பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், மே 25

அஞ்சல கிழவி

"ஆச்சீ ..............................."

காலையில் காதை குத்தும் குரல். அஞ்சல வந்துவிட்டாள். நாங்கள் அண்ணன் தம்பிகள் எல்லோரும் திண்ணைக்கு ஓடி வந்து அஞ்சல கிழவி திண்ணையில் இறக்கி வைத்த கூடையை சூழ்ந்து கொள்வோம். எங்களை பார்த்தவுடன் அவளுக்கு ஒரு பொய்கோபம் வரும். முட்டை கண்களை அகல விரித்து நாக்கை துறுத்திக்கொண்டு கன்னத்தில் இடிக்க வருவாள். அரக்கு நிறத்தில் சேலையும் நரைத்த தலையும், நீண்டு தொங்கும் காதுகளில் தண்டட்டியும். அவள் வந்தாலே கொத்தமல்லி, கருவேப்பிலை மனம் தான் நிறைந்து நிற்கும். 

மூத்த அண்ணன்மார்களுக்கு அவளிடம் மல்லுக்கு நிற்கவேண்டும். கூடையில் கைவைத்தால் லபக்கென்று தாவி தட்டி விடுவாள். ஒன்று கூடையில் இருக்கும் கருவேப்பிலை கொத்தை நைசாக இழுக்கும். நாங்கள் படுத்தும் பாடு தாங்காமல் மீண்டும் 

"ஆச்சீ ........................ "

குரல் நீண்டு அம்மாவை விளிக்கும். அம்மாவுக்கு தெரியும் என்ன நடக்கிறது என்று. 

" ஏண்டா அவள படுத்துறீங்க ? முகத்தில் சற்று சிரிப்பும்,பெரிய  பித்தளை டம்ளரில் நிரம்ப அரிசியுமாக அம்மா வந்ததும் கொத்தமல்லி தழைகளையும் அதனுடன் சற்று தாராளமாக கருவேப்பிலை கற்றைகளியும் அம்மாவிடம் தருவாள். நாங்கள் மேலும் தரும் படி கேட்போம்.

"நீ போ "

ஒரு கொத்து அவள் கூடையில் இருந்து எடுத்து தருவாள். 

'இந்த ..இன்னம் குடு........"

"ஆச்சீ..... பாருங்க ...உங்க ...பெரிய புள்ளைய....."

'சும்மா இருடா தம்பி' 

அவள் கூடையில் கருவேப்பிலை கொத்துகளும்,கொத்த மல்லி தழை கட்டுக்களுமாக இருக்கும். ஓரத்தில் ஒரு சிறிய "பொட்டு கூடை" இரண்டு  இருக்கும் அதில் அரிசி கொட்டப்பட்டு நிறைத்திருக்கும். 

பச்சை அரிசி கென்று ஒன்று, புழுங்கல் அரிசி கென்று ஒன்று.சிறிய வடிவிகளில் ஆனா "சுண்டும்" படிகளும் இருக்கும். அம்மா தரும் அரிசியை அளக்காமல் அப்படியே வாங்கி கூடையில் சரித்துகொல்வாள் அஞ்சல . 
கூடையை தூக்கி இடுப்பில் வைக்க அவளுக்கு ஒரு ஆள் வேண்டும். 

" இந்தா பெரிய தம்பி, கொஞ்சம் தூக்கி வுடு."

பெரிய தம்பி - எங்கள் மூத்த அண்ணன். எல்லோருக்கும் அரை டிராயர் வயசு. 
கூடையை தூக்கி இடுப்பில் வைக்கும் போதுதான் மீண்டும் 
'ஆச்சீ....." என்று மீண்டும் அலறல்.
உள்ளே சென்ற அம்மா திரும்ப வருவாள்.

கூடையை மீண்டும் திணையில் இறக்கி வைத்தவள்
"இந்த சின்ன சுண்டு படிய காணோம்"
அஞ்சல ஒவ்வொருவராய் கேட்டாள். நாங்கள் மூவரும் இல்லை என்று தலையாட்டினோம். 
( ஆனால் தெரியும் அதை எடுத்து ஒளிய வைத்தது எங்கள் அண்ணன் தான் என்று )

"என் படிய குடு. நாழியாவுது ..நா போவனும்."
 "நா எடுகலம்மா"
பிள்ளைகளின் குறும்பால் அம்மாவின் முகத்தில் சிரிப்பு. 

' சீ ...நாய .... படிய அவகிட்ட குடு. அவளுக்கு நாழியாவுது"
" நா சுண்டு படிய குடுத்தா இன்னும் கொஞ்சம் கொத்துமல்லி தருவியா "
எரிச்சலுடன் கொஞ்சம் மல்லி தழையை எடுத்து அண்ணனிடம் தருவாள்.

"நீ இரு.... சாருகிட்ட சொல்லி ஒன் சூத்து கறிய பிக்க சொல்றேன் "

சாரு - (சார் ) எங்க அப்பா. ஆசிரியராக இருந்ததினால் கிராமத்தில் எல்லோரும்
  அப்படியே அழைப்பார்கள்

நாங்கள் அவளை படுத்தும் பாடு அம்மாவிற்கும் நன்கு தெரியும். அவளுக்கு அளவில்லாமல் அரிசி தருவாள். சில சமயங்களில் இட்லியோ பழைய சாதமோ கொழம்போ அவள் கேட்டால் அம்மா ஈய சட்டியில் இட்டு தருவதை அங்கேயே அமர்ந்து சாபிடுவாள்.

முதல் நாள் வைத்த முள்ளங்கி அல்லது முருங்கக்காய் குழம்பின் மனம் எங்கள் வாயில் நீர் ஊரும். எனக்கும் அவளைப்போல சாப்பிட ஆசைவரும். இட்லி வேண்டாம் என்று சொல்லிவிட்டு பழைய சோற்றுடன் குழம்பை "தொட்டுக்கொண்டு ' சாப்பிட.

அஞ்சல  கிழவிக்கு காசு வேண்டாம் அரிசிதான் வாங்குவாள். 
அடுத்த நாளும் அஞ்சல வருவாள்.

"ஆச்சீ ................"

வழக்கம்போல அவளிடம் விளையாட்டு எங்களுக்கு.

பேராசை இல்லாத எளிமையான பண்ட மாற்று. 

இன்று: 

"ஒரு ரூபாய்க்கு கருவேப்ளை கொத்தமல்லி குடு"

நம்மை கேவலமாக மேலும் கீழும் பார்த்துவிட்டு
'நீ இன்னா ஊருக்கு புச்சா " ஒத்த ரூபாய்க்கு கரிவபுள்ள கொத்மல்லி கேக்குதுபாறேன்க்கா "

' அத்தோ கீது பாரு , அந்த கூற எட்துக்க அஞ்சு ரூவா அத்து "

சைதாபேட்டை காய்கறி மார்கெட்டில். 
நான் பொருளாதாரம் படிக்க வேண்டும். இங்கு காய்கறி வாங்க ! 15 comments:

பட்டாபட்டி.. சொன்னது…

சைதாபேட்டை காய்கறி மார்கெட்டில்.
நான் பொருளாதாரம் படிக்க வேண்டும். இங்கு காய்கறி வாங்க !
//

அது....கலக்கல்

நல்ல நடை சார்.....

பட்டாபட்டி.. சொன்னது…

அய்.. நாந்தான் பஸ்ட்..ஹா.ஹா

வேலன். சொன்னது…

அதே சைதாப்பேட்டை மார்க்கெட்டில் 2020 ஆம் ஆண்டு:-"நூறு ரூபாய்க்கு கருவேப்ளை கொத்தமல்லி குடு"

நம்மை கேவலமாக மேலும் கீழும் பார்த்துவிட்டு
'நீ இன்னா ஊருக்கு புச்சா " நூறு ரூபாய்க்கு கரிவபுள்ள கொத்மல்லி கேக்குதுபாறேன்க்கா "

' அத்தோ கீது பாரு , அந்த கூற எட்துக்க ஐந்நூறு ரூவா அத்து "

சைதாபேட்டை காய்கறி மார்கெட்டில்.
நான் பொருளாதாரம் படிக்க வேண்டும். இங்கு காய்கறி வாங்க !
(இதே பதிவை 2020 ஆம் ஆண்டு கக்கு மாணிக்கம் மகன் பதிவில் வெளியிடுவார்)

வாழ்க வளமுடன்,
வேலன்.

இராமசாமி கண்ணண் சொன்னது…

நல்லா இருக்க்குங்க. உங்களுக்கு கருவேப்பிலை வித்த கிழவின்னா எங்களுக்கு தயிர் வித்த பாட்டி. காலம் ரொம்ப மாறி போச்சு. விலை வாசிய பத்தி என்னத்த சொல்ல.

ஸ்ரீராம். சொன்னது…

குடிக்கும் நீரை விலை கொடுத்து வாங்குவோம் என்று நினைத்துப் பார்த்தது உண்டா...காலம் செய்த கோலம்தான் இல்லை...?

Cable Sankar சொன்னது…

ரைட்டு... காலங்கள் மாறுகிறது.. எல்லோரும் சொல்வதை போல தண்ணீரை காசு கொடுத்து வாங்குவோம் என்று நினைத்ததுண்டா..?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

Hi kakkoo,

Congrats!

Your story titled 'அஞ்சல கிழவி' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 26th May 2010 07:07:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/260999

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

*******************************************
வாசித்து வாக்களித்த வாசக வலையுலக நண்பர்கள்
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை
தெரிவித்து கொள்கிறேன்.

பட்டாபட்டி.. சொன்னது…

கடைசி கமென்ஸ், ஏதாவது உள்குத்து?...

ஹி..ஹி..சும்மா கேட்டேன் பாஸ்.. ஏன்னா ஒரு பிரபல(?) பதிவர் இப்படிதான் போடுவாரு.. அதுக்காக கேட்டேன்..

கக்கு - மாணிக்கம் சொன்னது…

very simple ! உள் குத்தும் இல்லை, வெளி குத்தும் இல்லை.
அண்ணாத்தே !!
இப்படி போட்டால் வேலை சுலபம். அதுதான்.

அண்ணாமலை..!! சொன்னது…

நம்மள மாதிரிதான் உங்களுக்கும் ரசனை போலிருக்கு..!!
நல்ல கதை!

காஞ்சி முரளி சொன்னது…

பிள்ளைப் பிராயத்திலும்....
சிறிய வயதிலும்.... நெஞ்சில் இட்ட கோலங்கள் மறைவதில்லை.... என்றும் அது கலைவதில்லை... நம் மனதைவிட்டு....

நல்ல பதிவு... நண்பா...

என் பிள்ளை பிராயத்திலும்...
கிராம தயிர்காரியும் (வயதானவர்தான்) .. அவள் மேல் வீசும் அந்த கிராமத்து வாசனையும்... நெய் வாசனையையும்... என் மனதில் அசை போட வைத்த... பதிவு....

என் சமகாலத்தவர் என்பதால்... என்னைப்போலவே... 'முன்னாளின் நினைவுகள்' தொடர்கிறது...

என்னைப் பொறுத்தவரையில்... தாய்ப்பால் குடித்து வளர்ந்தவன்... தன் தாயையும் மறப்பதில்லை... தான் பிறந்த மண்ணையும்... மண் வாசனையையும்... தன் மண்ணின் மைந்தர்களையும்... தன் தாய்நாட்டையும் மறக்க மாட்டான்... இந்தக்காலக் குழந்தைகள் இப்படிப்பட்ட நினைவுகளை சுமக்காத துரதிஷ்டசாலிகள்...

வாழ்த்துக்கள்...
நட்புடன்...
காஞ்சி முரளி....

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வாருங்கள் அண்ணாமலை.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வாருங்கள் காஞ்சி முரளி.
எந்த நிலையிலும் ஒருவருக்கு இதுபோன்ற நிகழ்வுகள் மறக்காது.
காரணம், அவைகள் தன் நலமும், பாசாங்கும், பேராசையும் இல்லாத
இயல் பான சூழலில் நிகழ்ந்தவை. எத்தனையோ நாம் கடந்து வந்தாலும்
அம்மாவின் அருகில், அவளின் புடவையின் நிழலில் நாம் அனுபவித்த
வாழ்வுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சசிகுமார் சொன்னது…

எப்பவும் போல நல்ல பதிவு நண்பரே . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி.
சிறிய விபத்துக்கு பின்னர் குணமாகி வந்ததில் மகிழ்ச்சி.
வண்டி ஓட்டும் போது நிதானம்மகவும் மிக்க கவனத்துடனும்
இருக்க வேண்டும். முன்னைப்போல அது அவ்வளவு சுலபம் அல்ல.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக