எத்தனை பெருமைகள் நமக்கு?!
பல ஆயரம் கோடி ஐ. பி. எல் ,
70000 கோடி காமன் வெல்த் விளையாட்டுகள்,
எந்திரன் சினிமா வசூல் வேட்டை, 70000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல்,
அயோத்தி அடிதடி. சோனியாஜி, மன்மோகன், ராகுல்ஜி, மோடி,
கருணாநிதி, எடியுரப்பா, செயலலிதா, அத்துவானி, முலாயம் சிங் ,
லல்லு, மாயாவதி, மம்முதா தீதி, ரயில் விபத்து,மவோயிஸ்ட் , உமன் சாண்டி ,அமிதாப்பு, ஐஸ்வர்யா ராய், நயன்- பிரபுதேவா, கட் அவுட் ,பால் அபிஷேகம், ரசினி, இமயமலை, மேசாதி, கீழ்சாதி, பார்பனர், பறையர் ,இந்து,முசல்மான், மழை ,வெள்ளம், நவராத்திரி, காந்தி ஜெயந்தி, தீவாளி தள்ளுபடி, ஆடி அதிரடி, அரசு ஊழியர் சம்பள உயர்வு,டாப் டென் மூவிஸ், நிஜம்,பாட்டுக்கு பாட்டு, மாமியார் மருமகள், கல்ல புருஷன் , சிறுமி பாலியல்,மானாட மயிலாட...........டாஸ்மாக் .........இன்னம் எத்தனை எத்தனையோ நமக்கு உண்டு பேசி ,கண்டு களிக்க. ஆனால் இவர்களை எல்லாம் யார் காணுவார்? குறைந்த பட்சம் சற்று வெட்கமாவது கொள்வோம். வேறு என்ன நாம் பண்ணலாம்? .
|
But
Please don’t be lazy to fwd dis from your Air conditioned cubicle sitting in a cozy wheel chair as u can see some r not gifted with a comfortable life as u are...
Lets join our Hands to stop Child labor in the every possible way we can !!
21 comments:
நாம எதுக்குண்ணே வெக்க படனும்...?
நமக்கு கோவம் தான் வருது..!
வெக்க படவேண்டியவர்கள் ஆட்சியில் இருக்கும் மானங்கெட்டவர்கள்தான் ...!
ஆட்சியில் உள்ளவர்கள் அணைவரும் நாம் அனுப்பி வைத்தவர்கள் தானே தமிழ்!
சரியாக சொன்னால் நாம் தான் வெட்கப்படவேண்டும். இப்படி வெட்கமற்றவர்களாய் இருபதற்கு!
நாட்டுக்காக உழைப்பார்கள் என்று அனுப்பி வைத்தால் இவர்கள்,தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும்,சொந்தங்களுக்காகவும் அல்லவா உழைக்கிறார்கள். மக்கள் எப்போது பணம் வாங்காம சுயசிந்தனையுடன் ஓட்டு போடுகிறார்களோ அன்றுதான் இவர்களுக்கு விடிவு காலம். அதுவரை இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதை பார்த்து நான்கு பேராவது திருந்தினால் சந்தோசம். தொடரங்கள் தோழரே..
இவையெல்லாம் பரம்பர்யா இந்தியாவின் அடையாளங்கள்....இச்சிறுவர்கள் இல்லை என்றால் பெரும் முதலைகள் வாழ்வது எப்படி.....
நீங்க ஆயிரம் சொல்லுங்க ...நாங்க திருந்த மாட்டோம் .. எந்திரன் பற்றி திரும்ப திரும்ப போடுவம் .. நயன் செய்தது தப்பா இல்லையான்னு வாதிடுவம் ,பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்போம் , எப்படி பதிவு போடுவதுன்னு எழுதுவோம் .. இரண்டு வரி கவிதை போடுவம் .. திருவள்ளுவர் ன்னு நினைப்பு .. நண்பர் கூட்டத்தினுல்லேயே கதைத்து கொள்வோம் .. இவங்களயெல்லாம் பற்றி தரமா எவன் போடுவான் ... நாங்க திருந்த மாட்டோம் .. நாங்களே தலைவர்களை தேர்ந்தேடுத்திட்டு நாங்களே குறை சொல்வோம் ..
நீங்க மட்டும் சிறுவர் கொடுமைகளை எதிர்ப்போம்னு தலைப்பு போட்டிருந்தீங்க ...ஒருத்தனும் வாசிச்சிருக்க மாட்டான் ..
நன்றாக இருக்கிறது .. வாழ்த்துக்கள் .
//நாங்களே தலைவர்களை தேர்ந்தேடுத்திட்டு நாங்களே குறை சொல்வோம் .//.
............S.Sudharshan சொன்னது.
அதற்குதான் வெட்கபடுவதாக சொல்லிவிட்டேனே.!
//நீங்க மட்டும் சிறுவர் கொடுமைகளை எதிர்ப்போம்னு தலைப்பு போட்டிருந்தீங்க ...ஒருத்தனும் வாசிச்சிருக்க மாட்டான் .//
.............S.Sudharshan சொன்னது.
தெரிந்து தான் தலைப்பை மாற்றினேன். இப்படியும் நம்முடன் இருபவர்களை நாம் சற்று நினைத்து பார்த்தால் என்ன?
கஷ்டமாக இருக்கிறது...
சமூக விழிப்புணர்வு ஊட்டும் உங்கள் சிந்தனைக்கு ஒரு ராயல் சல்யூட்
ஏசி ரூமில் கம்ப்ப்யூட்டர் புரோகிராம் செய்பவனுக்கு ரூ 25,000 சம்பளம்,காடில் ,வெய்யிலில் உழுகின்ற விவசாயிக்கு கூலி வெறும் ரூ 100 (தினசரி)
சற்று வெட்கமாவது கொள்வோம்
vedkkappadukiren...
சற்று வெட்கமாவது கொள்வோம்
சற்று ரோஷமாவது படுவோம்.
சற்று கோபமாவது கொள்வோம்.
மனதை பிழியும் காட்சிகள்..அவர்கள் 100 தலைமுறைக்காக திருடுகிறார்கள் இவர்கள் அடுத்த வேளை கஞ்சிக்காக உழைக்கிறார்கள் என்ன விந்தையான உலகம்
படங்களை பார்க்கும் போது மனம் வலிக்குது...
கஷ்டமாக இருக்கிறது... its really so sad.....
thanks for ur information
அடித்தட்டுச் சிறுவர்களை யாருமே நினைத்துப் பார்ப்பதில்லை.
ஆள்பவர்களுக்கு அதைப் பற்றி என்ன கவலை..
நன்றி நண்பரே.
இதுவும் மாறும். ஐந்து வயது நிரம்பியவர்கள் ஓட்டு போடலாம் என்று சட்டம் வந்தால் ஒரு வேலை இவர்கள் எண்ணிக்கை குறையும். நம் ஊரில் செய்தாலும் செய்வார்கள் மகா பாவிகள்.
குழந்தைகளின் கண்களில் ஏதோதேடல்தெரிகி்ன்றது.நல்ல எதிர்காலம் பற்றியா..?.படங்கள் அருமை...வாழ்க வளமுடன்.
வேலன்.
ஐந்து வயது நிரம்பியவர்கள் ஓட்டு போடலாம் என்று சட்டம் வந்தால் ஒரு வேலை இவர்கள் எண்ணிக்கை குறையும். நம் ஊரில் செய்தாலும் செய்வார்கள் மகா பாவிகள்.
It's Shame to say, but our politicians will give Five star, Kitkat Chocolates to childs as bribe for Voting., but not try to change their life even they get voting power.
Let's start from ours to change the society.,
Pl take an Ooth from today to avoid voting and pl don't encourage the cinema, cricket related posts in blogs even they are our followers.for ur Info.nearly 850+ posts @ Endiran cinema.
Wher we r going???
How many manhours wasted for writing, thinking, reading this posts???
Consider throughout tamil society in world, how much money wasted by ticket, ads, media? time? manhours?.
Hope We can Win..,!!!
ம்ம்... நாடகத்தன்மையா பதில் போட முடியல... நிறைய ஆதங்கமும்... கையாலாகாத்தனமும்.. மனதை அழுத்துகிறது... (சமீபகாலமா இது அலை அலையா வருது..)
http://marumlogam.blogspot.com/2010/10/blog-post_16.html
கருத்துரையிடுக