பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, நவம்பர் 19

நம்ம வாத்தியார் சூர்யா கண்ணனன் அவர்களுக்கு !

உண்மையில் இந்த விபரங்களை நம் அன்பு நண்பர், வலையுலக வாத்தியார் (குரு) சூர்யா கண்ணன் அவர்களுக்கே மின் அஞ்சல் அனுப்ப எண்ணி, பின்னர் இதனை பதிவாக இட்டால் பலரும் அறிந்துகொள்ளலாமே என்றுதான் இதனை இங்கு தருகிறேன்.

என்னிடம் உள்ள மடிக்கணணி பற்றியது:

 உண்மையில் இதுவரை வாழ்கையில் எந்த ஒரு பொருளுக்கும், நிகழ்வுக்கும் நான் பெருமை பட்டது இல்லை. கல்லூரியில் P.U.C .தேர்வில் நானே எதிர்பார்க்காமல் 1 'st class இல் தேர்ச்சி பெற்றபோது சற்று பெருமையாக இருந்தது உண்மை. எந்த வருடம் என்று கேட்காதீர்கள்.......விடமாட்டர்கள்!! (1975)   சரி , அதற்க்கு பின்னர் எவ்வளவோ வந்து போய்விட்டது. தற்பெருமை, அல்லது தன்னிடம் உள்ளவைகளைக்கண்டு தனக்குத்தானே பெருமைப்பட்டு பூரித்து போகும் நல்ல குணம் எனக்கு அமையவே இல்ல. ஏனனில் இவையெல்லாம் மாறிப்போகும் என்றாவது என்று நம்புகிறவன் நான். அப்படித்தான் இருந்தேன். 

ஆனால் இந்த லேப் டாப் ஐ வாங்கிய பின்னர்  நான் கொண்ட மகிழ்ச்சியும் பெருமையும் சற்று அதிகமே. அப்படி என்ன ஒசத்தி என்கிறீர்களா? அது எனக்கு தெரியாது. ஆனால் இதன் அழகில் நான் மயங்கி மையலானது உண்மை. TOSHIBA Satellite - A300 . இதை வாங்க தீர்மானிக்கும் முன்னர் ஏதோ கல்யாணம் செய்ய பெண் பார்ப்பது போல கடை கடையை ஏறி இறங்கவில்லை . இங்கு  பத்திரிகைகளில் தினமும் முழுப்பக்க அளவில் வரும் விளம்பரங்களை பார்த்தே பிற அணைத்து பிராண்ட் களையும் பார்த்து பார்த்து ஒதுக்கிவிட்டு இறுதியில் இதனை தேர்ந்தெடுத்தோம். நான் கூட உடன் போக வில்லை. உடன் பணியாற்றும் காமரூன் நாட்டு நண்பனிடம் பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டேன். அவன் திரும்ப வந்தபோது ஒரேமாதிரி இரண்டு லேப் டாப் களை கொண்டுவந்து , தனக்கு ஒன்றை வைத்துக்கொண்டு , ஒன்றை என்னிடம் தர, உடனேயே அங்கேயே (என் இருப்பிடத்தில் ) இரண்டையும் மின் இணைப்பு கொடுத்து இயக்கி பார்க,விண்டோஸ் மீடியா சென்டரில் எனக்கு பிடித்தஏதோ ஒரு ABBA  ஆல்பம் பாடலை ஒலிக்கவிட  அந்த பிள்ளை குஷியில் டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டது.இருவருக்கும் ஒரே ஆனந்தம். ஆனால் உள்ளே இருக்கும் Pre installed செய்யப்பட்ட விண்டோஸ் விஸ்டா எங்கள் கழுத்தை தினமும் அறுக்கப்போகிறது என்று அப்போது தெரியாது. ஆயிற்று, நெட் இணைப்பும் கொடுத்தாயிற்று. மலையில் வேலை விட்டு சற்று சீக்கிரம் கிளம்பும் என்னை என் அதிகாரிகள் வியப்புடன் பார்க்க, பின்னர் தெரிந்துகொண்டு முறுவலித்தனர். பொன்மாலை பொழுது ப்ளாக் ஆரம்பித்தது கூட அதன் பின்னர்தான்.

ரூம் வந்த குளியல் போட்டுவிட்டு சற்று பிரார்த்தனை செய்துவிட்டு மணக்க மணக்க ரெண்டு சுமால் அடித்துவிட்டு மெஷினில் உட்கார்ந்தால் போதும் . சாப்பாடு வந்து அது A/C குளிரில் விறைத்துப்போய் கிடைக்கும். சாப்பிட்டு முடித்து பின்னர் மீண்டும் அமர்ந்தால் மணி நடு நிசியாகி மேலும் அதிகாலை மூன்று மணி வரை கூட இதில் இருந்ததுண்டு. மறு நாள் வேலை இருக்கிறது என்ற உணர்வுடன் தூங்க போனது உண்டு. அந்த அளவிற்கு என்னை கட்டி வைத்தது இந்த அழகிய லேப்டாப். ஆனால் விண்டோஸ் விஸ்ட வை வைத்துக்கொண்டு நான் பட்ட பாடு நாய் படாது. 

அதற்கு முன்னர் X P வரை நன்றாகவே இருந்த எனக்கு இந்த விஸ்டா ரொம்பவும் படுத்தி எடுத்தது உண்மை. நண்பர் யூர்கன் க்ருகியருக்கு கூட இந்த கதைகள் தெரியும். இரண்டு விண்டோகளுக்கு மேல் திறந்தால் போச்சி..... பிரமை பிடித்ததுபோல சொயிங்... சொயிங் ......என்று சுற்றி சுற்றி வந்து அப்படியே நின்றுகொள்ளும். தவிர வேறு எந்த மென் பொருளை உபயோகிக்க திறந்தாலும் நிறைய நேரம் எடுத்துக்கொண்டு வெறுப்பேற்றியது.சரி ரொம்ப நீட்ட வேண்டாம். 


சில மாதங்களுக்கு முன்னர் திடிரென்று திரையில் கீழ்பக்கம் சுமார் 2  அங்குல உயரத்துக்கு கோடுகள் கிடை மட்டமாக (Horizontal lines)   வர ஆரம்பித்து விட்டது. ரொம்ப விசனத்துடன் நண்பர் சூர்யா கண்ணனிடம் போனில் விபரம் கேட்க, அவர் மெயிலில் அனுப்பும் படி சொல்ல, ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பலாம் என்றால் ஸ்க்ரீன் ஷாட் படங்களில் மட்டும் அந்த கோடுகள் விழாமல் மோடி மஸ்தான் வேலை காட்டியது. பின்னர் என் கணணியை சூர்யாவின் கணனியுடன் இணைத்தாலும் அவருக்கு அந்த கோடுகள் மட்டும் கிடைக்க வில்லை. "மற்றதெல்லாம் சரியாக உள்ளது, இது ஸ்க்ரீனுக்கு செல்லும் மின் இணைப்பில் உள்ள குறைபாடாக இருக்கலாம். ஒரு முறை அவற்றை திறந்து பின்னர் மீண்டும் இணைப்பை தாருங்கள் சரியாகிவிடும் " என்று விளக்கமளித்தார். எப்படி இந்த குறிப்பிட்ட மாடல் மெஷினை திறப்பது என்ற விளக்கப்படங்களும் அனுப்பி வைத்தார்.

அவைகளை கண்ட நான் பின்வாங்கி விட்டேன். கத்துக்குட்டியாகிய நான் ஏதாவது செய்து வைத்து...... வேண்டாம் என்று இருந்து விட்டேன். ஒரு நாள் Advanced System Care மூலம் சுத்தம் செய்து ,பின்னர் மீண்டும் மெஷினை திறந்தபோது இந்த கோடுகள் காணாமல் போய்விட்டிருந்தன. ஆஹா என மீண்டும் மகிழ்ச்சி.ஆனால் பல நாட்கள் கழித்து இடையில் திடீரென்றுகோடுகள் முன்பு போல  மீண்டும் வர ஆரம்பித்து, அடச்சீ .......என்று நானும் விட்டு விட்டேன். 

விஸ்டாவை தூக்கிவிட்டு ஒரு மகராஜன் விண்டோஸ் 7 Ultimate போட்டுத்தர(காசுக்குத்தான் ) கோடுகள் மட்டும் போகவில்லை. "வேறு பேனல்தான் மாற்ற வேண்டும்" என்று அவரும் சொல்லிவிட்டார். ஆனால்  இத்தனை நாள் விஸ்டாவை கட்டிக்கொண்டு மல்லாடிய எனக்கு மிகவும் நிம்மதியாயிற்று. சூர்யாவின் விண்டோஸ் 7 பற்றிய பதிவுகளும் தக்க சமயத்தில் வர ஆரம்பிக்க எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது. ஆனால் இந்த பிசாசு கோடுகள் மட்டும் மாறவில்லை. இன்று மதியம் ஏதோ கவனத்தில் யோசித்துக்கொண்டே திரையில் தெரியும் அந்த பட்டையான கோடுகளை கவனித்துக்கொண்டிருந்தேன்.மெதுவாக இடது கையினால் ஸ்க்ரீன் பேனலை பிடித்துக்கொண்டு கட்டை விரலினால் ஸ்க்ரீனின் மீது அந்த கோடுகள் உள்ள இடத்தில் மேலும் கீழும் சற்று அழுத்தத்துடன் தேய்த்துவிட்டேன்.சட்டென்று அந்த கோடுகள் மறைத்து சுருங்கி கீழே உள்ள டாஸ்க் பார் அளவுக்கு சென்றுவிட, உற்சாகத்துடன் வலது கையினால் வலப்புறம் ஸ்க்ரீனை பிடித்துக்கொண்டு முன் மாதிரியே கட்டை விரலால் மேலும் கீழும் ஒருதடவை  ஸ்க்ரீனை தேய்த்து விட , ......அட ................பல மாதங்களாக  இருந்த கோடுகளும் சட் என மறைத்து, என் அருமை லேப்டாப் ஸ்க்ரீன் இயல்பான நிலைக்கு திரும்பி விட்டது. 

பல முறை நிறுத்தி, மீண்டும் இயக்கி பார்த்துவிட்டேன் . ஒரு மாற்றமும் இல்லை. ஸ்க்ரீன் இயல்பாகவே உள்ளது. சூர்யா அவர்கள் கூறியது போல ஏதோ சிறிய மின் அணு கோளாறாகவே இது இருக்கலாம். விரல்களின் அழுத்தத்தினால் கூட அது சரியாகி இருக்கலாம். இது சரியா தவறா என்று தெழில் நுட்ப வல்லுனர்கள் தான் சொல்லவேண்டும்.
சத்தியாமாக இது "புருடா" இல்லை. 

ஸ்க்ரீன் ஷாட் இல் கோடுகள் விழாததால் நானே அவைகளை ஸ்க்ரீன் ஷட்டில் இருந்து போட்டொ ஷாப்பில் உண்டாகி விளக்கங்களுக்காக அளித்துள்ளேன். 

28 comments:

பட்டாபட்டி.. சொன்னது…

அண்ணே.. பேசாம நீங்க கணினி டாக்டராக ஆகியிருக்கலாம் போல..

ஏதோ என் அறிவுக்கு தோணியதை சொல்கிறேன்.

என்னுடைய ICICI வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்புங்கள். புது கம்யூட்டர் ரெண்டு வாங்கி , ஒண்ணை நான் வைத்துக்கொண்டு, மற்றதை உங்களுக்கு தருகிறேன்.. ( ஹி..ஹி)..

//

சும்மா டமாசு...


என்ன பிரச்சனைனு தெரிஞ்சா, சொல்லியனுப்புங்க.. நாளைப்பின்னே, நாங்க காசு போட்டு கணினி(?) வாங்கும்போது உபயோகமாக இருக்கும்...

மாணவன் சொன்னது…

அருமையான ”கணினி ட்ரிக்ஸ்” தகவலை மிகத்தெளிவாகப் பகிர்ந்துள்ளீர்கள் சார்....

நானும் கணினி வன்பொருள் துறையில் இருப்பதால் எனக்குத்தெரிந்தவற்றைப் பகிர்ந்துக்கொள்கிறேன் இந்த ஸ்கீரீன் கோடுகள் பிரச்சினைகளை இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன் அப்போது நீங்கள் செய்த்ததுபோல் மானிட்டர் ஸ்க்ரீன் துடைப்பதற்கென்று உள்ள துணி க்ளாத்தினால் லேசாக அழுத்தி துடைத்திருக்கிறேன் அதுவும் சரி ஆகிவிடும்

இதற்குக் காரணம் நம்ம வாத்தியார் சூர்யா அவர்கள் கூறியது போல ஏதோ சிறிய மின் அணு கோளாறாகவே இது இருக்கலாம் நம்ம கணினியின் ஸ்க்ரீன் LCD [liquid crystal display] டிஸ்பிளேயின் உள்ளே சர்க்யூட்டில் எலக்ட்ரான் மின் அணு கோளாறாகவே இருக்கலாம் நமது விரலின் அழுத்தம் ஏறபட்டவுடன் அது சரியாகியிருக்கலாம்
இது எனது கருத்து ஏன்னா நான் இதுபோன்று பிரச்சினைகளை சந்தித்தவன் என்பதால் எனக்குத்தெரிந்த சிற்றறிவை வைத்துச் சொல்கிறேன்,

அதற்காக நீ என்னா பெரிய கணினி வல்லுனரா இல்ல விஞ்ஞானியா என்று கேட்கப்படாது நானும் கணினி அறிவை கற்று வருகின்ற மாணவன்தான் மாணவன் என்றாலும் எனது நிறுவனத்தில் நான் சொல்வதை கேட்பார்கள் முடிந்தவரை பிரச்சினைகளை சரிசெய்ய முயற்சித்துப்பார்த்துவிட்டு முடியாதபட்சத்தில் “மாற்றம் என்பதில் மாற்றம் என்ற வார்த்தை மட்டுமே மாறாதது” என்பதற்கேற்ப கணினிகளையே மாற்றி விடுவோம்.

அந்த வகையில் நிறவனத்திற்கு நிறைய புதுக்கணினிகளை வாங்கிக் கொடுத்த பெருமை என்னையேச் சாரும்...

”அடகொய்யாலே அப்புறம் எதுக்கு நீ ஒரு வன்பொருள் பொறியாளரா இருக்கன்னு நீங்க கேட்கறது புரியுது”

LK சொன்னது…

பகிர்வுக்கு நன்றி மாணிக்கம்... புதிய கணினி வித்தகர் வாழ்க

பட்டாபட்டி.. சொன்னது…

ஒருவேளை, மங்குனி தாவது பண்ணியிருப்பானோ பாஸ்..

ஏன்னா மங்குனி ஏதோ சொல்லிட்டு இருந்தான்.. காத்து வாக்கில, காதில் விழுந்தது.. ஹி..ஹி

//


ஹா,ஹா,ஹா,...............மக்களே டீலிங் பேசி முடிச்சிட்டேன் , இந்த மனுஷனுக்கு வக்கிரத்துக்கு தலைமுடி , பழைய டிரஸ்சு , காலடி மண்ணு மாதிரி பிளாக்கு சில ஐட்டங்கள் உங்க பிளாக்குல இருந்து திருடிட்டு இன்னைக்கு நைட் ரெண்டுமணிக்கு சுடுகாட்டுக்கு வரச்சொல்லிருக்கு ........... ஹா.ஹா.ஹா.....நாளை முதல் உங்கள் பிளாக் ............ஹா.ஹா.ஹா.........
//

தமிழ் உதயம் சொன்னது…

அப்ப நீங்க கணினி நிபுணர் ஆயிட்டிங்க.

வேலன். சொன்னது…

உங்கள் காமரூன் நண்பர் கோடுபோட்டது(ரூல்ட்) கோடு போடாதது(அன்ரூல்ட்) என இரண்டு கணிணிகள் வாங்கி வந்திருப்பார். நீங்கள் கோடுபோட்ட கணிணி தேர்வு செய்திருப்பீர்கள். அதனால்தான் உங்களுக்கு கோடுகோடாக வந்திருக்கும். காமரூன் நண்பர் அன்ரூல்ட் கணிணிவாங்கியிருப்பார். அவருக்கு கோடுவந்திருக்காது..இனிகணிணிவாங்குவதாக இருந்தால் அன்ரூல்ட் கணிணி என கேட்டுவாங்கவும. இதுதெரியாமல் நீங்க போய் சூர்யகண்ணன்சாரையெல்லாம் டிஸ்டர்ப்செய்துகிட்டு...போங்க மாம்ஸ்....

வாழ்க வளமுடன்.
வேலன்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// என்னுடைய ICICI வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்புங்கள். புது கம்யூட்டர் ரெண்டு வாங்கி , ஒண்ணை நான் வைத்துக்கொண்டு, மற்றதை உங்களுக்கு தருகிறேன்.. ( ஹி..ஹி)..//

--------------------------பட்டாப்பட்டி

பணம் அனுப்பியிருக்கிறேன் பெற்றுகொள்ளவும். Toshiba Satellite Pro - இரண்டு வாங்கிக்கொண்டு ஒன்றை எனக்கு அனுப்பவும்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// ”அடகொய்யாலே அப்புறம் எதுக்கு நீ ஒரு வன்பொருள் பொறியாளரா இருக்கன்னு நீங்க கேட்கறது புரியுது //
--------------மாணவன்

ஹி..ஹி ...ஹீ,,, அப்படியெல்லாம் சொல்வோமா? எங்களுக்குத்தெரியாதா!? :)))))

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// பகிர்வுக்கு நன்றி மாணிக்கம்...
புதிய கணினி வித்தகர் வாழ்க//
.......................L.K. சொன்னது.

சாமிகளா ! இதெல்லாம் ரொம்ப ஓவரு.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஒருவேள மானிட்டருக்கு மானிட்டர் தேவைப்பட்டதோ?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// ஹா,ஹா,ஹா,...............மக்களே டீலிங் பேசி முடிச்சிட்டேன் , இந்த மனுஷனுக்கு வக்கிரத்துக்கு தலைமுடி , பழைய டிரஸ்சு , காலடி மண்ணு மாதிரி பிளாக்கு சில ஐட்டங்கள் உங்க பிளாக்குல இருந்து திருடிட்டு இன்னைக்கு நைட் ரெண்டுமணிக்கு சுடுகாட்டுக்கு வரச்சொல்லிருக்கு ........... ஹா.ஹா.ஹா.....நாளை முதல் உங்கள் பிளாக் ............ஹா.ஹா.ஹா........//

-------------------------------------பட்டாப்பட்டி .

ஐயோ பாவம் மங்குனி. இந்த டீ.வி ல கண்ட கஷிசட ப்ரோகிராம்கள் பாக்காதிங்கன்னா கேக்குதுன்களா இந்த புள்ளைங்க?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// அப்ப நீங்க கணினி நிபுணர் ஆயிட்டிங்க //
------------------தமிழ் உதயம்.

அப்படியெல்லாம் இல்லீங்க. ஆயிரம் பேர கொன்னாத்தான் அரை வைத்தியன் அப்டீன்னுவாங்க.
நா இன்னும் ஒரு computer கூட ஓடைக்கலீங்க.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// உங்கள் காமரூன் நண்பர் கோடுபோட்டது(ரூல்ட்) கோடு போடாதது(அன்ரூல்ட்) என இரண்டு கணிணிகள் வாங்கி வந்திருப்பார். நீங்கள் கோடுபோட்ட கணிணி தேர்வு செய்திருப்பீர்கள். அதனால்தான் உங்களுக்கு கோடுகோடாக வந்திருக்கும். காமரூன் நண்பர் அன்ரூல்ட் கணிணிவாங்கியிருப்பார். அவருக்கு கோடுவந்திருக்காது..இனிகணிணிவாங்குவதாக இருந்தால் அன்ரூல்ட் கணிணி என கேட்டுவாங்கவும. இதுதெரியாமல் நீங்க போய் சூர்யகண்ணன்சாரையெல்லாம் டிஸ்டர்ப்செய்துகிட்டு...போங்க மாம்ஸ்....//

---------------------------------வேலன்


ஆஹா .....................எனக்கு வாச்ச மாப்ள ! இவரு. வேறு யாரும் வேண்டாம். !!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// ஒருவேள மானிட்டருக்கு மானிட்டர் தேவைப்பட்டதோ //
-------------------------பன்னிக்குட்டி ராம்சாமி.

வாய்யா, கவுண்டரே. என் கணணி மானிட்டரு GILBEY'S - Gin நா தான் வாய தெறக்கும்.

எஸ்.கே சொன்னது…

இந்த எலக்ட்ரானிக் சமாச்சாரங்களே ஒரு புதிர்தான்! எங்கள் வீட்டு டிவியில் அடிக்கடி அலை போல வரும் ஒரு தட்டு தட்டினால் சரியாகிவிடும். கொரகொரவென்று கேட்கும் ரேடியோ ஒரு தட்டினால் சரியாகிவிடும். இதுபோல பல...

(வேலன் சார் கமெண்ட் பார்த்து ரொம்ப சிரிச்சேன்!!!

சசிகுமார் சொன்னது…

//என் கணணி மானிட்டரு GILBEY'S - Gin நா தான் வாய தெறக்கும்//

ஒரே சரக்க ஊத்தியதால் தான் இது போல பிரச்சினை பண்ணுதோ.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

சூப்பர் மச்சி ..

எதுக்குமே ரெண்டு தட்டு தட்டினாதான் சரிப்படும் போல !

KaruppuSwamy Thangaraj சொன்னது…

This problem seems to be common among some of the Toshiba Satellite series. Refer: http://www.daniweb.com/forums/thread2589.html

If you dare enough to hack, try opening the LCD display and fix the connectors properly.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// எதுக்குமே ரெண்டு தட்டு தட்டினாதான் சரிப்படும் போல //

---------யூர்கன் க்ருகியர்.

தட்டக்கூடாது மாப்பள. கட்டை விரலால் மெதுவா அழுத்தி தேய்கோணும்.
கை வைத்தியம் தான்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// If you dare enough to hack, try opening the LCD display and fix the connectors properly.//

-----------KaruppuSwamy Thangaraj சொன்னது


Thanks for the suggestion Dude.I would do it.
I visited the site you mentioned. it seems to be a common problem in LCDs.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

சும்மாவே விஸ்டா தலை சுத்த வைக்கும் இதுல ரெண்டு சுமால் போட்டுகிட்டு உட்கார்ந்தா பைத்தியம்தான் பிடிக்கும் ஹிஹி

நாகராஜசோழன் MA சொன்னது…

நீங்க உங்க மடிக்கணினி வாங்கியதிலிருந்து வாட்டர் சர்வீஸ் பண்ணவே இல்லை என நினைக்கிறேன். அதை முன்னாடியே செய்திருந்தால் சரியாகி இருக்கும். ஏன்னா என்னோட பைக்ல இருந்த கோடு வாட்டர் சர்வீஸ் பண்ணியவுடன் போயிடுச்சு.

Jayaseelan சொன்னது…

:)

புதிய மனிதா. சொன்னது…

தல இது தற்காலிகமான தீர்வுதான் மீண்டும் கோடுகள் தோன்றும் வாய்ப்பு உண்டு என நினைக்கிறேன் ..

புலிகுட்டி சொன்னது…

கை வைத்தவுடன் சரியாயிடிச்சுனா உங்க கைல ஏதோ பவர் இருக்குனு நினைக்கிறேன்.கண்ட இடத்தில கையை வைக்காம கையை பத்திரமா வச்சுக்குங்க.

அலைகள் பாலா சொன்னது…

idea noted

ஜீ... சொன்னது…

'ஆக்சுவலா உங்க உடல்ல உற்பத்தியாகி, விரல் நுனிகளின் வழியாக காலப்படுகின்ற எலக்ட்ரோ மக்னற்றிக் வேவ்ஸ் நீங்க அழுத்தமா டச் பண்ணின.....' சரி விடுங்க! ஆனா ஒண்ணு இனி,

கைய வச்சே கணிப்பொறிய கண்ட்ரோல் பண்ணிய கக்கு அண்ணன்னு எல்லோராலும் அன்போடு அழைக்கப் படுவீர்கள்! :))

Kalidoss சொன்னது…

ஹல்லோ கக்கு - மாணிக்கம் வணக்கங்க .
சர்வ தேச லெவெலுக்கு கணினி பிராப்ளம் பத்தி உங்கள் அனைவரின் கருத்துகளையும் பார்த்தேன் .
மிகப் பிரமாதமாக அலசி இருக்கிறீர்கள்.
அடிப்படையில் சில விஷயங்களை கவனிக்கலையோன்னு தோணுது.உங்க "Bios",
பாத்ததிலே ரசாயனம் ஏதேனும் உங்கள்
மூலம் கணினியில் பட்டிருக்கலாமோன்னு ஒரு சந்தேகம்.

இரண்டாவதாக நீங்க ஒரு பாலைவனப் பிரதேசத்தில் பணியில் இருக்கிறீர்கள்.மணல் புயல்,தூசுக்கு பேர் போன எடத்திலே ரெண்டு 'windows' திறந்து
வேலை பார்த்தது சரியா?.நானும் பல ஆண்டுகள் அங்கே வேல பத்த அனுபவத்தில சொல்றேன்.
இவ்வளவு அனுபவமான ஆராய்ச்சியாளர்
"ruled"/ "unruled" கணினிக்கு வித்தியாசம் தெரியலேங்குறது,நம்பும்படியா இல்லே.கட்டை
விரலாலே சரி பண்ணியதா,சொல்றிங்க.அவ்வளவு நாளா உங்க கட்டை விரல் உங்க கிட்டே தானே இருந்திச்சு.ஏன் உபயோகப் படுத்தலை என்ற காரணத்தை நீங்க தெளிவா சொல்லலை.
ஏகலைவன் மாதிரி உங்களுக்கும் ஏதாவது பிரஷரா?.
கொஞ்சம் விளக்கமா இதை பத்தி சொன்னிங்கன்னா நல்லாருக்கும் ..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக