பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, டிசம்பர் 18

சத்தமின்றி வரும்.....


காரசாரமாய் பதிவுகளை எழுதி கண்ட பலன் ஒன்றுமில்லை. வேறு நல்ல,தேவையான,அணைவருக்கும் பயன்படும் செய்திகளை பார்க்கலாமே!

சென்ற வாரம் என் நண்பருக்காக ஒரு பிசியோ தெரபிஸ்ட் டாக்டரிடம் செல்ல வேண்டியிருந்தது. நண்பரோ பத்து வருடங்களாக மோட்டார் பைக்கில்தான் அலையும் வேலை அவருக்கு.தன் அலுவலக வேலை நிமித்தம் சென்னையின் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தினமும் சென்றுவரவேண்டும். சென்ற சில மாதங்களாக அவருக்கு கழுத்தின் பின் பக்கம் மற்றும் வலது கை தோள்பட்டையில் வலி தோன்ற ஆரம்பித்து,வழக்கம்போல அலட்சியப்படுத்தி,பின்னர் கையை அசைக்க இயலாமல் போகவே பிசியோதெரபிஸ்ட் டாக்டரிடம் சென்றோம். 

அவர் விபரங்களை கேட்டுவிட்டு சோதனைகள் செய்து பின்னர் சில மருத்துவ முறைகளை அவருக்கு செய்ய ஆரம்பித்தார். அதற்கென்று உள்ள கருவிகளை பொருத்தி நண்பருக்கு சிகிச்சை ஆரம்பமானது.அது முடிய சற்று நேரமாகும் என்பதால் நானும் அந்த டாக்டரும் அவர்டைய ரூமில் பொதுவாக பேசிகிண்டிருந்தோம். அப்போது அவர் இரத்த அழுத்தம் சோதிக்கும் கருவியை தனக்குத்தானே பொருத்திக்கொண்டு தன்னுடைய இரத்த அழுத்தத்தை சோதித்தார். அது நார்மல்தான். 128/80

ஆர்வமிகுதியால் நானும் என் கையை நீட்ட, எனக்கும் அதனை பொருத்தி சோதித்தார். டிஜிட்டல் டிஸ் ப்ளே யில் வந்த அளவுகளை பார்த்து புருவங்களை சுருக்கி,மறுமுறையும் இயக்கி சோதித்தார். மீண்டும் அதே அளவுகளில் எங்கள் வர அமைதியாக என்னைப்பார்த்து கேட்டார். "உங்களின் வயது? "சொன்னேன்.

ஏன் இப்படி பிரஷரை ஏற்றி வைத்துள்ளீர்கள்? 

நா எங்க ஏற்றினேன்.சில மாதங்களுக்கு முன்னர் கூட நார்மல்தானே 130/90 இருந்ததே சார்.

சரி, இப்போ எவ்வளவு தெரியுமா? 156/103.............

டிஸ் பிளேயை என்பக்கம் திருப்பினார். 156/103

திகைப்பாக இருந்தது.

நார்மலாய்தானே இருக்கிறேன், ஒன்றும் வித்யாசமாய் இல்லையே.

ஹைபர் டென்சன் -உயர் இரத்த அழுத்தம் எவ்விதமான அறிகுறிகளையும் தராது........ Its a silent killer!

உங்கள் டாக்டரிடம் காட்டி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுங்கள். 

நண்பரின் சிகிச்சை பயற்சி முடிந்து திரும்பி விட்டோம். சரிதான் என்று நானும் உயர் ரத்த அழுத்தம் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. இது நடந்து ஒருவாரம் கழித்து மீண்டும் நண்பருக்காக அவரிடம் சென்றபோது இடைப்பட்ட நேரத்தில் மீண்டும் அழுத்தத்தை சோதிக்க,வந்த விடை கலவரமாக்கியது  என்னை.  160/104 

அவர் என்னை சிகிச்சையை ஆரம்பிக்கும்படி அறிவுறுத்தினார்.

நமக்குத்தான் இருக்கவே இருகிறதே இன்டர்நெட், உயர் ரத்த அழுத்தம் பற்றி விளக்கி நிறைய தளங்கள் விரிகின்றன.காரண காரியங்கள், சிகிச்சை முறை, உணவு முறை என்று நிறைய செய்திகள் கொட்டிக்கிடகின்றன. போதாது என்று நிறைய வீடியோ விளக்கங்கள் வேறு. 

மிக தெளிவாக, அழகாக வீடியோவில் நம் தேகத்தை பற்றி சகலமும் படங்களாக (அனிமேஷன் )காணும் போது நமக்கு உண்டாகும் தெளிவு நமக்கு நம்பிக்கையை தருகிறது. அங்குள்ள வீடியோக்களில் இரண்டு இங்கே தந்துள்ளேன். 

(சின்ன வயசு பசங்கல்லாம் போரடித்தால் கும்மி அடிக்க பன்னிகுட்டி பக்கம் 
 போங்க கண்ணுகளா! இது கொஞ்சம் வயதான அண்ணன் மார்கள்,  அப்பா மார்கள்,  மற்றும் தாத்தா மார்கள் (கோவை)  இவர்களுக்கு தேவையாய்
 இருக்கலாம்.) 

என்ன செய்யும் உயர் ரத்த அழுத்தம் ?

உயர் ரத்த அழுத்தம் எவ்வாறு நம் உள் உறுப்புகளை பாதிக்கிறது?


இந்த கன்னுக்குட்டியின் நெற்றியில் இருக்கும் அந்த வெள்ளை ஹாட்டின் சின்னம் அழகாய் இல்லை? 


23 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நல்ல பயனுள்ள பகிர்வு .
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள் .

பொன் மாலை பொழுது சொன்னது…

அப்பா என்ன சுறு சுறுப்பு.
நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு :))

ப.கந்தசாமி சொன்னது…

கோவை தாத்தா சொல்வது. பேசாமப் போயி மொதல்ல டாக்டரப் பார்த்து மருந்து வாங்கி சாப்பிட்டுட்டு, உயிரோட இருக்கிற வழியப்பாருங்க, இன்டர் நட்டு எங்கியும் கழண்டு ஓடீடாது. இன்னிக்கே போங்க.

நம்ம ஒடம்ப பத்தி அதிகம் தெரிஞ்சுட்டா அப்பறம் தூக்கம் வராது. அதான் ரோட்டுக்கு நாலு டாக்டருங்க இருக்காங்கல்ல, அவங்க படிச்சது போதும். நாம அரைகுறையாத் தெரிஞ்சுட்டு கொழம்பக்கூடாது.

Philosophy Prabhakaran சொன்னது…

// இந்த கன்னுக்குட்டியின் நெற்றியில் இருக்கும் அந்த வெள்ளை ஹாட்டின் சின்னம் அழகாய் இல்லை? //

ஆம்... அழகாகவே இருக்கிறது... உங்களுடைய பதிவினைப் போலவே...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மாணீக்கம் பதிவு சூப்பர்,ரொம்ப பயனுள்ள பதிவு

எல் கே சொன்னது…

தல, நல்ல உபயோகமான பதிவு. உங்களுக்கு என்ன வயசு ? ஒரு 35? மருந்து வாங்கவும். தினமும் அதிகாலை வாக்கிங் செல்லுங்கள். நல்ல இசை கேளுங்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு..

தேவன் மாயம் சொன்னது…

அசத்துங்க!

பொன் மாலை பொழுது சொன்னது…

// கோவை தாத்தா சொல்வது. பேசாமப் போயி மொதல்ல டாக்டரப் பார்த்து மருந்து வாங்கி சாப்பிட்டுட்டு, உயிரோட இருக்கிற வழியப்பாருங்க, இன்டர் நட்டு எங்கியும் கழண்டு ஓடீடாது. இன்னிக்கே போங்க. //

------------DrPKandaswamyPhD சொன்னது


அய்யய்யோ .....சார் நீங்களா........ உங்கள நான் தாத்தான்னு சொல்வேனா? நம்புங்க சார்.
கோயம்புத்தூர்ல நமக்கு தெரிஞ்ச / வேண்டப்பட்ட ஒருவர் இருக்கார். அவரு பேரு தா. தாமொதரன்னுவாங்க. அவரை பற்றி சொல்லவே // தாத்தா // ...அப்டீன்னேன். உங்கள போயி நான் எப்பிடி சார் ...........

தங்களின் அறிவுரைக்கு நன்றி. நாளைதான் செல்லவேண்டும்.

பொன் மாலை பொழுது சொன்னது…

philosophy prabhakaran
சி.பி.செந்தில்குமார்
வெறும்பய
தேவன் மாயம்
மாதேவி

தங்களின் அனைவரின் வருகைக்கும் நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//தல, நல்ல உபயோகமான பதிவு. உங்களுக்கு என்ன வயசு ? ஒரு 35? மருந்து வாங்கவும். தினமும் அதிகாலை வாக்கிங் செல்லுங்கள். நல்ல இசை கேளுங்கள்.//
--------- LK சொன்னது…

இவ்வளவு பப்ளிக்கா வயச கேட்டிங்கன்னா ...நா என்னங்கண்ணா பண்ணுவேன்?
வயசு தெரிஞ்சுதா ?

தங்களின் அறிவுரைக்கு நன்றி. "நல்ல இசை கேளுங்க" உண்மைதான் . இன்றும் என்னை வாழ வைதுக்கொன்டுள்ளதும் இறையருளும் இசையுமே. நிதானமான ஆழ்ந்த சுவாசப்பயிர்சியும் மிக நல்ல பலன்களை தருவதாக அறிகிறேன்.

RVS சொன்னது…

மற்றவர்கள் மேல் அக்கறையான பதிவு மாணிக்கம். நன்றி ;-)
டாக்டர் கேட்டார் வயதைச் சொன்னேன் என்று எழுதிவிட்டீர்கள்.... :)))))

Geetha6 சொன்னது…

மாணிக்கம் sir...very useful.
demo is arumai..

DR சொன்னது…

கண்ணுக்குட்டி படம் உண்மையிலையே சூப்பர். பதிவும் மிகவும் பயனுள்ளது... தொடர்ந்து எழுதுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ரொம்ப நல்ல பதிவண்ணே..... உடம்பு பாத்துக்குங்க.... பிரஷர் பொல்லாதது, கட்டுக்குள்ளேயே வைத்திருக்கனும்.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கு நன்றி RVS.
வயதை சொன்னால் நீங்கள் எல்லாம் பொறாமை பட்டு / கண் / வைத்துவிடுவீர்கள் என்று எனக்கு தெரியும்

பொன் மாலை பொழுது சொன்னது…

Geetha 6
Dinesh

தங்களின் வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//ரொம்ப நல்ல பதிவண்ணே..... உடம்பு பாத்துக்குங்க.... பிரஷர் பொல்லாதது, //
------பன்னிகுட்டி ராம்சாமி.

மிக்க நன்றி.................பனா.குனா.:)))))))

Madhavan Srinivasagopalan சொன்னது…

நல்லா தகவல்கள்.. சுவரு இருந்தாதான சித்திரம் வரைய முடியும்..

பெயரில்லா சொன்னது…

unga vayasu 45,ok vaa?

பொன் மாலை பொழுது சொன்னது…

// பெயரில்லா சொன்னது…
unga vayasu 45,ok vaa? //

சொச்சம் ?

வேலன். சொன்னது…

//தல, நல்ல உபயோகமான பதிவு. உங்களுக்கு என்ன வயசு ? ஒரு 35? மருந்து வாங்கவும். தினமும் அதிகாலை வாக்கிங் செல்லுங்கள். நல்ல இசை கேளுங்கள்.//
--------- LK சொன்னது…
// பெயரில்லா சொன்னது…
unga vayasu 45,ok vaa? //

உங்கள் வயது..35...45...என ஏற்றிகொண்ட செல்கின்றார்களே?
வயது உடலுக்குதானே தவிர மனது அல்லவே...சரியா மாம்ஸ்....

காரசாரமான அரசியல் கட்டுரை எழுதும்போதே தெரியும்..படிக்கும் எங்களுக்கு ப்ரஷர் ஏறும்போது எழுதும் உங்களுக்கு எவ்வளவு ப்ரஷர் ஏறும்? இனி சாக்கடை அரசியல் பதிவுகளை தவிர்த்துடுங்கள். எனது தளம் வந்து குழந்தைகள் விளையாட்டுகளை விளையாடி பாருங்கள்.எலலாம சரியாகிவிடும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// எனது தளம் வந்து குழந்தைகள் விளையாட்டுகளை விளையாடி பாருங்கள்.எலலாம சரியாகிவிடும் //
-----------------------வேலன் சொன்னது.

மாப்ஸ் அக்கறையோடு சொல்வதை கேட்டுக்கொள்கிறேன். அப்படியே ஆகட்டும் மாப்ஸ்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக