பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், அக்டோபர் 25

இப்படி செய்தால் என்ன ?

இன்றைய தேதிகளில் பற்றி எறியும் செய்திகள் ஒன்று கிலானி, அருந்ததிராய், மற்றது, "ராகூலை தூக்கி கங்கையில் எறியவேண்டும் " என்று முழங்கிய ஷரத் யாதவ்.

காஷ்மீர் பற்றி அந்த அம்மா அருந்ததி ராய் ( GOD OF SMALL THINGS) பிரிவினை வாதி கிலானியுடன் சேர்ந்து கொண்டு காஷ்மீர் இந்தியாவின் மாநிலம் அல்ல என்ற பொருளில் பேசிவிட்டு வாங்கி கட்டிக்கொண்டு நிற்க, காஷ்மீர் போலீஸ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க "ஏற்பாடாம்".



அதைவிடுங்கள், பீகாரில் நடக்கும் இடைதேர்தலை முன்னிட்டு அங்கு வன்முறையும் அராஜகமும் தூள் பறக்கிறது. நக்சலைட்டுகளின் கடத்தல் நாடகமும் தொடர்கிறது. இந்த நிலையில் ஜனதா தள(யுனைடெட்) தலைவர் ஷரத் யாதவ் ஒரு பிரசார கூட்டத்தில் பேசும் போது மத்தியில் ஆளும் காங்கிரசையும் ,இளவரசர் ராகூலையும் செமையாக வாரி விட்டுள்ளார்.


// கையை சின்னமாக கொண்ட உங்கள் குடும்பம் ஐம்பது வருடங்களாக இந்த நாட்டை ஆள்கிறது.மோதிலால், ஜவஹர் லால், இந்திரா காந்தி, ராஜீவ், சோனியா போதாத குறையாக அந்த பையன் ராகுல் // 


என்று கூறி, மேடைகளில் ராகுல் செய்யும் அதே மேனரிசத்தை -தன் ஜிப்பாவின் கை பகுதிகளை மேல் நோக்கி உயர்த்திக்கொண்டு பேசும் ராகூலை போல செய்துகாட்டி பயங்கரமாக வாரியுளார். 


// உனக்கு இந்தியாவை பற்றி என்ன தெரியும்? உன் கட்சியில் யாராவது எழுதிக்கொடுப்பதை நீ கூட்டங்களில் மக்களிடம் வாசிக்கிறாய்.உன்னை தூக்கி  தூக்கி கங்கையில் எறிந்திருக்க வேண்டும் ,ஆனால் இந்த நாட்டு மக்கள் அறிவிலிகள், இந்த நாடும் வழி வகை அற்று போயுள்ளது //



 என்று திருவாய் மலர்தருளி யுள்ளார். ஆனால் அவரும் இந்த "தூக்கி எறியப்படும் " ஆட்களில் ஒருவர்தான் என்பதை அறியவில்லையோ!

இணைப்பு: 
இப்படி செய்தால் என்ன? வாரிசு அரசியல், வாரிசு அதிகாரம், வாரிசு பதவி என்று எல்லாவற்றிலும் தம் வாரிசுகளையே கொண்டாடும் அத்தனை அரசியல் மேதாவிகளையும் தூக்கி கங்கையில் எறிந்தால் என்ன? இப்படி செய்தால் ஒரு குஞ்சு குளுவான்கள் கூட இந்தியாவில் மிச்சம் இருக்காது. எல்லாம் ஒழிந்து விடும். புதியவர்கள், இளையவர்கள், கல்வி அறிவு பெற்றவர்கள், அறிவாளிகள் என்று புது சகாப்தம் ஒன்று வர வழி பிறக்கும். கங்கை முன்னரே மாசுபட்டு நாறிப்போய் கிடக்கிறது என்பது உண்மைதான்.




அதோடு இந்த பாவிகளும் போய் சேரட்டுமே !!

படித்து தொலைத்த இன்னமும் பிற சங்கதிகள்:


bharatian (usa) 

$2billion had been arranged by Viktor Chebrikov who was the KGB chief. Money went to Rahul Gandhi, Sonia Gandhi, her mother Paola Maino and Viktor was authorized by the CPSU in December 1985. In the wake of Harvard scholar Yevgenia Albats wrote that KGB made payments to Rajiv Gandhi and his family. $2billion had been arranged by Viktor Chebrikov who was the KGB chief. Money went to Rahul Gandhi, Sonia Gandhi, her mother Paola Maino and Viktor was authorized by the CPSU in December 1985. Payments were authorized by a resolution, CPSU/CC/No 11228/3 dated 20 December 1985; and endorsed by the USSR Council of Ministers in Directive No 2633/Rs dated 20 December 1985. Sonia got KGB payments since 1971, and have been audited in CPSU/CC resolution No 11187/22 OP dated 10/12/1984. In 1992 the media confronted the Russian government with the Albats disclosure. The Russian government confirmed the veracity of the disclosure and defended it as necessary for "Soviet ideological interest."

ramesh kumar r (guwahati)

i think wat mr.yadav said is right ... even though i dont believe that his government is doing any good..... i ask here wat did mr.rahul did to be considered as the next p.m of india other than bieng the son of rajiv gandhi.... he has constantly toured around the country not the bring to notice the state of apathy the people of this rural india are in ...but to strengthen the foothold of congress in area where congress is losing its grip......... i remember once in parliament he brought to the notice about the farmer sucide cases in vidharba ... about the family and women named kalavathi ... wat action did the goverment take other than providing some relief to kalavathi ... was she the only family affected by sucide..wat about the other families and kalavathi's in vidharba who are suffering from the losses... with both the congress in centre and state they did very little..... congress is doing well not because of its good governance but because there is no party credible enough to stand against it ..there are doubts on religious patronage of a party.... and another that supports communist china rather than democratic India ....and rahul gandhi may the face of the congress leadership but has not yet gained the acceptance of the people as a national leader......he is just shining under the shadow of his forefather who ruled this country..... it seems to be the destiny of this country to be ruled by the gandhi family because there seems to be no other choice here?!!!!!!!!!





7 comments:

Philosophy Prabhakaran சொன்னது…

மாணிக்கம் ரொம்ப சீரியசான பதிவர் போல...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஆகா.. நெருப்பு பத்திகிச்சு.. ஆடிச்சு ஆடுங்க...

சசிகுமார் சொன்னது…

இப்படி புரியாத மொழியில போட்டா எப்படி நாங்கெல்லாம் அந்த அளவுக்கு படிக்கல சாமி

Unknown சொன்னது…

ராகுல் மட்டுமா இங்கு நிறைய புண்ணாக்குகள் மண்டபத்தில் எழுதிகொடுப்பதைதான் பேசுகின்றன...

மாதேவி சொன்னது…

அரசியல் :(

கங்கை பழைய கங்கையாகத் தெரிகிறதே. காணக்கிடைக்காத படங்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அரசியல்...? அரசியல்..........! :(

யூர்கன் க்ருகியர் சொன்னது…

ட்ராகுலை "போ" நதியில் தூக்கி வீச வேண்டும்!
என்ன.. "போ" நதி எங்க இருக்குன்னு தெரியலையா ?
அது இருக்கு இத்தாலில !

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக