பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, ஜூலை 10

அது நடந்தது கல்லூரி காலங்களில்


கொஞ்சம் அறுவாய் இருக்கும்  ..........பின்னாடி திட்டாதீங்க .......
அது நடந்தது கல்லூரி காலங்களில்.குடந்தை அரசினர் கல்லூரியில் பட்டப்படிப்பு காலம்  (1974-1978) என்று நினைவு.குமுதம், ஆனந்தவிகடன்,கிளை நூலகம் மற்றும் இலங்கை வானொலி , திருச்சி மற்றும் சென்னை வானொலி அவ்வளவுதான். காலேஜ் சென்று வரும் நேரம் போக மாலை நேரங்களிலும்,விடுமுறை நாட்களிலும் எங்களுக்கு இதுதான் கதி.

முதலாம் ஆண்டில் ,மதியம் உள்ள மூன்று பீரியட்களில் இரண்டு சேர்ந்தாற்போல தமிழோ ,ஆங்கில பாடமோ வந்துகொண்டிருக்கும். சொல்லிவைத்தர்போல ஜூட் ..............வேறெங்கே ? மாட்னி ஷோ தான்.அதைவிட்டால் எப்போதாவது (பொய்) இரண்டாம் ஆட்டம் தான். உள்ளூரிலோ பட்டீஸ்வரம் ,அல்லது பக்கத்தில் சுவாமி மலை , தாராசுரம் என்று டென்ட் கொட்டகை படங்கள்.

அந்த பாவங்களுக்குதான் இப்போ சேர்த்துவைத்து திரைப்படங்களே சென்ற பத்து பதினைந்து வருடங்களாக.பார்ப்பதில்லை.ஆர்வமும் இல்லை. ஆனால் அந்த நாட்களில் நாங்கள் பார்த்த தமிழ் மட்டுமின்றி. இந்தி , ஆங்கில படங்கள் பின்னர் சென்னை வந்து வேலையில் சேர்ந்தபோது தேடி தேடி நிறைய ஆங்கில படங்களை பார்க்க வைத்தது. 

முன்பு சென்னையின் பெருமைகளுள் ஒன்றாய் விளங்கிய சபையர்( SAFIRE ) காம்ப்ளெக்ஸ் .சபையர், ப்ளூ டயமன்ட் மற்றும் எமெரால்ட் என மூன்று சினிமாக்கள் . சபையர் அரங்கின் உள்ளே எப்போது சென்றாலும் ஆஆ ............வென்று வாய் பிளந்து மாய்ந்து போவது இயல்பு. 70 mm திரையும், மிக தூய்மையுடன் அழகாக அமைத்திருக்கும் இருக்கைகளும், ஜில் என்று,வஞ்சனை இல்லாத ஏர் கண்டிஷன் குளிரும் ,கூடவே வரும் சுகந்தமான வாசனையும் மனதை மயக்கும். யாரும் தமிழில் பேசவே மாட்டார்கள். எனக்கு வியப்பாக இருக்கும். டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் போதே நுனி நாக்கு ஆங்கிலம்தான் .

நிறைய ஆங்கில படங்கள் இங்கு பார்த்திருந்தாலும் மனதில் நிற்பது கிளியோபாட்ரா (எண்பதுகளில் மறு முறை வந்தது ) எமரால்டில் நானும் அண்ணனும் மீண்டும் கோகிலா இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு சைக்கிளில் நான் தங்கியிருந்த தி.நகர் உஸ்மான் ரோட் இல்லம் வந்தது.
 அப்புறம் ப்ளூ டயமன்ட் மினி தியேட்டரில் தொடர் காட்சிகளாக பார்த்து அனுபவித்த ABBA The movie . அப்போதெல்லாம் தொடர் காட்சிகளாக ஒரு குறிப்பிட்ட படமே ஓடிகொண்டிருக்கும் அந்த தியேட்டரில் Continuous Shows  என்றே விளம்பர படுத்தப்படும்.ஒரு முறை டிக்கெட் வாங்கி அரங்கின் உள்ளே சென்று அமர்ந்தால் படம் ஓடிகொண்டே இருக்கும்.அந்த குறிப்பிட்ட படத்தை தொடர்ந்து எத்தனை தடவை வேண்டு மென்றாலும் பார்க்கலாம் . உள்ளே எத்தனை இருக்கைகள் காலியாக இருக்கிறதோ அதே வகுப்பில் அத்தனை இருக்கைகள் டிக்கெட் விற்கப்படும்.ஆனால் ஒரு முறை எழுந்து அந்த தியேட்டரின் கேட்டை கடந்து வெளியில் வந்து விட்டால் அந்த டிக்கெட்டின் அனுமதி முடிந்து விடும்.இதற்காகவே அங்கு படம் பார்க்க சென்றால் வயிறு நிறைய ஹோட்டலில் "கட்டி"விட்டுத்தான் எங்கள் ஜகா போகும். அப்படி ஒரே தடவை இருந்து தொடர்ந்து சுமார் மூன்று முறைக்குமேல் ABBA வை பார்த்து விட்டு வெளியில் வந்தோம். அதன் பிறகு அதே படத்தை தாம்பரம் நேஷனல் தியேட்டரில் பல வருடங்களுக்கு பிறகும் பார்த்ததுண்டு.


ABBA சென்னையில் முதன்முதலில் வெளிவந்தது அனேகமாக 1977  அல்லது 1978  வருடம் தேவி தியேட்டரில் பிரமாதமாக ஓடிகொண்டிருந்தது.
இந்த படத்தை பற்றி குமுதம் , விகடனில் அவ்வப்போது துணுக்குகள் வரும் கல்லூரி நாட்களை.மனம் ஏங்கியது அப்போது 
ABBA The movie வை காண. காரணம், அப்போது பழக்கத்தில் வந்த 2 in 1 ரேடியோ டேப் ரிகார்டர் களில் ஆங்கில பாப் பாடல்கள் கேட்கும் 
பழக்கமும் தொற்றிகொண்டதால் ABBA மீது மோகம் வந்து விட்டது. ஒரு சில பாடல்களே அப்போது அறிமுகம்.அதற்கே இந்த ஆட்டம்  .
கூடவே BONEY -M வேறு அறிமுகமாகி அதுவும் ஒரு பக்கம் ரகளையாய் இருக்க அதனையும் ஒரு கை பார்த்தாலும் , ABBA மீது கொண்ட மோகம்
இன்றுவரை தீர வில்லை !மாதாமாதம் கேசட்டுகள் வாங்கும் பழக்கமும் வந்து இன்றும் வீட்டில் சுமார் 700 கேசட்டுகள் கிடக்கின்றன .அதில் ABBA மட்டும் 
முழு கலெக்ஷனாக சகல ஆல்பமும் கிடக்கிறது.இதெல்லாம் போய் C D வந்த போது தப்பித்தேன். ஆனால் DVD வந்த பொது 
மீண்டும்  விழுந்தேன். அணைத்து ஆல்பங்களையும் வாங்கி குவித்தேன். அபுதாபி மற்றும் துபாய் யில் ஷாப்பிங் மால் போனால் 
என்னை இழுப்பது புத்தகப்பிரிவுகளும் அதிலேலே அடங்கி இருக்கும் DVD விற்பனை ஸ்டால்களும் தான்.விலையை பற்றி எண்ணாமல், இல்லாத ஆல்பங்களை வாங்கிவிடுவேன்.பாடல்களுடன் வீடியோவும் சேர்ந்து கிடைபதால் இந்த பரபரப்பு.

பிள்ளைகளும் தப்பாமல் என்னைப்போலவே ABBA maniacs.ஒரு வேலை சிறு வயதிலிருந்து என்னுடன் அவைகளை கேட்டு கேட்டு அவர்களும் அப்படி ஆகியிருக்கலாம்.

 இதுவரையில் வெளியிடாத (un edited)  ABBA பாடல்கள் 
கூட தொகுப்புகளில் உள்ளன. 1981 இல் சென்னை அண்ணா தியேட்டருக்கு அருகில் Symphony என்ற பெயருடன் ஒரு ஆடியோ கேசட் கடை இருந்து. அன்றே குளிர் சாதனம் செய்யப்பட்டு பிரமாதமான தொகுப்புக்கள் கிடைக்கும். மடோனா வின் ஆரம்ப நாட்கள் அவை. அங்கு வாங்கிய ABBA - Super Trouper (1978 - Singapore made. ) கேசட்டை இன்றும் பாதுகாப்பாக வைத்துள்ளேன். அதில் கூடவே பாடல் களும் (Lyrics) இருக்கும்.

இன்று தான் இன்டெர் நெட்டில் எல்லாமே கொட்டி வைத்துள்ளதே!

சரி, பொறுமையாக கேட்டீர்கள் . இந்த வீடியோவையும் கண்டு, கேட்டு ரசியுங்களேன்.

37 comments:

ஜெய்லானி சொன்னது…

நல்ல அனுபவங்கள் பாஸ்... நமக்கு போனி எம்தான் தெரியும் அப்ப சின்ன வயசு இல்ல அதான்.

DrPKandaswamyPhD சொன்னது…

நல்ல நினைவுகள்.

பட்டாபட்டி.. சொன்னது…

O...இசைப்பிரியரோ?...

( என்ன பாஸ்..1974-னு சொல்றீங்க.. சுதந்திரம் வாங்குவதற்க்கு முன்பா.. இல்ல பிறகா?.. :-)
)

சும்மா டமாசு பாஸ்..ஆமா.. அந்த பழைய கேசட் எல்லாம் என்ன பண்ணுனிங்க?...

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//நல்ல அனுபவங்கள் பாஸ்... நமக்கு போனி எம்தான் தெரியும் அப்ப சின்ன வயசு இல்ல அதான்//

----ஜெயலாணி.

அப்போது Boney-M வேறு கலக்க ஆரம்பித்து முதன் முதலில் அவர்களின் ஆல்பம் தான் வீடியோ வடிவில் வெளிவந்து ஆட்டம் போட்டது. பின்னர்தான் abba. வீடியோ வடிவில் வந்து. Boney - M இவைகளின் தொகுப்புக்கள் எல்லாம் உள்ளன.

அதுசரி, நான் இரவு பதிவை போட்டு திருத்தங்கள் செய்யும் போதே உங்கள் பின்னூட்டம் வந்துவிட்டது.
பிரமாதமான சுருசுருப்புத்தான் தலீவா! என்ன ஸ்பெஷலாக சாப்பிடுகிறீர்கள்? என்னிடம் மட்டும் சொல்லுங்க!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// நல்ல நினைவுகள் //

---------Dr. P. Kandaswamy

வருகைக்கு நன்றி சார். ஆமா ?? நீங்க இன்னமும் கிளம்பலையா??

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// சும்மா டமாசு பாஸ்..ஆமா.. அந்த பழைய கேசட் எல்லாம் என்ன பண்ணுனிங்க?.//

-----------பட்டா பட்டி.

எல்லாத்தையும் தொடச்சி , ஒரு அட்டை பொட்டில அடிக்கி வெச்சிருக்கு. போதாததிற்கு C D , DVD வேறு நிறைய சேர்ந்து போயிற்று.
விடுமுறையில் ஊர்வந்தால் பழைய நினைவுகளில், அவைகளை எடுத்து பார்த்தல் மேலிடத்திலிருந்து நையாண்டியாய் பேச்சுக்கள் வாப்கிகொள்ள வேணும்.

Jey சொன்னது…

சூப்பர் அனுபவங்கள்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Jey !

வேலன். சொன்னது…

நானும் புளுடைமண்ட் தியேட்டருக்கு சென்று இருக்கின்றேன்(ஆண் நண்பர்களுடன் தனியாகதான்).அங்க சென்றதும்தான் தெரிந்தது வருபவர்கள் எல்லாம் வருங்கால மனைவி(?)..களுடன் வருவார்கள் என்று.அதற்கு பின் அந்த தியேட்டருக்கு செல்வதில்லை...அருமையான பதிவு மாம்ஸ்...வாழ்க வளமுடன்,
வேலன்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

மாப்ஸ். நாங்க எல்லாம் நொம்ப நொம்ப நல்ல புள்ளங்களா கீறோம் . ஆக்காங் !
ப்ளூ டையமன்ட் தியேட்டரில் காதலர்கள் மட்டுமே வருவார்கள் என்பதும் இப்போ நீங்க சொல்லித்தா தெரியும் .
சென்னைக்கு வேலையாய் வருபவர்கள் கூட சில மணிநேரங்களில் திரும்பி செல்லும் நிலையில் உள்ளவர்கள், வேறு எங்கும் ரூம் எடுத்து தங்காமல்இங்குதான் வந்து பொழுதை கழிப்பார்கள் என்றுதான் தெரியும்.
வருகைக்கு நன்றி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நண்பர் ஒருவர் நீண்ட பின்னூட்டம் எழுதியிருந்தார். அதனை படித்து விட்டு பப்ளிஷ் என செலக்ட் செய்துவிட்டு
ப்ளாக பக்கம் வந்தால் அந்த பின்னூட்டம் காணவில்லை. மறுபடியும் முயன்றால் அந்த பின்னூட்டமே இல்லை.
இனமும் சில குழபங்கள் நீடிக்கிறது.

அந்த நண்பரை மறுமுறையும் அழைக்கிறேன்.
வந்து தங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள் நண்பரே!

தருமி சொன்னது…

அண்ணாத்த மெய்யாலும எனக்கு அண்ணாத்ததான். 1978 செட்டா. மற்றபடி அனுபவங்கள் அருமை. அடியேனுக்கு சஃபையர பத்தி கேள்வி ஞானம் மட்டும்தான். சூப்பர்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தருமி அவர்களே!
பால் காரன் "கணக்கை " தீர்த்து விட்டீர்களா?

முத்து சொன்னது…

அது நடந்தது கல்லூரி காலங்களில்

கொஞ்சம் அறுவாய் இருக்கும் ..........பின்னாடி திட்டாதீங்க .../////////////////இது எனக்காக போட்ட மாதிரி இருக்கே

யூர்கன் க்ருகியர் சொன்னது…

ஒரு முறை நாம் இருவரும் நெட் சாட் டிங்கில் இருக்கும்போது ABBA'வை பற்றி புளகாங்கிதமாய் பேசினீர்கள்.
இப்பதிவை படித்ததும் நினைவிற்கு வருகிறது

எழுத்தில் நல்ல நயம் அப்புறம் உங்கள் கல்லூரி காலங்களை பற்றி விவரித்தமை மிக்க நன்று.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

///இது எனக்காக போட்ட மாதிரி இருக்கே //
---------முத்து

உண்மைதான் முத்து ,
சமயத்தில் உங்களிடம் திட்டுக்களும் வாங்க வேண்டும் அல்லவா??

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//ஒரு முறை நாம் இருவரும் நெட் சாட் டிங்கில் இருக்கும்போது ABBA'வை பற்றி புளகாங்கிதமாய் பேசினீர்கள்.
இப்பதிவை படித்ததும் நினைவிற்கு வருகிறது //
----யூர்கன் க்ருகியர் சொன்னது…
எனக்கு ஞாபகம் இருக்கு மாப்ள. இந்த பதிவை எழுதும் போதே அவைகள் எனக்கு நினைவில் வந்தனே.
உன் பின்னூட்டத்தில் அதனை சொல்வாய் என்றும் தெரியும்.

// எழுத்தில் நல்ல நயம் //

மாப்ள , நீயே இப்டி என்ன வாரலாம செல்லம் ??
நான் ஒன்றும் (கொம்பு முளைத்த இலக்கிய வாதி ) இல்லை .
Just sharing .Thats all.

குடந்தை அன்புமணி சொன்னது…

குடந்தை/ சென்னை திரைப்பட அனுபவங்கள்... நன்றாக அனுபவித்திருக்கிறீர்கள். ம்... இப்போ அந்த சபையர் தியேட்டர் வளாகம் கட்டாந்தரையாக அல்லவா கிடக்கிறது...

முத்து சொன்னது…

பட்டா கிட்ட கோத்தா விடுறீங்க இருங்க வைச்சு கொள்கிறேன் கச்சேரியை

முத்து சொன்னது…

பட்டா நம்ம கக்கு தப்பு ஆட்டம் ஆடுறாரு நான் கமெண்ட்ஸ் போட்டால் Your comment will be visible after approval.

அப்படின்னு வருது,இப்படி இருந்தால் நான் எப்படி கும்மி அடிக்கிறது

முத்து சொன்னது…

கக்கு சார் நீங்கள் விதிமுறையை மீறி ஆடுவதால் நான் ப.மு.க.சார்பில் இதை வண்மையாய் கண்டிக்கிறேன்,உடனடியாக approval. மேட்டரை தூக்குங்கள் அப்போ தான் நான் கும்மி அடிக்க வசதியாய் இருக்கும்

Gayathri சொன்னது…

அருமையான பகிர்வு..நன்றி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வாருங்கள் குடந்தை அன்பு மணி.
// குடந்தை/ சென்னை திரைப்பட அனுபவங்கள்... நன்றாக அனுபவித்திருக்கிறீர்கள். ம்... இப்போ அந்த சபையர் தியேட்டர் வளாகம் கட்டாந்தரையாக அல்லவா கிடக்கிறது...//

உண்மைதான். சென்னையில் உள்ள அல்லது சபையர் தியேட்டரை அறிந்த எவருக்கும் இதில் உள்ள சோகம் புரியும்.
இப்போதும் காண நேர்ந்தால் சற்று வேதனையாகவே தோன்றி மறையும்.

மிதமிஞ்சியம் பணமும், அடியாட்களும்,
அரசியல் அதிகாரமும் சேர்ந்து அந்த அழகிய கலை கூடங்களை அழித்து இல்லாமல் செய்து விட்டன.

தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

பட்டா கிட்ட கோத்தா விடுறீங்க இருங்க வைச்சு கொள்கிறேன் கச்சேரியை

பட்டா நம்ம கக்கு தப்பு ஆட்டம் ஆடுறாரு நான் கமெண்ட்ஸ் போட்டால் Your comment will be visible after approval.

கக்கு சார் நீங்கள் விதிமுறையை மீறி ஆடுவதால் நான் ப.மு.க.சார்பில் இதை வண்மையாய் கண்டிக்கிறேன்,உடனடியாக approval. மேட்டரை தூக்குங்கள் அப்போ தான் நான் கும்மி அடிக்க வசதியாய் இருக்கும்.

-------------------------முத்து சொன்னது.


அய்யா சாமி. என் கண்ணுள்ள? கோவிச்சிக்காதீங்க செல்லம்.

நா அப்டி எழுதாட்டி நம்ம பக்கம் வந்து மூணு கமெண்ட்ஸ் போட்டுயிருப்பியலா ??

அதுசரி ப. கு. எங்க ஆளையே காணோம்? யாராச்சும் பலி போட்டுட்டாங்களா கோயம்புத்தூர்ல ?
நல்ல பன்னிகுட்டி, நல்லா கொழுக்கு மொழுக்குன்னு ஆடி ஓடிகிட்டு இருந்ததே.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//அருமையான பகிர்வு..நன்றி//

----------------Gayathri சொன்னது.


வாருங்கள் காயத்ரி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

முத்து சொன்னது…

ப.கு. ஊருக்கு போயி இருக்கார்.ஒரு மாத லீவ்

முத்து சொன்னது…

பார்ரா இன்னும் நீங்க approval மேட்டரை தூக்கலையா இருங்க அதை பாம் வைச்சு தூக்கிடுறேன்

dinesh சொன்னது…

மீண்டும் அந்த நாட்களுக்கு சென்றால் எப்படி இருக்கும்?

வருடங்கள் வேகமாக போவதை இத் தருணத்தில் அறியலாம். உங்கள் அனுபவம் அருமை.

மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

ஐயோ முத்து கண்ணா ...டெர்ரர் ஆவாதீங்கோ.....அத்த தூக்கியாச்சி...போதுமா ?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// மீண்டும் அந்த நாட்களுக்கு சென்றால் எப்படி இருக்கும்?
வருடங்கள் வேகமாக போவதை இத் தருணத்தில் அறியலாம். உங்கள் அனுபவம் அருமை. //

---------------------மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்

வாருங்கள் மோகன கிருஷ்ணன். இனி அந்த நாட்களை re collect தான் செய்து பார்க முடியும்.
இந்த ஆசை எல்லோருக்கும் உண்டுதான் ஆனால்..........

புதுவை. காம் எனக்கு பிடித்த தளங்களில் ஒன்று.தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்
நன்றி. வாருங்கள் நானும் வருவேன்.

மங்குனி அமைச்சர் சொன்னது…

சார் , நமக்கு தில் வாலே துள் கனியா லேஜாயேங்கே காலம்

முத்து சொன்னது…

வந்துட்டேன்

முத்து சொன்னது…

ஐய்யா இனி ஜாலியா கும்மி அடிக்கலாம்

முத்து சொன்னது…

மங்குனி அமைச்சர் சொன்னது…

சார் , நமக்கு தில் வாலே துள் கனியா லேஜாயேங்கே காலம் ///////////


செம்மொழியாம் தமிழ் மொழி இருக்க இந்தி படம் பார்த்துவிட்டு அதையும் பப்ளிக்கில் சொன்ன மன்குவிர்க்கு ஆறு மாத காலம் விஜய் நடித்த படங்களை விடாமல் பார்க்க வேண்டும் மீறினால் கரடி நடித்த படம் ஜாக்கிரதை

முத்து சொன்னது…

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// மீண்டும் அந்த நாட்களுக்கு சென்றால் எப்படி இருக்கும்?
வருடங்கள் வேகமாக போவதை இத் தருணத்தில் அறியலாம். உங்கள் அனுபவம் அருமை. //

---------------------மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்

வாருங்கள் மோகன கிருஷ்ணன். இனி அந்த நாட்களை re collect தான் செய்து பார்க முடியும்.
இந்த ஆசை எல்லோருக்கும் உண்டுதான் ஆனால்..........////////////////

அப்படி போக முடிந்தால் நன்றாக தான் இருக்கும்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//சார் , நமக்கு தில் வாலே துள் கனியா லேஜாயேங்கே காலம் //

---------------மங்குனி அமைச்சர் சொன்னது


ஆஹா ...வாருங்கள் மங்குனி அமைச்சரே . வாராது வந்த மா மணியே வருக.
இந்த முத்து ரொம்பத்தான் படுத்தி எடுக்குது அதுக்கு உங்க நாட்டு தயாரிப்பான
'கப்சி ' ஒரு பாட்டில் தரும்படி வேண்டுகிறேன்.

முத்து சொன்னது…

கக்கு - மாணிக்கம் சொன்னது…

ஆஹா ...வாருங்கள் மங்குனி அமைச்சரே . வாராது வந்த மா மணியே வருக.
இந்த முத்து ரொம்பத்தான் படுத்தி எடுக்குது அதுக்கு உங்க நாட்டு தயாரிப்பான
'கப்சி ' ஒரு பாட்டில் தரும்படி வேண்டுகிறேன்.///////////////போயும் போயும் ஒரு காமெடி பீசையா அடியாளா கூப்புடுவீங்க,போயி அவர் கடையில் பாருங்க எனக்கு பயந்துகிட்டு பின்னகால் பிடரியில் பட ஓடிகிட்டு இருக்கார் (சாரி மங்கு உண்மையை பப்ளிக்கில் சொன்னதுக்கு)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக