"மக்களாட்சி " நடக்கும் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி மட்டும் அந்த நாட்டின் தேசியக்கொடியினை தனது கட்சியின் கொடியாக எப்படி பயன்படுத்த முடிகிறது? அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அப்படி என்ன தனித்துவம்? காங்கிரஸ் கட்சியின் கொடியைத்தான் இந்தியாவின் தேசிய கொடியாக வைத்துள்ளார்கள் என்றால் அதே மூவர்ண கொடியை அவர்கள் எவ்வாறு இன்னமும் தங்களின் கட்சியின் கொடியாக பயன்படுத்த இயலும் ?
காங்கிரஸ் கட்சி, இந்திய நாட்டின் மூவர்ண தேசியக்கொடியினை தனது கட்சியின் கொடியாக பயன் படுத்துவதை முதலில் சட்டப்படி தடை செய்ய ஏன் எவரும் முன்வரவில்லை இதுவரை? காந்தி என்ற ஒரு சொல்லையும் ,இந்த மூவர்ண கொடியையும் வைத்துக்கொண்டு இன்னமும் அவர்கள் இந்த நாட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட பரம்பரை ஆட்சியை மேலும் கொண்டு செலுத்தவே முயற்சிக்கின்றனர்.இவர்கள் ஒழிந்தாலே போதும் நாட்டின் பிற பகுதிகளும் திருந்திவிடும் .
"அவர்கள் சுதந்திரம் வாங்க பாடு பட்டார்கள் " என்று யாரும் பழைய மூணாம் கிளாஸ் பாடம் படிக்காதீர்கள். பாடு பட்டவர்கள் எல்லாம் போய் சேர்ந்துவிட்டார்கள். மிஞ்சி இருப்பது இவர்கள் நாட்டை அடகு வைக்கவும் , அடுத்தவனுக்கு , பிற நாட்டிற்கு இந்தியாவை விற்கவும் கூட தயங்காத சண்டாளர்கள்.பதவியும், பணமும் ,அதிகார மோகமும் கொண்ட அடிவருடி கூட்டங்களே!
தேவையென்றால் இத்தாலியில் இருந்து வேறு நிறக்கொடிகளை கொண்டுவந்து கட்சி நடத்தட்டும். அது பற்றி யாருக்கும் கவலை இல்லை.இவர்கள் இந்தியாவின் மூவர்ண கொடியினை தங்களின் சுய லாபங்களுக்காக பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.இவர்களால் பாரதத்தின் பெருமை சீரழிந்தது , நாட்டையும் அதன் மக்களையும் கேவலப்படுத்தியுள்ளனர். தடை செய்தபின் பின்னர் பாருங்கள் எப்படி இந்த நாட்டு மக்களை இவர்கள் முட்டாள்களாக ஆக்கி வைத்து, இந்த தேசத்தையே சுரண்டி வாழ்ந்தார்கள் என்பது தெரிந்துவிடும்.
நாங்கள்தான் தேசிய கட்சி - என்று இன்னமும் சற்றும் வெட்கம் இல்லாமல் பேசுவார்கள்.சுயமாக செயல்பட , முடிவுகளை தர இயலாத ,எந்த ஒரு இந்தியனுக்கும் கட்சி தலைமையாக இருக்க இயலாத அந்த கூட்டத்திற்கு ஏன் இந்தியாவின் தேசிய கொடி இன்னமும் பயன்பட வேண்டும்?
இத்தாலிய மபியா ஆட்சிகள் ஒழிந்து நம்மவர்கள் ஆட்சி செய்யும் காலம் வரட்டும்.
27 comments:
மிகச் சரியான கருத்துக்களை ஆதங்கத்தோடு உணர்வுகளின் வெளிப்பாடாய் பதிவு செய்துள்ளீர்கள்
“இத்தாலிய மாபியா ஆட்சிகள் ஒழிந்து நம்மவர்கள் ஆட்சி செய்யும் காலம் வரட்டும்”
நிச்சயமாக...
சரியாக சொல்லி இருக்கீங்க.
உங்கள் கோபம் நியாயமானதே, எனக்குதெரிந்து ஜனநாயக நாடொன்றில் தேசிய கோடியை கட்சிக்கொடியாக வைத்திருப்பது இத்தாலிய அன்னையின் கட்சிதான்.
சரியா சொல்லி இருக்கீங்க.
சூப்பரான கேள்வி..கலரை மாற்றினால் அப்புறம் அவர்கள் எம்.எல்.ஏ கூட ஆக முடியாது
நாங்கள்தான் தேசிய கட்சி -இப்படி சொல்ல இதுவும் ஒரு காரணமோ
சுதந்திரத்துக்கு முன்னாடியிருந்தே இவர்கள் இப்படி நம்மை ஏமாற்ற ஆரம்பித்துவிட்டார்கள். அது இப்போது இத்தாலி வரை வந்துவிட்டது.
அண்ணே.. இதைய ராஜதுரோகம்னு சொல்லீக்கிட்டு, சில பன்னாடைகள் வருமே.. ஏண்ணே.. யாரையும் காணலே..
வந்தா சொல்லுங்க.. நானும் ஆட்டத்துக்கு வருவேண்.. ஹி..ஹி
ம்ம்..கொடி பத்தி வித்யாசமா யோசிச்சிருக்கிங்க...கொடியை மாத்தினால் எல்லாமே சரியாய்டுமா என்ன...அது ரெண்டு தலைமுறைக்கு முன்னாடி கை காமிச்சால் காங்கிரஸ்,ரெண்டு விரல் காமிச்சல் ரெட்டலை நு ப்ரைன்வாஷ் பண்ண பட்டது...ஆனால் இப்ப உள்ள தலைமுறைகளில் கொடிகளை எல்லாம் மீறி சட்ட அமைப்பு,அரசியல் வாதிகளை பத்திய அறியாமை கொஞ்சம் விலகிருச்சுனு தான் சொல்லலாம்...கொடிகள் போயி கோடிகளுக்கு முக்யத்துவம் கொடுக்கும் trend இருக்கும் காலகட்டத்துக்கு வந்துட்டோம்...))) நல்ல பகிர்வு...நன்றி!!
// ஆனால் இப்ப உள்ள தலைமுறைகளில் கொடிகளை எல்லாம் மீறி சட்ட அமைப்பு,அரசியல் வாதிகளை பத்திய அறியாமை கொஞ்சம் விலகிருச்சுனு தான் சொல்லலாம்..//
// கொடிகள் போயி கோடிகளுக்கு முக்யத்துவம் கொடுக்கும் trend இருக்கும் காலகட்டத்துக்கு வந்துட்டோம்..//
ஆனந்தி.. சொன்னது…
மேலே கண்ட கருத்துக்களில் உள்ள முரண்பாடுகள் புரியம் என்று நம்புகிறேன். இந்த குழப்பம் எல்லாரிடத்திலும் உள்ளது.
முன்னர் எப்பவும் விட சமீபத்திய தேர்தல்களில் பணம் கொடுத்து ஓட்டுகளை அள்ளும் பழக்கம் அணைவராலும் பின்பற்ற படுகிறது. கோடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க இந்த மூவர்ண கொடியும் காந்தியின் பெயரும் அல்லவா இவர்களுக்கு வேண்டியுள்ளது?
காங்கிரஸ் மூவர்ணக் கொடியை பயன்படுத்துவதை நிச்சயமாக தடை செய்ய வேண்டும். நல்ல தேச சிந்தனை உள்ள பகிர்வு. நன்றி.. ;-)
நீங்கள் சென்ன கருத்து மிகச் சரியான கருத்து நண்பரே..........யார் தான் இந்த நாட்டை மதிக்கிறார்கள்.......நிச்சயம் இந்நிலை ஒரு நாள் மாறும்....தோழரே..............
ஐயா,இங்கே ஒரு மொள்ளமாரி போனால் அடுத்தது இன்னொரு முடிச்சவிக்கி என்பது தங்களுக்கு தெரியாதா?
migacchari
அய்யா கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்த்தால் இதில் மறைந்திருக்கும் பல உண்மைகள் வெளிவரும். மோதிலால் நேரு மிகப்பெரிய பணக்காரர் அப்போது. உங்களுக்கு தெரியுமா கூட்டத்தை கூட்ட இப்போ இல்ல அப்பவே செலவாச்சி. அப்போதைய காங்குரசுக்கு பைனான்சியர்(பல பேரில் இவர் முக்கியமானவர்). காந்தியின் ஆசை ஒரு சாதாரண ஏழை விவசாயி(பாமரன்) தான் இந்த நாட்டை ஆள வேண்டும் அதற்க்கு பக்க பலமாக நேரு இருக்கவேண்டும் என்பதே. ஆனால் நடந்ததை நாடு அறியும் (உண்மையை அல்ல). அப்போ போட்ட ப்ளான் தான் இன்னுமும் ஓடிக்கிட்டு இருக்கு. இந்தியாவே அவங்க சொத்தா இருக்கும் போது கொடி எம்மாத்திரம்.
"காந்தி"ய குடும்ப பெயர் மாதிரி பயன் படுத்துறாங்க. அதையும் சேர்த்துக்கோங்க.
//ம்ம்..கொடி பத்தி வித்யாசமா யோசிச்சிருக்கிங்க...கொடியை மாத்தினால் எல்லாமே சரியாய்டுமா என்ன...அது ரெண்டு தலைமுறைக்கு முன்னாடி கை காமிச்சால் காங்கிரஸ்,ரெண்டு விரல் காமிச்சல் ரெட்டலை நு ப்ரைன்வாஷ் பண்ண பட்டது...ஆனால் இப்ப உள்ள தலைமுறைகளில் கொடிகளை எல்லாம் மீறி சட்ட அமைப்பு,அரசியல் வாதிகளை பத்திய அறியாமை கொஞ்சம் விலகிருச்சுனு தான் சொல்லலாம்...கொடிகள் போயி கோடிகளுக்கு முக்யத்துவம் கொடுக்கும் trend இருக்கும் காலகட்டத்துக்கு வந்துட்டோம்...))) நல்ல பகிர்வு...நன்றி!! //
ஆனந்தி சொன்ன கருத்தில் மாற்று கருத்து எதுவும் இல்லை.. எமது கருத்துத் அதுவே..!
என் பெரை கிளிக் பண்ணிபாருங்க .....என் புது கட்சி கொடிய.....
'நேரு காந்தி' குடும்பம் என்பதில், துளியும் உண்மை இல்லை.
இது பாமர மக்களை ஏமாற்றும் வஞ்சகம்.
நேஃரு என்பது நீர் நிலை அல்லது கால்வாயைக் குறிக்கும் சொல்.
ஜவஹரின் தாத்தாவிற்கு முந்தியவர்கள் காஷ்மீரிலிருந்து, முகலாய அதிகாரிக்கு கணக்கு வழக்கு
வேலைக்கு, டெல்லி வந்து தங்கிய வீட்டின் அருகில் ஏரியோ, கால்வாயோ இருந்ததால்
நேஃரு என்ற பட்டப் பெயர் வ்ந்தது. அடுத்த தலைமுறைகள் (முகமதியர் ஆட்சி முடிந்து ஆங்கில ஆட்சி தொடங்கியது)தாண்டிய பின் மோதிலால் நேரு கொஞ்சம் அரசியலுக்கு வந்தார்.
(நேரு பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பும் போது, நாலு வாசலிலும் நாலு கார் நிற்கும்,
என்ற புரளி கேட்டிருக்கிறீர்களா?)
இந்திரா 'பெரோஸ் கான்' என்பவரை காதலித்து திருமணம் செய்த போது 'கான்' என்பது நேருவின் பண்டிட் பின்னனிக்கு உறுத்தலாய் இருக்கலாம் என்பதால், பெரோஸ்'காண்டி' யாக
காந்திஜி மாற்றினார். அந்த காண்டி இறந்தபின்,இந்திராகாண்டி, இந்திரா காந்தி (இவர்களுக்கு வசதியாக)ஆகிவிட்டது. நேருவின் மகள் என்பதால் "நேரு" பெரோஸ் கான்/காண்டி/காந்தி
மணவியானதால், காந்தி, ஆக சேர்ந்து நேரு காந்தி குடும்பமாக, இத்தாலிகாரர்களும். அவர்கள் வாரிசுகளும், வசதியாய் நேரு காந்தி வாரிசாய், வரிசையில் வருகிறார்கள்.
காந்தி ஒட்டுமொத்த இந்தியர்களின் தேச பிதா என்றால்...! அவர் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்திருக்க கூடாது...!
காந்தியை காட்டியே காங்கிரஸை வளர்த்தார்கள்..!
தேசிய கொடி பற்றிய தங்கள் கருத்து முற்றிலும் சரியானது...!
ரொம்ப சரியான கருத்து/....
உண்மைதான்...! கங்கிரஸ் கட்சி என்றாலே, ஏதோ சுதந்திரப் போராட்ட தியாகிகளின் கட்சியைப் போன்ற ஒரு பிரமையை மக்களிடத்தில் ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் பன்னாடைகளின் தோலுரிப்பதாய் அமைந்துள்ளது இந்தப் பதிவு!
நீங்கள் சொல்லுவது சரி
காங்கிரஸ் - என்ற ஆங்கில சொல்லுக்கு கூட்டம்,சந்திப்பு,அரங்கம் என்பதாக தமிழில் அர்த்தம் இருக்கிறது. காங்கிரஸ் என்பது ஒரு கட்சியே கிடையாது. சுதந்திரம் பெறுவதற்காக போராட ஏற்படுத்தப்பட்டது அந்த அமைப்பு. எப்போது சுதந்திரம் பெற்றோமோ அப்போதே அந்த அமைப்புக்கான அவசியம் கலைந்து விட்டது. ஆனாலும் ஜனநாயக நீரோட்டத்தில் அதைக் கட்சியாக்கி இன்று தன் நல்லவித அடையாளத்தைத் தொலைத்து நிற்கிறது!
//காந்தி என்ற ஒரு சொல்லையும் ,இந்த மூவர்ண கொடியையும் வைத்துக்கொண்டு இன்னமும் அவர்கள் இந்த நாட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட பரம்பரை ஆட்சியை மேலும் கொண்டு செலுத்தவே முயற்சிக்கின்றனர்//
உண்மை!
எதிர்ப்பில் தோன்றுவதுதான் எதிர்பார்ப்பும் . உங்களின் எண்ணம் நியாயமானதே
இப்ப நாடு இருக்குற சூல்நிலைள்ள கொடிகளை மாற்றுவதை விட கேடிகளை மாத்தணும்.
கருத்துரையிடுக