பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், அக்டோபர் 11

அணைத்து வலையுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

 "சற்று வெட்கமாவது கொள்வோம்" என்ற பதிவில்  வாசக அன்பர்கள் காட்டிய ஆதங்கமும், வருத்தமும்,கோபமும் குறிப்பிடத்தக்கது. நாம்  தினசரி இது போன்ற அவலங்களை, காட்சிகளை காண்கிறோம், கடந்து செல்கிறோம் ஆனால் அப்போதெல்லாம் நமக்கு ஏற்படாத, உண்டாகாத மனிதாபிமான உணர்வுகள் இங்கு வலையில் சில படங்களை காணும் போது மட்டும் எங்கிருந்து வருகிறது என்ற நினைக்கத்தோன்றுகிறது. 


தினசரி வாழ்கையில் இது போன்ற அவலங்கள் கண்களில் பட்டாலும் அவைகள் பயனற்றுபோக நிறைய வாயுக்கள் உண்டு.நாம் முற்றிலும் நம் சொந்த விஷயங்களில் அல்லது தினசரி வாழ்வில் உண்டாகும் கடமை உணர்வுகளில் அமிழ்ந்து போவதால் இதுபோன்ற பாவப்பட்ட குழந்தைகள் நம் கவனங்களை அதிகம் கவர்வதில்லை. ஆனால் வலைதளத்தில் அமர்ந்து சற்று கவனத்துடன் இது போன்ற செய்திகளை வாசிக்கும் போது மனம் 
கனத்து போகிறது.







நாம் என்னசெய்யலாம்? 
இங்கு வலையில் ஆயிரம் ஆயிரம் வாசகர்கள், பதிவர்கள் என ஒரு பெரும் படையே உள்ளது. நம்மில் எத்தனையோ  பேர்கள் சொந்தமாக  தொழிலகங்கள் வைத்திருப்போம், நிறைய தொழில் அதிபர்களும் இருப்பீர்கள், தக்க வயது வராத இதுபோன்ற இளம் சிறுவர்களை பணியில் அமர்திக்கொள்வதை தவிர்ப்போம். அப்படி வைத்துள்ளவர்களிடம் எடுத்துக்கூறி அவர்களை இந்தக்கொடுமையை உணரச்செய்வோம். அவர்களுக்கு கல்வி அறிவு பெற முடிந்த வரை உதவுவோம்.

ஒரு உண்மை உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்; இதுபோன்று, படிக்கவேண்டிய இளம்வயதில் இவர்கள் வறுமையின் பொருட்டு வேலைக்கோ அல்லது நாம்  படங்களில் பார்த்த சில " சுய தொழில்கள் " செய்ய நேர்வதால்' வளர்ந்த பிறகு இவர்கள் அடைக்கலமாவது அல்லது இவர்களை அரவணைத்துக்கொள்வது பல்கி பெருகி கிடக்கும் அரசியல் , மத, ஜாதி வளர்க்கும் கட்சிகளும் மற்றும் சினிமா  படப்பெட்டி சுமந்து நடனம் ஆடவும், கட் அவுட் பாலபிஷேகம் பண்ணவும், வாழ்க . ஒழிக கோஷங்கள்  போடவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புக்களே!!

சிறு வயதிலேயே இவர்கள் பணத்தின் இயல்பை அறிந்து கொள்வதால், இவர்களை மிக எளிதாக தம் எல்லைக்குள் அரசியல் வாதிகளும் , சினிமா பட நாயகர்களும் கொண்டுவந்துவிடுகிறார்கள்.எல்லாமும் இலவசமாக கிடைப்பதால் இச்சிறுவர்களும் அதே வழியில் நின்று தங்களின் விசுவாசம் காட்டி, கேவலம் ஒரு சினிமா படத்திற்காக நேர்ந்துகொண்டு  அலகு குத்திகொள்வது, பால்குடங்கள் எடுப்பது,மண்டியிட்டு மலை  ஏறுவது,மொட்டை அடித்துக்கொள்வது, ஹீரோக்களின் படங்களை உடம்பில் பச்சை குத்திக்கொண்டு பெருமை படுவது, அவர்களின் கட் அவுட் களுக்கு பீர், பால் அபிஷேகம் செய்வது போன்ற கேவலமான,சுய மரியாதை சிறிதும் அற்ற காரியங்களில் தங்களை ஈடுபடுத்தி "பெரிய செயற்கறிய செயல்கள் " செய்துவிட்டதாக நம்புவதும்; வெட்கம் மானம் அற்ற அணைத்து ஊடகங்களும்இவர்களை  காட்டி கொண்டாடுவதும் நடந்துகொடிருகின்றன.

தொட்டதெற்கெல்லாம் வெறுமனே புலம்புவதும், பிறை விமர்சிப்பதும் நாம் எப்போதும் செய்யும் செயல்தான்.இந்த முறையாவது நாம் நம்மால் ஆனதை செய்வோம் என்று நம்புவோம்.இது குறித்து நம்மில் ஒரு புரிந்துணர்வும், கருத்து பரிமாற்றங்களும் ஏற்பட்டால் நாம் வலையில் உலாவருவதர்கான உண்மையான அர்த்தம் விளங்கும் அல்லவா?!
 ஆதரவிற்கு நன்றி !!

17 comments:

Sai Gokulakrishna சொன்னது…

First,Lets start from Us.
Last one is sentiment and sympathic post and this one is Action post.
PLAN-DO-CHECK-ACTION-Deming cycle.
Hope you r now in Action. Start..,
1,2,3.....

Asiya Omar சொன்னது…

நல்ல சிந்தனையுடன் கூடிய பகிர்வு.

Kousalya Raj சொன்னது…

//நம்மில் எத்தனையோ பேர்கள் சொந்தமாக தொழிலகங்கள் வைத்திருப்போம், நிறைய தொழில் அதிபர்களும் இருப்பீர்கள், தக்க வயது வராத இதுபோன்ற இளம் சிறுவர்களை பணியில் அமர்திக்கொள்வதை தவிர்ப்போம்//

எங்கள் நிறுவனத்தில் எங்களிடம் வேலை செய்யும் பெண்கள் தன் பிள்ளையையும் சேர்த்து கொள்ள சொல்லி என்னிடம் அடிக்கடி வலியுறுத்துவார்கள். நான் முடியாது என்று மறுத்தால் அப்படி என்றால் நாங்கள் வேறு நிறுவனத்திற்கு சென்று விடுவோம் என்று குரல் கொடுப்பார்கள். அப்படி சிறு குழந்தைகளை வேலைக்கு வைத்தால் spot fine 10,000 to 20,000 கட்டணும் என்று சொல்லி உங்கள் சம்பளத்தில் அதை பிடித்து விடுவேன் சம்மதமா என்று கேட்டேன்....அதற்கு பிறகு இந்த தொந்தரவு இல்லை....

நிறுவனங்கள் தங்கள் லாபத்தை மட்டும் எண்ணாமல் சிறு குழந்தைகளின் நன்மையையும் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் பகிர்வுக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு .சாய் கிருஷ்ணன்.

பொன் மாலை பொழுது சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி ஆசியா.

பொன் மாலை பொழுது சொன்னது…

மிக்க நன்றி Kousalya.
தங்களின் இந்த பொறுப்பும் அக்கறையும் அணைவருக்கும் இருந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்? உங்களின் இந்த சேவை பாராட்டபடவேண்டியது.
இதனையே ஒரு இயக்கமாக சிறுக சிறுக ஆரம்பித்து கொண்டு சென்றால்
மிகவும் நல்லது. அணைவரும் பங்கு கொள்வோம்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

குழந்தைகளை வேலைக்கு வைப்பதைத் தவிர்ப்போம், அப்படி வைத்துள்ள இடங்களைப் புறக்கணிப்போம்!

இளங்கோ சொன்னது…

http://ippadikkuelango.blogspot.com/2010/09/blog-post_09.html .
நேரம் இருப்பின் இப்பதிவை வாசிக்கவும்.

சசிகுமார் சொன்னது…

நல்ல பதிவு நண்பா, நானும் இதை பற்றி ஒரு பதிவு இட்டு இருந்தேன்

http://vandhemadharam.blogspot.com/2010/02/blog-post_22.html

பெயரில்லா சொன்னது…

View here: http://fitwood.blogspot.com/2010/09/crying-people-photo-collection.html

விஷாலி சொன்னது…

நண்பரே முடிந்தவரை இந்த விஷயத்தை டீக்கடையில் இருந்து ஆரம்பிப்போம். அங்கே தான் அந்த பிஞ்சு குழந்தையின் வேலை ஆரம்பிக்கிறது. முடிந்தவரை அப்படிப்பட்ட டீக்கடைகளில் நாம் டீ அருந்துவதை தவிர்ப்போம் மற்றும் ஏன் நாம் அருந்துவதில்லை என்பதை உரிமையாளருக்கு தெரிவிப்போம்.

Jaleela Kamal சொன்னது…

சரியான விழிப்புணர்வு பதிவு.
என்ன செய்ய எல்லாம் வறுமையால்

அன்புடன் மலிக்கா சொன்னது…

மிகவும் அவசியமான நல்லதொரு பதிவு மாணிக்கம்..

//

எல்லாமும் இலவசமாக கிடைப்பதால் இச்சிறுவர்களும் அதே வழியில் நின்று தங்களின் விசுவாசம் காட்டி, கேவலம் ஒரு சினிமா படத்திற்காக நேர்ந்துகொண்டு அலகு குத்திகொள்வது, பால்குடங்கள் எடுப்பது,மண்டியிட்டு மலை ஏறுவது,மொட்டை அடித்துக்கொள்வது, ஹீரோக்களின் படங்களை உடம்பில் பச்சை குத்திக்கொண்டு பெருமை படுவது, அவர்களின் கட் அவுட் களுக்கு பீர், பால் அபிஷேகம் செய்வது போன்ற கேவலமான,சுய மரியாதை சிறிதும் அற்ற காரியங்களில் தங்களை ஈடுபடுத்தி "பெரிய செயற்கறிய செயல்கள் " செய்துவிட்டதாக நம்புவதும்; வெட்கம் மானம் அற்ற அணைத்து ஊடகங்களும்இவர்களை காட்டி கொண்டாடுவதும் நடந்துகொடிருகின்றன.//

வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறீர்கள் உண்மையை.
சபாஷ்.

rachinnathurai சொன்னது…

arumaiyaana aakkam.

எஸ்.கே சொன்னது…

//நாம் தினசரி இது போன்ற அவலங்களை, காட்சிகளை காண்கிறோம், கடந்து செல்கிறோம் ஆனால் அப்போதெல்லாம் நமக்கு ஏற்படாத, உண்டாகாத மனிதாபிமான உணர்வுகள் இங்கு வலையில் சில படங்களை காணும் போது மட்டும் எங்கிருந்து வருகிறது என்ற நினைக்கத்தோன்றுகிறது.// மனிதாபிமானம் உள்ளவர் எப்போதும் இப்படிப்பட்டவைகளை பார்த்தால் வெறும் பரிதாபம் மட்டும் படாமல் நம்மால் இயன்ற செயலை அதற்காக செய்ய வேண்டும்.

Thamira சொன்னது…

:-((

ஸாதிகா சொன்னது…

நல்ல இடுகை சகோதரர்.விழிப்புணர்வைத்தூண்டக்கூடிய பதிவு.படங்கள் மனதை பிழிய வைத்து விட்டன.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக