிக்கப்பட வேண்டாமா?
மதவாதிகளை விட இவர்கள் மோசமான பயங்கர வாதிகள் இல்லயா?7 comments:

எஸ். கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

கேள்விகளை அவர்களிடம் கேட்டுப் பயனில்லை! எங்கோ மழை பெய்கிறது என்று சும்மா இருக்கும் நம்மிடம் தான் கேட்டுக் கொள்ள வேண்டும்! அதுவும் வெறும் கேள்விகளாக அல்ல, காங்கிரஸ் கட்சி மற்றும் அதனுடன் கூட்டணி வைத்திருக்கிற அத்தனை வியாதிகளையும் தேர்தலில் தோற்கடிப்பது, மறுபடி தலையெடுக்க விடாமல் செய்வது என்ற உறுதியுடன்.

பட்டாபட்டி.... சொன்னது…

அண்ணே.. முத்து முத்தான கேள்விகள்?..

இப்படியே காந்தி பேரை எங்கிருந்து இழுத்து, குடும்ப பேரா போட்டானுக.. அதையும் சொல்லியிருக்கலாம்..

பட்டாபட்டி.... சொன்னது…

இந்த பதிவுக்கு, நொண்ண கேள்வி கேட்டுக்கிட்டு, கொடி பிடிச்சு யார் வந்தாலும்,

பராபட்சம் பார்க்காம கிழிக்க போறேன்.. இப்பவே சொல்லீட்டேண்ணே..

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// கேள்விகளை அவர்களிடம் கேட்டுப் பயனில்லை! //
--------------எஸ். கிருஷ்ணமூர்த்தி சொன்னது

கேள்விகளை நம்மிடம் தான் கேட்டுக்கொண்டேன்.
தங்களின் வருகைக்கு நன்றி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// இந்த பதிவுக்கு, நொண்ண கேள்வி கேட்டுக்கிட்டு, கொடி பிடிச்சு யார் வந்தாலும்,

பராபட்சம் பார்க்காம கிழிக்க போறேன்.. இப்பவே சொல்லீட்டேண்ணே.//

-------பட்டாபட்டி சொன்னது.

உங்களுக்கு இங்கு என்ன தடை ராஜா? இது உங்களின் இடம்.

THOPPITHOPPI சொன்னது…

அருமையான கேள்விகள் அண்ணே?

THOPPITHOPPI சொன்னது…

/10.இப்போதும் ஒன்றுக்கும் லாயகற்ற தான் பிள்ளையை பிரதமராகும் முயற்சியில் சோனியா மற்றும் காங்கிரஸ் காரர்கள் ஏன் இத்தனை
முனைப்புடன் செயல்பட வேண்டும்?/

தொடர்ந்து ராகுல் மீது கல் எரிவதால் உங்களை யாராவது குற்றம் சாட்டிவிட போறாங்க, பார்த்து?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக