பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், நவம்பர் 24

காற்று அடைத்த பலூன்!


பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் ஒரு நல்ல அடையாளம், ஆரம்பம். நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் ராணி சோனியாவும் பிள்ளை ராகுலும் ,மன்மோகன் சிங்கும் நிதீஷ் குமாரை திட்டித்தீர்த்தனர். ஒன்றும் எடுபடவில்லை.

உத்திர பிரதேசம் போல பீஹாரிலும் காங்கிரசின் செல்வாக்கை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு அந்த பிள்ளை அடித்த கூத்துகளை எல்லாம் பீஹார் மக்கள் பொருட்படுத்தவே இல்லைஎன்றாகிவிட்டது.  லல்லுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள்ளும் தோல்விகண்டுள்ளது. லல்லுவின் மனைவி ராப்புரி தேவி இரண்டு தொகுதிகளில் போட்டி இட்டு ஒன்றில் முன்னணியிலும் மற்றதில் பின்னடைவிலும் இருக்கிறார்.  லாலுவும்,பாஸ்வானும் கூட ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.

இந்திய வாக்காளர்கள் இனிமேல் ஜாதி அடிப்படையில் வாக்களிக்க மாட்டார்கள். அந்த போக்கு மறைந்து வருவது ஒரு நல்ல மாற்றம்.நிதீஷ் மறுபடியும் வெற்றி பெற்றுள்ளது அவரின் சிறந்த நிர்வாகம் மற்றும் மாநில முன்னேற்றம் அடிபடையில் ஆனது. ஜாதி, மத அடிபடையில்  அரசியல் செய்யும் அரசியல் வாதிகள் நிதீஷ் குமாரிடம் பாடம் கேட்க வேண்டும். 

இனி காங்கிரஸ் பிழைக்கவேண்டும் என்றால், அவர்கள் கைக்கொண்டுள்ள ஒரே குடும்ப முறை ஆட்சி அரசியலை கை விட வேண்டும்.தேர்தல் முடிவுகளை கருதாது ஒவ்வொரு மாநில முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தவேண்டும்.காங்கிரசின் அடையாளமாகிவிட்ட அளவற்ற ஊழல், தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே அரசிலும் அதிகாரத்திலும் பங்கு அளிப்பது போன்ற அர்ப்பதனங்களை விட்டால் அன்றி இனி வரும் நாட்களில் அந்த கட்சி இந்திய மக்களால் பெரிதும் புறக்கணிக்கப்படும். சோனியாவிற்கு யாராவது ஒரு நல்ல அறிவுரை சொல்பவர் வேண்டும்.சோனியா மற்றும் ராகுல் இருவரும் பீகாரில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளட்டும். அடிப்படை வசிதிகள் மற்றும் ஒட்டு மொத்த முன்னேற்றமே மக்களை தங்கள் வசம் ஈர்க்கும் அன்றி, ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு சாதகமாக மட்டுமே கட்சியும் அரசும் செயல் பட்டால் இந்த கதிதான் நேரும் என்று.

வெறும் வாய் ஜாலம் எத்தனை  நாளைக்கு எடுபடும் காங்கிரஸ்காரர்களே?!

  ராகுலை பெரிய மேதை போல காட்டினார்கள் மன்மோகன் சிங்கும் பிற காங்கிரஸ் அடிவருடிகளும் . இந்த ராகுல் வெறும் காற்று அடைத்த பலூன் தான். இந்த மீடியாக்கள் எல்லாம் அதனை ஊதி ஊதி பெருசாக்கி விட்டன இவர்தான் வருங்கால இந்திய பிரதமர், இந்தியாவை காக்க வந்த கடவுள்  என்று. ஆனால் பீகார் மக்கள் சப்தம் இன்றி சிறிய முள்ளால் அந்த பலூனை குத்தி விட்டு போய்விட்டனர். தமிழ் நாட்டிலும் காங்கிரஸ் தனித்து போட்டி இட்டால் அல்லவோ தெரியும்  அது வைக்கோல் திணித்த கன்னுக்குட்டி என்ற கதை!32 comments:

பட்டாபட்டி.. சொன்னது…

அருமை.. அருமை....

இந்த தெளிவு..தமிழக் மக்களுக்கு வருமா?.. இல்லை டாஸ்மார்க் பாட்டிலுடன் புதைந்துவிடுமா?..
பார்ப்போம் பாஸ்..

ஹரிஸ் சொன்னது…

அருமை..

//தமிழ் நாட்டிலும் காங்கிரஸ் தனித்து போட்டி இட்டால் அல்லவோ தெரியும் அது வைக்கோல் திணித்த கன்னுக்குட்டி என்ற கதை!
//
உண்மை..

கக்கு - மாணிக்கம் சொன்னது…

இந்த தெளிவு..தமிழக் மக்களுக்கு வருமா?.. இல்லை டாஸ்மார்க் பாட்டிலுடன் புதைந்துவிடுமா?..

----------பட்டாபட்டி.. சொன்னது.


டாஸ்மாக் ஒன்றும் தமிழக மக்களுக்கு புதிது அல்லவே! ஆனால் இங்குதான் வெட்கம் மானம் இன்றி ஓடி ஓடி காங்கிரஸ் காலில் விழ எல்லாரும் தாயார் .இதற்க்கு என்ன செய்வது?
--

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நன்றி ஹரிஸ் .

Madhavan Srinivasagopalan சொன்னது…

நாட்டுக்கு நல்லது நடந்தா சரி.... கடிப்பா நிதீஷ பாராட்டனும்..

மாணவன் சொன்னது…

//வெறும் வாய் ஜாலம் எத்தனை நாளைக்கு எடுபடும் காங்கிரஸ்காரர்களே?!//

சரியான கேள்வி

//இந்த தெளிவு..தமிழக் மக்களுக்கு வருமா?.. இல்லை டாஸ்மார்க் பாட்டிலுடன் புதைந்துவிடுமா?..
பார்ப்போம் பாஸ்.. //

பொருத்திருந்து பார்ப்போம்...

தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள்

நன்றி

தமிழ் அமுதன் சொன்னது…

காங்கிரஸ் தமிழ் நாட்டிலும் வெறும் பலூன்தான்..!

அந்த பலூன்குள்ள இருப்பது தி.மு.க என்ற காற்று..!

ஜீ... சொன்னது…

//ராகுலை பெரிய மேதை போல காட்டினார்கள் மன்மோகன் சிங்கும் பிற காங்கிரஸ் அடிவருடிகளும்//
True!! :)
//வைக்கோல் திணித்த கன்னுக்குட்டி//
:)

யூர்கன் க்ருகியர் சொன்னது…

காங்கிரஸ் கம்முனாட்டிகளுக்கு அணைத்து ஓட்டைகளிலும் ஆப்பு அநியாயத்திற்கு அடைக்கப்படும் அதுவும் பீகாரில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்பதை ஆனந்தமாய் அறிவித்து கொள்கிறோம்,
இப்படிக்கு
அகில இத்தாலிய ச்சே இந்திய அணைத்து அல்லக்"கை" எதிர்ப்பு கல(ழ)கம்.

நாகராஜசோழன் MA சொன்னது…

// தமிழ் நாட்டிலும் காங்கிரஸ் தனித்து போட்டி இட்டால் அல்லவோ தெரியும் அது வைக்கோல் திணித்த கன்னுக்குட்டி என்ற கதை!//

இப்படி இருக்கிற போதே இவனுக கோஷ்டி சண்டை தாங்க முடியல!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கு நன்றி Madhavan Srinivasagopalan
வருகைக்கு நன்றி மாணவன்
வருகைக்கு நன்றி தமிழ் அமுதன்
வருகைக்கு நன்றி ஜீ...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

மாப்ள யூர்கன், இது என்ன கூத்து? ரெண்டு பாட்லு அல்ரெடி காலி. பத்தாததுக்கு கைல வேற ஒன்னா??
இது ரொம்ப ஓவரு கண்ணு. Take Crae!!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

// தமிழ் நாட்டிலும் காங்கிரஸ் தனித்து போட்டி இட்டால் அல்லவோ தெரியும் அது வைக்கோல் திணித்த கன்னுக்குட்டி என்ற கதை!//


இவனுக கண்ணுக்குட்டியோ இல்லையோ இனியும் நம்பினால் நாம் விரைவில் கண்ணுக்குட்டிகலாக மாற்றப்படுவது உறுதி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// இப்படி இருக்கிற போதே இவனுக கோஷ்டி சண்டை தாங்க முடியல!//
--------நாகராஜசோழன் MA சொன்னது

இவங்க எப்பவுமே இப்படித்தான். காங்கிரஸ் ஆரம்பிச்சப்பவே கோஷ்டி சண்டையும் உண்டாயிடுச்சி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

-
// இவனுக கண்ணுக்குட்டியோ இல்லையோ இனியும் நம்பினால் நாம் விரைவில் கண்ணுக்குட்டிகலாக மாற்றப்படுவது உறுதி //

----------!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

நம்பினால் தானே?! ஒட்டுமொத்த இந்தியாவே இவர்களை தூக்கி எறிவார்கள் உறுதி!
ஆனானப்பட்ட பீகாரே இவ்வளவு தெளிவா இருக்கும்போது.

என்னது நானு யாரா? சொன்னது…

நண்பா! காங்கிரஸின் தோல்விக்கு இருக்கும் காரணங்களை சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள். ராகுல் காந்தி நல்ல குணம் கொண்ட அரசியல்தலைவர் ஆவார் என்றே எண்ணுகின்றேன். ஆனால் பல பல ஊழல்வாதிகளை ஒழித்தால் தான் நாடு முன்னேறும். பார்ப்போம் நாட்டுக்கு விடிவுகாலம் சீக்கிரம் வரவேண்டும். நம்மால் ஆனதை செய்வோம்!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// ராகுல் காந்தி நல்ல குணம் கொண்ட அரசியல்தலைவர் ஆவார் என்றே எண்ணுகின்றேன். //

------------என்னது நானு யாரா? சொன்னது

வெறும் யூகத்தில் ஒருவரிடம் இந்தியா போன்ற ஒரு நாட்டை ஆள அனுமதிப்பதா?

முதலில் அம்மா சோனியாவும், பிள்ளை ராகுலும் தங்களின் இத்தாலி நாட்டு குடியுரிமையை ரத்து செய்துவிட்டு பின்னர் இந்தியாவில் அரசியல் செய்யலாமே!

இனி மேல் அங்கிருந்து (நேரு குடும்பம்) யார் வந்தாலும் இந்தியா விளங்காது. நடப்புக்களை அறிந்து என் இது போல ஒரு பரிவு உணர்வு தங்களுக்கு?

என்னது நானு யாரா? சொன்னது…

//இனி மேல் அங்கிருந்து (நேரு குடும்பம்) யார் வந்தாலும் இந்தியா விளங்காது. நடப்புக்களை அறிந்து என் இது போல ஒரு பரிவு உணர்வு தங்களுக்கு?//

நண்பா! அவரின் வெளிப்படையான பேச்சும், எளிமையான நடத்தையும், உண்மையான காங்கிரஸ்காரராக இருக்கிறாரே என்கின்ற எண்ணம் தான் அதற்கு காரணம். தலைமை சரியாக அமைய வேண்டுமே என்கின்ற கவலைதான் இதற்கு முக்கிய காரணம். அமெரிக்காவுடனான அனுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து பேசிய அவரின் பாராளமன்ற பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நிச்சயமாக நல்ல ஒரு தலைவராக வருவார் என்றே எண்ணுகின்றேன். உங்களுக்கு அப்படி இருக்க வாய்ப்பு இல்லை என்று ஏன் தோன்றுகிறது நண்பா?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

தமிழ் நாட்டிலும் காங்கிரஸ் தனித்து போட்டி இட்டால் அல்லவோ தெரியும் அது வைக்கோல் திணித்த கன்னுக்குட்டி என்ற கதை!
//
சூப்பர் பஞ்ச்..காங்கிரஸ் காற்றில் தூக்கியெறியப்பட்டு கோபுரத்தில் ஒட்டிக்கொண்ட பேப்பர்..காற்று வீசு இடுவது விரைவில் நின்றுவிடும்..கீழே விழுவதும் தவிர்க்கமுடியாது என்பதை இப்போது உணந்திருக்கும்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

தயவு செய்து இந்த இணைப்பில் சென்று பாருங்கள் நண்பரே.
http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/08/blog-post_31.html

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் அல்லவா?

நீங்கள் நம்பும் " நிச்சயமாக நல்ல ஒரு தலைவராக வருவார் என்றே எண்ணுகின்றேன்." என்று நம்பத்தகுந்தவர்கள் இப்படி அப்பாவி மக்களிடம் ஏன் நடிக்க வேண்டும்?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அமெரிக்காவுடனான அனுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து பேசிய அவரின் பாராளமன்ற பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
//
ராகுல் நல்ல பேச்சாளராக வருவார்..நல்லா பேசறவங்களை தலைவரா தேர்ந்தெடுத்துதான் இந்த நாட்டு மக்கள் குட்டி சுவரா போயிட்டாங்க...கண்டிப்பான,நேர்மையான,எதையும் விரைந்து முடிவெடுக்கும் வேகம்,விவேகம் நிறைந்த தலைமை காங்கிரஸ் இல்லை..ராகுலும் இல்லை...எதிர்காலத்தில் வருவார் என்றால் 40 வயசுல வராம 70 வயசுல வந்து என்ன புண்ணியம்?.

LK சொன்னது…

@என்னுது நானு யாரா

ஏங்க இந்த நாட்டில் பிறந்து இந்த நாடு மக்களுடன் வளர்ந்து பழகிய யாருமே உங்க கண்ணுக்குத் தெரியலையா ?? போயும் போயும் raul vinci (ராகுல் காந்தியின் பெயர் அவரது இத்தாலி நாடு படி ) தான் கிடைச்சாரா >??

LK சொன்னது…

@மாணிக்கம்

இந்த வெற்றி நிதிசின் நேர்மைக்கும் அவர் மேற்கொண்ட வளர்ச்சி பணிக்கும் கிடைத்த வெற்றி.

வேலன். சொன்னது…

super..

valgavalamudan.

velan

vanathy சொன்னது…

நல்லா இருக்கு. ஆனால், அரசியல் கருத்து சொல்லும் அளவிற்கு அறிவு இல்லை ஹிஹி.

THOPPITHOPPI சொன்னது…

பிரதமர் ஆகும் அளவுக்கு ராகுலுக்கு என்ன தகுதி இருக்குனு எனக்கும் தெரியல. டெல்லி போன்ற ஒரு மாநிலத்தில் நல்லாட்சி தருவதை விட பீகார் போன்ற மாநிலத்தில் ஆட்சி செய்து நல்ல பேர் எடுக்கிறார் என்றால் உண்மையில் நிதிஷ் குமாரை பாராட்டலாம்

தமிழ் குமார் சொன்னது…

சூப்பர் .....காங்கிரஸ் தனியா நிக்கலாம் .234 தொகுதிகளுக்கு முதலில் அவர்களிடம் வேட்பாளர்கள் இருகிறார்களா??????
evks இளங்கோவன் இப்ப தனியா நில்லுங்களேன்

சசிகுமார் சொன்னது…

//ஆனால் பீகார் மக்கள் சப்தம் இன்றி சிறிய முள்ளால் அந்த பலூனை குத்தி விட்டு போய்விட்டனர்//

நாம் எப்போ குத்தறது

அருள் சொன்னது…

பத்திரிகைகளின் பித்தலாட்டம்: பீகாரில் சாதி தோற்றதா?

http://arulgreen.blogspot.com/2010/11/blog-post_25.html

vasan சொன்னது…

நிதீஸ் குமார் மாநில‌த்தின் வ‌ள‌ர்ச்சியை மைய‌ப்ப‌டுத்தி, க‌ட்டுமான‌ங்க‌ளையும்,விவ‌சாய‌ம், தெழிற்துறைக‌ளை முடுக்கி த‌ன்ன‌ல‌மில்லாது (காம‌ராஜ‌ர் நின‌வுக்கு வ‌ருகிறார்)நாட்டுக்காய் உழைத்தார். பீகார் ம‌க்க‌ள் புத்திசாலிக‌ள். ச‌ரியான‌தை அட‌யாள‌ம் க‌ண்டு போற்றி வாக்க‌ளித்திருக்கிறார்க‌ள். ம‌த்திய‌ அர‌சின் (சோனியா, ராகுல்) வார்த்தைஜால‌ங்க‌ள், தீவிர‌வாதிக‌ளின் ப‌ய‌முறுத்த‌ல்க‌ள், ல‌ல்லுவின் ஜாதிக‌ள், ப‌ஸ்வானின் புஸ்வான தாலித் பொய்க‌ள், பாஜகாவின் சிறுபான்மை எதிர்ப்புக்க‌ள் என்ற‌ அன‌த்தையும் புற‌ம்த‌ள்ளி, நாட்டின் ந‌ல‌னை ம‌ட்டும் சீர் தூக்கி ம‌றுப‌டியும் நிதீஸ் குமாரின் ஆட்சிக்கு மேலும் ப‌ல‌ம் (206/243)
சேர்த்து மிக‌ப் பெரிய‌ வெற்றியை ம‌க்க‌ள் பெற்றிருக்கின்ற‌ன‌ர்.

பார்வையாளன் சொன்னது…

தெளிவான அலசல்

அருள் சொன்னது…

இந்த முறையும் பீகாரில் சாதிதான் வென்றது!

http://arulgreen.blogspot.com/2010/11/blog-post_28.html

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக