பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, அக்டோபர் 23

பென்ஸ் என்றாலே வாயில் நீர் ஊரும் !



 // நன்றாக இருந்தார் மாம்ஸ்...இப்போது என்னவோ ஆகிவிட்டது...திடீரென்று தத்தவம் எல்லாம் போட ஆரம்பித்துவிட்டார்...அப்புறம் சைதாப்பேட்டை சாமியாராகிவிடபோறார்(அட..டைட்டில் நன்றாக இருக்கே)..//

                                                                        வேலன். சொன்னது…

சென்ற பதிவில் " நான் " எனும் அகந்தை அழிக்க ஏதோ உருண்டை உருண்டையாய்  படங்களை போடப்போக என்னை சாமியாராக்கும் எண்ணத்தில் மாப்ளை வேலன் இருபது தெரியவர, இது சரியாக வராது,என்னை  "பெண்டு' எடுக்க அவர் தலைமையில் ஒரு கூட்டமே புறப்படும் நிலையில், நான் மீண்டும் என் வழிக்கு வருகிறேன். 



கார் பிரியர்களுக்கு பென்ஸ் என்றாலே வாயில் நீர் ஊரும்.எந்த நாட்டவர்களாக இருந்தாலும் இதே நிலைதான். இரண்டு உலகப்போர்களில் ஈடு பட்டு, நாடும் பொருளாதாரமும் சின்னா பின்னமாகி,புறக்கணிக்கப்பட்டு,அவமானப்படுத்தப்பட்டு   பின்னர் அதிலிருந்து கிளர்ந்து எழுந்தவர்கள் அவர்கள். அவர்களின் அறிவியல் வளர்ச்சி பிரமிப்பை தரும். இயந்திரங்கள், வேதியியல் ,மருத்துவம் , விவசாயம் என அவர்களின் வளர்ச்சி வேறு எந்த  நாட்டவர்க்கும் அரிதானது.

வேலை- திறமை என்பது அவர்களின் வாழ்கை முறை. அது நம்மிடம் இல்லாத உயர்ந்த பண்பு. இந்த சில படங்கள் அவைகளை சொல்லும். அவர்களுக்கு "இது சிறிய விஷயம் " என்ற எண்ணமே எபோதும் வருவதில்லை. அனைத்துமே மிக முக்கியமானவை. நம்மிடம் இல்லாத ஒரு வாழ்கை முறை. நாம் வேளையிலும் தரத்திலும் நிறைய காம்ரமைஸ் செய்துகொள்ள சகலத்திலும் அதுவே நமக்கு வாழ்கை முறையாகிப்போக, அதனை விடாது பின் பற்ற நமக்கு அமைப்புகள்....ஆட்சியாளர்கள் ....தலைவர்கள்.......























14 comments:

எஸ்.கே சொன்னது…

அட! அட! அட! அட்டகாசம்!

பொன் மாலை பொழுது சொன்னது…

நீங்க இன்னமும் தூங்கலையா?? :)

மாணவன் சொன்னது…

அருமை சார்,
கார்களின் படங்கள் கொள்ளை அழகு.....
என்ன ஒன்று இந்த படங்களையெல்லாம் பார்க்கத்தான் முடிகிறது
படங்களின் தொகுப்பு அட்டகாசம்!
பகிர்விற்கு நன்றி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அண்ணே.. ப்ளீஸ்ண்ணே.. ரெண்டு கார் பார்சல்..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

கொஞ்சமாம் சிரமப்பட்டாவது நமக்கொரு கார் பார்சல் பண்ணுங்க...

யூர்கன் க்ருகியர் சொன்னது…

ஒ.. இதான் பென்ஸ் காரா ?


அப்புறம் நீங்க சைதாப்பேட்டை சாமியாராகிவிட வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறேன் ... காருக்குள்ள பிகரு இருக்கும்போதே முடிவு பண்ணிட்டேன் ..
ஜெய் கக்கானந்தா !

பொன் மாலை பொழுது சொன்னது…

மாப்ள யூர்கன் உனக்கு ஏனைய்யா இந்த எண்ணம்.?
வண்டியின் உள்ளே இருப்பது எனக்கு அத்தை முறை மாப்ள!

MUTHU சொன்னது…

கக்கு - மாணிக்கம் சொன்னது…

மாப்ள யூர்கன் உனக்கு ஏனைய்யா இந்த எண்ணம்.?
வண்டியின் உள்ளே இருப்பது எனக்கு அத்தை முறை மாப்ள!////////////

இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே

வேலன். சொன்னது…

ஆளாளாளுக்கு இலவசமாக அள்ளி விடறாங்க...பென்ஸ் கார் வாங்கினால் உள்ளே உட்கார்ந்திருக்கின்ற பெண் இலவசமாமே....அப்படியா?
அதான் பட்டாபட்டி அண்ணே இரண்டுகார் பார்சல் கேட்டாரா? ம்...கெட்டிக்காரர்தான்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

சசிகுமார் சொன்னது…

அருமை எப்பவும் போல அருமை

பொன் மாலை பொழுது சொன்னது…

// பென்ஸ் கார் வாங்கினால் உள்ளே உட்கார்ந்திருக்கின்ற பெண் இலவசமாமே....அப்படியா?
அதான் பட்டாபட்டி அண்ணே இரண்டுகார் பார்சல் கேட்டாரா? ம்...கெட்டிக்காரர்தான்...//

---------வேலன்.

நா என்னதான் பண்ணுவேன்?
என்னைய இழுத்து வம்பில் விட இந்த புள்ளங்க எல்லாம் "கறவம்" வெச்சிகிட்டு அலையுதுங்க. மக்களே இதுகெல்லாம் நா பொறுப்பல்ல சாமிகளா!!

RVS சொன்னது…

அதென்னப்பா ஒரு கிழவியை உட்கார வச்சு போட்டோ எடுத்துருக்கானுங்க... வண்டிக்கு திருஷ்டியா...
"மேல் மாடியில் நீயும் நானும்... " பாட்டு நல்லா இருக்கு என்ன படம் கக்கு..
அழகுக் பெண்ணின் தாயார் என்றால் அத்தை என்று அர்த்தம். அதானே கக்கு.. ;-)

பொன் மாலை பொழுது சொன்னது…

// "மேல் மாடியில் நீயும் நானும்... " பாட்டு நல்லா இருக்கு என்ன படம் கக்கு..//

அவசரகல்யாணம்

ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ ,நாகேஷ்......ரமா பிரபா.

இசை : கே.வி. மகாதேவன்.

இன்னொரு பிரபல பாட்டும் இதில் உண்டு
" பார்த்தால் முருகன் முகம் பார்க்கவேண்டும் ".

ponraj சொன்னது…

அருமையான பதிவு

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக