பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, அக்டோபர் 2

வாயை மூடிக்கொண்டு இருங்கள் !தீர்ப்பு வரவதற்கு முன்னர் இந்த ஊடகங்கள் பத்திரிக்கை, தொலைக்காட்சி ஒன்று பாக்கி இல்லாமல் எல்லாம் 'பூச்சாண்டி ' காட்டிகொண்டிருந்தன.
அலகாபாத் நீதிமன்ற அயோத்தி / பாபர் மசூதி தீர்ப்பு வெளியாகி, இந்தியா முழவதும் நம் மக்கள் அமைதியுடன் இயல்பாக இருந்த அர்த்தத்தை நம் நாட்டு அரசியல் நாதாரிகள் அணைவரும் புரிந்து கொண்டனர். இது அவர்களுக்கு ஒரு வித மனக் கிலேசத்தை கொடுத்துள்ளது. மக்கள் தெளிவாக , திடமாக இருந்துவிட்டால்  தங்கள் நாற பிழைப்பில் மண் விழுந்து விடும் என்று புரிந்து கொண்டு தீர்ப்பை பற்றி வெற்று அறிக்கைகள் விட ஆரம்பித்து விட்டனர். 

மண் மோகன் சிங் அறிக்கை விட்டு இந்தியர்களை அமைதி காக்கும் படி கேட்டுக்கொண்டாராம். அதன்படி இந்தியர்களும் அவரின் சொல் மதித்து அமைதி காத்தார்கலாம். இப்படி ஒரு அடிவருடி அரசியல் பண்ணுபவர்,அமைச்சர் , அறிக்கை விடுகிறார்.


 மேல் முறையீடு செய்ய வாய்ப்பும் அளித்தே தீர்ப்பு வந்துள்ளது. அதற்குள் 
இந்த குள்ளநரி கூட்டங்கள் "முஸ்லிம்கள் தள்ளிவைகப்பட்டார்கள்" என்ற தொனியில் ஊளையிட ஆரம்பித்து விட்டன. வக்ப் வாரியமே மனம் உவந்து "நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் " என்றால் கூட இந்த கொள்ளை கூட்டங்கள் விடாது போல. 

வழக்கமாக ஆர்பரிக்கும் R S S , B J P  காரர்கள் அடக்கி வாசித்தாலும் கூட மற்ற பிற கட்சிகள் எல்லாம் மீண்டும் 'அடித்துக்கொள்ள ' ஒரு சந்தர்பம் வரவேண்டும் என்ற தொனியில்தான் அறிக்கைகள் விடுகின்றன. உண்மையில் "சிறுபான்மை ' என்று பேசி பேசியே நம் முஸ்லிம் சகோதரர்களை பகடைகளாக ஆகி சுய லாபம் கண்டவர்கள் காங்கிரஸ் மற்றும் அவர்களை சார்ந்த சாராத அனைவருமே.

மண் மோகன் சிங் அறிக்கை விட்டாலும் விடாமல் பொத்திக்கொண்டு இருந்தாலும் 
இதுதான் நிகழ்திருக்கும். யாராய் இருந்தால் என்ன? எந்த மதமாய் இருந்தால் என்ன? என்ன?? நம் மக்கள் நிறைய அனுபவித்து விட்டார்கள். அறுபது வருடங்களாக எத்தனையோ அவலங்களை பார்த்து சலித்து விட்டார்கள்.அவர்களுக்கு வேறு வேலை உள்ளது. தினசரி பிழைப்பை பார்க்கவேண்டும். அன்றாட வாழ்கையை ஓட்ட வேண்டும்.

ஆனால்  இந்த ஜாதி, மத, இன வழியில் அரசியல் பண்ணி , அப்பாவி மக்களை பலியிட்டு , ஓட்டுகளை வாங்கி கொண்டு "அரசில்" இருந்து  கொண்டு தமக்கும் தம் வாரிசுகளுக்கும் சொத்தும் சுகமும் சேர்த்து விட்டு , நாய்.பூனை,படைகள் காவலுடன் சுற்றி வரவேண்டும். மீண்டும் தேர்தல் வந்தால் வேசித்தனமாய் இருக்கும் இடம்மாறி தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிகொள்ளவேண்டும் .தொடர்ந்து பதவிகளில்  இருக்க வேண்டும்  அவ்வளவுதான் . இது அன்றி இவர்களுக்கு நம் மக்கள் மீதும் நம் நாட்டின் மீதும் ஒன்றும் பெரிய பற்றோ, பாசமோ கிடையாது என்று பல முறை நிரூபித்துள்ளனர்.


நம் மக்களுக்கு,தங்களுக்கு // எது வேண்டும் எவை தேவை இல்லை // என்று தீர்மானித்து நடந்து கொள்ள தெரிந்துவிட்டதால் இவர்களின் ஜம்பம் வரும் காலங்களில் எடுபடாது என்று தெரிந்து கொண்டு மீண்டும் இந்தியர்களை மதம், ஜாதி, இனம் பேசி பழைய நிலைக்கு கொண்டு சென்று அடித்துக்கொண்டு சாகவும், பொதுசொத்துக்களை நாசம் பண்ணவும்,வீடுகளை கொளுத்தி, அப்பாவிகளை கொன்று அதன் மூலம் ஓட்டு ஆதாயம் தேடி தங்களின் நிலையை தக்க வைத்துக்கொள்ள விழைந்துள்ளனர்.

1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட அதே அவல நிலைக்கு நம்மை இந்த கழிசடைகள் இட்டுசெல்லும் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன. இந்துவோ, முஸ்லிமோ,கிருஸ்துவரோ வேறு என்ன மதமோ, இனமோ, மொழியோ,ஜாதியோ,வகுப்போ , நிறமோ அல்லது எந்த பிராந்தியமோ. அனைத்தையும் தூக்கி கடாசி விட்டு இன்று நிலவும் இதே ஒற்றுமையும், உறுதிப்பாடும் தொடர்ந்து வந்தால் மட்டுமே வரும் காலங்களில் இந்தியா இன்றைய அரசியல் பிழைத்து முப்பது தலை முறைகளுக்கு சொத்து சேர்த்துள்ள எல்லா திருட்டு கும்பல்களை 
ஓரம் கட்டி உண்மையான மக்களாட்சி நாடாக திகழலாம். நமக்கு நாடு என்று ஒன்று இருப்பதனாலேயே ஜாதி,மத .இன வேறுபாடுகளை கொண்டாடுகிறோம். நாட்டிற்கு முன்னால் இவைகள் ஒன்றுமில்லை. ஜாதி மதங்களை விட நம் நாடே பெரிது.

வேற்றுமைகளை விதைக்காதீர்கள் எந்த ரூபத்திலும். இது நாம் நம் பிள்ளைகளுக்கு செய்யும் மிகப்பெரிய கடமை.

அந்த இடத்தை என்ன, எப்படி செய்ய வேண்டும் என்பதை நீதி மன்றங்கள்  மட்டுமே சொல்ல வேண்டும். அரசியல் பிழைப்பவர்கள் மூடிக்கொண்டு இருங்கள்.
17 comments:

எஸ்.கே சொன்னது…

//வேற்றுமைகளை விதைக்காதீர்கள் எந்த ரூபத்திலும்.// கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று.
நான் பள்ளியில் படிக்கும்போது, வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாடு இந்தியா என படித்தேன். இப்போது அப்படி இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது!

என்னது நானு யாரா? சொன்னது…

உங்க கோபம் ரொம்ப நியாயமானது நண்பா! ஆனா வார்த்தைகள்ல கொஞ்சம் காட்டம் குறைச்சீங்கன்னா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.

//மண் மோகன் சிங் அறிக்கை விட்டாலும் விடாமல் பொத்திக்கொண்டு இருந்தாலும்
இதுதான் நிகழ்திருக்கும். //

இதுப்போல வாக்கியங்களை மிகவும் நாசுக்காகச் சொல்லுங்களேன். என் கருத்தை பரிசீலிப்பீர்கள் என்கின்ற எண்ணத்துடன் சொல்கிறேன்....

rk guru சொன்னது…

உங்கள் சிந்தனை தொடரட்டும் எங்கள் வாழ்த்துகளுடன்.....

smart சொன்னது…

உங்கள் பாணியில் நல்ல கட்டுரை

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

மண் மோகன் சிங் அறிக்கை விட்டு இந்தியர்களை அமைதி காக்கும் படி கேட்டுக்கொண்டாராம். அதன்படி இந்தியர்களும் அவரின் சொல் மதித்து அமைதி காத்தார்கலாம். இப்படி ஒரு "பன்னாடை " அறிக்கை விடுகிற//
செம பாயிண்ட்

ஷஹி சொன்னது…

நல்ல பதிவு...ஆனால், அவையடக்கம் அவசியம் நண்பரே!மூன்றாம் கோணம்.."கோவில் போயி மசூதி வந்தது..." பாருங்கள்..உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறன..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அந்த இடத்தை என்ன, எப்படி செய்ய வேண்டும் என்பதை நீதி மன்றங்கள் மட்டுமே சொல்ல வேண்டும். அரசியல் பிழைப்பவர்கள் மூடிக்கொண்டு இருங்கள்.//சரியா சொன்னீங்க எல்லாத்துக்கும் விளம்பரம் தேடுவதே அரசியல் பிழைப்புவாதிகளின் பிழைப்பானது

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகை தரும் வாசக அன்பர்கள் மன்னிக்கவேண்டும்.
"வார்த்தைகளில் சற்று காட்டத்தை குறையுங்கள்"
"அவையடக்கம் வேண்டும் நண்பரே "
என்று எனக்கு சொல்லும் அன்பர்களுக்கு நன்றிகள்.

ஆனால் ஆட்சி அதிகாரத்தில் , ஜாதி ,மத வேறுபாடுகளை சொல்லி மகளை பிரித்து "அரசியல் "
பிழைக்கும் எந்த சுயநல கூட்டங்கள் மீதும் எனக்கு மரியாதை இல்லாமல் போகும்போது
இப்படித்தான் எழுத வருகிறது.
எனினும், உங்களின் ஆலோசனைகளை ஏற்று இனி செயல் படுகிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அண்ணே சும்மா நச்சுன்னு சொல்லிட்டீங்க! இந்த அரசியல் வியாதிங்கள யாரும் பொருட்படுத்தாம இருந்தா போதும் தன்னால அடங்கிடுவானுங்க!

உங்கள் நண்பன் பாலசந்தர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜெகதீஸ்வரன். சொன்னது…

தீர்ப்பி்ல் சம்மந்தப்பட்ட முகமதிய அமைப்புகள் கூட எந்த காட்டமான செய்திகளையும் வெளியிடவில்லை. அடுத்த கட்ட சட்டப்பூர்வமான விஷயங்களையே செய்யப்போகின்ற,. ஆனால் இங்கிருக்கும் விஷமிகள் அதை உணராது எழுதித்தள்ளுகிறார்கள்,

நிர்மோகி அகோரா அமைப்பினை பற்றி அத்தனை எதிர்ப்புகள் வலைப்பூக்களில் காணப்படுகின்றன. சட்டப்படி செயல்பட்டவர்களுக்கு இந்த நிலை தேவைதானா. ஆயுதங்களை விடுத்து அமைத்திக்கு திரும்ப பலரும் விரும்புவதே இல்லை.

உங்கள் நண்பன் பாலசந்தர் சொன்னது…

நீங்கள் எழுதிருக்கும் இந்த கட்டுரை ஒவ்வொரு அரசியல் பிழைப்பு நடத்திவரும் குள்ள நரிகளுக்கு ஒரு சவுக்கடி... நீங்கள் சொல்லிருப்பதை தமிழ் தினசரி நாளேடு ஏதாவது, நீங்கள் கூறிருக்கும் கருத்துகளை சொல்ல முன்வருமா ? கண்டிப்பாக வராது... ஏன் என்றால் எல்லோருக்கும் கூஜா தூக்கும் வேலையை செவ்வனே சரியாக செய்கின்றன அனைத்து நாளிதழும்.... ஒரு பத்திரிக்கை தவிர... அது "தினமணி" மட்டுமே....

virutcham சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
virutcham சொன்னது…

உங்கள் கருத்தை வரவேற்கிறேன். என் கருதும் கிட்டத் தட்ட இது தான்
http://wp.me/p12Xc3-140 அயோத்தி, போலி செகுலர்வாதிகளுக்கு ஐயோ தீ போச்சு…. புஸ்ஸ் …

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

செம காட்டமான பதிவு,அதுவும் கடைசி வரிகள் நச் வாத்தியாரே

SAMANIYAN சொன்னது…

Muthan muthalaga ungalathu pathivinai paditheen. arumaiyana pathivu.menmaiyaga unmaiyai solliyulleer innum azhuthamagave kooralam. neer mattume nakkheerar parambaraiyai serthavar pollum

denim சொன்னது…

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக