பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஜூலை 13

பால் அண்ணாத்தே, எங்க ஊருக்கு வருவீங்களா?


ஒருவழியா உலககோப்பை 'உதை'பந்தாட்ட திருவிழா ஸ்பெயின் சாம்பியன் ட்ராபியை தட்டிசென்றதுடன் முடிந்தது.
இரவு 12 மணிக்கு மேல் டி.வி . யை கட்டிக்கொண்டு கிடந்த பிள்ளைகள் எல்லோரும் ரொம்ப கவனமாக படிக்க ஆரம்பித்து விட்டார்களாம். இது எங்க வீட்டு கதை. அதை விடுங்க, நம்ம நாட்டுக்கு நல்ல விஷயம் ஒன்று இந்த போட்டிகளின் வழியாக கிடக்கும் போல உள்ளது.


"எட்டு கையி " பால் அண்ணாதே சொல்லிய அணைத்து ஆரூடங்களும் 100 % பளிச்சிடுச்சே !
நம்ம இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இது ஒரு நல்ல நேரம்தான் .
நம்ம தேர்தல் ஆணையம் படும் சிரமங்களும் சுத்தமாக குறைந்து விடும்.கோடி கோடியாக மக்கள் வரிப்பணம் ஒவ்வொரு துக்கடா தேர்தலுக்கும் செலவாவதை தடுக்கலாம்.
ஒட்டு போடும் மெஷின்களும் வேண்டாம் .ஓட்டு சாவடிகளும் வேண்டாம். போலீசும் வேண்டாம். ராணுவமும் வேண்டாம்.
அரசு அதிகாரிகளும் வேண்டாம்.ஒட்டு எண்ணவும் ஆட்களும் வேண்டாம். ஏன் , நம்ம அரசியல் கட்சி 'தலீவர்களுக்கும்' கோடி கோடியா பணம் செலவு பண்ணி ஒட்டு வாங்கவும் தேவை இல்லை.

இவைகள் இனிதே நடக்க வேண்டுமெனில் நம்ம இந்திய தேர்தல் ஆணையம் ஒன்றே ஒன்று மட்டும் செய்தால் போதும்.


ஜெர்மனி காட்சி சாலையில் இருக்கும் அந்த எட்டு கை அண்ணாதே மிஸ்டர் பால் அவர்களை நம் நாட்டுக்கு தள்ளிக்கொண்டு வந்து விட்டால் போதும்!!அண்ணாதே இருக்கும் தொட்டிகுள்லாற நம்ம அரசியல் கட்சி 'தலீவர்களின் ' படங்கள் ஒட்டப்பட்ட சின்ன சின்ன தொட்டிகள வச்சி , அதனுள் அண்ணாத்தயோட பிடிச்ச சப்பாட ( கடல் சிப்பியாம் ) வசிட்டாபோதும் . மிச்சத்த பால் அண்ணாதே பார்த்துகொள்வார்.

எந்த தலீவரு படம் இருக்கும் தொட்டிக்கு பால் அண்ணாதே போயி தன் சாப்பாட்ட எடுக்கிறாரோ அவருதான் 'ப்ரைம் மினிச்டறு',
அந்த கட்சிதான் ஜெயிச்சது அப்டீன்னு தீர்ப்பு சொல்லிடலாம்.
இதே மாதிரி பிரசிடெண்டு அப்புறம் எல்லா மந்திரி மார்கள குறிப்பா உள்துறை மந்திரி,விவசாய மந்திரி,மற்றும் ராணுவ பாதுகாப்பு மந்திரிகளை இந்த முறையில் தேர்வு செய்யலாம்.

ரொம்பதான் வேலை சுளுவா இருக்கு இல்லியா?!
இதேமாதிரி ஒவ்வொரு மாநிலத்திலேயும் தேர்தல் நடத்தி ஜெயச்சவுங்கள் ஆட்சி அமைக்கலாம்தானே!!

சீக்கிரம் நம்ம தமிழ் நாட்டுல தேர்தல் வரும் போல இருக்கு. நம்ம தேர்தல் ஆணையம் இந்த பால் அண்ணாத்ய கொண்டு வந்து
ஒரு முறை Trial Run பார்க்கலாம்.

அம்மா இதுக்கு ஒத்துகொள்ள மாட்டாங்க உறுதி.ஒரு கைய காட்டினாலே போதும் அது அகில இந்திய காங்கிரசு கட்சி சின்னமா பூடும். இவரு  எட்டு கைய வச்சிக்கிட்டு இருக்காரே!?

அதுவும் இல்லாம அண்ணாதே தண்ணீர்ல ( அட டாஸ்மாக் இல்ல ) நகர்ந்து போறப்ப பார்த்தா
 "சூரியன் மாதிரி எல்லா கைகளையும் விரிசிகிட்டுள்ள போவுது!? அப்போ அது தி. மு. க. வை மறை முகமா காட்டுது " அப்டீனுவாங்க .அய்யா சாமிகளா நான் சும்மா டமாஷு பண்ணினேன். ஆட்டோ , சுமோன்னு ஒன்னும் அனுப்பி பிடாதீங்க !21 comments:

சௌந்தர் சொன்னது…

எங்க வீட்டு பக்கத்தில் ஓரு அரசியல்வாதி இருக்கிறார் அவர் உங்க வீடு எங்க என்று கேட்கிறார்

Jey சொன்னது…

அடடே நல்ல!!! ஐடியாவா!!!! இருக்கே....
கலக்குங்க தல.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//எங்க வீட்டு பக்கத்தில் ஓரு அரசியல்வாதி இருக்கிறார் அவர் உங்க வீடு எங்க என்று கேட்கிறா //
----------------சௌந்தர் சொன்னது

நானே ஒரு பக்கா அரசியல் வாதியின் வீட்ல தானே இருக்கேன் .
பரம சிவன் கழுத்தில் பாம்பு.
"கருடா சவுக்கியமா? கதைதான்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

/ அடடே நல்ல!!! ஐடியாவா!!!! இருக்கே..//
-- -------Jey சொன்னது

இதுதான் தல எழுத்து பாஸ் , யார் யாருக்கோ என்னமோ அவார்டு , நோபல் பரிசு தர்றாங்க .
நம்பல கண்டுக்க ஒருத்தரும் இல்ல.

அடுத்த பிறப்புலயாவது ஜெர்மனில பிறக்கணும் தலீவா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி சொன்னது…

//எந்த தலீவரு படம் இருக்கும் தொட்டிக்கு பால் அண்ணாதே போயி தன் சாப்பாட்ட எடுக்கிறாரோ அவருதான் 'ப்ரைம் மினிச்டறு',//

தல படம் போடுரதுக்கு பதில் அந்த ஆளையே தொட்டிகுள்ள வையுங்க . உயிர் பிழைச்சா பதவின்னு சொல்லுங்க . போதும் அப்ப எந்த ம#$$%%^^ வராங்கன்னு பாக்கலாம் .சாகப்போர வயசுல பதவி , பண்ணாடைன்னு சொல்லிட்டு

பட்டாபட்டி.. சொன்னது…

ஜெய்லானி.. நீர் சொல்வதுதான் கரெக்ட்..

தலவனுகளை, பப்பரப்பேனு தண்ணில மூழக வெச்சு,

ஆக்டமஸ் விட்டு..கவ்வச்சொல்லலாம்...

வேலன். சொன்னது…

உங்களுக்கு ஆட்டோவா...யார் அனு்பபுகின்றார்கள் என பார்க்கலாம்..டவுசர் பாண்டி இருக்கும்வரை நீங்கள் எதற்கும் கவலைபடாதீர்கள்.(கலைஞர் காப்பீட்டுதிட்டம் அட்டையை வாங்கிவிடடீர்களா? - பாக்கெட்டிலேயே வைத்திருங்கள்)
வாழ்க வளமுடன்,
வேலன்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வழக்கமா ஜாலியா கமெண்ட்ஸ் போடும் ஜெயிலா சற்று கோபமாக இருக்க்க
காரணம் இருக்கு.

நன்றி ஜெயிலா.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

/ தலவனுகளை, பப்பரப்பேனு தண்ணில மூழக வெச்சு,

ஆக்டமஸ் விட்டு..கவ்வச்சொல்லலாம்...//

--------------பட்டாப்பட்டி

இதுக்கு பேருதான் // கொக்கு தலையில வெண்ணை வச்சு பிடிகிறது // அப்டீன்பாங்க.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// உங்களுக்கு ஆட்டோவா...யார் அனு்பபுகின்றார்கள் என பார்க்கலாம்..டவுசர் பாண்டி இருக்கும்வரை நீங்கள் எதற்கும் கவலைபடாதீர்கள்.(கலைஞர் காப்பீட்டுதிட்டம் அட்டையை வாங்கிவிடடீர்களா? - பாக்கெட்டிலேயே வைத்திருங்கள்) //

வாழ்க வளமுடன், வேலன்

அதுசரி செல்லிகிடேதான் இருக்காங்க, இன்னமும் எங்க பக்கம் வரல மாப்ஸ்.,

பித்தன் சொன்னது…

ஜோசியம் !வாங்க வாங்க

Gayathri சொன்னது…

நல்ல ஐடியா...இப்படியே செய்துவிட்டால் நம்ம நாட்ல நிறய கலவரங்கள் குறையும்..

முத்து சொன்னது…

ஒரு முடிவோட தான் இருக்கீங்க

முத்து சொன்னது…

அய்யா சாமிகளா நான் சும்மா டமாஷு பண்ணினேன். ஆட்டோ , சுமோன்னு ஒன்னும் அனுப்பி பிடாதீங்க !///////////////

உங்களுக்காக பெட்ரோல் செலவு பண்ணி ஆள் அனுப்பமாட்டாங்க சைக்கிள் வருது பார்த்து

முத்து சொன்னது…

பட்டாபட்டி.. சொன்னது…

ஜெய்லானி.. நீர் சொல்வதுதான் கரெக்ட்..

தலவனுகளை, பப்பரப்பேனு தண்ணில மூழக வெச்சு,

ஆக்டமஸ் விட்டு..கவ்வச்சொல்லலாம்... ///////////


ஏன் பட்டா ஆக்டபஸ்க்கு பதில் முதலையை விட்டு கவ்வ சொன்னா நல்லாஇருக்காது

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அய்யா முத்து ......இப்பதான் மனசு குளிர்ந்து இருக்கு போல!
இங்க வந்து கும்மி அடிக்க ஆச இல்லையா. ?
கூடவே ப. கு. மான்குணி, பட்டா பட்டி , ஜெயலாணி இன்னு ஒரு பட்டாளமே வந்தாதான்
நல்ல இருக்கும்.

--

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// ஜோசியம் !வாங்க வாங்க //


--------------பித்தன் சொன்னது…


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
இப்படி பெயரை வச்சிருந்தா எங்களுக்கு கஷ்டமா இருக்கே எழுதவும், அழைக்கவும்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// நல்ல ஐடியா...இப்படியே செய்துவிட்டால் நம்ம நாட்ல நிறய கலவரங்கள் குறையும்.//

----Gayathri சொன்னது
ஐயோ காயத்ரி. இப்படி வெகுளியா இருக்கலாமா?
நம்ம தலைவர்களுக்கு கலவரங்கள் தான் வேண்டும் தாயே.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

Hi kakkoo,

Congrats!

Your story titled 'பால் அண்ணாத்தே, எங்க ஊருக்கு வருவீங்களா?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th July 2010 02:00:03 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/301292

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

------------------------------------------

பின்னூட்டம் இட்டு, வாக்களித்து ஆதரித்த அன்பு உள்ளங்களுக்கு
நன்றிகள் நண்பர்களே! நண்பிகளே ?!!

பட்டாபட்டி.. சொன்னது…

ஏன் பட்டா ஆக்டபஸ்க்கு பதில் முதலையை விட்டு கவ்வ சொன்னா நல்லாஇருக்காது
//

இதுக்குத்தான் முத்து வேணுங்கிறது..

எவ்வளவு அழகா ஐடியா கொடுத்து, மக்களுக்கு நல்லது பண்ணனுமுனு நினைக்குது..

முத்து.. எங்கிருந்தாலும் வாழ்க...

பெயரில்லா சொன்னது…

அண்ணணுக்கு ஓட்டு போட்ட அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி! நன்றி! (ஹி.... ஹி..அப்படியே நமக்கும் கொஞ்சம் போட்டுட்டீங்கன்னா..... புண்ணியமா போவும்)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக