பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஏப்ரல் 20

சுனாமி வரும் அறிகுறிதான் தெரிகிறது

எனக்கு தெரிந்து பவர்கட் என்பது சிறுவயது முதல் அறிமுகம்தான். 1972 களில் பள்ளி இறுதி தேர்வுக்கு படிக்கும் காலத்தில்தான் இந்த மின் வெட்டு என்பது பாதிக்க ஆரம்பித்தது. சொல்லிவைத்தார் போல மாலை ஆறு மணிவாக்கில்தான் 'புடிங்கி' விடுவார்கள். மறுபடியும் கரண்ட் வரலாம் வராமலும் போகலாம். வீட்டில் இருக்கும் 

பித்தளை விளக்குகள் எல்லாம் மண்ணெணையை நிரப்பிக்கொண்டு. பழைய வேட்டியில் கிழித்து தயாரித்த திரியுடன் அங்கங்கே எரிந்துகொண்டிருக்கும். மண்ணெண்ணெய் தட்டுப்பாடு வேறு. மெழுகு வர்த்தியும் சற்று உதவி செய்யும் படிப்பதற்கு. 

வெயில்  காலத்திலும் கரண்ட் நின்று விடும். மழை காலத்திலோ கேட்கவே வேண்டாம். தொடர்ந்து பல நாட்கள் கரண்ட் இருக்காது. இந்த கண்றாவி இன்று வரை மாறாமல் அப்படியேதான் உள்ளது. இடைப்பட்ட காலங்களில் கொம்பாதி கொம்பர்களும் திராவிட, தமிழர் காவலர்களும், ஏழை பங்காளி, புரட்சி தலீவரும், அல்லி ராணி, அகிலாண்ட நாயகியும் மாறி மாறி "அரசு கட்டிலில் " உட்கார்ந்து அதை கிழித்து நாற அடித்து விட்டார்கள். இப்போது மீண்டும் அதே கொம்பாதிகொம்பர்களும் திராவிட , தமிழ் மக்களின் காவலரும் தான் 'ஆட்சி செய்கிறார்கள்"

இருக்கும் அனைத்தையும் "கல்லா" கட்டும் விதமாக மாற்றிஆகி விட்டது. சகலத்திலும் எப்படி 'பைசா" அடிக்கலாம் என்று அடி முதல் நுனி வரை தயாராகி விட்டது பயிர் தொழில் சிறக்கவும், கல்வி அறிவு பெருகவும், வேலை வாய்ப்பை பெருக்கவும், புதிய தொழில்கள் தொடங்கவும்,போடப்பட்ட திட்டங்கள் எல்லாம் முழுப்பயன் தராமல் நொண்டி அடித்துக்கொண்டு கிடக்கிறது. தேவையானதை காலத்தில் செய்ய துப்பு இல்லை, திராணி இல்லை, வீண் ஆடம்பர ஆர்பாட்டங்கள் ஒன்றும் குறைய வில்லை. அறிவியல் வளர்ச்சியால் கிடைத்த (அயல் நாட்டிலிருந்து) டெலிவிஷன் எனும் ஊடகத்தை இதவிட மிக கேவலமாக தங்கள் சுய நலத்திற்காக வேறு எந்த ஒரு கூட்டமும் பயன் படுத்தியிருக்குமா என்ற சந்தேகம்.


தாங்களே ஆட்சியில் பதவியில்.பண கொள்ளையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் தங்களின் பிள்ளை, பெண்கள். மனைவி, மருமகன், மருமகள், பேரன் பேத்தி வரையில் கட்சி களில் பதவி பெற்றுகொண்டிருகிரார்கள். வர்ண குல முறைகளையும், சாதிகளையும், குலதொழிளையும் சாடி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அதனையே வேறு பெயர்களை செய்கிறார்கள் தங்களை நிலை நிறுத்த. 
தமிழ் நாட்டில் தமிழனுக்கு வாழ வழி இல்லை இன்று வரை.

தண்ணீருக்கு ஆளாய் தவிப்பது போல மின்சாரத்திற்கும் பிச்சை காரர்களாகி இருக்கிறோம் என்பதுதான் உண்மை நிலை. வெறும் வாய் சவடால் களும், வெற்று அறிக்கைகளும், பொய்யும், புனை சுருட்டும் "அரசியல்' ஆகிப்போனது. இருப்பதை எல்லாம் விட்டு விட்டு தமிழ் நாடு அரசின் சின்னத்தை மாற்ற வேண்டி ஒரு மொள்ளமாரி தனம் நடக்கிறது. தமிழ் நாட்டின் அடையாளமான கோவில் சின்னம் கூடாதாம். அது " மத சார்பு அற்ற " இந்த அரசாங்கங்களுக்கு இழுக்காம்.இதற்க்கு சப்பை கட்டு கட்ட அங்கங்கே இருக்கும் இசுலாமிய. கிருசுதுவ அமைப்புக்கள் இப்போதே வழித்து கட்டிக்கொண்டு தயாராகி விட்டன. கோவில் சின்னம் பார்த்தல் முகம் சுழிகிரார்கலாம். அறுபது வருடங்களாக முகம் சுழிக்காமல் இப்போதுதான் முகம் சுழிக்க அல்லா சாமி சொல்லி கொடுத்தாராம்.இந்த மத்த வெறியர்களுக்கு துணை செல்கின்றன மத்திய மாநில அரசுகள்.நான் எந்த மதத்தையும் கொண்டாடுபவன் அல்ல. ஆனால் தமிழக அரசின் சின்னம் என்பது மதம் போன்ற குறுகிய அடிப்படையில் வரையப்படவில்லை. அது தமிழர் கலாசார பின்னணி யை உணர்த்தும் ஒரு 
குறி அவ்வளவே. இல்லை, "அது இந்துகளின் கோயில் அது கூடாது " என்பவர்கள் ஒன்ற சரியாக பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். புதிதாக வருவதாக இருக்கும் அல்லது வருவதாக சொல்லபடுகின்ற 'அய்யன் திரு வள்ளுவன் "சிலை சின்னத்தை நன்றாக பாருங்கள். அதில் சுனாமி வரும் அறிகுறிதான் தெரிகிறது.கவனமாக இருக்கவும். 


சாலையில் ஓடும் பேருந்துகளை கண்டால் சுனாமி  பீதிதான் வருகிறது.என்ன கற்பனையோ, எழவோ. இடுப்பை வளைத்து ஒய்யாரமாக நிற்கிறார் திரு வள்ளுவர். எந்த மடையனின் அல்லது மடையர்களின் படைபோ. ஜால்ரா மட்டும் அடித்தால் போதும் வேறு ஒன்றும் வேண்டாம் என்றால் வேலையும் இப்படித்தான் இருக்கும்.தமிழ் படித்த அறிஞர்கள் எல்லாரும் இபோழுதே இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு குனிந்து நிற்கிறார்கள் விழாவில் அய்யாவின் கையால் 'பொற்கிழி " பெறுவதற்கு. பரதேசிகள்.

சுனாமி வந்தால் கூட நிம்மதிதான்.
இந்த மகா பாவிகளை கேட்க சுனாமிதான் வரட்டுமே !







17 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

இதுதான் புதுசா, வரப்போகும் முத்திரையோ?..

யாருண்ணே அது தாடியோட?

யூர்கன் க்ருகியர் சொன்னது…

சுனாமி வந்தால் அப்பாவிகள் அல்லவா சாகிறார்கள் அரசியல்வாதிகள் எங்க சாவரானுங்க ?

நாமளே அவனுகள போட்டு தாக்கினால்தான் ஆயிற்று ..

யூர்கன் க்ருகியர் சொன்னது…

சும்மா சொல்லகூடாது மச்சி ..சும்மா வெளுத்து கட்டிட்டீங்க

Menaga Sathia சொன்னது…

போட்டு தாக்கிட்டீங்க....

ப.கந்தசாமி சொன்னது…

//இருக்கும் அனைத்தையும் "கல்லா" கட்டும் விதமாக மாற்றிஆகி விட்டது. சகலத்திலும் எப்படி 'பைசா" அடிக்கலாம் என்று அடி முதல் நுனி வரை தயாராகி விட்டது//
கோவை வாசிகளான நாங்கள் ஊமைகளாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

சசிகுமார் சொன்னது…

// மண்ணெண்ணெய் தட்டுப்பாடு வேறு. மெழுகு வர்த்தியும் சற்று உதவி செய்யும் படிப்பதற்கு//

நண்பர் எனக்கு மட்டும் அந்த பிரச்சினையே இல்லை , நாங்கெல்லாம் வீட்டில படிச்ச பழக்கமே இல்ல

சசிகுமார் சொன்னது…

//என்ன கற்பனையோ, எழவோ. இடுப்பை வளைத்து ஒய்யாரமாக நிற்கிறார் திரு வள்ளுவர்.//

நண்பரே அந்த படத்தில் இருப்பது உண்மையா

பொன் மாலை பொழுது சொன்னது…

நண்பர்கள்
பட்டா பட்டி, யூர்கன், சகோதரி மேனகா சத்யா,
கே.பி. கந்தஸ்வாமி.மற்றும் சசிகுமார்
உங்கள் அனைவரின் வருகைக்கும்,
கருத்துக்களுக்கும் நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

//நண்பரே அந்த படத்தில் இருப்பது உண்மையா//
சசிகுமார் சொனது.


கடலின் சூழலில் நிற்கும் வள்ளுவரின் இந்த சின்னம்தான் "செந்தமிழ் மகா நாட்டு விழாவின்
சின்னம் " என்று சொல்லிவிட்டார்கள். சரிதான். ஆனால் அதனையே தான் தமிழக அரசின்
சின்னமாக மாற்ற வேண்டும் என்று அடிவருடிகளைக்கொண்டு பேச வைத்துள்ளார்கள்.

மனிதவாழ்க்கையின் உன்னத,அறிவார்ந்த நெறி முறைகளை அளிக்கும் அந்த பெருமகனார்
ஒரு"கூத்தாடி " போன்ற உடல் அமைப்புடன் இப்படி நிற்க வைத்திருப்பது நல்ல ரசனையும்
கலை நேர்த்தியும் அறிந்தவர்களின் வேலையாக இருக்காது.எவரும் பார்த்ததில்லை என்ற காரணத்திற்காக
மனம் போன படி சிலை வடிப்பதா?


அதுசரி, சென்னை மெரீனாவில் நிற்கும் திருவள்ளுவரும் இரண்டாம் உலக தமிழ் மாநாட்டின்
போது இவர்கள் வைத்ததுதானே! அந்த வள்ளுவர் சிலையை பார்த்தவர்களுக்கு புரியம்
அதில் ஒரு கம்பீரமும், தெய்வீகமும் , சிலையின் அழகும் மனதில் வரும்.
ஆனால் இந்த மெரீனா வள்ளுவரை யாருக்கும் இப்போது நினைவில்லை.

காரணம், பெரியவருக்கு வயது ஆக ஆக தன்மீதும் சுய காதல் மிக அதிகமாகி விட்டது போலும்.
எங்கும் எதிலும் தன்னையே காண பேராசை.அதனால் புதிய சிலை "அய்யன்" !!

மெரீனா வள்ளுவரை மறந்ததற்கு காரணம், அச்சிலை செய்தபோது அதற்க்கு மாடலாக
"போஸ்" கொடுத்தது மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். பெரியவருக்கு அச்சிலையை
பார்த்தால் வள்ளுவனுக்கு பதிலாக நடிகர் சிவாஜிதான் மனதி வருவார்.

வள்ளுவரின் சிலைக்கு பின்புறம் ஆழிப்பேரலை உயர்ந்து வருவதை பாருங்கள்.
அமைதியான கடலையே காட்டியிருக்கலாமே!என்ன கற்பனை வளமோ! கருத்தாழமோ!!

settaikkaran சொன்னது…

சுனாமி வந்திட்டாலும் அழியப்போறது ஏழை எளியவங்க தான்; இவனுக மாடமாளிகை,கூடகோபுரங்களிலே தானே குந்திக்கினு இருக்காங்க அண்ணே?

சிந்தனையைத் தூண்டும் பதிவு...!

பொன் மாலை பொழுது சொன்னது…

உண்மைதான் , சுனாமி என்ன வேறு எந்த வித பேரழிவுகள் வந்தாலும் அழிவது அப்பாவி மக்கள் தான்.
இந்த அரசாங்க வேலை செய்பவர்கள் மற்றும் அரசியல் பொருக்கிகள் எல்லாம் பாதுகாப்பாக அல்லவா இருந்துவிடுகிறார்கள்.போதாத குறைக்கு நிவாரண உதவி என்ற பெயரில் வரும் செல்வத்தையும் எப்படி பங்கு போடலாம் என்றுதான் யோசிப்பார்கள். என்ன செய்ய, வாயிற்று எரிச்சலில் வரும் வார்த்தைகள் அவை.
ஒன்று நிச்சயம், இது இப்படியே போகாது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேட்டைகாரரே !

பனித்துளி சங்கர் சொன்னது…

///////சுனாமி வரும் அறிகுறிதான் தெரிகிறது ////

எதுக்குங்க தொடங்குவதர்க்கு முன்பே பயமுறுத்துரீங்க .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

pichaikaaran சொன்னது…

இந்த மகா பாவிகளை கேட்க சுனாமிதான் வரட்டுமே"

வழி மொழிகிறேன்..

இது எல்லாவற்றையும் , சுரணை இல்லாமல் பார்த்து விட்டு, திடீரென ஒரு நாள் விழித்து எழுந்து, இந்தியா வல்லரசு ஆகி விட்டதா , என்று கேட்கும் மக்களிடையே, உங்கள் பதிவு ஆறுதல்

பொன் மாலை பொழுது சொன்னது…

பனித்துளி சங்கர்
பார்வையாளன்

உங்கள் இருவரின் வருகைக்கும்
கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

பட்டாபட்டி.. சொன்னது…

இதுதான் புதுசா, வரப்போகும் முத்திரையோ?..

யாருண்ணே அது தாடியோட?
//

அண்ணே.. நான் கேட்ட கேள்விக்கு பதில சொல்லவில்லை..

இந்த பகமென்ஸ்சை கண்ட இரண்டு மணி நேரத்தில பதில வராவிட்டால், உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.. ஹா..ஹா...

பொன் மாலை பொழுது சொன்னது…

//இதுதான் புதுசா, வரப்போகும் முத்திரையோ?..

யாருண்ணே அது தாடியோட? //

அண்ணே.. நான் கேட்ட கேள்விக்கு பதில சொல்லவில்லை..

பட்டாபட்டி.. சொன்னது…


வேண்டாம் என்றால் விடமாட்டீர்களே!

துதான் 'அய்யன் "திருவள்ளுவராம்.வள்ளுவர் வாய்மை பற்றி
நேர்மை பற்றி சொன்ன எதுவும் இவர்கள் புத்தியில் இருக்காது.
அவர்சொன்ன அரசனின் அல்லது ஆள்பவரின் கடமைகள் எதுவும்
இவர்கள் பின்பற்ற மாட்டார்கள்.
வள்ளுவம் என்பது இவர்களுக்கு உவமைகாட்டவும்,
மாற்றி மாற்றி அறிக்கைகளில் எழுதிக்காட்டவும் மட்டுமே
பயன்படும். ஒரு உலக மகா அறிவாளியின் சிலை இப்படி
ஒரு நடனக்காரியைப் போல இடுப்பை ஒய்யாரமாக வளைத்துகொண்டு
நிற்பது அருவருப்பாகவே உள்ளது. சிலர் இதனை சிலபதிகாரத்தில் வரும்
"சதுக்க பூதம்" என்று கிண்டலடிகின்றனர்.இந்த சிலையின் பின் புலத்தில்
ஒரு ஆழி பேரலை உயர்ந்து வருவதைப்போல அமைக்கப்பட்ட இந்த
"சின்னம்" பேருந்துகளில் எல்லாம் ஒட்டப்பட்டுவிட்டது. அவைகளை பார்த்தல்
சுனாமியின் நினவு வருவதை அணைவரும் சொல்லுவதை தவிர்க்க இயலாது.
எல்லாம் "சுயக்காதல்" படுத்தும் பாடு.

போதுமா பட்டாபட்டியாரே!?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

சுனாமியின் நினவு வருவதை அணைவரும் சொல்லுவதை தவிர்க்க இயலாது.
எல்லாம் "சுயக்காதல்" படுத்தும் பாடு.

போதுமா பட்டாபட்டியாரே!?
//

அது.....அண்ணன்.. கலக்கல் பதில்...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக